Sunday, 25 December 2011

இயக்கங்களுக்கு எச்சரிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரர் சிலரின் முக நூல் கருத்துக்கள் உங்களின் பார்வைக்கு...

அதாவது கிராப்புறங்களில் சில பழமொழிகள் சொல்வார்கள் ஆனால் அதை இங்கே சொல்வது அவ்வளவு நாகரீகமில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் சில வார்த்தைகள் மட்டும் "குளத்தின் மீது கோபம்கொண்டு எதையோ (அதை சேர்த்துக்கொள்ளவும்) செய்யாமல் போனது மாதிரி" தற்போது தமிழ்நாட்டு முஸ்லிம்களின் சூழல் உணர்த்துகிறது.

நீங்கள் எத்தனைக் கூட்டம்தான் போடுவீர்கள், எத்தனை அமைப்புகள் தான் ஆரம்பித்து எத்தனைப் பேரை உங்களின் அமைப்பில் சேர்ப்பீர்கள். தமிழ்நாட்டில் இருப்பது மொத்தம் பத்து முஸ்லிம் நபர்கள் என்றால் அதில் ஆளுக்கொரு ஒரு நபரை பிடித்துக்கொண்டு அமைப்பை அமைக்கிரீர்களே உங்களை என்ன சொல்வது? உங்களின்மீது தவறல்ல! எங்களைப் போன்று முட்டாப்பசங்க உங்களை ஆதரிக்கிறார்கள் பாருங்கள் அவங்களை சொல்லணும்.
ஒருபக்கம் இவர்களின் அட்டகாசம், அந்த பக்கம் உங்களின் தொந்தரவு, மறு பக்கம் அவர்களின் அலம்பல், இன்னொரு பக்கம் அவர்களின் அரஜாகம் இப்படி எல்லாம் செய்தால் தமிழக முஸ்லிம் மக்கள் யார் பக்கம் வருவார்கள், யாருடைய கொடுமைகளை தாங்கிக்கொள்வார்கள், யாருக்காக ஆதரவு கொடுப்பார்கள்.

யாரும் மக்களுக்காக செய்பவர்கள் கிடையாது! இந்த அமைப்புகள் அனைவரும் இப்படி போன்றவர்கள்தான்.
டிஎன்டிஜே, தமுமுக, மமக, SDPI, INTJ, முஸ்லிம் லீக், சுன்னத்துல் ஜமாஅத், இன்னும்பிற முஸ்லிம் அமைப்புகள்! நீங்கள் அனைவரும் சுயநலவாதி, வக்கிரகுணம்கொண்ட மனிதர்கள் வாழும் குகை (அமைப்பு), பொறாமை பிடித்த மனிதர்கள் கூடும் இடம், முனாபிக், ஏற்றத்தாழ்வு, கருணை இல்லாத கயவாளிகள், யாரும் உண்மைக்கும் மன சாட்சிக்கும் அல்லாஹ்விற்கும் பயந்து வாழ்பவர்கள் இல்லை. உங்களின் நோக்கத்திற்காக மக்களை பணயம் வைக்க புறப்படும் ஒரு கூட்டம். இன்ஷா அல்லாஹ்....யார் நன்மையின் பக்கம் வாழ்கிறார்கள் என்பதை என்னைப் படைத்த வல்ல இறைவன் நன்கு அறிவான்.

உங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை, மனமுரண்பாட்டல் பிரச்சனை வந்தால் மன்னித்து தீர்க்க மனமில்லை, உடனே வேற அமைப்பு தொடங்கி ஊரில் இருக்கிற உதவாக்கரையும், வெட்டிபயலும், பொழுது போக்கிற்காக திரியும் எண்ணற்ற மனிதர்களும்தான் இதுபோன்ற அமைப்பில் இருப்பார்கள். யாரும் அல்லாஹ்விற்கு பயந்து வாழ்பவர்கள் இல்லை.

ஒற்றுமையாக இருக்கத்தெரியலே. தவறை திருத்திக்கொண்டு வாழத்தெரியலே , ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து உயர்ந்த மனப்பான்மையோடு வாழத்தெரியலே நீங்கள் பேசும் பேச்சுகள்தான் உண்மை என்று மக்களை நம்பவைத்து கழுத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது உண்மை.

அன்பார்ந்த நண்பர்களே! தயவுசெய்து என்மீது கோபப்படவேண்டாம். நானும் உங்களைப் போன்று நலன்விரும்பியாகத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால் உங்களின் இழிவான செயல்களினால் நல்ல அமைப்பையும் வெறுக்கத் தோன்றுகிறது எனது மனசில். தயவுசெய்து நீங்களும் மேற்கூறிய அமைப்பையும், அவர்களின் நடவடிக்கைகளையும் சற்று நேரம் சிந்த்தித்து பாருங்கள். உங்களுக்கே வெருப்ப வருமா? இல்லை விருப்பம் வருமா?

நேற்றைய தமுமுக - இன்று டிஎன்டிஜே, மமக
இன்றைய டிஎன்டிஜே - இப்போ ஐஎன்டிஜே

இன்னும் எத்தனைப் பிரிவுகளோ...! ஒருத்தரை ஒருத்தர் குறைக்கூறிவிட்டு இப்படி குப்பையிலே கிடந்தது நாறிக்கொண்டு இருக்கிறீங்களே...!

யோசிங்க! இன்னும் எத்தனை அமைப்பில் தான் சேருவீங்க! ஏன் இப்படி ஒரு கொலைவெறி!

உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ்விற்கு பயந்து மனம்விட்டு பேசி ஒருநல்ல முடிவை எடுத்து ஒற்றுமையாக செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதுதானே. உங்களுக்கு பிடிக்கவில்லையா நீங்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டியது தானே. ஏன் மக்களையும், நல்ல அமைப்பையும் களங்கப்படுத்துறீங்க. இப்படி செய்வதால் நீங்கள் அனைவரும் இஸ்லாத்தின் படி வாழ்றீங்களா?

நாங்க அதுபோன்று வாழவில்லை. ஏனென்றால் எங்களுக்கு சரியான வகையில் மார்க்கம் தெரியவில்லை அப்படி அறிந்தவர்கள் சரியான வழியில் கூட்டிக் கொண்டு செல்கிறீர்களா? நாங்க செய்யும் தவறுகளை மன்னித்து சகித்துக்கொண்டு செல்வதற்கு நீங்க ஒப்புதல் அளிக்கிரீர்களா? மாறாக எல்லாம் வல்ல இறைவன் ...

நாம் எவ்வாறு எல்லாம் தவறுகள் செய்துவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடும்போது அல்லாஹ்வே மன்னித்து விடுகிறான்...நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்....! கொஞ்சம் யோசிங்க....உங்களுக்கும், எனக்கும், மற்ற எல்லாருக்கும் பொதுவானதே...!

கரைப்படிவதை அகற்ற வேண்டும் ஆனால் தூய்மையாக இருப்பதை அழுக்குப்படுத்தி (அழகல்ல) பார்க்கக்கூடாது. 

நீந்தினால் தான் கடலின் ஆழம் தெரியும், நீந்தாமல் கரையின் மீது நின்று கடலைப் பற்றி வர்ணித்தால் அது போலி. நாங்கள் நீந்தியவர்கள் அதனால் மேற்கூறிய வார்த்தைகள், நான் மட்டுமல்ல...என்னைப் போன்று பலர்.

பிறப்பது வேறு இடம், இறப்பது வேறு இடம், ஆனால் நாம் சேருமிடம் ஒன்றே. அது மனிதனின் வாழ்விற்கு... ஆனால் இங்கு அப்படியல்ல. மனிதனின் மனோ நிலையில் பல மாற்றங்கள், இதனால் பார்ப்பவர்கள் நம்மை வெறுக்கும் அளவிற்கு நமது செயல்பாடுகள் மோசமாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது தான் வேதனையாக இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்...ஒரு நாள் நாம் உண்மைய உணர்வோம்.

தயவுசெய்து என்மீது மட்டும் வருத்தப்படவேண்டாம்.! பலரின் வேதனையான ஓலங்களை இவ்விடம் கூறினேன்.

எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே உரித்தாகட்டுமாக!

நீங்கள் எல்லாரும் இப்படியே செய்கிறீர்கள்!
இன்ஷா அல்லாஹ் ஒருநாள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று மக்களிடம் கல்லாலும், முட்டையாலும் அடிவாங்கி கொண்டு ஒடப்போறீங்க! அதற்காகத்தான் நீங்கள் இப்படிபோன்று வழிவகுத்துக் கொண்டு வருகிறீர்கள்.
அல்லாஹ் அக்பர்...! இன்ஷா அல்லாஹ்,,..இது விரைவில் நடக்கும்.....!

1 comment:

  1. Don't worry the Muslim Umma in Tamil Nadu is marching ahead towards 72 the magic number mentioned by the Prophet (Sal).

    ReplyDelete