Pages

Tuesday, 13 December 2011

இந்திய ஆட்சிப் பணி

   
Public Service Commission



அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்)மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய வனப் பணி (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்திய ஆட்சிப் பணிக்காக 60 முதல் 90 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 3,00,000 விண்ணப்பங்களில் குடியுரிமை தேர்வின் மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது. 

வரலாறு, 

இந்திய ஆட்சிப் பணியின் முன்னோடியாக இந்தியாவில் இருந்த அமைப்பு இந்தியக் குடியுரிமைப் பணி (கலெக்டர்-ஆட்சியர்) என்ற அமைப்பாக இந்தியா பிரித்தானியரின் காலனி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இருந்தது. இந்தியா விடுதலையடைந்த பின் இவ்வமைப்பு இந்திய ஆட்சிப் பணி என்று பெயர் மாற்றம் கண்டது. 



தேர்வு மற்றும் பயிற்சிகள், 

ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் குடியுரிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்தியக் காவல் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி நடுவண் அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக நடுவண் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன). 

தேர்வு நிலைகள்,

• இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன. •

o முதனிலை தேர்வு (preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது. o

முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். o

இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் தேர்வுக்கு புது தில்லிக்கு அழைக்கப்படுகின்றனர். •

முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவருக்கு கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு இரண்டு விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும். •

தேர்வு நடைமுறை,

இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளின் மதிப்பீடு தேர்வுகள் பாடம் கேட்கப்படும் கேள்விகள் ஒரு கேள்விக்கான மதிப்பெண் மொத்த மதிப்பெண் முதனிலைத் தேர்வு பொதுப் பாடம் 150 1 150 விருப்பப் பாடம் 120 2.5 300 முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண் 450 முக்கியத் தேர்வு (9 தாள்கள் கொண்டது) விருப்பப் பாடம்-1 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600 விருப்பப் பாடம்-2 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600 பொதுப் பாடம் (பொது அறிவு) 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600 கட்டுரை """" 200 200 ஆங்கிலம் தாள் (தகுதி வாய்ந்தனவாக) கட்டாய மொழி (தகுதி வாய்ந்தனவாக) மேற்கண்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர் நேர்காணல் 300 

பதவி உயர்வு இந்திய ஆட்சிப் பணி,

இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை நேரடியாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பணிகளில் சேர்வது ஒரு வகையாக இருந்தாலும், அரசுத் துறைகளில் பணியாற்றி வருபவர்கள் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக மாநில அரசுகளின் வழியாகத் தரம் உயர்த்தப்படும் முறையும் இந்தியாவில் உள்ளது. 

பத்தாம் வகுப்பு,

இந்தப் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகத் தரம் உயர்த்தப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்புதான். 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணிக்கான நான்காம் பிரிவுத் தேர்வின் மூலம் வருவாய்த்துறையில் பள்ளிப்பட்டு வட்டத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்த இவர் படிப்படியாக துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவி உயர்வு பெற்று பல நிலைகளில் தமிழ்நாடு அரசுப் பணியில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். .

தகவல் : http://mark-group.info 

No comments:

Post a Comment