ஆப்கன் மசூதிகளில் குண்டு வெடிப்பு: 58 பேர் சாவு
காபூல், டிச.6: ஆப்கனில் உள்ள இரண்டு மசூதிகளில் செவ்வாய்க்கிழமை குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர். ஷியா பிரிவு முஸ்லிம்களின் மொகரம் பண்டிகை கொண்டாட்டங்களின்போது இந்த குண்டுகள் வெடித்தன.
தலைநகர் காபூலின் மையப் பகுதியில் அமைந்துள்ள அபுல்-உல்-ஃபாசில் மசூதியில் பண்டிகையை முன்னிட்டு ஷியா பிரிவு முஸ்லிம்கள் கூடியிருந்தனர். அப்போது மனித வெடிகுண்டு வெடித்ததில் குழந்தைகள் உள்பட 54 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், மாசார்-ஐ-ஷெரீஃப் மசூதியில் குண்டு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இது மனித வெடிகுண்டு தாக்குதல் இல்லை, சைக்கிள் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாக போலீஸôர் தெரிவித்தனர்.
ஆப்கனில் தலிபான் ஆட்சிக்காலத்தின்போது ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொகரம் பண்டிகை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 2001-ம் ஆண்டில் மேற்கத்திய உதவியுடன் இடைக்கால அரசு அமைந்தவுடன் அந்தத் தடை விலக்கப்பட்டது.
தலிபான்கள் ஆண்ட 1990-களில் சிறுபான்மையினரான ஷியா பிரிவினர் பாதிக்கப்பட்டிருந்தனர். தலிபான்கள் வீழ்த்தப்பட்டதிலிருந்து ஆப்கனில் இனரீதியான தாக்குதல்கள் குறைந்திருந்தது.
ஜெர்மனியின் பான் நகரில் ஆப்கன் தொடர்பான சர்வதேச கூட்டம் நடத்தப்பட்ட வேளையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தை தலிபானும் மற்றும் பாகிஸ்தானும் புறக்கணித்து விட்டன.
இராக் குண்டுவெடிப்பு: 28 யாத்ரிகர்கள் சாவு
மடைந்தனர்.
முகரம் பண்டிகையையொட்டி புனிதத் தலங்களுக்குச் சென்று கொண்டிருந்த ஷியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களே குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
தலைநகர் பாக்தாதுக்கு அருகேயுள்ள ஹில்லா நகரில் யாத்ரிகர்கள் குழுமியிருந்த இடத்தில் காரினுள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர். இந்நகரின் மற்றொரு இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்தனர். இதுபோலவே பாக்தாத் நகரின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
பெருவில் நெருக்கடி நிலை
லிமா, டிச.5: பெரு நாட்டில் நெருக்கடி நிலையை அந்நாட்டு அதிபர் ஒலண்டா ஹுமலா அறிவித்துள்ளார். நாட்டில் வடக்குப் பகுதியில் சுரங்கம் உள்ள பிராந்தியத்தில் நெருக்கடி நிலை அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
480 கோடி டாலர் மதிப்பிலான கோங்கா திட்டத்தைச் செயல்படுத்துவற்கு அமெரிக்காவின் சுரங்க நிறுவனம் நியூமவுண்ட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தனக்குள்ள அரசியல் சாசன அதிகாரத்தின் மூலம் கஜமார்கா, கேலன்டின், ஹியுயலோகான்ட் ஆகிய மாகாணங்களில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். இப்பிராந்தியத்தில் தொழிலாளர்கள் 11 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர்?
