அஸ்ஸலாமு அலைக்கும்

புஹாரி-908: அபூஹுரைரா (ரலி)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு (ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்று பதில் கூறினர். அவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்களை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்கு தவறி போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-635: அபூகதாதா (ரலி)
وَيَدْعُ الْإِنسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ وَكَانَ الْإِنسَانُ عَجُولًا
மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். 17 : 11
நிச்சயமாக தொழுகையும் ஒரு பிரார்த்தனை தான். எனவே நமது தொழுகைக்கு அமைதியான முறையில் சரியான நேரத்தில் தொழுதிட இறைவனை பிரார்த்தித்தவனாக
ஹிதாயத்.
No comments:
Post a Comment