Wednesday, 28 December 2011

இன்றைய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் 


சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் "தானே' புயல்





சென்னை, டிச. 27: சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் "தானே' புயல் மையம் கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செவ்வாய்க்கிழமை கூறியது:
சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும், இலங்கை திரிகோண மலையில் இருந்து வடகிழக்கே 750 கி.மீ. தெலைவிலும், அந்தமானில் இருந்து வட மேற்கே 650 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதற்கு "தானே' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும். இதனால் வட தமிழகம், தென் ஆந்திர கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
இந்தப் புயல் கடலூர் - நெல்லூருக்கு இடையே வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும். இதனையொட்டி வட தமிழகம், புதுவை மற்றும் தென் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைப் பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பர் 28) மணிக்கு 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
சென்னை மற்றும் கடலூரில் 5-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், நாகை, புதுவை, எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ரமணன்.
சென்னை: கடல் சீற்றத்தால் எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள், வலைகள் உள்ளிட்டவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதில் காசி விசாலாட்சி குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, கவாஸ்கர் ஆகியோரின் படகுகள் காணாமல் போனதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடலூர்: கடலூரில் திங்கள்கிழமை இரவு கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் 20 அடி உயரம் வரை எழுந்தன. கடலோரப் பகுதிகளில் உள்ள தேவனாம்பட்டினம், சில்வர் பீச், தாழங்குடா ஆகிய பகுதிகளில் 200 மீட்டர் வரை கடல் நீர் உள்ளே புகுந்தது. இதனால் சில்வர் பீச் சிறுவர் விளையாட்டுப் பூங்கா நீரில் மூழ்கியது.
அப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தூத்துக்குடியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது குறித்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 260 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக கனமழை உள்ளிட்ட எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் சமாளிக்க வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.
புதுவை: புதுச்சேரி துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வைத்திக்குப்பம், குருசுகுப்பம், நரம்பை, பனித்திட்டு, வீராம்பட்டினம், காலாப்பட்டு உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை ராட்சத அலைகள் எழும்பி, மக்களை அச்சுறுத்தின. இதைத் தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்த புதுவை சமூக நலத்துறை அமைச்சர் பெ. ராஜவேலு சுனாமி குறித்து பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
நாகை: நாகப்பட்டினம் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான விசைப் படகுகள் கடலுக்குள் செல்லாமல், கடுவையாற்றுக் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
பாம்பன்: பாம்பன், மண்டபம் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


நெசவாளர்கள் ஓய்வூதியம் ரூ.1,000: ஜெயலலிதா
சென்னை, டிச. 27: கைத்தறி நெசவாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.400-லிருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ. 500-லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது போன்று, தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 60 வயது நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாய், ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், கட்டுமான நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு முடித் திருத்துவோர் நலவாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்களில் பதிவு செய்து, 60 வயது நிரம்பிய தொழிலாளர்கள் 11 ஆயிரத்து 62 பேர் பயன்பெறுவர்.
இதே அடிப்படையில், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் அமைப்பின் கீழுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயதினை கடந்த நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் 400 ரூபாய், ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 19 ஆயிரத்து 404 நெசவாளர்கள் பயன் பெறுவர்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்படி, நெசவாளர் 60 வயதுக்கு முன் இறக்க நேரிட்டால் அவரது வாரிசுதாரருக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.550 வழங்கப்படும். அவர் இறந்த நாளில் இருந்து 10 ஆண்டுகள் அல்லது இறந்தவர் உயிருடன் இருந்திருந்தால் 60 வயது எய்தக்கூடிய காலம்
வரையில், அதில் எது நெசவாளரின் குடும்பத்துக்கு அதிக பயன் தருமோ, அந்த வகையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது அவர்களது மாதாந்திர குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.550-லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 649 பயனாளிகள் பயன்பெறுவர்.
வைத்தியர்களுக்கு ஓய்வூதியம்: பரம்பரை இந்திய மருத்துவ வைத்தியர்களின் வறுமை நிலையினைக் களையும் பொருட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து வறுமையில் வாடும் 60 வயதுக்கு மேற்பட்ட சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.500-லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 9 ஆயிரத்து 563 மருத்துவர்கள் பயன் அடைவர் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு: பணி நியமன ஆணை - நீதிமன்றம் உத்தரவு
சென்னை, டிச. 27: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக எம். குமாரவேலு, வி. பாலமுருகன், பி. குருநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வருவாய் ஆய்வாளர், சார் பதிவாளர், உதவிப் பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2010-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தியது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அக்டோபர் மாதம் மாவட்டவாரியாக பணியிடம் ஒதுக்கி தேர்வாணையம் அறிவித்தது.
எனினும், பணிகள் ஒதுக்கப்பட்ட எங்களில் யாருக்கும் இதுவரை பணி நியமன ஆணை அனுப்பப்படவில்லை. தேர்வு நடைமுறைகள் அனைத்தும் முடிந்த நிலையில், பணி நியமன ஆணையை உடனடியாக அனுப்ப வேண்டியது தேர்வாணையத்தின் கடமையாகும்.
எனவே, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, பணிகள் ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணை அனுப்புமாறு தேர்வாணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதி கே. சுகுணா முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, பணிகள் ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் 6 வாரங்களுக்குள் பணி நியமன ஆணையை அனுப்ப வேண்டும் என்று பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு?
ராமநாதபுரம், டிச. 27: ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர், தனியார் மருத்துவமனைகளிலும், சிலர் அரசு மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ரத்த அணுக்களைப் பிரிக்கும் கருவி இல்லாததால், பாதிக்கப்பட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் கே.கே. நகரை சேர்ந்த குருவன் மகன் பாலமுருகன் (14). இவர் கடந்த 10 நாள்களாக தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது தாயார் மாரியம்மாள் கூறுகையில், ""ரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில் டெங்கு காய்ச்சல் வந்திருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
தேவிபட்டினத்தைச் சேர்ந்த பல்கீஸ் பானு, முஸ்தபா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் ஆகியோரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மருத்துவர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது: மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து உற்பத்தியாகும் ஈடிஸ் ஏஜிப்டை என்ற கொசுவால்தான் டெங்கு காய்ச்சல் வருகிறது. வீடுகளில் பாத்திரங்கள், டயர்கள் ஆகியவற்றில் தண்ணீரை தேக்கி வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் காய்ச்சல் சாதாரண காய்ச்சல் போன்றுதான் இருக்கும். ஆனால் உடலில் அதிகமான வலி இருக்கும். தொடர்ந்து வாந்தி வரும். மலம் கறுப்பாக இருக்கும்.
டெங்கு காய்ச்சலுக்குரிய ரத்தப் பரிசோதனைக்கு ரூ.700 வரை செலவாகும். ரத்தத்தில் பிளேட் லெட் எனப்படும் அணுக்களை மட்டும் பிரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்த வேண்டும். அவ்வாறு பிரித்து அனுப்பும் கருவி ராமநாதபுரம் பரிசோதனைக்கூடங்களில் இல்லை. இந்தக் கருவி இல்லாததால் மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகமாக வருவதால் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையிலாவது உடனடியாக அந்தக் கருவி நிறுவப்பட வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் உமாமகேஸ்வரி கூறியதாவது: "ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேலப்புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 4 பேர் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என தனியாகவே ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. அங்கு இலவசமாக பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்' என்றார்.


ரேஷன் கார்டுகளை புதுப்பித்தல்: ஆட்சியர் அறிவிப்பு
திருவள்ளூர், டிச. 27: ரேஷன் கார்டுகளை 2012-ம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.
ரேஷன் கார்டுகளை 2012 வரை நீட்டிக்க ரேஷன் கடை ஊழியர்கள் கார்டின் உள்பகுதியில் "2012' என முத்திரையிடுவர். அதைத் தொடர்ந்து ஏற்கெனவே ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கூடியிருந்தாலோ, குறைந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினாலோ அதை வாய்மொழியாக ரேஷன் கடையில் தெரிவித்தால் போதும்.
ரேஷன் கடை ஊழியர்கள் உரிய விசாரணை மூலம் அதை உறுதி செய்து கார்டை புதுப்பித்து அது தொடர்பாக பதிவேட்டிலும் பதிந்து கைரேகை பெற்றுக் கொள்வர். பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கச் செல்லும் போதே இந்த முறைகளில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை, டிச.27: தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சந்தோஷ் பாபு தோட்டக்கலைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். முருகைய்யா நகர்ப்புற நில நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். உமாசங்கர் சென்னை ஒழுங்கு நடவடிக்கை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.



இந்தியாவில் ஊழலை ஒழிக்கும் நோக்கில், அரசால் கொண்டுவரப்பட்ட லோக்பால் மசோதா, நீண்ட விவாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இருந்தாலும் லோக்பாலை ஒரு அரசியல் சாசன அமைப்பாக இருக்க வழி செய்யும் உட்பிரிவு எண்(2) வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி ஜனநாயகத்துக்கு ஒரு அடி என்றும், ஒரு துக்ககரமான விடயம் என்றும் அவையின் முன்னவரும் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி மக்களவையில் தெரிவித்தார்.


இந்தத் தோல்வி அரசுக்கு ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும் இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்கள் அவையில் புதன்கிழமை(28.12.12) விவாதத்துக்கு வருகிறது. மேலவையில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்ற பிறகு, லோக்பால் மசோதா சட்டமாகுமா என்பது தெரியும்.
நாடாளுமன்றத்தில் மக்களவையில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற விவாதத்தில், பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி உட்பட பல எதிர்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரணமூல் காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும், இந்த மசோதாவில் பல திருத்தங்களை கோரின.
விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, சில திருத்தங்களை அரசு ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்தார்.

இருந்தபோதிலும், இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற போது, தமது தரப்பினர் முன்வைத்த திருத்தங்களை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி சில கட்சிகளும், இந்த மசோதாவை தற்போதைய வடிவில் எதிர்க்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டாக இருப்பதை விரும்பாக சமாஜ்வாடி கட்சி போன்றவையும் வெளிநடப்பு செய்தன.

சமாஜ்வாடி கட்சியைத் தவிர, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள், பிஜு ஜனதா தள், பகுஜன் சமாஜ் கட்சி, அ இ அ தி மு க மற்றும் இடதுசாரிகள் வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தன.
இதன் மூலம் மக்களவையில் மசோதா மீது வாக்களிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
லோக்பால் மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன என்றும், அதில் திருத்தங்களை கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது என்றும், வாக்கெடுப்புக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நிர்மலா சீதாராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
முன்னதாக இந்த விவாதத்தின் போது, தலையிட்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மத்திய புலனாய்வுத் துறையை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் எனும் கோரிக்கையை நிராகரித்தார். மேலும் ஊழலை ஒழிப்பதற்கு கூட்டாட்சி ஒரு தடையாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

































ஆயத்த ஆடை பயிற்சி வகுப்புகள் (Apparel,Readymade Garments Production Training)
சென்னை, டிச. 25:÷மத்திய அரசின் ஜவுளித் துறை சார்பில் ஆயத்த ஆடை தயாரிப்புப் பயிற்சி வகுப்புகள் 2012, ஜனவரி 3-வது வாரத்தில் தொடங்க உள்ளன.
 இது குறித்து ஆயத்த ஆடை தயாரிப்புப் பயிற்சி மற்றும் வடிவமைப்பு மைய பதிவாளர் பாலசுப்பிரமணியன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், நாகரிக வடிவமைப்பு தொழில்நுட்பம், உற்பத்தி மேற்பார்வையாளர், தரக்கட்டுப்பாட்டாளர், ஆயத்த ஆடை மாதிரி வடிவமைப்புப் பயிற்சி ஆகியவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.பயிற்சியில் சேர்ந்து, இளநிலைப் பட்டயப் பயிற்சிகளை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். இந்தப் பயிற்சிக்கான விண்ணப்பம் கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டைகளிலுள்ள ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே புயல் சின்னம்: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
சென்னை, டிச. 26: சென்னை அருகே புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 தமிழகத்தில் கடத அக்டோபர் 24-ம் தேதி பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்து பல்வேறு கட்டங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் கன மழை பெய்தது.
 இத ஆண்டு இது வரை பெய்துள்ள மழையின் அளவு வழக்கத்தைவிட 7 சதவீதம் கூடுதலாகும். இநிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் சனிக்கிழமை (டிசம்பர் 24) மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
 இது மேலும் வலுப்பெற்று குறைத காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்தது.
 இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியது: வங்கக் கடலில் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்து வத குறைத காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருது 800 கி.மீ. தொலைவில் ஆழ்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திங்கள்கிழமை மையம் கொண்டுள்ளது.
 இது மேலும் வலுவடைது புயலாக உருவாகும். இதனால் வங்கக் கடலில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
 சென்னை அருகே உருவாகும் புயல், கடலூர் - நெல்லூருக்கு இடையே புதன்கிழமை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
 பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை: வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதால், பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
 சென்னையில் இருது தென்கிழக்கு திசையில் வங்கக் கடலில் 800 கி.மீ. தொலைவில், குறிப்பாக, இலங்கை திரிகோணமலையில் இருது கிழக்குத் திசையில் 850 கி.மீ. தொலைவில் குறைத காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 இதனால், வங்கக் கடலில் புயல் காற்றுடன் மழை பெய்யும் என்றும் வட தமிழகத்திலும் மழை பெய்யக் கூடும் எனவும் பாம்பன் துறைமுக அலுவலர் மாரிச்செல்வம் தெரிவித்தார். இதனைத் தொடர்து, பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
 கடலில் காற்றுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால், ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட தீவு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என இத எச்சரிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இருப்பினும், ராமேசுவரம் தீவுப் பகுதியில் திங்கள்கிழமை காலை முதல் மழைக்கான எவ்வித அறிகுறியும் இல்லாமல் வெயில் சுட்டெரித்தது.
 இநிலையில், புயல் எச்சரிக்கையைப் பெரிதுபடுத்தாத ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்த விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
கணித மேதைகளின் சிந்தனைகளை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்வது நம் கடமை: பிரதமர் மன்மோகன் பேச்சு
சிவகங்கை, டிச.26: நமது நாட்டின் மிகச் சிறத கணித மேதைகளின் சிதனைகளை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்வது நமது கடமை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
 சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ராமானுஜன் உயர் கணித மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னர், லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் நினைவுக் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மன்மோகன் சிங் பேசியதாவது:
 ராமானுஜன் உயர் கணித மையத் திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்து உள்துறை அமைச்சராக ஆனவர். எந்தப் பணி கொடுத்தாலும் சிறப்பாகச் செயல்படுபவர். அவரது ஊரில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
 தமிழகம் மற்றும் இந்தியாவின் பெருமைமிகு திருமகனான சீனிவாச ராமானுஜன் உலகத் தரம் வாய்ந்த கணித மேதையாவார். அவர் வறுமையில் இருந்தபோதிலும், தன்னுடைய திறமை காரணமாக கணிதத் துறையில் புகழ் பெற்று விளங்கினார்.
 ராமானுஜனின் 125-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவரது பெயரில் உயர் கணித மையம் அமைதிருப்பது மிகப் பொருத்தமானதாகும். அழகப்பா பல்கலைக்கழகம் தனது வெள்ளி விழாவை கடத ஆண்டு கொண்டாடி முடித்துள்ளது. இப் பல்கலை.யின் மாணவர்களும், பேராசிரியர்களும் பல்வேறு விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
 அழகப்பா பல்கலைக் கழகம் தேசிய தர நிர்ணயக் குழுவின் மறு மதிப்பீட்டில் பெருமைமிகு "ஏ' கிரேடு அதஸ்தை அண்மையில் பெற்றுள்ளதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 பின்தங்கிய மாவட்டமான சிவகங்கையில் கலை, அறிவியல், பொறியியல், உடற்கல்வியியல் ஆகிய துறைகளில் கல்வி நிறுவனங்கள் அமைவதற்குக் காரணமாக இருந்தவர் டாக்டர் அழகப்ப செட்டியார். அவர் 1948-ம் ஆண்டில் ராமானுஜன் பெயரில் ஒரு கணித மையத்தைத் தொடங்க திட்டமிட்டார். தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது.
 இதியா கடத காலங்களில் கணிதத்தில் சிறப்புப் பெற்று விளங்கியது. அந்தப் பாரம்பரியத்தை ஊக்குவிக்க வேண்டியது நமது கடமையாகும். ஆரியபட்டர், பிரமகுப்தா, ராமானுஜன் போன்ற சிறந்த கணித மேதைகளின் சிந்தனைகளை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்வது நமது கடமையாகும்.
 ஏனெனில், கணிதமே பிற துறை சார்ந்த கல்வியைப் பெற மிகவும் அவசியமானதாகத் திகழ்கிறது. இந்த மையம் இப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் கணிதவியல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமையும் என்பதில் சதேகமில்லை.
 ராமானுஜன் உயர் கணித மையத்துக்கான அழகிய கட்டடத்தைக் கட்ட தாராளமாக நிதியுதவி வழங்கிய இந்திய திட்டக் குழு உறுப்பினர் முனைவர் க.கஸ்தூரிரங்கனைப் பாராட்டுகிறேன். அழகப்பா பல்கலைக்கழகமும், உயர் கணித மையமும் சிறப்பாக வளர்ச்சியடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.
ஓவிய ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
திருநெல்வேலி, டிச. 25: திருநெல்வேலியில் ஓவிய ஆசிரியர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம்  நடைபெற்றது.
 திருநெல்வேலி மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில், ஓவிய ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் மேலதிடியூர் பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் 5 நாள்கள் நடைபெற்றது.
 முகாம் நிறைவு விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான ப. பகவதி தலைமை வகித்தார். பயிற்சி முகாமில் பங்கேற்ற ஓவிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
 மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகம் (திருநெல்வேலி), முருகன் (சேரன்மகாதேவி), ராமலிங்கம் (தென்காசி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய சவேரியார் கல்லூரி நாட்டுப்புற வழக்காற்றியல் துறை பேராசிரியர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
 அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள், பயிற்சி கருத்தாளர் பார்த்தசாரதி, முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓவிய ஆசிரியர்களின் சிறப்புக் கண்காட்சி நடைபெற்றது.
இலவச சைக்கிள் அளிப்பு
திருநெல்வேலி, டிச. 25: திருநெல்வேலி சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் மற்றும் சிறப்பு உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளியின் கல்விக் குழுத் தலைவர் ஜெ. திருமேனி தலைமை வகித்தார். சங்கர்நகர் பேரூராட்சித் தலைவர் மு. பேச்சிப்பாண்டியன் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ந. சண்முகம் சிறப்பு உதவித் தொகையை வழங்கினார். தலைமையாசிரியர் உ. கணேசன், செயலர் ஜி. நீலகண்டன், பேரூராட்சி துணைத் தலைவர் அந்தோனி, கல்வி அலுவலக துணை ஆய்வாளர் சிதம்பரம், உதவி தலைமையாசிரியர் மு. சேகர், தமிழாசிரியர் கோ. கணபதிசுப்பிரமணியன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.  







பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னை, டிச.26: பிரதமரின் சென்னை வருகையையொட்டி அவரது பாதுகாப்பை கருத்தில்கொண்டு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
பிரதமர் நேற்று மாலை சென்னை வந்தார்.  இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த கணிதமேதை ராமானுஜர் 125வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
இதையொட்டி பாதுகாப்பு கருதி வாகனப் போக்குவரத்தை போலீஸார் முற்றிலும் நிறுத்தியதால் கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை முழுவதும் ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை நூற்றுக்கணக்கில் வாகனங்கள் தேங்கி நின்றன. எந்த வாகனமும் போக முடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கருப்புக் கொடி போராட்ட அறிவிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

TÖÛ[VjÚLÖyÛP, hXY‚LŸ“W•
ÙW›¥ÚY ÚLy ™PTyP‰
P°Á TÍL· UÖ¼¿Y³›¥ ‡£‘ «PTyP]

ÙS¥ÛX, zN.27-

ÚU•TÖX T‚eLÖL TÖÛ[VjÚLÖyÛP hXY‚LŸ“W• ÙW›¥ÚY ÚLy ÚS¼¿ ˜R¥ ™PTyP‰. P°Á TÍL· UÖ¼¿Y³›¥ ‡£‘ «PTyP].

ÙW›¥ÚY ÚU•TÖX T‚

TÖÛ[VjÚLÖyÛP hXY‚LŸ“W• ÙW›¥ÚY ÚLy Y³VÖL SÖ·ÚRÖ¿• B›WeLQeLÖ] YÖL]jL· ÙNÁ¿ Y£fÁ\]. C‹R ÙW›¥ÚY ÚLy J£ SÖÛ[eh 14 ˜Û\ ™PT|f\‰.

AÚTÖ‰ YÖL]jL· A‚ Yh‹‰ Œ¼h•. A‹R CP†‡¥ ÚTÖehYW†‰ ÙS¡NÛX R«ŸeL hXY‚LŸ“W†‡¥ ¤.251/2 ÚLÖz ‡yP U‡’yz¥ “‡V ÙW›¥ÚY ÚU•TÖX• LyPT|f\‰. 800 —yPŸ [†‡¥ "Jš" Yz«¥ C‹R TÖX• AÛUeLT|f\‰. U†‡V AWr Œ‡ 50 NR®R•, UÖŒX AWr Œ‡ 50 NR®R TjL¸“PÁ C‹R ÚU•TÖX• LyPT|f\‰.

ÚTÖehYW†‰ UÖ¼\•

“‡V ÚU•TÖX†‰eLÖ] T‚L· LP‹R 21-‹ ÚR‡ ÙRÖPjLTyP‰. CÛRÙVÖyz A‹R Th‡›¥ ÚTÖehYW†‰ UÖ¼\• ÙNšVTyP‰. І‰ehz, ‡£oÙN‹ŠŸ, SÖNÚW†, EPÁhz BfV Th‡L¸¥ C£‹‰ Y£• YÖL]jL· NUÖRÖ]“W•, ÚTÖ§Í s‘W| A¨YXL•, H.BŸ.ÛXÁ, EZYŸ N‹ÛR, ULWÖ^SLŸ ÙW›¥ÚY ÚLy, ÙT£UÖ·“W• Y³VÖL TÖÛ[VjÚLÖyÛP ÚYš‹RÖÁh[• “‡V TÍ ŒÛXV†‰eh Y£fÁ\].


இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான விஜய்காந்த் தலைமையில் அவரது கட்சியினர் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்வதாக முன்பே அறிவித்திருந்த நிலையில், இப் போராட்டத்துக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போதே தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.


இதே போல சென்னையிலும், சிவகங்கையிலும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தமிழ் தேசிய அமைப்புக்களும் பல்வேறு இடங்களில் சிறு சிறு போராட்டங்களை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற விடயங்களில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதேவேளை பிரதமரை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக் கிழமை மாலை சந்தித்துப் பேசினார். திங்கள் கிழமையன்று திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக கேரளா அமல்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் கேட்டுள்ளனர்.
தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருப்பதாகவும் அதனால் மேற்கு வங்கத்துக்கு கொடுக்கப்பட்டது போல சிறப்பு நிதியை தமிழகத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரியுள்ளார்.



