உப்பினால் உலகில் மிகப் பெரிய ஓவியம் படைத்த பெண்
கல் உப்பை பயன்படுத்தி 84 சதுர மீட்டர் பரப்பளவில் 7 வண்ணங்களில் மிகப் பெரிய ஓவியம் தீட்டி இந்தியாவில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சரிதா சதீஷ் சாதனை படைத்துள்ளார்.
உலக வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்த ஓவியம் எலைட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
வேலூரை சேர்ந்த இவர் படிக்கும் போதே ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றவர்.
7 மீட்டர் அகலமும், 12 மீட்டர் உயரமும் கொண்ட 84 சதுர மீற்றர் பரப்பளவில் 9மணி நேரத்தில் மிகப் பெரிய ஓவியம் வரைவதற்கு கோவையில் உள்ள எலைட் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார்.
3 மணி நேரத்துக்கு 15 நிமிடம் ஓய்வு என்ற நிபந்தனையுடன் இரு முறை மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் 8 மணி 15 நிமிடங்களில் தனது சாதனையை நிறைவு செய்தார்.
இதையடுத்து எலைட் உலக சாதனையில் உப்பினால் உலகில் மிகப் பெரிய ஓவியம் படைத்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
Best regards,
ASHRAF
No comments:
Post a Comment