மண்புழுவும் மஞ்சள் பையும்
எங்களின் பள்ளிப்பருவத்தின்
அடையாளம்
அட்டக்குளத்தில் மீன்பிடிக்க
ஒண்ணாமடை வரப்பில்
மண்புழு சேகரித்து - தூண்டிலால்
சள்ளைமீனைப் பிடித்தது
எங்களின் மார்கழி
மாலை நினைவுகள்
கைத்தறி நூற்பாலைத்
தொழிற்கல்வி - எங்கள் தலைமுறையில்
பணப்பயிராய் பாடம் கற்றோம்.
சாயப்பட்டறையும் கழனிநிலமும்
வெளிநாட்டு வேதிப்பொருள்களால்
முதிர் கன்னியாகி
முடங்கிக் கிடக்கிறது -
இன்று நாங்கள் நாடோடிகளாய்.
இன்று நாங்கள் நாடோடிகளாய்.