அமெரிக்காவில் 6 பேரை சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை
ஹூஸ்டன்,டிச.26: அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உறவினர்கள் 6 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் ஒருவர். கொல்லப்பட்டவர்களில் 3 பேர் பெண்கள்.
 டெக்ஸôஸ் மாகாணத்தில் உள்ள லிங்கன் வைன்யார்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடதது என போலீஸôர் தெரிவித்தனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இத்துயர சம்பவம் நிகழ்துள்ளது. சம்பவம் நடத வீட்டில் இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸôர் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தின் 3 தலைமுறையினரும் இச்சம்பவத்தில் மாண்டது அதிர்ச்சியளிப்பதாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.




வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட முதல்வர் உத்தரவு
சென்னை, டிச.25: தமிழகத்தில் 10 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு ரூ 15 கோடியில் சொந்த கட்டடங்கள் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
                              
வேலை நாடுநர்களின் விவரங்களை பதிவு செய்தல், பதிவு செய்தவர்களின் விவரங்களை வேலை அளிப்பவர்களுக்கு பரிந்துரை செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தொழில் நெறி வழிகாட்டுதல் ஆகியப் பணிகளை மாவட்டம் தோறும் உள்ள வேலைவாய்ப்பக அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.  மேலும்,  வேலை நிலவரத் தகவல் சேகரித்தல் மற்றும் தொகுத்தல், வேலை வாய்ப்பு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் தொழிற் பயிற்சி அளித்தல் போன்ற  பணிகளையும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மேற்கொண்டு வருகிறது.
 இவைத்தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம், தொழில் திறனற்றோர், தொழில்நுட்பத் திறனுடையோர் ஆகியோருக்காக சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை ஆகிய  5 மாவட்டங்களில்  இயங்கி   வரும்     வேலை   வாய்ப்பக    அலுவலகங்கள்  மட்டுமே சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதர 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
ஆண்டுதோறும், அதிக அளவில் படித்த இளைஞர்கள் உருவாவதால், வேலை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் வேலை வாய்ப்பகங்களில், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், அதிக எண்ணிக்கையில் வரும் வேலை நாடுபவர்களுக்கு, தேவையான பணிகளை ஆற்றுவதற்கு ,தகுந்தவாறு நல்லதொரு சூழ்நிலை இல்லாத நிலைமை நிலவுகிறது.  
இதனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது.  இதன்படி, முதற்கட்டமாக, 2011-12-ம் ஆண்டில், நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுக்கோட்டை, விருதுநகர், ஈரோடு, அரியலுர், வேலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 10 இடங்களிலுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஒவ்வொன்றுக்கும் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த நடவடிக்கையினால், மாவட்ட வேலை வாய்ப்பக அலுவலகங்கள் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் பெற்று நல்ல முறையில்  பொது மக்களுக்கு சேவை செய்ய வழி வகை ஏற்படும்.
செண்டை மேளம் வரவேற்புடன் குமுளிக்கு பஸ் போக்குவரத்து 
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையால், குமுளிக்கு 20 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த, பஸ் போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது. குமுளியில், கேரள போலீசார் பட்டாசு வெடித்து, செண்டை மேளம் அடித்து வரவேற்பு அளித்தனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் எதிரொலியாக டிச., 4ல், கேரள மாநிலம் குமுளியில், தமிழக லாரி டிரைவர் தாக்கப்பட்டார். லாரியும் சேதப்படுத்தப்பட்டது. டிச., 5 முதல், தமிழக மக்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். கேரளாவுக்கு, குமுளி வழியாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. கடந்த 20 நாட்களாக தீவிரமாக இருந்த, இப்போராட்டம் சற்று குறைந்த நிலையில், நேற்று காலை அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும், குமுளி வழியாகச் சென்றன. மதியத்திற்கு பின், தமிழக அரசு பஸ்கள் குமுளிக்கு இயக்கப்பட்டன. கேரள போலீசார், தமிழக பஸ்களுக்கு செண்டை மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளித்தனர்.


கண்களை துணியால் கட்டி பைக் ஓட்டி வாலிபர் சாதனை
ஈரோடு: சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண்களைக் கட்டிக் கொண்டு, ஈரோடு நகருக்கும் வாலிபர் பைக்கில் வலம் வந்தார்.ஈரோடு சித்தோடு பகுதியை சேர்ந்தவர் மேகநாத் பவார்(21). மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர், ஈரோடு தனியார் கல்லூரியில் படிக்கிறார். ஈரோடு எஸ்.பி., அலுவலக வாயிலில் இருந்து நேற்று காலை தனது சாகச பயணத்தை துவக்கினார். கறுப்பு முகமூடியால் கண்களையும், முகத்தையும் மூடிக் கொண்டு, பைக்கை ஓட்டத் துவங்கினார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காந்திஜி ரோடு,
ஸ்டோனி ப்ரிட்ஜ், காளைமாடு சிலை, ரயில்வே ஸ்டேஷன், சூரம்பட்டி நால்ரோடு, ஈ.வி.என். சாலை, எம்.ஜி.ஆர். சிலை சிக்னல், சவீதா சிக்னல், பி.எஸ். பார்க், வழியாக மீண்டும் எஸ்.பி., அலுவலகத்தை அடைந்தார். இவர் சாகசம் செய்து வந்த நேரத்தில் அனைத்து ரோடுகளும் வழக்கம்போல்வாகன நெருக்கத்தில் நேற்று ஸ்தம்பித்திருந்தன. அந்த நேரத்ததில் கண்ணை கட்டி கொண்டு பைக்கில் சாகசம் செய்த இவரைப் பார்த்து வாகன ஓட்டிகள் பிரமித்து போயினர்.
அவர் கூறியதாவது: சாலை விபத்துகளை குறைக்க பொதுமக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண்ணை கட்டி பைக் ஓட்டினேன். கண்ணை கட்டிக்கொண்டு ஒரு மனிதன், சீராக பைக்கை ஓட்டிச் செல்லும்போது, ஏன் கண்களை திறந்து கொண்டு வாகனத்தை இயக்கும் நீங்கள் விபத்தை உருவாக்குகிறீர்கள்?

அனைவரும்சாலை விதிகளை மதிக்க வேண்டும்; விபத்தை தவிர்க்க வேண்டும். "ஹிப்னாட்டிஸம்' மூலம் சாதனையை செய்ய முடிந்தது. "ஹிப்னாட்டிஸம்' என்பதில் ஏழு பிரிவுகள் உள்ளன. "நோக்கு வர்மம்' மூலமாக அனைத்தையும் உணரலாம். இக்கலையால், காது மூலம் உணரப்படும் விபரங்களால், பைக்கை ஓட்டிச் செல்ல முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டில் டெபாசிட்: தொழிலதிபர்களின் பழைய கணக்குகளை தோண்டித் துருவ முடிவு
புதுடில்லி: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள தொழில் அதிபர்கள் பலர், தங்களுக்கு அப்படிப்பட்ட கணக்கு எதுவும் இல்லை என, மறுத்து வருவதால், அவர்களின் பழைய வருமான மற்றும் பணப் பரிமாற்ற கணக்கு விவரங்களை தோண்டித் துருவ, வருமான வரித்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளனர். இந்தப் பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சில நாடுகளிலிருந்து வங்கிக் கணக்கு வைத்துள்ள மற்றும் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர் விவரங்கள் கிடைத்துள் ளன. குறிப்பாக, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இத்தகவல்கள் கிடைத்துள்ளன.

135 கோடி ரூபாய் வசூல்: அவற்றில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்துள்ளவரின் பெயர், அவரின் பாஸ்போர்ட் நம்பர், டெபாசிட் செய்துள்ள தொகை போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன. பிரான்ஸ் அரசிடம் இருந்து இதுபோல், 700க்கும் மேற்பட்டோரின் கணக்கு விவரங்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 80 பேருக்கு, கணக்கில் வராத 438 கோடி ரூபாய் சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் வரியாக 135 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேறு பலரோ, குறிப்பாக மும்பை மற்றும் டில்லியில் வசிக்கும் பலர், தங்களுக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இல்லை; கறுப்புப் பணத்தையும் டெபாசிட் செய்யவில்லை என, மறுத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பெயர் விவரங்கள் எல்லாம், வெளிநாடுகளில் இருந்து வந்த தகவல்களில் இடம் பெற்றுள்ளன.

பழைய விவரங்கள்: அதனால், இந்த நபர்களுக்கு உண்மையிலேயே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்ற விவரத்தை கண்டறியவும், அவர்கள் சொல்வது உண்மையா என்பதை உறுதி செய்யவும், அதற்காக அவர்களின் பழைய கணக்கு விவரங்களை தோண்டித் துருவவும், வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இப்படி பழைய கணக்கு விவரங்களை தூசி தட்டி பார்ப்பதன் மூலம், அவர்கள் கறுப்புப் பணத்தை குவித்துள்ளனரா, இல்லையா என்பது தெரிய வரும் என, நினைக்கின்றனர்.

வரித்துறை நோட்டீஸ்: இப்படிப்பட்ட நபர்கள் பலரின் பெயர் விவரங்களை, மத்திய நேர்முக வரிகள் வாரியம், வருமான வரித்துறையின் மதிப்பீட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதனடிப்படையில், மும்பை, பெங்களூரு, டில்லி மற்றும் ஆமதாபாத்தைச் சேர்ந்த பலருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் பின், அந்த நபர்களின் வருமானம் மற்றும் பணப் பரிமாற்ற விவரங்கள் எல்லாம் மின்னணு முறையிலும், அதிகாரிகள் மூலமும் பரிசோதிக்கப்படும். அவர்கள் ஏமாற்றியிருப்பது தெரியவந்தால், கடும் நடவடிக்கைகள் பாயும்.

கியூபாவில் படகு கவிழ்ந்து 38 பேர் பலி
ஹவானா: கியூபாவில் படகு கவிழந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் 38 ஹெய்தி நாட்டைச் சேர்ந்தவர்கள் பலியாயினர். லத்தீன் அமெரிக்க நாடான கியூபாவின் கவுதாமானா மகாணத்திலிருந்து ஹாவான தீவிற்கு படகு ஓன்றில் 100-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஹெய்தி நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் ஆவர். படகு ஹவானாதீவுப்பகுதியை நெருங்கி கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் 38 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அமெரிக்க ‌கப்பல்படை ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.பலரை தேடும் பணி நடந்து வருகிறது. பலியான 38 பேர்களில் 21 ஆண்கள், 17 பெண்கள் என மீட்புப்படையினர் கூறினர்.

