Friday, 9 December 2011

எல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மறக்கப்பட்ட இஸ்லாமிய மாமனிதர்

நன்றி : பிச்சைக்காரன்

உலகம் கெட்டு போய் விட்டது என அங்கலாய்க்கிறோம். சுய நலமற்ற தலைவர்கள் இல்லையே என ஏங்குகிறோம். ஆனால் எத்தனையோ நல்ல தலைவர்களை மறந்து வருகிறோம்..

அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்த்தான் “ கான் அப்துல் கஃபார் கான்“

அவன் இறந்த போது நான் சின்ன பையன். ரேடியோவில் அவர் மரண செய்தியைக் கேட்டு பெரியவர்கள் சோகமாக பேசிக்கொண்டதை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தது நினைவு இருக்கிறது. இன்று யோசித்து பார்த்தால் வெளினாட்டை சேர்ந்த இங்கும் பிரபலமாக இருந்து இருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.



1890 ல் ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார்.  நன்றாக படித்த அவர் வெளி நாடு சென்று படிக்க விரும்பினார் , ஆனால் இயலாமல் போய் விட்டது.


அதன் பின்  திருமணம் , மக்கள் சேவை , அவர் சார்ந்த பஷ்தூன் மக்களின் முன்னேற்றம் என அவர் வாழ்க்கை சென்றது.


உண்மையான இஸ்லாமியராக திகழ்ந்தார் அவர். 


பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போராட கடவுளின் சேவகர்கள் என்ற இயக்கத்தை தொடங்கினார். மாபெரும் மக்கள் இயக்கமாக அது திகழ்ந்தது


நான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது 


என்பது அந்த இயக்க உறுப்பினர்களுக்கு அவர் வழங்கிய செய்தி. சத்தியாகிரக வழியில் அவர் இயக்கம் செயல்பட்டது.


இந்திய பிரிவினைக்கு எதிராக அவர் இருந்தார். பிரிவினை கோரிய ஜின்னாவின் இயக்கத்தை மீறி அவர் சில பகுதிகளில் செல்வாக்கு பெற்று இருந்தார்.


1945 பொதுத் தேர்தலில் கபார்கான் கீழான காங்கிரஸ் , வடமேற்கு மாகாணத்தில் முஸ்லிம் லீகை தோற்கடித்து பெரும்பான்மை பந்திரி சபையை அமைத்தது..


அவர் நினைத்து இருந்தால் , அகில இந்திய காங்கிரசுக்கு கூட தலைவர் ஆகி இருக்கக் கூடும் . ஆனால் அவர் விரும்பவில்லை. 


காந்தியின் முடிவுகளை காங்கிரசில் சிலர் ஏற்காதபோதுகூட , இவர் காந்திக்கு உறுதுணையாக இருந்தார்.


எல்லை காந்தி என பாசத்துடன் இவருக்கு பிரிட்டிஷ் அரசி, காங்கிரஸ் இயக்கம் , முஸ்லீம் லீக என அனைவரும் ஏமாற்றத்தையே வழங்கினர்.


 இவர் இந்தியாவில் இருந்து பிரிய விரும்பவில்லை. அப்படியே பிரிந்தால் தான் சார்ந்த மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை தனியாக பிரித்து பஷ்தூனிஸ்தான்
என்ற நாடு வழங்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது.


ஆனால் காந்தியோ, நேருவோ இவர் கோரிக்கைகளை சரியான முறையில் பிரிட்டிஷாரிடம் எடுத்து சொல்லவில்லை.


எனவே இந்தியாவில் பிரிய விருப்பமா இல்லையா என்பதை மட்டும் முக்கிய கேள்வியாக்கினர் பிரிட்டிஷார். எல்லை காந்தியின் தனி நாட்டுக்குள் தனி நாடு என்ற கோரிக்கை கண்டு கொள்ளப்பட்டவே இல்லை.


இதன் விளைவாக பிரிவினை ஓட்டெடுப்பில் தம் மக்களை கலந்து கொள்ள வேண்டாம் என சொல்லி விட்டார்.  இப்படி செய்த்தன் மூலம் அந்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார். 


சொந்த இன மக்களாலேயே தாக்கப்பட்ட்ட அவலமும் நடந்தது..


அதன் பின் பாகிஸ்தான் அரசு ஏற்பட்டு, இவர் கட்சி ஆட்சி நட்ந்த மகாணத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது..


” எங்களை கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்” என காந்தியிடம் வேதனையிடம் முறையிட்டார். 


ஜின்னா அர்சு இவரை காரணமே இல்லாமல் சிறையில் வைத்தது. வாழ்வின் பெரும்பகுதி சிறையில் கழித்த இவர் 1988ல் வீட்டு சிறையில் , பெஷாவரில் மரணமடைந்தார்.


அவர் விருப்பப்படி, ஆஃப்கானிஸ்தானில் , அவர் பிறந்த ஊரில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அப்போது ஆஃப்கனில் போர் நிறுத்தம் செய்ப்பட்டது. ( அந்த நேரத்தில் கடும் போர் அங்கு நடந்து வந்தது )


அவர் விருப்பப்படி தனி நாடு வாங்கி கொடுத்து இருந்தாலோ, அவர் செல்வாக்கு உட்பட்ட பகுதியை இந்தியாவுடன் சேர்த்து இருந்தாலோ , உலக வர்லாறு வேறு மாதிரி இருந்திருக்க கூடும். அதை செய்ய த்வறியது காங்கிரஸ். 


*****************************************



  • அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவை சேராத ஒருவர் இதை பெறுவது அதுவே முதல் முறை
  • நோபல் பரிசுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது
  • அவர் மகன் அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.

No comments:

Post a Comment