Monday, 26 December 2011

ஒரு நுளம்புத்திரி(கொசுவத்தி) 100 சிகரெட்டுக்களுக்கு சமம்: ஆய்வில் தகவல்!



ஒரே ஒரு நுளம்புத்திரி (கொசுவத்தி) எரியும் போது வரும் புகை 100 சிகரெட்டுக்களுக்கு சமமான பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நுளம்புகளை ஒழிப்பதற்கு இந்த நுளம்புத்திரிப் பக்கெட்டுக்கள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரல் போன்றன பெருமளவில் பாதிக்கப்படுவதாக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பாதிப்புக்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர். இந்த ஆய்வை மலேசியாவைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தகவல் ஆனது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment