Monday, 12 February 2018

மனம், உள்ளம் - وَالْفُؤَادَ


உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
 الَّتِىْ تَطَّلِعُ عَلَى الْاَفْـــِٕدَةِ


மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் தீய செயல்களை இவர்களும் செய்வதற்காகவும் (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்.)

وَلِتَصْغٰٓى اِلَيْهِ اَفْـِٕدَةُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوْا مَا هُمْ مُّقْتَرِفُوْنَ‏ 

(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும்.

مُهْطِعِيْنَ مُقْنِعِىْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ‌ ۚ وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ؕ‏ 

நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.


وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏

உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். அன்றி, நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வினுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِيْمَاۤ اِنْ مَّكَّنّٰكُمْ فِيْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةً  ۖ فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَاۤ اَبْصَارُهُمْ وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَىْءٍ اِذْ كَانُوْا يَجْحَدُوْنَۙ بِاٰيٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏ 

ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி, உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
وَاللّٰهُ اَخْرَجَكُمْ مِّنْۢ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ لَا تَعْلَمُوْنَ شَيْئًا ۙ وَّ جَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصٰرَ وَالْاَفْـِٕدَةَ‌ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ 

பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத் தன்னுடைய "ரூஹை" அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே!
 ثُمَّ سَوّٰٮهُ وَنَفَخَ فِيْهِ مِنْ رُّوْحِهٖ‌ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـــِٕدَةَ ‌ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏

அவன்தான் உங்களுக்குச் செவி, பார்வை, உள்ளம் ஆகியவைகளைக் கொடுத்தவன். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு 
நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ‌  ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏ 

உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை.

مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
நீங்கள் கூறுங்கள்: அவன்தான் உங்களை படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகின்றீர்கள்.
قُلْ هُوَ الَّذِىْۤ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ الْاَفْـــِٕدَةَ ‌ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏ 

நபி இப்ராஹீம் (அலைஹி) அவர்களின் உள்ளம் கேட்டதை இங்கு நமக்கு நல்ல படிப்பினை. 

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்.) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.

 رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