Friday, 9 December 2011

மதம் பிடித்தது யானை(ரை) !!!

காடுகளில், மேடுகளில் உலாவந்து
தடாகங்கள், வயல்வெளிகளில் தனது பரிவாரங்களுடன் சுற்றித் திரிந்த யானையை!
குளிப்பாட்டி, கோலமிட்டு ஊருக்குள் உலாவிட்டு
கடை கடையாய் நிற்க வைத்து...
வீடு வீடாய் வாங்க வைத்து , பூக்கொடுத்து தரிசனம் பெற்று
பழங்கொடுத்து பாவம் தீர்க்க ... இஃது என்ன ??

ஊரைப்பராமரிக்க யாருமில்லை ஆனால் யானையை பராமரிக்க
ஊரார் காணிக்கை செலுத்த வேண்டும். எல்லா ஊரிலும் எந்த நிதியமைச்சர் இந்த அறிக்கை தாக்கல் செய்தார் என்று நாளை தினசரியில் விளம்பரம் தரலாம்!!!!

தர்கா நிர்வாகம் தனது வருமானங்களை
யானைக்கும் சேர்த்துத் தான் பெருக்கிக் கொள்கின்றன!

ஊருக்குள் ஆயிரமாயிரம் தென்னை மட்டையும், செவ்வாழை வாங்கி கொடுத்தாலும் அதற்கு எத்தனை செலவு!!
இயற்கையின் எழிலில் இதமான மூங்கிலை லாவகமாய் ஒடித்து தின்பதற்கு ஈடாகுமோ??

நல்வழி உணர்ந்த சில நிர்வாகிகள் நன்மையின் மக்கள் இருக்க வேண்டுமென்று தர்காவின் சிறுபகுதியை தொழுகைப் பள்ளிக்காக ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இஃது இன்னும் மாறுவது சுலபமே !!
 முழுமையாக அதனை தொழுகைப் பள்ளியாக மாற்றினால் இறைவன் பால் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை !



விஸ்வா ஹாலித்     

No comments:

Post a Comment