பெட்ரோல் விலை அடுத்த மாதம் ரூ 1 உயரக்கூடும்
புதுதில்லி, டிச.25: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் அடுத்த மாதம் பெட்ரோல் விலை 1 ரூபாய் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் மின் அழுத்தம் பாய்ந்து 100 வீடுகளில் மின் பொருள் சேதம்
கும்மிடிப்பூண்டி, டிச.25: கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகரில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து சனிக்கிழமை வீடுகளுக்கு உயர் மின் அழுத்தம் பாய்ந்ததால் விவேகானந்தா நகர் மற்றும் ஜெய்ஹிந்த் நகரில் உள்ள சுமார் 100 வீடுகளில் மின் பொருட்கள் சேதமடைந்தன.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட விவேகானந்தா நகரில் உள்ள டிரான்ஸ்பார்ம் கடந்த வாரம் பழுதடைந்த நிலையில் அந்த டிரான்ஸ்பார்ம் பழுது பார்க்கப்பட்டு சனிக்கிழமை பகல் 12 மணி அளவில் கும்மிடிப்பூண்டி மின்வாரிய அதிகாரிகளால் மீண்டும் பொறுத்தப்பட்டது.
டிரான்ஸ்பார்மர் மாற்றிய ஒரு மணி நேரத்தில் டிரான்பார்மரில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக 100 கே.வி மின் அழுத்தத்திற்கு பதில் 440 கே.வி மின் அழுத்தம் வீடுகளுக்கு பாய்ந்தது.
நண்பகல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 100 வீடுகளில் இருந்த மின் சாதன பொருட்கள் தீயில் கருகியது. இந்த சம்பவத்தில் சுமார் 100 டி.வி-க்கள், கிரைண்டர்கள், மிக்ஸி, 10 வாஷிங் மிஷின் உட்பட மின் சாதன பொருட்கள் அதிக மின் அழுத்தம் காரணமாக கருகின. வீடுகளில் புகை மூட்டம் சூழ்ந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தனர்.
சம்பவம் குறித்து பேரூராட்சி கவுன்சிலர் வெங்கடேசன் மின் வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் வந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் நடந்த ஜெய்ஹிந்த் நகரில் தான் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சி.எச்.சேகரின் வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தின் காரணமாக சேதமடைந்த மின் சாதன பொருட்களின் உரிமையாளர்கள் அந்த பொருட்களை தெருவில் வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மின்சாரம் பாய்ந்து மாணவனின் 2 கைகள் கருகின: மின்வாரிய ஊழியர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு
கமுதி, டிச.25:  சாயல்குடி அருகே வாலிநோக்கத்தைச் சேர்ந்தவர் அனீஸ் பாத்திமா. இவரது மகன் முகமது சைபுதீன் வயது13. இவர் ஏழாம் வகுப்பு மாணவராவார். வாலிநோக்கத்தில் ஊரக விளையாட்டு மைதானத்திற்கு மற்ற சிறுவர்களுடன் விளையாடச் சென்றிருந்தார். அங்கு தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியை விளையாட்டாக பிடித்து இழுத்தபோது மின்சாரம் பாய்ந்து 2 கைகளும் கருகின. இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரின் 2 கைகளும் அங்கு துண்டிக்கப்பட்டன.
இந்த சம்பவம் வாலிநோக்கம் பகுதி மின்வாரிய அதிகாரிகளின் அஜாக்கிரதையால்தான் நடந்திருப்பது கூறப்படுகிறது.
இதுகுறித்து முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் தாயார் அனீஸ் பாத்திமா முறையிட்டார். இதையடுத்து மின்வாரியத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய மாஜிஸ்திரேட்டு சரவணக்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிக்கல் பகுதி மின்வாரிய உதவிப் பொறியாளர், லயன்மேன், ஒயர்மேன் ஆகியோர் மீது வாலிநோக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை, சப் இன்ஸ் ராமராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பிரதமருடன் ஜெயலலிதா ஆலோசனை
சென்னை, டிச.25: சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முல்லைப் பெரியாறு மற்றும் கூடங்குளம் விவகாரம் தொடர்பாக 16 பக்க மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்தார்.
மலேரியாவுக்கு தடுப்பு மருந்து
மலேரியாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் மலேரியாவை முழுமையாக தடுக்கவல்ல வலிமையான தடுப்பூசி என்று ஒன்று இல்லை. காரணம், மலேரியாவில் பல வகைகள் இருக்கின்றன. எனவே ஒரு வகை மலேரியாவை தடுக்கவல்ல மருந்தால், மற்றவகை மலேரியாவை தடுக்க முடியவில்லை.
மலேரியாவை பரப்பும் கொசு (நுளம்பு)அதைவிட முக்கியமாக மலேரியாவை பரப்பும் ஒட்டுண்ணி மனிதர்களின் ரத்தத்தில் எப்படி கலக்கிறது என்பது தொடர்பில் முழுமையான தகவல் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு கிடைக்கவில்லை.
இதுபோன்ற காரணிகளால், அனைத்து வகையான மலேரியாவையும் தடுக்கவல்ல தடுப்பு மருந்து என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படாமலே இருந்து வருகிறது.
ஆனால் இதில் விரைவில் மாற்றம் வரும் என்கிறார்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள்.
இவர்களின் நம்பிக்கைக்கு காரணம் இருக்கிறது. மனித இரத்தச் கலங்களுக்குள் மலேரியாவை பரப்பும் ஒட்டுண்ணி எப்படி உள்ளே செல்கிறது என்பது தொடர்பில் இந்த விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
அதாவது மலேரியாவை உண்டாக்கும் ஒட்டுண்ணியை காவும் கொசு(நுளம்பு) மனிதர்களை கடிக்கும்போது அந்த கொசுவின் இரத்தம் குடிக்கும் குளாய்கள் வழியாக மலேரிய ஒட்டுண்ணி மனிதர்களின் உடம்பிற்குள் புகுகிறது.
அப்படி உடலுக்குள் புகுந்ததும் இந்த மலேரிய ஒட்டுண்ணி முதலில் சிகப்பு இரத்தக் கலங்களை(செங்குருதிச் சிறுதுணிக்கைகளை) தாக்கி அதற்குள் புகுந்து அங்கிருந்தபடி மற்ற சிவப்பு இரத்தக் கலங்களை தாக்கி அதன் வழியாக உடலின் அனைத்து பாகங்களையும் தாக்குகிறது. அதுவே மலேரியாவாக மனிதர்களை பாதிக்கிறது.
இந்த மலேரிய ஒட்டுண்ணி, மனிதர்களின் சிகப்பு ரத்த கலங்களுக்குள் ஊடுருவுவதை தடுத்தால் மலேரிய தாக்குதலை தடுக்க முடியும் என்று கருதிய ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.
மலேரிய ஒட்டுண்ணியிடம் இருக்கும் "PfRh5 என்கிற பொருளை, சிகப்பு ரத்த செல்களின் மேல்புறத்தில் இருக்கும் குறிப்பிட்ட வேதிப்பொருள் விரும்பி வரவேற்று ஏற்றுக்கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இதற்கடுத்தபடியாக தன்னை அழிக்கப்போகும் மலேரிய ஒட்டுண்ணியின் ஆபத்தான பொருளை, சிகப்புரத்த கலங்கள் ஏற்காமல் செய்வதன் மூலம் மலேரிய ஒட்டுண்ணி மனித உடலில் புகாமல் தடுக்க முடியும் என்று முடிவு செய்த ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தனர்.
முதல் கட்டமாக இந்தப் புதிய தடுப்பு மருந்தை விலங்குகள் மத்தியில் பரிசோதித்தபோது நல்ல பலன் கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், இதன் அடுத்த கட்டமாக இந்த தடுப்பு மருந்தை மனிதர்களில் பரிசோதிக்கப்போவதாகவும் இந்த பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், மலேரியாவுக்கான முழுமையான தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்கள்.
உலக அளவில் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் பேர் மலேரியாவால் இறக்க நேர்வதாக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த புதிய தடுப்பு மருந்து அதை தடுக்கக்கூடும் என்பதே விஞ்ஞானிகளின் எதிர்கால நம்பிக்கையாக இருக்கிறது.

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ள இந்திய அரசு, இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும் என்று நம்புவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
போருக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை அளித்த பிறகு இந்தியா முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்து உள்ள பழவேற்காடு ஏரியில் சுற்றுலா படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர் பலியாகியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்மஸ் விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் மீனவர் ஒருவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
விபத்தில் பலியானவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 7 பெண்கள் அடங்கலாக 12 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுவரும் உள்ளூர் மீனவர் தெரிவித்தார்.
3 குழந்தைகளை மட்டுமே மீன்பிடிப் படகுகளால் இதுவரை உயிருடன் மீட்கமுடிந்ததாகவும் அவர் கூறினார்.
விபத்து நடந்தபோது, ஏரியின் நீரோட்டம் கடலை நோக்கியிருந்ததாகவும் இருட்டத் தொடங்கியதும் நீரோட்டம் எதிர்த்திசைக்கு வந்த நிலையில் சடலங்கள் கரையொதுங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இருட்டத் தொடங்கிவிட்டதால் ஏரியில் மீட்புப் பணிகள் தாமதமடைந்திருப்பதாக கூறப்படுகின்றது.
விபத்து நடந்து இரண்டு மணிநேரம் வரை காவல்துறையினரோ மீட்புப் பணிக்காக தீயணைப்பு படையினரோ சம்பவ இடத்துக்கு வந்திருக்கவில்லையென்று உள்ளூர் மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்களோ சுற்றுலா படகோட்டிகளோ கடலுக்குள் செல்லக்கூடாது என்று அதிகாரிகளால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா தமிழோசையிடம் தெரிவித்தார்.




வறுமையால் விற்கப்பட்ட குழந்தை மீட்பு
சென்னை,டிச.24: பணத் தேவைக்காக விற்கப்பட்ட குழந்தையை போலீஸôர் மீட்டனர்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் மனைவி சுஜாதா. மனோஜ் அங்கு தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கணவர்-மனைவிக்கு
 இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுஜாதா தனது குழந்தைகள் தனுஷ் (3),அஸ்வின் (2) ஆகியோருடன் தனியாக வந்துவிட்டாராம்.
 இந்நிலையில் சுஜாதா தனக்கு ஏற்பட்ட வறுமையின் காரணமாக தனது குழந்தை அஸ்வினை அமைந்தகரையைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் மூலம் அரும்பாக்கம் பாஞ்சாலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் தம்பதிக்கு ரூ.10 ஆயிரத்துக்கு விற்றாராம்.
 இந்நிலையில் அண்மையில் மனோஜ், மனைவி சுஜாதாவுடன் சேர்ந்து வாழத் தொடங்கினராம். அப்போது சுஜாதா குழந்தையை விற்ற விவகாரத்தை கூறினாராம்.
 இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையில் மனோஜ் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸôர் விசாரணை செய்து, அந்தக் குழந்தை அஸ்வினை மீட்டு மனோஜ் தம்பதியினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.


குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னை, டிச.24: குப்பையிலிருந்து எரிகட்டி தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
 சென்னை நகரில் ஒரு நாளைக்கு 3600 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகின்றன. இவை கொடுங்கையூர், பெருங்குடி வளாகங்களில் கொட்டப்படுகின்றன. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்த பிறகு ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் கூடுதலாக சேருகின்றன. பல ஆண்டுகளாக குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு மக்கிய நிலையில் உள்ள குப்பைகளை அகழ்ந்தெடுத்து அவற்றை ஜலித்து அதிலிருந்து மாற்று உபயோகத்துக்கும் மறுசுழற்சிக்கும் உள்ள பொருள்களைப் பயன்படுத்துவது என்று மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குப்பையிலிருந்து கிடைக்கும் மறுசுழற்சிப் பொருள்களை மறுசுழற்சி செய்யும் தொழிலகங்களுக்கு அனுப்புவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.
 குப்பையிலிருந்து கிடைக்கும் எரியக்கூடிய பொருள்களை உபயோகித்து எரிகட்டிகள் தயாரிக்கவும் அவற்றை உபயோகித்து மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இது தவிர குப்பைகளை ஜலிக்கும்போது கிடைக்கும் உரத்தை வேளாண்மைக்குப் பயன்படுத்தவும் திட்டம் உள்ளது.
 கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் தேங்கும் குப்பைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அதிலிருந்து உரம் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்க முடிவெடுக்கப்பட்டது. அந்த நிறுவனம் குப்பைகளை மாநகராட்சியிடமிருந்து விலைக்கு வாங்கி அதில் உரம் தயாரித்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக அந்தப் பணி நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, உரம் தயாரிப்பது போன்ற திட்டங்கள் தொடர்பான விரங்களை அரசின் ஒப்புதலுக்காக மாநகராட்சிஅனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.


சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு விருது
சென்னை, டிச. 24: சிறப்பாகப் பணியாற்றும் மூன்று அரசு ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தன்று பதக்கமும், ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 அரசு இயந்திரத்தையும், அதன் பணியாளர்களையும் முழுமையாகப் பயன்படுத்தி, அரசால் வகுக்கப்படும் திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படவும், அதன் பலன்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் திட்டமிட்டவாறு சென்றடையச் செய்திடவும் அரசு ஊழியர்கள் முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.
 இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்கள் மக்களுக்கான நற்பணி ஆற்றுவதிலும், அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு ஊழியர்கள் கையாண்ட உத்திகள், புது முயற்சிகள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக அமையும் தொடக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று "நல் ஆளுமை விருது' என்ற விருது வழங்கிட முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.
 இந்த விருது பொது மக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல், மேம்பாட்டு முயற்சிகள், வரிமேலாண்மை, நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்ட முறையை பாராட்டும் வகையில் இருக்கும்.
 பதக்கமும், பரிசுத் தொகையும்: மாநிலத்தின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் கண்டறியப்பட்டு, அறிக்கை பெறப்பட்டு அவை அரசினால் அமைக்கப்படும் வல்லுநர் குழுவால் ஆராயப்படும்.
 "சிறந்த ஆளுகை', "நிர்வாகத்தில் புது உத்திகள் புகுத்துதல்' ஆகியவற்றை மிகச்சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துகின்ற மூன்று அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில், ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையும், பதக்கமும் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும்.
 தமிழக அளவில் முதல் முறையாக அரசு நிர்வாகத்தில் ஊழியர்களுக்கு இடையே புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட இந்த முன்மாதிரி திட்டத்துக்கு, விருதுகளுக்காக ரூ.6 லட்சமும், அவற்றைத் தேர்ந்தெடுக்கவும், ஆவணப்படுத்தவும் ரூ.8 லட்சமும் என மொத்தம் ஆண்டுக்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 இதன்மூலம், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் மற்றவர்களால் பின்பற்றப்பட்டு, அரசு நிர்வாகம் இன்னும் செம்மையாக செயல்பட வழிவகுக்கும். இதனால், அரசு அலுவலர்களிடையே புதிய உத்திகளைக் கையாண்டு, மக்களுக்கு இன்னும் மேன்மையான முறையில் சேவைகளை வழங்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைய வாய்ப்புகள் அதிகமாகும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துப் பட்டியலை அளியுங்கள்: ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை, டிச. 24: அசையா சொத்துகளின் பட்டியல் எவ்வளவு என்கிற தகவலை அரசுக்கு அளிக்கும்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
 இதற்கான தகவலை தமிழக அரசின் பொதுத் துறை செயலாளர் மூலமாகத் தெரிவித்துள்ளது.
 தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாகவும், அரசின் பல்வேறு துறைகளில் செயலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அசையா சொத்துகள் எவ்வளவு வாங்கியுள்ளனர் என்கிற தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
 அதிகாரிகள் தங்களது பெயரிலோ அல்லது வாரிசுகள் அல்லது மனைவி பெயரிலோ சொத்துகளை வாங்கியிருந்தால் அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
 "இந்த ஆண்டு சொத்து ஏதும் வாங்கவில்லை; கடந்த ஆண்டு போலத்தான்,
 மாற்றமில்லை' என்பன போன்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. வாங்கிய சொத்துகளின் விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 இந்தத் தகவலை, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் குமார் ஜயந்த், கடிதம் மூலமாக அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.


போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் வேலைவாய்ப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் சிப்பாய் பணிக்கான 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.
 இது குறித்து மத்திய பணியாளர் தேர்வாணயம் (தெற்கு மண்டலம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சி பிரிவின் கீழ் வரும் இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த 18 முதல் 23 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.50.
 வயது வரம்பில் எஸ்.சி/எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஐந்து ஆண்டு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி. மற்றும் மகளிருக்கு விண்ணப்பந்க் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக் கூடாது. மேலும் விவரங்களை
 www.sscsr.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வலைத்தளங்களில் அவதூறுச் செய்தி: பிப்.6க்குள் அகற்ற உத்தரவு
புதுதில்லி, டிச.24: அவதூறான செய்திகளை பிப்ரவரி 6க்குள் அகற்ற வேண்டும் என்று கூகுள், பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட 21 நிறுவனங்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வி.ஐ.பிக்கள் குறித்து அவதூறான செய்திகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் கவரில் இறந்த நிலையில் பெண் சிசு: போலீசார் விசாரணை.
ஸ்ரீபெரும்புதூர்,  டிச  24: சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண்குழந்தை இறந்த நிலையில் பிளாஸ்டிக் கவரில் கிடப்பதாக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்க்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
  இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்
சென்னை, டிச.24: ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை இடமாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமைச் செயலர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1. அம்ரேஷ் பூரி (கோவை நகர ஐஜி) - சென்னை புலனாய்வு ஐஜி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. பி.தாமரைக்கண்ணன் ( சென்னை புலனாய்வு  ஐஜி) -  விரிவாக்கப்பட்ட சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. சஞ்சய் அரோரா (விரிவாக்கப்பட்ட சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்) - விரிவாக்கப்பட்ட சென்னையின் போக்குவரத்து ஐஜி/கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
4. டி.பி.சுந்தரமூர்த்தி ( சென்னை, ஐஜி எஷ்டாபிளிஷ்மெண்ட்) - கோவை காவல் ஆணையராக  நியமிக்கப்பட்டுள்லார்.
5. டி.ராஜேந்திரன் (சென்னை தொழில்சேவை கூடுதல் காவல் இயக்குனர்) - சென்னை, மனித உரிமை ஆணைய கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. கே.பி. மஹேந்திரன் (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கூடுதல் இயக்குநர்) - தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனராகப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளார்.
7. மிதிலேஷ் குமார் ஜா (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனர்) - சென்னை தொழில் சேவை கூடுதல் காவல் இயக்குனராகப் பதவி மாற்றப்பட்டுள்ளார்.
8. ஆர்.சேகர் ( சிபிசிஐடி கூடுதல் இயக்குனர்) - புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரயில்வே கூடுதல் காவல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
9. டி.கே.ராஜேந்திரன் (கூடுதல் காவல் இயக்குனர், நிர்வாகம்) - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. நரேந்தர் பால் சிங் ( சென்னை ஆயுதப்படை கூடுதல் காவல் இயக்குனர்)- சிஐடி குற்றப் பிரிவு கூடுதல் காவல் இயக்குனராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ளார்.
ஐந்து மாநில தேர்தல் தேதிகள்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு
புதுதில்லி, டிச.24: உ.பி., உத்தர்கண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் தேதிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் குரேஷி அறிவிப்பு வெளியிட்டார்.
கோவா மாநிலத்தில் 40 இடங்களுக்கும்,
உத்தர்கண்ட்டில் 70 இடங்களுக்கும்
உத்தரப்பிரதேசத்தில் 403 இடங்களுக்கும்
பஞ்சாப்பில் 117 இடங்களுக்கும்
மணிப்பூரில் 60 இடங்களுக்கும்
தேர்தல் நடக்கவுள்ளது.
பஞ்சாப்பில் ஒரே கட்டமாக 2012 ஜனவரி 30ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடக்கிறது.பிப்ரவரி 4, 8, 11, 15, 19, 23, 28 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.
கோவாவில் மார்ச் 3ம் தேதியும், மனிப்பூரில் ஜனவரி 28ம் தேதியும், உத்தரகண்டில் ஜனவரி 30ம் தேதியும் தேர்தல் நடக்கவுள்ளதாக தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.
இந்தியாவுக்கு பிரிட்டன் வழங்கிவருகின்ற நிதி உதவியில் பாதியளவு இனி தனியார் துறை முதலீடுகளாக அமைவதற்குரிய மாற்றங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செய்துவருகிறது.
இந்தியாவில் ஏழை மக்கள் வறுமையின் பிடியில் வெளிவர உதவும் அதேநேரத்தில் லாபமும் ஈட்டும் நோக்கம் கொண்ட தனியார் துறை தொழில் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளாக இனி இந்தியாவுக்கு பிரிட்டன் வழங்குகின்ற நிதி உதவியில் பாதியளவு திசை திருப்பப்படும் எனத் தெரிகிறது.
முதல் கட்டமாக அடுத்த நான்கு வருட காலத்துக்கு இந்தியாவுக்கு நிதியுதவி வழங்குகையில் பிரிட்டன் இந்த முறையை கடைப்பிடிக்கவுள்ளது.
இந்த தனியார் துறை தொழில் முனைப்புகள் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்கள் முன்னேற உதவும்.
இவ்வாறு நிதியை முதலீடாகச் செய்வதால், பிரிட்டிஷ் மக்களுக்கு நஷ்டம் என்று எதுவும் இருக்காது, இலாபமாக எதுவும் கிடைக்கலாம்.
நிதி உதவிகளை முதலீடாகச் செய்யும் முறை இந்தியாவில் பலன் அளிக்குமானால், பிற ஏழை நாடுகளுக்கு நிதியுதவி வழங்குவதிலும் இதே அணுகுமுறையை பிரிட்டிஷ் அரசாங்கம் முயன்று பார்க்கும் எனத் தெரிகிறது.


சுமார் 20 கோடி பேர் வாழும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபைத் தொகுதிகளுக்கு 7 கட்டமாக வாக்குப் பதிவை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கட்டம் கட்டமாக வாக்குப் பதிவு இங்கு நடைபெறும். ஒரு லட்சத்து 28 ஆயிரம் வாக்குச் சாவடிகள் இந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளன. எந்த ஒரு மாநிலத் தேர்தலும் ஏழு கட்டங்களாக இதுவரை பிரித்து நடத்தப்பட்டது கிடையாது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வாக்குப பதிவு நடைபெறும். வட மாநிலங்களான பஞ்சாபிலும், உத்தரா கண்டிலும் ஜனவரி 30 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
நாட்டின் மேற்கேயுள்ள கோவாவில் மார்ச் மாதம் மூன்றாம் தேதி தேர்தல் நடைபெறும். வேவ்வேறுபட்ட நாட்களில் தேர்தல் நடந்தாலும் வாக்கு எண்ணும் பணி மார்ச் மாதம் 4 ஆம் தேதி நடைபெறும்.
தேர்தலில் பண ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் இதற்காக வருமான வரித் துறையின் உதவியும் நாடப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரேய்ஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்தமுறை மகராஷ்டிராவில் தேர்தல்கள் நடைபெற்றபோது அங்குள்ள சில நாளிதழ்கள் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் விரும்பும் தகவல்களை செய்தி கட்டுரைகளாக வெளியிட்டன.
பெய்ட் நீயுஸ் எனப்படும் இந்த ஊழல் பெரும் பிரச்சனையாக மாறினாலும் சம்மந்தப்பட்ட பத்திரிக்கைகள் மீது இது வரை உறுதியான நடவடிக்கைகள் ஏதும் ஏடுக்கப்படிவில்லை.
இந்நிலையில் இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களின் போது மாவட்டந்தோரும் நான்கு பேர் கொண்டு ஊடகக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


சிறுபான்மை ஒதுக்கீடு-ஆதரவும் எதிர்ப்பும்


இந்தியாவின் நடுவணரசில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத ஒதுக்கீட்டில், மதச் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதத்தை தனியே உள் ஒதுக்கீடு செய்ய ஒப்பதல் அளித்துள்ளது.