இஸ்லாமாபாத், டிச.6: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக அந்நாட்டு வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீரை (59) நியமிக்க அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக உள்ள ஷாகித் மாலிக்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் நிறைவடைகிறது. இதனால் சல்மான் பஷீரை புதிய தூதராக நியமிக்க யூசுப் ரசா கிலானி ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
ஷாகித் மாலிக்கின் பதவிக்காலம் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. இருப்பினும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு மேலும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க யூசுப் ரசா கிலானி விரும்பவில்லை என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, ரஷியா, எகிப்து, அல்ஜீரியா, கியூபா, நேபாளம், சிலி, கென்யா, துனிசியா, ஜெர்மனி, பிரேசில், நெதர்லாந்து, யேமன், செர்பியா ஆகிய 14 நாடுகளுக்கு புதிய தூதர்களை நியமிக்க பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற பாக்., அதிபர் சர்தாரி துபாய் பறந்தார்: வரப் போகிறதா ஆட்சி மாற்றம்?
வாஷிங்டன்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, தனது நெஞ்சுவலிக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக திடீரென, துபாய்க்கு சென்றார். இதையடுத்து, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை, சர்தாரியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
அரசியல் சூழல்: பாகிஸ்தானில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அரசியலில், அசாதாரணமான சூழல்கள் நிலவி வந்தன. இச்சூழல்களை, நேட்டோ தாக்குதல் விவகாரம் மற்றும் "மெமோகேட்' விவகாரம் ஆகியவை மேலும் துரிதப்படுத்தின. "மெமோகேட்' விவகாரம் தொடர்பாக, இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் பார்லிமென்டில் உரையாற்ற இருப்பதாக, கடந்த வாரம் சர்தாரி அறிவித்திருந்தார். நேட்டோ தாக்குதல் விவகாரத்தில், பாக்., அமெரிக்க தரப்புகள், சீர்குலைந்த உறவைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
திடீர் துபாய் பயணம்: இந்நிலையில், சர்தாரி தனது நெஞ்சுவலிக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக, திடீரென, "ஏர் ஆம்புலன்ஸ்' எனப்படும் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம், துபாய்க்குச் சென்றார். அவருடன், அவரது டாக்டர் மற்றும் சில பணியாளர்களும், உதவியாளர்களும் உடன் சென்றுள்ளனர்.
தொண்டையில் வாழைப்பழம் சிக்கி LKG சிறுவன் பலி! பெற்றோர் கதறல்
சென்னை : வாழைப்பழம் சாப்பிட்ட எல்.கே.ஜி. மாணவனின் தொண்டையில் பழத்தின் ஒரு பகுதி அடைத்துக் கொண்டதால் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்ததால் மகனை இழந்த பெற்றோர் கதறி அழுதனர்.
சென்னை கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், தனியார் மென்பொருள் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஹரீஸ் சாய்நாதன் என்ற மூன்றரை வயது மகன் இருக்கிறான் இவன் பல்லாவரம், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.
வழக்கம் போல கிருஷ்ணகுமார், தனது மகனை நேற்று காரில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றார். ஹரீஸ், காலை 10.15 மணிக்கு பள்ளியில் சக மாணவர்களுடன் வீட்டில் இருந்து கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப் பிட்டுக் கொண்டிருந்தான். வேகமாக சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக பழம் தொண்டையில் சிக்கியது. இதில் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனே வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் ஹரீஸ் சாய்நாதனுக்கு முதலுதவி செய்தனர். இருப்பினும், மூச்சுத் திணறல் நீடித்தது. சற்று நேரத்தில் வலிப்பு ஏற்பட்டதும் பயந்துபோன பள்ளி ஆசிரியர்கள், அவனை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஹரீஸை பரிசோதனை செய்த மருத்துவர் அவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்து வந்த பல்லாவரம் காவல்துறையினர் ஹரீஸ் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர் ஹரீஸின் தந்தை கிருஷ்ணகுமார் கூறுகையில், ஹரீஸ் காலையில் என்னுடன் காரில் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தான். சிறிது நேரத்தில், அவன் இறந்து விட்ட செய்தி என்னை அதிர்ச்சியடைய செய்துவிட்டதாக கூறி கதறி அழுதார்.
No comments:
Post a Comment