அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .....
சகோ அபுதாஹிர் முகநூலில் கிடைத்த செய்தி ..
19 ஆம் நூற்றாண்டில்
ஆரம்பங்களில் இந்தியாவை வந்தடைந்த மின்சாரம் இன்றுவரை தேவையை பூர்த்தி அடையாமல்
தவிக்க விடுகிறது. உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் உள்ள இந்தியா உபயோகிப்பதோ உலக
மின் உற்பத்தியில் வெறும் 4 சதவீதம் மட்டும்தான். இதை கூட தட்டுபாடின்றி அளிக்க
இயலாமல் திணறுகிறது அரசாங்கம். மின் தட்டுப்பாடு சாமனிய மக்களை மட்டும் பாதிப்பது இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரிய சுமையாகவும், தடையாகவும் இருக்கிறது.
பருவ கால மாற்றத்தினால் பாதிக்கப்படும் நீர் மின்சக்தி, நிலக்கரி தட்டுப்பாடினால் பாதிக்கும் அனல் மின் சக்தி, அணு மின் நிலையங்களுக்கு மக்களின் எதிர்ப்பு என காரணங்களை காட்டி தப்பிக்க கூடாது ஒரு பொறுப்புள்ள அரசாங்கம்.
வளர்ந்த நாடுகள் கோடை காலங்களில் அதிகரிக்கும் மின் தேவையை ஈடு கட்ட தனியாக, தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றன. மேலும் மாற்று சக்திகளான சூரிய மின்சாரம், கடலுக்குள் காற்றாலைகளை அமைப்பது, கடல் அலைகளை கொண்டும், மனித கழிவுகளை கொண்டும் மின் உற்பத்திக்கான வழி முறைகளை கண்டு,அதில் ஒரளவு வெற்றியும் கண்டுள்ளன. இவை மின் தேவையை குறைந்த அளவு பூர்த்தி செய்தாலும், குறைந்த பட்சம் தெரு விளக்குகளை எரிவதற்க்கு உதவுமே? சிறு துளி பெரு வெள்ளமாகும் அல்லவா?
இந்தியாவின் மின் தட்டுப்பாடு மொத்த மின் உற்பத்தியில் 15 முதல் 17 சதவீதம்தான். ஆனால் மின் கடத்திகளின் வழியே ஏற்படும் மின் இழப்பு 25 சதவீதம். குறைவான இழப்பை ஏற்படுத்தும் மின் கடத்திகளை பயன் படுத்தி மின் தட்டுப்பாட்டை சீர் செய்யலாமே? இவற்றிர்க்கு அதிக பொருளாதாரம் தேவைப்படும் என குறை கூறாமல் இலவசங்களை தவிர்த்து முதலீடுகளை அதிகரிக்கலாமே?
ஆயிரம் செயற்கை கோள்களை வான் வெளியில் விட்டும், ஆயுத பலத்தை அதிகரித்தும் வல்லரசாக ஆகுவதில் தவறில்லை. அதே வேளையில் குடி நீர், மின்சாரம், சுகாதாரம் என அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் நல்லரசாக இருக்க வேண்டுமல்லவா?
நாங்கள் உங்களிடம் இலவசமாக மின்சாரத்தை கேட்கவில்லை. எப்போதவது வந்து போகும் மின்சாரத்திற்க்கு தவணை தவறமால் மின் கட்டணத்தை கட்டி விட்டுத்தான் கேட்கிறோம். தருமா இந்த அரசாங்கம்???
நள்ளிரவுகளில் மின்சாரம் இன்றி தூக்கம் தொலைத்து, அழும் சிறு குழந்தைகளின் கூக்குரலாவது கேட்குமா இந்த அரசாங்கத்திற்க்கு??????????
- அறந்தை அபுதாகிர்
No comments:
Post a Comment