இந்த முடிவு விரைவில் நடக்க இருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்று ஒரு புறமும், மக்கள் தொகையில் சுமார் 20 சதம் இருக்கும் சிறுபான்மையினருக்கு வெறும் 4.5 சதவீதத்தை ஒதுக்குவது மிகவும் குறைவானது என்று மறுபுறமும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒப்பீட்டளிவில் கல்வி, சுகாதாரம், அரசு வேலைகளில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் முஸ்லீம்கள் பின்தங்கியுள்ளதாக அரசால் அமைக்கப்பட்ட சச்சார் குழு உள்ளிட்ட பல்வேறு ஆணையங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேநேரம் கல்வி ரீதியாக முன்னேறியதாகக் கருதப்படும் கிறிஸ்தவர்களையும், பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களாக பார்க்கப்படும் பார்சிகள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற மத சிறுபான்மையினரை முஸ்லீம்களுடன் ஒன்றாக இணைத்து இட ஒதுக்கீடு அளிப்பது சிக்கலானது என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், நடுவணரசின் முடிவு ஒரு ஏமாற்று வேலை என்கிறார் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா. மண்டல் குழுவின் பரிந்துரையின் பேரில் ஏற்கனவே முஸ்லீம்கள் அனுபவித்துவரும் இட ஒதுக்கீட்டைவிட தற்போதைய தனி ஒதுக்கீடு எந்த விதத்திலும் சிறந்ததல்ல என்கிறார் அவர்.


18 ஆயிரத்து 750 கோடி ரூபாயை கண்டுபிடித்துள்ளதாக நேரடி வரிகளுக்கான மத்திய குழு 


புதுடில்லி: வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 
18 ஆயிரத்து 750 கோடி ரூபாயை கண்டுபிடித்துள்ளதாக நேரடி வரிகளுக்கான மத்திய குழு தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் போது அதிகாரிகள், தொழிலதிபர்களுக்கு எந்த வித துன்புறுத்தலையும் கொடுக்கவில்லை என அதிகாரிகள் கூறினர். வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைக்கப்பெறும் ரகசிய தகவல்களை நன்கு ஆய்வு செய்த பின்னர் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்வதாகவும் நேரடி வரிகளுக்கான மத்திய குழு தெரிவித்துள்ளது. சோதனையின் போது அதிகாரிகள் தங்களைதுன்புறுத்தியதாக தொழிலதிபர்கள் அரசிடம் புகார் செய்ததாக மீடியாவில் வெளியான தகவலையும் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.கடந்த 2010-11 நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 2,190 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 2,548 வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 3,887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2ஆண்டுகளில் மட்டும் 18 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.சோதனைகள் அனைத்தும் புகார்களின் அடிப்படையிலும் நேர்மையான முறையில் நடத்தப்பட்டது. யாருடைய தலையீடும், உள்நோக்கமும் கிடையாது என்றனர் அதிகாரிகள்.

நன்றி : தினமணி, தினமலர், BBC தமிழ்  


செங்கோட்டை- திருப்பதி இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை
சுரண்டை, டிச. 22: செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கக் கூட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பயணிகள் நலச்சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் துணைத் தலைவர் அரிராமர், செயலர் ஆறுமுகபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு புதிய ரயில் இயக்க வேண்டும். தென்காசி- திருநெல்வேலி அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கியவுடன் செங்கோட்டையில் இருந்து பாவூர்சத்திரம், அம்பை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தெற்கு ரயில்வே மேலாளரை நேரில் சந்தித்து அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
   சங்க நிர்வாகிகள் சுப்பையா, ராஜேஷ், தீபன் பாக்கியராஜ்,மாரியப்பன், முத்துக்குமார், கார்த்திக், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  


இலஞ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தென்காசி,டிச.22:  இலஞ்சி ராமசுவாமி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
  தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு முதுநிலை ஆங்கில ஆசிரியர் ஏ.செல்வராஜ் தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் கே.ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். வேதியியல் ஆசிரியர் கே.ஆறுமுகம் வரவேற்றார்.
  பள்ளித் தலைமையாசிரியரும், தேசிய நல்லாசிரியருமான உ.முத்தையா கண்காட்சியைத் திறந்து வைத்தார். கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள்
நூற்றுக்கும் மேற்பட்ட மாதிரிகளை
வடிவமைத்து செயல்விளக்கம் அளித்தனர்.   கண்காட்சியை வள்ளிநாயகா தொடக்கப் பள்ளி, இங்கிலீஷ் பிரைமரி பள்ளி, ஐ.சி.ஐ.பிரைமரி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் ஐ.கே.சுப்பிரமணியன்,செயலர் சிதம்பரம்,ஆசிரியர்கள் சித்திரசபாபதி, உமா,சீதாலட்சுமி, சுரேஷ்குமார்,குத்தாலம்,கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ.முத்துசுவாமி நன்றி கூறினார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் பணி நடைபெறும் மேல் நடைபாதை சரிந்தது
சென்னை, டிச. 23: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பணி நடைபெற்று வரும் மேல் நடைபாதை வெள்ளிக்கிழமை அதிகாலை சரிந்ததது.
 எழும்பூர் ரயில் நிலையத்தில் ராமகிருஷ்ண மடம் புத்தக நிலையம் அருகில் உள்ள மேல் நடைபாதைக்குச் செல்லும் படிக்கட்டு குறுகலாக உள்ளதால், 4-வது பிளாட்பாரத்தில் இருந்து பயணிகள் மேலே செல்லும் வகையில் புதிய படிக்கட்டு அமைக்க ரயில்வே திட்டமிட்டது. இதற்காக 4-வது மற்றும் 5-வது பிளாட்பாரங்களுக்கு இடையே உள்ள 2 மேல் நடைபாதையில் ஒன்று கடந்த சில வாரங்களாக இடிக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 11 மணிக்குத் தொடங்கும் இந்தப் பணி காலை 5 மணி வரை நடைபெறும்.
 இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை பணியை முடித்து ஊழியர்கள் திரும்பிய சற்று நேரத்தில், 4-வது மற்றும் 5-வது பிளாட்பாரத்தில் இடிபாடுகள் விழுந்தன.
 அந்த நேரத்தில் அந்த வழியாகச் செல்லும் உயர் அழுத்த மின் வயர் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிளாட்பாரத்தில் விழுந்த இடிபாடுகள் உடனடியாக அகற்றப்பட்டன. ரயில்கள் புறப்பாடு, வருகையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட மாணவி மீட்பு
சென்னை, டிச. 23: அரசாங்க உதவிப் பெற்று தருவதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட மாணவியை மதுரையில் வெள்ளிக்கிழமை போலீஸார் மீட்டனர்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி யமுனாதேவி. சென்னைக்கு வந்த அவரை அரசாங்க உதவி பெற்றுத் தருவதாகக் கூறி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏமாற்றி, சூளைமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நூறு அடி சாலை பகுதியில் இருந்து அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து டிசம்பர் 19-ம் தேதி போலீஸôரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சூளைமேடு போலீஸார், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மாணவியை வெள்ளிக்கிழமை மீட்டனர்.
 அவரையும், அவருடன் பஸ்ஸில் சென்றவரையும் சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார், இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டும் பணி
தம்மம்பட்டி, டிச. 22: தம்மம்பட்டி அருகே ரூ.46 லட்சத்தில் தொடங்கிய பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தம்மம்பட்டி- திருச்சி மெயின் ரோட்டில் உள்ளது பனந்தோப்பு. இங்கிருந்த சிறு பாலம் சேதமடைந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.46 லட்சத்தில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின.
ஆனால், கடந்த 2 மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பாலத்துக்காக போடப்பட்ட மாற்றுப்பாதை பள்ளத்தாக்கு போல இருப்பதால், முடிவடையாத பாலத்தின் வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் செல்கின்றன. பாலத்தையொட்டி உள்ள சாலைப் பகுதிகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அங்கு அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே, பாதியில் நிற்கும் பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பாரா...?
சுல்தான்பேட்டையில் கடை அடைப்பு
பல்லடம், டிச. 22: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் நிலைப்பாடு மற்றும் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, செஞ்சேரி பிரிவு ஆகிய இடங்களில்  புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாடகைக் கார், வேன், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
காணாமல்போன பெண் குழந்தையை மீட்ட நீதிபதி
சிதம்பரம், டிச. 23: கடலூர் திருப்பாதிரிபுலியூரில் காணாமல் போன 7 வயது பெண் குழந்தையை, பெரம்பலூர் அருகே பரங்கிப்பேட்டை நீதிமன்ற நீதிபதி மீட்டு தனது பராமரிப்பில் வைத்துள்ளார்.
 பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருபவர் கோமதி சக்திசொருபு. இவர் கடந்த டிசம்பர் 18-ம் தேதி சொந்த வேலையாக மதுரை சென்று காரில் பரங்கிப்பேட்டை திரும்பியுள்ளார்.
 அப்போது பெரம்பலூர் அருகே சாலையோரம் ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு 4 பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளனர். நீதிபதி காரை நிறுத்தி விசாரித்த போது, அக்குழந்தையை விட்டு, விட்டு நால்வரும் தப்பிவிட்டனர். பின்னர் அந்த பெண் குழந்தையை நீதிபதி, தனது பராமரிப்பில் வைத்திருந்தார்.÷
 தற்போது விசாரணையில் அக்குழந்தை கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் குழந்தை சௌம்யா (7) என தெரிய வந்துள்ளது.÷இந்தக் குழந்தை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, காணாமல் போனது. இது குறித்து ராமலிங்கம், தனது குழந்தையைக் காணவில்லை என கடலூர் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ÷
 இதுகுறித்து விவரம் அறிந்த நீதிபதி கோமதி, குழந்தையை போதிய ஆதாரங்களுடன் வந்து பெற்றுச் செல்ல குழந்தையின் பெற்றோருக்கும், சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.


வருமான வரி குறைப்பு: ஒபாமா முடிவுக்கு குடியரசுக் கட்சி ஒப்புதல்
வாஷிங்டன், டிச.23: இரண்டு மாதத்துக்கு வருமான வரி குறைப்பு செய்யும் அதிபர் ஒபாமாவின் முடிவுக்கு குடியரசு கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

 நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சிக்கு அதிக பிரதிநிதிகள் இருந்தபோதிலும், அதிபரின் முடிவுக்கு அக்கட்சி ஒப்புதல் அளித்துள்ளது அரசியல் நோக்கர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இத்தகைய முடிவு அதிபரின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
அரண்மனைப் பூங்காவை வாடகைக்கு விடுகிறார் இங்கிலாந்து அரசி
லண்டன், டிச.23: அரச குடும்ப பராமரிப்புகளுக்கான செலவுகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடுகட்டும் நோக்கில், கென்ஸிங்டன் அரண்மனையின் பூங்காவை ரஷியாவின் ஒலிம்பிக் கமிட்டிக்கு வாடகைக்கு விடவுள்ளார் இங்கிலாந்து அரசி.
 இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியில் 14 சதவீதத்தை 2013-ம் ஆண்டிலிருந்து குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. குறையும் நிதியாதாரத்தை இங்கிலாந்து அரச குடும்பம் தனது ஆதாரவளங்களிலிருந்துதான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் கென்ஸிங்டன் அரண்மனையின் பூங்காவை ரஷியாவின் ஒலிம்பிக் கமிட்டிக்கு வாடகைக்கு விடவுள்ளார் அரசி இரண்டாம் எலிசபெத்.
அதிபர் பதவிக்கு ரோம்னி தகுதியான வேட்பாளர்: ஜார்ஜ் புஷ் கருத்து
சிகாகோ, டிச.23: அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட தகுதியானவர் மிட் ரோம்னி என்று முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச் டபிள்யூ புஷ் சீனியர் தெரிவித்துள்ளார்.
 இப்போதைய அதிபர் பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட தகுதியான, மிகச் சிறந்த போட்டியாளர் என்று "ஹூஸ்டன் கிரானிக்கிள்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
 ரோம்னியின் ஸ்திரமான அணுகுமுறை, அவரது அனுபவம், அவர் கொண்டுள்ள கோட்பாடுகள் ஆகியன அனைத்தும் அவரை மிகச் சிறந்த நபராக அடையாளப்படுத்துகின்றன. எதையும் மிகவும் நிதானமாக ஆராய்ந்து முடிவெடுக்கக் கூடியவர். எனவே அவரை சட்டென்று தள்ளிவிட முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுனாமியால் பிரிந்த மகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோருடன் இணைந்தார்
ஜகர்த்தா,டிச.23: இந்தோனேசியாவில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது பிரிந்த மகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தன் பெற்றோரிடம் இணைந்துள்ளார்.
 இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் காணாமல் போனவர் வாதி(15). இவர் ஏச் மாகாணத்தில் மெலாபாஹ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு இவர் அடிமையாக வேலை செய்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இப்ராஹிம் என்பவரின் உதவியால் வாதி தனது பெற்றோருடன் இப்போது இணைந்துள்ளார்.
 "சுனாமியால் எங்களின் மூன்று பிள்ளைகளையும் இழந்துவிட்டோம். வாதியின் கண்புருவத்துக்கு மேல் உள்ள தழும்பு மற்றும் இடுப்பில் உள்ள மச்சத்தினால் எங்கள் மகள் என்று கண்டறிந்தோம்' என்று வாதியின் தாய் யூஸ்நியர் தெரிவித்தார்.
அமெரிக்க அறிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், டிச.23: நேட்டோ விமானப்படைத் தாக்குதலில் கடந்த மாதம் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது.
 இந்த அறிக்கையில் உண்மையில்லை என்றும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ராணுவ தலைமைச் செய்தித் தொடர்பாளர் அத்தார் அப்பாஸ், அமெரிக்கா/ நேட்டோ ஆகியவற்றால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதில் உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.
நியூசிலாந்தில் தொடர் நிலநடுக்கம்
வெலிங்டன், டிச.23: நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிரைஸ்ட்சர்ச்சில் வெள்ளிக்கிழமை தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
 முதல் நிலநடுக்கம் கிரைஸ்ட்சர்ச் நகருக்கு வெளியே மதியம் இரண்டு மணியளவில் (இந்திய நேரப்படி காலை 6.30 மணி) ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அலகில் பதிவாகிய நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 4 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்தது. அடுத்த சில நிமிஷங்களில் இரண்டாவது நிலநடுக்கம் நகரின் மையப்பகுதியில் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ.ஆழத்தில் நடந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அலகில் 5.3 ஆக பதிவாகியது. மூன்றாவது நிலநடுக்கம் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏற்பட்டது.
 தொடர் நிலநடுக்கங்களால் உயிரிழப்பு எதுவும் இருந்ததாகத் தகவல் இல்லை. முதல் நிலநடுக்கம் நடந்த உடனே நகரில் உள்ள அலுவலகங்களும் அனைத்து வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டன.
கேரளம் சென்ற காய்கறி லாரியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்
கோவை, டிச. 23: கோவையில் இருந்து கேரளம் சென்ற காய்கறி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.98 லட்சத்து 52 ஆயிரத்து 100-ஐ போலீஸôர் பறிமுதல் செய்தனர்.
 கோவை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை நள்ளிரவு வந்த தொலைபேசி அழைப்பில், கோவையில் இருந்து கேரளம் செல்லும் காய்கறி லாரியில் பணம் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
 அதையடுத்து அனைத்து சோதனைச் சாவடிகளையும் போலீஸôர் உஷார்படுத்தினர். உக்கடம் கரும்புக்கடை அருகே வந்த மினி லாரியை நிறுத்திய சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மற்றும் சிஆர்பிஎப் காவலர்கள், அதில் சோதனையிட்டனர். ஓட்டுநர் இருக்கையின் அருகே உபகரணப் பெட்டியில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.
 இது பற்றி உயர்அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அந்த லாரியை, பணத்துடன் குனியமுத்தூர் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
 லாரியில், 1000, 500, 100 ரூபாய் நோட்டுகளில் மொத்தம் ரூ.98 லட்சத்து 52 ஆயிரத்து 100 இருந்தது தெரிய வந்தது. அந்த லாரியை நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தைச் சேர்ந்த பிரேமதாஸ் (32) என்பவர், சாயிபாபா காலனி எம்ஜிஆர் மார்க்கெட்டில் இருந்து ஓட்டி வந்துள்ளார். அவருடன் எம்ஜிஆர் மார்க்கெட்டில் உள்ள ஒரு மண்டியில் வேலை செய்யும் தமிழாகரன் என்பவரும் வந்துள்ளார்.
 இந்த லாரி கேரள மாநிலம் பெரும்பாவூருக்குச் செல்லவிருந்தது. அங்குள்ள பிளைவுட் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஜக்கரியா என்பவருக்கு, கோவைக்கு பிளைவுட் அனுப்பியதற்கான பணத்தைக் கொண்டு செல்வதாக லாரி ஓட்டுநர் பிரேமதாஸ் போலீஸôரிடம் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பணத்துக்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அதை வருமான வரித் துறையினரிடம் போலீஸôர் ஒப்படைத்தனர்.
 மேலும் இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புத்தாண்டு வரை 16 முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டி
சென்னை, டிச. 23: பயணிகளின் வசதிக்காக 16 முக்கிய ரயில்களில் புத்தாண்டு வரை கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
 கடந்த 3 மாதங்களாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது.
 அதன்படி முத்துநகர், நாகர்கோவில், நெல்லை, சேரன், நீலகிரி, ஆலப்புழை உள்ளிட்ட 16 ரயில்களில் தூங்கும் வசதியுடன் கூடிய 2-ம் வகுப்புப் பெட்டிகள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பெட்டிகள் வீதம் இணைக்கப்பட்டுள்ளன.
 இதன்படி மொத்தம் 23 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
 நீண்ட நேரம் காத்திருப்பு: கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் டிக்கெட் எடுத்தனர்.
 அதைத் தொடர்ந்து ரயில்களில் இடத்தைப் பிடிக்க, பிளாட்பாரங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அனைத்து ரயில்களிலும் நிற்கக்கூட இடம் இல்லாத வகையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
முல்லைப் பெரியாறு விவகாரம்: பிரதமரைச் சந்திக்கிறார் கருணாநிதி
சென்னை, டிச. 23: சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி நேரில் மனு அளிக்க உள்ளார்.
 முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் கருணாநிதி, வெள்ளிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
 இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
 கேரள எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்புப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது.
 திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் திமுகவினர் பிரதமரை நேரில் சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளிக்கின்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
சென்னை, டிச. 23: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ரேஷன் அட்டைகள் மேலும் ஓராண்டுக்கு பயன்படுத்தும் வகையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 ÷இப்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 ÷பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இப்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இபபோதுள்ள நடைமுறையின்படி, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் ரேஷன் அட்டைகளில் தனது பெயரை பதிவு செய்திருந்தால் அதனைக் கண்டுபிடிக்க வழிவகைகள் இல்லை.
 இதன் காரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் ஒரே நபரின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையும், போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கும் நிலையும் உள்ளன.
 மின்னணு ரேஷன் அட்டைகள்: இத்தகைய குறைபாடுகளைக் களைய, இப்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளுக்குப் பதிலாக மின்னணு ரேஷன் அட்டைகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவு அமைப்பின் கீழ், கைகளின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து, பிரத்யேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
 இந்தக் கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்தத் தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி, மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொகுப்பு முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால், ஒரே நபர் பல ரேஷன் அட்டைகளில் தனது பெயரை பதிவு செய்வதும், போலி ரேஷன் அட்டைகளும், ரேஷன் கடைகளில் போலி பட்டியலிடுவதும் தடுக்கப்படும்.
இந்த மின்னணு ரேஷன் அட்டைகளை வழங்குவதற்குச் சில காலம் ஆகும் என்பதால், இப்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை 2012, டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பெயர் சேர்ப்பு, நீக்கம்: தமிழகத்தில் ஒரு கோடியே 94 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். செல்லுபடியாகும் காலம் ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பெயர் நீக்கம், சேர்ப்பு போன்ற பணிகளை வழக்கம்போல மேற்கொள்ளப்படும் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நாளை தமிழகம் வருகிறார் பிரதமர்
சென்னை, டிச.23: பிரதமர் மன்மோகன் சிங், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) இரவு தமிழகம் வருகிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் திங்கள்கிழமை காலை பங்கேற்கிறார்.
 கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜனின் 125-வது பிறந்த தின விழா, சென்னை பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தில்லியில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
 இரவு 8.45 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட பலரும் வரவேற்பு  அளிக்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா சார்பில் மூத்த அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கக் கூடும் என்று தெரிகிறது. ஆனால், அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




கொல்ல முயற்சி: 2 ஜி வழக்கில் முக்கிய சாட்சி நீதிமன்றத்தில் கதறல்
புதுதில்லி, டிச.22: தன்னைக் கொல்ல யாரோ ஒருவர் முயற்சி செய்வதாகவும், தன்னைப் பின்தொடருவதாகவும் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் ஆசிர்வாதம் ஆச்சாரி சிபிஐ நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு கதறினார்.
இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆச்சாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை மிரட்டிய நபர் நீதிமன்றத்தில் இருந்து சற்றுமுன்னர்தான் வெளியேறியதாக அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் கூறிய நபரை தில்லி போலீசார் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே பிடித்து நீதிபதி சைனி முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர் பெயர் ஜெய்ப்ரகாஷ் என அடையாளம் காணப்பட்டது. எனினும் தனக்கு ஆச்சாரியை தெரியாது என்றும் தான் அப்பாவி என்றும் அவர் கூறினார்.
எனினும் சில தினங்களுக்கு முன் தனது வீட்டிற்குள் நுழைய முயற்சித்தவர் ஜெய்ப்ரகாஷ்தான் என தனது பாதுகாவலர் அடையாளம் காட்டியுள்ளார் என ஆச்சாரி கூறினார்.
ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியாவுடன் ஜெய்ப்ரகாஷ் இன்று காலை நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார் என்றும் நீதிபதியிடம் ஆச்சாரி கூறினார்.


