தமக்குத் தாமே வஞ்சகம் செய்து கொள்கின்றவர்களுக்காக நீர் வாதாடாதீர்! திண்ணமாக, நம்பிக்கைத் துரோகம் செய்பவனையும் பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண்டவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
அவர்கள் (தம் இழிசெயல்களை) மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. அவனோ அவனுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் சதியாலோசனை செய்து கொண்டிருக்கும்போது கூட அவர்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் அவர்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான்.
சரி! இக்குற்றவாளிகளின் சார்பில் உலக வாழ்க்கையின்போது நீங்கள் வாதாடிவிட்டீர்கள். ஆனால், மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்காக வாதாடுபவர் யார்? அல்லது அவர்களுக்காக பொறுப்பேற்பவர் யார்?
அல் குர் ஆன் 4 : 107,108,109