மக்களவையில் லோக்பால் மசோதா அறிமுகம்
புதுதில்லி, டிச.22: மக்களவையில் லோக்பால் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நாராயணசாமி புதிய லோக்பால் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தார்.
லோக்பால் மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியுள்ளது.
லோக்பால் அமைப்பில் இடஒதுக்கீடு தர பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லோக்பாலில் இடஒதுக்கீடு செய்வது அரசியல் சட்டத்துக்கு புறம்பானது என்று பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா ஸ்வராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுஷ்மா ஸ்வராஜ் பேசினார். மேலும் இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டினார்.
இதனிடையே இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் வலுவான லோக்பால் மசோதாவை அரசு விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
இப்போது கொண்டுவந்துள்ள மசோதா முன்பு முன்மொழியப்பட்டதைவிட மிகவும் மோசமானது என அவர் குறிப்பிட்டார்.
நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
சென்னை, டிச. 22: நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை (டிச.23) முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல்: இந்த ரயில் (06015) சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
 இந்த ரயில் (06016) மறுமார்க்கத்தில் டிசம்பர் 26-ம் தேதி மதியம் 2.20 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், கோவை வழியாக மறுநாள் காலை 9.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
 சென்னை சென்ட்ரல் - சொரனூர் - சென்னை சென்டரல்: இந்த ரயில் (06017) சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 24-ம் தேதி மற்றும் 31-ம் தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, கோவை வழியாக மறுநாள் காலை 5.30 மணிக்கு சொரனூர் சென்றடையும். இந்த ரயில் (06018) மறு மார்க்கத்தில் வரும் டிசம்பர் 25-ம் தேதி மற்றும் ஜவனரி 1-ம் தேதிகளில் சொரனூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, அதே வழியாக மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
 இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (டிசம்பர் 23) தொடங்குகிறது.
 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல்: இந்த ரயில் (06019) சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
 இந்த ரயில் (06020) மறுமார்க்கத்தில் ஜனவரி 1-ம் தேதி மாலை 3 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், கோவை வழியாக மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு டிசம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது.
சாயல்குடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை


கமுதி, டிச.22: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகம் நடப்பதாக போலீஸாருக்கு வந்த புகாரை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாம். இந்த சோதனையில் ரூ. 1,06,175 அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், பத்திரப் பதிவு அலுவலர் யோகமலர் என்பவரிடம் இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை, மாலை 6 மணிக்கு மேல் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ஜான் கிளமெண்ட் , இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக் குழு கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை இன்னும் நடந்து கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதவியில் இருந்து அகற்ற சதி: பாகிஸ்தான் பிரதமர் அச்சம்




இஸ்லாமாபாத், டிச.22: தன்னை பதவியில் இருந்து அகற்ற சதி நடப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி அச்சம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவத்தை அகற்ற அமெரிக்காவின் உதவியைக் கேட்டு அந்நாட்டின் அதிபர் ஜர்தாரியின் உதவியுடன்தான் ரகசியக் கடிதம் எழுதப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது. இந்த நிலையில் கிலானி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதிகாரக்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என தேசிய கலைக் களஞ்சியத்தியத்தில் யார் பெயரையும் குறிப்பிடாமல் கிலானி தெரிவித்தார். அரசில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாகிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என கிலானி தெரிவித்தார்.



தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000 ஆக உயர்த்தப்படுகிறது: முதல்வர்



சென்னை, டிச.22: தமிழ் அறிஞர்களுக்கான ஓய்வூதியத்தை, ரூ.2,000 ஆக உயர்த்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காக, அயராது பாடுபட்ட தமிழ் அறிஞர்களை போற்றும் வகையில், வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு, மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம், 1978ல், எம்.ஜி.ஆரால் துவக்கிவைக்கப்பட்டது. தமிழ் அறிஞர்கள் மற்றும் அவர்களது மரபுரிமையர்களுக்கு, தற்போது மாதந்தோறும் வழங்கப்படும், ரூ.1,000 நிதிஉதவியை, ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் கூடுதல் செலவாகும் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுபான்மையோருக்கு 4% தனி ஒதுக்கீடு
புதுதில்லி, டிச.22: இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சிறுபான்மையோருக்கான ஒதுக்கீடாக மொத்தமுள்ள 27% த்துக்குள் 4 % தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






பொள்ளாச்சி: கேரளம் செல்லும் சாலைகளில் மறியல் செய்த 2 ஆயிரம் பேர் கைது
பொள்ளாச்சி, டிச.21: பொள்ளாச்சியில் இருந்து கேரளம் செல்லும் 3 சாலைகளில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 2,249 பேரை போலீசார் கைது செய்தனர்.
முல்லைப் பெரியாறில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் இந்த மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் இருந்து நடுப்புனி வழியாக கேரளம் செல்லும் சாலையில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய 926 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி கோபாலபுரம் பகுதியில் கொங்குஇளைஞர் பேரவையினர் நாமக்கல் எம்எல்ஏ தணியரசு தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய 703 பேர் கைது செய்யப்பட்டனர். வளந்தாயமரத்தில் தமிழத்தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர் தியாகு தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய 620 பேர் கைது செய்யப்பட்டனர்.
சு.வெங்கடேசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது
சென்னை, டிச.21: எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.
தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு வேறு உலகங்கள் சந்திக்கும் சித்திரம் உள்ள நாவல் இது. பெருந்திரளான எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கரும், சிறிய எண்ணிக்கையில் உள்ள கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம்செய்து கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை காவல்கோட்டம் எடுத்துக்காட்டுகிறது.

தொலைத்தொடர்பு ஊழல்: சுக்ராமின் தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்
புதுதில்லி, டிச.21: 1996-ம் ஆண்டு நிகழ்ந்த தொலைத்தொடர்பு ஊழலில் முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை சரிதான் என தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது சுக்ராமுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தனக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சுக்ராம் தில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தார். அதை நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் ஜி.பி.மிட்டல் ஆகியோர் விசாரித்தனர்.
சுக்ராமின் அப்பீல் மனுவை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் ரூணு கோஷ் மற்றும் ஹைதராபாதைச் சேர்ந்த ஏஆர்எம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.ராமாராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டையையும் உறுதிசெய்து தீர்ப்பளித்தனர்.
இந்த மூன்று பேரும் விசாரணை நீதிமன்றத்தின் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்களவையில் லோக்பால் மசோதா நாளை தாக்கல்
புதுதில்லி, டிச.21: மக்களவையில் லோக்பால் மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அவரது ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒப்புதலுக்குப் பின்னர் எம்பிக்களிடம் சுற்றுக்கு விடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் இதர கட்சிகளுடன் பேசி வருவதாக சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
பிருத்வி-II ஏவுகணை சோதனை ஒத்திவைப்பு
பலாசூர், டிச.21: ராணுவத்தால் நடத்தப்படவிருந்த பிருத்வி-II ஏவுகணைச் சோதனை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பலாசூர் அருகே சண்டிப்பூர் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இந்த சோதனை நடத்தப்படவிருந்தது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐடிஆர் இயக்குநர் எஸ்பி தாஷ் தெரிவித்தார்.
மீண்டும் சோதனை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.
பிருத்வி-II 2 ஏவுகணகளும் சோதனை செய்ய முயற்சிக்கும்போது ஏவுவதில் பிரச்னை ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
22 தமிழக மீனவர்களை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை
ராமேஸ்வரம், டிச.21:  ஜகதாபட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து தங்கள் காவலில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மீன்வளத்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி கூறுகையில், மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கடலோரக் காவல்படையினர் இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த மீனவர்களை கடலோரக் காவல்படையிடம் ஒப்படைப்பதாக அவர்கள் தெரிவித்தனர் என ராமமூர்த்தி கூறினார். ஆனால் கடலில் காற்று பலமாக வீசுவதால் மீனவர்களை இன்று ஒப்படைக்க முடியாது என இலங்கை கடற்படை தெரிவித்ததாகவும் ராமமூர்த்தி கூறினார்.


விலையில்லா அரிசி தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்: அமைச்சர்
சென்னை, டிச.21: விலையில்லா அரிசி தொடர்பான எந்தவித வதந்திகளையும் நம்பவேண்டாம் என்று உணவுத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது...
தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 1,85,93,319 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தகுதியின் அடிப்படையில் 20 கிலோ அரிசியும், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 35 கிலோ வீதமும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினைதமிழக முதல்வர் 01.06.2011 முதல் அமல்படுத்தி தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.  இதனால் கடந்த ஏழு மாதங்களில் 25 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் விலை ஏதுமில்லாமல் பெற்று பயனடைந்துள்ளனர்.
இந்த ஆட்சியின் மீது பொறாமையும், காழ்ப்பு உணர்ச்சியும் கொண்டு ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும், மக்களின் கவனத்தை ஆட்சிக்கு எதிராக திசைதிருப்பும் வகையிலும் தற்போது வழங்கப்பட்டுவரும் விலையில்லா அரிசிக்கு அரசு விலை நிர்ணயம் செய்யப் போவதாகவும், விலை நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டதாகவும், உண்மைக்கு மாறான, பொய்யான விஷமப் பிரச்சாரங்களை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.  இது உண்மையல்ல. இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கத்துடன் முதல்வர் 2011-12 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கு ரூ.4500 கோடி மானியம் ஒதுக்கியுள்ளார்.   மேலும், தற்போது ரூ.400 கோடி கூடுதல் மானியம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் தற்பொழுது மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழக அரசுக்கு விலக்களிக்க வேண்டுமென தமிழக முதல்வர், பாரத பிரதமரிடம் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, பொது மக்கள் யாரும் விலையில்லா அரிசி தொடர்பான பொய்ப் பிரசாரங்கள் எதையும் நம்ப வேண்டாம்.
பொய்ப்பிரச்சாரங்கள் மற்றும் வதந்திகளை பொய்யாக்குவதுடன், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற பொன்மொழியை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்ட தமிழக முதல்வரின் விலையில்லாத அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.




பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 16-ல் தொடக்கம்
சென்னை, டிச. 21: இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 16-ம் தேதி தொடங்க உள்ளது.
சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். ஏப்ரல் 27 வரை தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.
 இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முல்லைப் பெரியாறு பிரச்னை: புதிய குழு அறிவிப்புக்கு முதல்வர் கண்டனம்
சென்னை, டிச. 21: முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்வதற்காக புதிய குழுவை மத்திய அரசு நியமித்திருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான, மத்திய அரசின் அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 அந்தக் கடிதத்தின் விவரம்:
 முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்களை வகுப்பதற்காக தனியான குழு ஏற்படுத்தப்படும் என்று தங்களுடைய (பிரதமர்) தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான அலுவலகக் குறிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
 இந்த நடவடிக்கை கேரள அரசின் செயல்பாடுகளுக்குப் பலியாவது போலாகிவிடும். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், அணையை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
 உச்ச நீதிமன்றம் உத்தரவு: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, பல்வேறு நிபுணர்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அணையின் நீர்மட்ட அளவை 142 அடிக்கு உயர்த்த தமிழகத்துக்கு அனுமதி அளித்தனர்.
 மேலும், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட குழு, அணை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அந்தக் குழு தனது அறிக்கையை வரும் பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இந்தச் சூழ்நிலையில், அணையில் பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி அதைச் சமாளிப்பதற்கான திட்டங்களை வகுக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை கேரளம் நாடியிருக்கிறது. இதன்மூலம், அணை பாதுகாப்பில்லை என்கிற கற்பனையான கருத்தை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் மீது திணிக்க கேரள அரசு முனைகிறது.
 திரும்பப் பெற வேண்டும்: ரூர்கி ஐ.ஐ.டி.யில் உள்ள நிலநடுக்கப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டி.கே.பாலை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான வழக்கில் சாட்சியாகச் சேர்க்க வேண்டும் என்கிற கேரளத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
 ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தேசித்துள்ள நிபுணர் குழுவில் பால் இடம்பெற்றுள்ளார். அவருடைய நிரூபிக்கப்படாத கருத்துகள் பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவின் நிபுணர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்.
 முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், அணையை ஆய்வு செய்திட அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் தனியாக ஒரு குழுவை அமைப்பது தேவையற்றது.
 எனவே, குழுவை அமைப்பதற்காக கடந்த
 12-ம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.


மலேசிய ஏர்போர்டில் தமிழில் அறிவிப்பு
கோலாலம்பூர் : மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புக்கள் அனைத்தும் தமிழில் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டு வரவதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். மலேசியாவில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருவதால் அவர்களின் தரம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதத்தினர் தமிழர்களாக உள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக உள்ளனர். அவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வருபவர்களுக்காக பொது மக்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment