Friday, 27 January 2012

ஒரு கடவுள் – அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்


 Post image for ஒரு கடவுள் – அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்    கடவுள் பற்றிய மதங்களின் அடிப்படை மற்றும் நடுநிலை கொண்ட மனிதர்களின் நியாயமான புரிதல்கள்:                                                          

இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கை என்ற பெயர் வைத்தாலும் சரி, கடவுள் என்ற பெயர் வைத்தாலும் சரி இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் வைத்த பெயர், அது அவர்களுடைய நம்பிக்கை.
இந்த பிரபஞ்சம் (Universe) இயங்கிகொண்டு இருக்கிறது என்பது மட்டுமே நாம் அறிந்தவை. இது எங்கிருந்து வந்தது, எந்த சக்தியை கொண்டு இயங்குகின்றது என்பன நாம் அறியப்படாத உண்மைகள். ஆற்றல் எங்கிருந்தாவது நமக்கு கிடைத்தால் மட்டும் தானே நம்மால் இயங்க முடியும்.
பெருவெடி கொள்கை (Big Bang theory) என்பது அனைத்து அறிவியலர்களாலும் ஏற்றுகொள்ளகூடிய ஒரு கொள்கையாக உள்ளது. அறிவியலாளர்கள் இப்பிரபஞ்சம் உருவானதை பற்றி பெரு வெடி கொள்கை அடிப்படையில் கூறும் பொழுது இப்பிரபஞ்சம் எப்பொழுதும் இருந்தது அல்ல மாறாக அதற்கு ஆரம்பம் என்பது இருக்கிறது என்றும் ஒரு அணு வெடித்து அதன் மூலமே இந்த ஆற்றலும் ஒளியும் உருவானதாக குறிப்பிடுகின்றனர். எது இந்த பிரபஞ்சத்தை அதன் இயக்கத்தை ஆரம்பிக்க தூண்டியது (Stimulate) என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இல்லை.
இந்த பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடித்தும் வரைமுறை விதிகளுக்கு கட்டுப்பட்டும் இயங்குவது அறிவியலாளர்களிடையே ஒரு பெரிய வியப்பையே ஏற்படுத்துகிறது. ஒழுங்கு முறையை கடைபிடித்து நடக்கவேண்டிய தேவை என்ன என்பதை விளக்க தவறியவர்களாகவே அறிவியலாளர்கள் உள்ளனர். அறிவியலாளர்களின் விளக்கங்களையும் எடுத்து கொண்டு தங்களுக்கு தேவையான மசாலாக்களையும் கலந்து ஒரு புதுமையான முறையில் விளக்கம் தருவதே நாத்திக கொள்கை. முழுமை இல்லாத அதனை கருத்தில் கொள்ளும் பொழுது பழங்காலங்களிருந்து சொல்ல பட்ட கடவுள் கொள்கைகள் எல்லாம் கற்பனை என்று சாதாரணமாக விட்டு செல்வது அறிவுடைமையாக இருக்காது. அனைத்தையும் மனதில் கொண்டு ஆராய்ந்தால் மட்டுமே கடவுள் கொள்கையில் உள்ள உண்மையை அறிய முடியும்.
ஆதிகாலம் முதல் மக்கள் கடவுளை வணங்கியே வந்திருக்கின்றனர். பழங்காலங்களில் மனிதர்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரிய சந்திரனை வணங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது பல குறிப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அதேபோல ஆதிகாலம் முதல் இன்று வரை ஒரு கடவுள் (One GOD) கொள்கை என்பது இருந்து வந்திருக்கின்றது என்பது குறுப்பிட தக்க விஷயம்.
சூரியன் சந்திரன் பாம்பு பல்லி என அனைத்தையும் கடவுளாக நினைத்த மனிதன் எல்லாவற்றிற்கும் பெரிய கடவுளாக ஒரு கடவுளை வைத்து அதற்கு உருவம் சொல்லாமலும் வணங்கி வந்திருக்கிறான், உயர்ந்த இடத்தில் மனிதன் வைத்த கடவுளுக்கு உருவம் கற்பிக்காததிலுருந்தே அவர் மனிதன் கற்பனைக்கும் நினைவுக்கும் அப்பால் உள்ள உருவத்திலயே மனிதனின் எண்ணத்தில் இருந்திருப்பார் என்று அறிய முடிகிறது.
ஒவ்வொரு மதங்களும் கடவுளை பற்றிய வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் உலகின் பெரிய மதங்களின் கடவுள் நம்பிக்கையை பார்த்தல் அவர்கள் பல்வேறு உருவங்களை கடவுளாக சித்தரித்தாலும் பெரிய கடவுளாக வைத்திருப்பது உருவம் இல்லாத ஒரு கடவுளை தான் கடவுள் என்பவர் மனிதனின் உருவம் பற்றிய சிந்தனைக்கும் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவராகவும் மனிதர்களிடம் இருக்கின்றார்.
இவ்வுலகில் உள்ள மக்கள் வெவ்வேறு பெயர்களில் கடவுளை வணங்கினாலும் அனைவரும் தன்னையும் அறியாமல் அந்த ஒரு புத்திசாலித்தனமான அந்த சக்தியை தான் மையமாக வைத்து வணங்குகின்றனர்.
கடவுளை மனித உருவத்திலோ அல்லது மற்ற ஏதேனும் தெரிந்த உருவத்திலோ வைத்திருக்கும் நிலையே நாத்திக வாதிகளின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது, கடவுளை பூமியில் வைத்து பார்ப்பதாலயே மனிதர் உருவத்தில் கடவுள் இருந்திருப்பர் என்ற எண்ணம் வரும். பூமியை விட்டு வெளியில் போனால் மனித உருவமே இல்லை என்ற நிலையில் கடவுளை மனிதன் உருவத்தில் பார்ப்பது என்பது அறியாமையின் வெளிச்சம் மற்றும் நீளம் அகலம உயரம் போன்ற அளவுகளுக்கும் கண் காது மூக்கு போன்ற புலன்களுக்கு அப்பாற்பட்டே அவர் இருக்க வேண்டும். இந்த வரைமுறையை சரியான முறையில் பொருத்தி பார்த்தல், மனிதன் உருவாக்கிய பல கடவுள்கள் இறந்து போய் விடுவர்.
கடவுள் தான் அனைத்தையும் உருவாக்கினார் என்று கூறும்போது அந்த கடவுள் எங்கிருந்து வந்திருப்பர், கடவுளுக்கு முதலில் யார் வந்தது என்பது போன்ற கேள்விகள் நாத்திக வாதிகளால் எழுப்பபடுகின்றன.
முதல் கடைசி என்ற நிலை எப்பொழுது வரும், காலம் நேரம் என்ற சில அளவுகோல்கள் இருக்கும் போது தான் முதல் கடைசி என்ற வாதம் வரும். சற்று விசாலமான பார்வையில் பார்த்தல், மனிதர்களின் அளவு கோள்தான் காலம் நேரம் எல்லாம், இந்த அளவுகோலை தாண்டி இருப்பவர் தான் கடவுள், ஆக கடவுளுக்கு முதல் என்பதும் கிடையாது கடைசி என்பதும் கிடையாது என்பதை உணரலாம். இப்பிரபஞ்சத்தையே உருவாக்கியவர் கடவுள் எனும் போது இந்த அளவுகோளையும் உருவாக்கியவர் அவர் தான். அதை அவருக்கே பொருத்தி பார்ப்பது என்பது எப்படி சரியாகும். கடவுள் என்பவர் உருவானவர் இல்லை, எப்பொழுதும் இருப்பவர் என்பதே சரியான வாதமாக இருக்கும். ஆதி முடிவு என்ற நிலை கொண்டவர் நிச்சயம் கடவுளாக இருக்க வாய்ப்பே இல்லை.
அனைத்து அமைப்பின் கன கச்சிதமான ஒழுங்கு முறையை பார்க்கும் போது அவை ஒரு சக்திக்கு மட்டுமே கட்டுபடுகின்றன என்பதை அறிய முடிகிறது. பல கடவுள் என்ற வாதத்தை வைத்தல் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு அமைப்பு சிதைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் விளங்க முடியும்.
கடவுள் எப்படி இருப்பார் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழும். எப்படி இருப்பார் என்பது நம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும் எப்படி இருக்க மாட்டார் என்று அறிய முடியும். மனித கற்பனை உருவத்தில் நிச்சயம் கடவுள் இருக்க வாய்ப்பு இல்லை. காலத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டவர் எனும் போது (மனித கற்பனை இதற்குள் தான் இருக்கும்) அவரின் உருவமும் அப்பாற்பட்டதாக தான் இருக்கும்.
பழங்கால மனிதர்கள் அறிந்தது சூரியன், சந்திரன், பூமி, நட்சத்திரம் அவ்வளவுதான். ஆனால் அறிவியலில் முன்னேறிய தற்கால மனிதன் கடவுளின் முழு ஆற்றலையும் அமைப்பின் (System in physics) முழுமையையும் பார்ப்பவனாகவே உள்ளான் என்பது கடவுள் நம்பிக்கையில் ஒரு தெளிவை கொடுக்கிறது.
பெரியவர் சொல்லி கொடுத்தது போல் கடவுள் என்ற வார்த்தையை உங்கள் அகராதியில் தவறாக இட்டு வைத்திருப்பின் ஒரு மாபெரும் புத்திசாலி தனமாக சக்தி என்று மாற்றி கொள்ளுங்கள், நம் அனைவரின் எண்ணங்களும் செயல்களும் அவரின் பார்வையில் இருப்பதை உணருங்கள்.
நன்றி : கார்பன் கூட்டாளி

Wednesday, 25 January 2012

ஷிர்க்கின் தோற்றம்


                                                                                                                             - M. அப்துல் ஜலீல் உமரி,மதனி
மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை  அடிப்படையாகக்  கொண்டு  துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையாளனாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக்  கொள்கைக்கு மாறினானா என்பதை நாம்  முதலில்  அறிய வேண்டும்.  இதற்குத் தெளிவான விளக்கத்தைத்  திருகுர்ஆன் கூறுவதைப்  பார்ப்போம்.  “மனிதர்கள்  ஒரே சமுதாயமாகவே இருந்தனர்” (அல்குர்ஆன்2:213)
                                               இந்த திருவசனத்தின்படி மனிதன் முதலில் தவ்ஹீது (ஏகத்துவம்) வாதியாகவே இருந்திருக்கிறான் என்பது தெளிவகின்றது. இதே கருத்தைத் தான் ஹதீஸும் வலியுறுத்துகிறது.”நான் அடியார்களைத் தூயவர்களாகவே படைத்தேன் ஆனால் ஷைத்தான் தவ்ஹீதை  விட்டும்  அவர்களைத்  திசைதிருப்பி விட்டான். அவர்களுக்கு (என்னால்) அனுமதிக்கப் பட்டிருந்தவைகளை ஷைத்தான் ஹராமானது  என்று காட்டிவிட்டான்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இயாழ் இப்னு அஹ்மது, நூல்: அஹ்மது
ஆரம்பத்தில் மனிதன் ஓரிறைக் கொள்கைவாதியாகவே இருந்தான். பின்னர்தான் பல தெய்வ வணக்க வழிபாடுகளில் மூழ்கிவிட்டான் என்பதை மேற்கூறிய இறை வசனமும் நபி மொழியும் தெளிவு படுத்துகின்றன.
ஷிர்க்கின் (இணை வைத்தல்) மூலகாரணம் என்ன?
ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக் கொள்கையுடையவனாகவே இருந்து வந்தான். அந்தத் தவ்ஹீதைத் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் “ஷிர்க்” (இணை வைத்தால்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
“நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் ‘வத்து’ ‘சுவாவு’  ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!” என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர் கூறினார்கள்) (அல்குர்ஆன் 71:23)
இந்தத் திரு வசனத்தில் கூறப்பட்ட ‘வத்து’ ‘சுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’  ஆகியோர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும், அவர்கள்  மரணமடைந்த பின்னர் அவர்களையே மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டனர் என்றும், ஆரம்பத்தில் நினைவுச் சின்னம் எழுப்பினர்; பின்னர் அடுத்த தலை முறையினர் அவர்களையே வணங்க முற்பட்டு விட்டனர் என்றும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் தந்தனர். (நூல்: புகாரி- தப்ஸீர் பகுதி)
அன்று நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இணைவைக்க முற்பட்டதற்குக் காரணம் எதுவோ, அதே காரனத்தினால் தான் இன்றும் பெரும் பகுதியினர் ஷிர்க்கில் வீழ்ந்து  கிடக்கின்றனர். நபி(ஸல்) தம் உம்மத்தினர் ஷிர்க்கில் விழக்கூடாது என்றூ எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அத்தனையையும் மீறி நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களின் அடக்கஸ்தலத்தில் பல தகாத செயல்களை செய்யத் துவங்கிவிட்டனர்.
எத்தனையோ பள்ளிவாசல்கள் நிர்வாகம் நடத்த போதிய பொருளாதாரம் இன்றி திணறிக் கொண்டிருக்க, கப்ருகளை நிர்வாகம் செய்யப் பொருளாதாரம் குவிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை வணங்க நூறு பேர் வருகின்றனர் என்றால் அவனது அடிமைகளை வணங்க ஆயிரக்  கணக்கானோர் குவிந்த வண்ணமாக உள்ளனர்.
இறைவா! “என்னுடைய கப்ரை வணக்கஸ்தலமாக ஆக்கி விடாதே” என்று நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்துள்ளார்கள் என்றால் அது நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதைப் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்று அவர்களின் அடக்கஸ்தலத்தை வணங்குமிடமாக ஆக்காமல் பாதுகாத்துக் கொண்டான். ஆனால் மற்ற கப்ருகள் அந்த நிலைக்கு மாறி விட்டன!
“நாங்கள் கப்ரை வணங்கவா செய்கிறோம்?” என்று நம்மில் சிலர் கேட்கின்றனர். வணங்குவது என்றால் தொழுவது மட்டும் தான் என்று  இவர்கள் எண்ணியுள்ளனர்.  தங்களின் தேவைகளை நிறை வேற்றும்படி பிரார்த்தனை செய்வதும் வணக்கம் என்பதை என்றுதான் உணவார்களோ? சிலைகளுக்குச் செய்யப்படுவது போல் அலங்காரங்களூம் அபிஷேகங்களும், வேறு பெயர்களில் இங்கேயும் நடக்கத்தான் செய்கின்றன. சிலைகள் முன்னே சிலர் பக்தி சிரத்தையோடு நிற்பது போலவே கப்ருகளின் முன்னிலையிலும் இவர்கள் நிற்கின்றனர். இந்நிலை உணர்ந்து தவ்ஹீத் அடிப்படையில் மக்கள் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

Friday, 20 January 2012

நோயாளியிடம் நலம் விசாரித்தல்


  Post image for நோயாளியிடம் நலம் விசாரித்தல்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

உண்மை முஸ்லிம் நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டுமென இந்நேரிய மார்க்கம் மிகவும் வலியுறுத்துகிறது. எனவே நோய் விசாரிக்கச் செல்வது கடமையாகும். நோயாளியிடம் சென்று ஆறுதல் கூறும்போது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிறை வேற்றுகிறோம் என்று மனம் நிறைவடைய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.”                                                    (ஸஹீஹுல் புகாரி)

பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஏவினார்கள்.                                        (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் போதனைகள் இஸ்லாமிய சமூகத்தில் வெகு ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாழ்வில் ‘தான் நோய்வாய்ப்பட்டால் தனது சகோதரன் தன்னை நலம் விசாரிக்க வர வேண்டும், அது அவனது கடமை’ என்று எண்ணுமளவு இப்பண்பு வலுப்பெற்றுள்ளது. அதை மறந்துவிட்டால் அல்லது அதில் குறை ஏதும் செய்துவிட்டால் அவன் தனது சகோதரனின் கடமையை மறந்தவன். அல்லது சகோதரனின் கடமைகளில் குறை செய்தவனாகிறான். அவன் இஸ்லாமின் மேலான பார்வையில் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட பாவியாகிறான்.

Tuesday, 17 January 2012

கால்நடைகள் வழங்கும் கதகதப்பு WOOL ஆடை


அல்குர் ஆனின் வழியில் அறிவியல்………….
அல்லாஹ் மனிதர்களைப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு பயன் தருபவைகளாக அமைத்துள்ளான்.இந்த வகையில் கால்நடைகளைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.
 ‘ (மனிதர்களே!) ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரை தடுத்துக்கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு. இன்னும் (அநேக) பயன்களுமுண்டு. மேலும் நீங்கள் அவற்றிலிருந்து புசிக்கிறீர்கள். “ அல்குர் ஆன் -16:5
மேலும்  வேறொரு வசனத்தில்,
 “(ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு, அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம், (வெள்ளாட்டின்) முடி,ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கின்றான்.அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன.” –அல்குர்ஆன் -16:80

Friday, 13 January 2012

சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் - யார் இவர்கள்?


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

சீனாவில் இஸ்லாம் - ஓர் ஆய்வு (Part 2 of 2):

சீன முஸ்லிம்கள் குறித்த இத்தளத்தின் முந்தைய பதிவை கண்ட சகோதரர் ஒருவர் தொலைப்பேசியில் அழைத்திருந்தார். சீன முஸ்லிம்களுடனான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள தொடங்கினார்.

1990-களில், ஹஜ் கடமையின்போது சீன சகோதரர்களை சந்தித்தாராம் இந்த சகோதரர். பலவித சவால்களுக்கு மத்தியிலும் தங்களுடைய இறைநம்பிக்கையை வலிமையாக பற்றிப்பிடித்திருக்கும் அந்த சீனர்களை கண்டு வியந்து அவர்களை கட்டியணைத்து முத்தமிட்டாராம்.   

சீன முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்யும்போது நம்மில் பலரையும் பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம், பலவித இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி தங்கள் மார்க்கத்தை அவர்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் அந்த அர்ப்பணிப்புதான். அல்ஹம்துலில்லாஹ்.

சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் குறித்து முதல் பாகத்தில் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த சில பொதுவான தகவல்களை பார்க்கவிருக்கின்றோம். 

சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்?


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

சீனாவில் இஸ்லாம் - ஓர் ஆய்வு (Part 1 of 2):

--------------
Please Note:
சீன பெயர்களின் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் தவறுகள் இருக்கலாம். சுட்டி காட்டப்படும்பட்சத்தில் தவறுகள் திருத்தப்படும்.
--------------

நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார். அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.

அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்?

Friday, 6 January 2012

நிறம் மா(ற்)றும் பதிவுலகம்!


Thanks to Brother Ghulam 

ஓரிறையின் நற்பெயரால்

இணைய வாசிப்பை தாண்டி., இணையத்தில் தம் வசிப்பை உறுதியாக்கும் நோக்குடனே பதிவுலகில் கரம் பதிந்தவர்கள் நம்மில் அதிகம்! நாம் சார்ந்த ஒரு கொள்கை கோட்பாடுகளை முன்னிருத்தியோ அதுவல்லாத மக்கள் பயன்பெறும் ஆக்கங்களையோ குறைந்தபட்சம் வெறும் பொழுதுப்போக்கான செய்திகளை வெளியிட்டோ நமது இருப்பை இணைய வாழ் உள்ளங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

குறிப்பாக சமூகம் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் தங்கள் வலைத்தளங்களை பலர் தொடங்கினாலும் இஸ்லாம் பணிக்கும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் விசயங்களில் இஸ்லாமிய பதிவர்கள் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே பொதுவான பிற சமயம் சார்ந்த/சாரா பதிவர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை அசைப்போடுவதற்காகவே இப்பதிவு...  

குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

நன்றி : அபூமுஹை

குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!

குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது. இது உலக முஸ்லிம்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம். குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று ஒரு முஸ்லிம் வாதிப்பாரேயானால் அவருக்கு குர்ஆனோடு சிறுதும் பரிச்சயமில்லை என்று சொல்லி விடலாம்.

கருத்து வேறுபாடு இல்லாத அளவுக்கு, குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது என்று ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அதைக் குறிப்பிட்டு எழுதியும் இருக்கிறார்கள்.

(படத்தின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்க முடியும்)



Wednesday, 4 January 2012

நமக்கு உதவியாளன் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும்

நன்றி : readislam.net

பரிந்துரை அல்லாஹ்வுக்கே சொந்தம் :

1. அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா?

(நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்தாலுமா? பரிந்துரை எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (39:43,44)

2. அன்றியும். அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். (43:86)

கற்றோருக்கிடையே கருத்து வேறுபாடுகள்!


அஸ்ஸலாமு அலைக்கும்
“எவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் பிளவுண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்… அவர்களுக்கே தாம் மகத்தான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105) 
தூய இஸ்லாத்தை கருத்து வேறுபாட்டுத் தீயிலிட்டுப் பொசுக்கும் திருப்பணியைத் தொடர்ந்து வரும் மார்க்கம் கற்றோரே (ஆலிம்களே)! நீங்கள் கற்றது உண்மையான இஸ்லாமிய கல்வியயன்றால் உங்களிடம் ஏனித்தனை வன்மம்? மற்றவர்களுக்குப் பிரச்சனையேற்பட்டால் தீர்த்து வைக்கும் பொறுப்பேற்ற நீங்கள் இன்று சமுதாயத்திற்குப் பெரும் பிரச்சனையாகி விட்டீர்களே…. அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய நீங்கள்! இன்று வேற்றுமையையல்லவா விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! 
நீதியின் அரியாசனத்தை அலங்கரிக்க வேண்டியவர்கள் குற்றவாளிக் கூண்டிற்கு விரைந்து கொண்டிருக்கும் கொடுமை உங்களுக்கு இதமாகவா இருக்கிறது? சமுதாயத்தில் ஒருவர் கூடவா இதன் கடமையை இன்னும் உணராமலிக்கிறீர்கள்? உணர்ந்தோர் ஒரு சிலரும்-உணர்த்த முற்படாமல் நமக்கேன் இந்த வீண் வம்பு என்று ஒதுங்கியிருக்கிறீர்கள். 
மார்க்கம் கற்றவர்களே! சற்று சிந்தியுங்கள்-பொறுமையாக….!
நீங்கள் முட்டி மோதி பிளவுபட்டுக் கொண்டிருக்கும் இழுக்கு-உங்களோடு மட்டும் ஒழியவில்லை. மாறாக அந்த அழுக்கு-இஸ்லாத்தை அசுத்தப்படுத்துவதை நீங்கள் அறியவில்லையா?  நீங்கள் கற்றது உண்மையில் தீனுல் இஸ்லாம் ஒன்றேயெனில் நீங்கள் பல்வேறு பிரிவுகளாய் செயல்படுவதேன்?

அசத்தியம் அழிந்தே தீரும்


  Post image for அசத்தியம் அழிந்தே தீரும்  


அஸ்ஸலாமு அலைக்கும்
அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின் மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை. மாறாக இஸ்லாமிய நூல்கள் என்ற பெயரில் பல கட்டுக்கதைகள் நிரம்பிய நூல்களே உலா வந்து கொண்டிருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை அவற்றில் சில:

அல்லாஹ்-சுப்ஹானல்லாஹ்

சகோதரர் Labbai Karaikal அவர்களின் முகநூல் பதிவு.

முஸ்லிமான மற்றும் முஸ்லிமல்லாத (மாற்றுமத) அன்புச் சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும் 
”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு
 (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

இறை விசுவாசிகளே! நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான்.

தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள்.

சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள் நாம் எங்கே இருக்கின்றோம்! பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா?
அல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர்ரஹ்மான்! அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம்! ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா? என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்!

Tuesday, 3 January 2012

அடையாள அட்டை

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
அடையாள அட்டை
பெயர்: வட்டி
புனைப்பெயர்: இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிரைக்கொள்ளும் உயிர்க்கொல்லி.
உடன்பிறந்தோர்: ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டிகள், கந்துவட்டி,மீட்டர்வட்டி, இன்சூரன்ஸ்,லோன், பைனான்ஸ்.
நண்பர்கள்: பணக்காரர்கள்,சேட்டுகள், வட்டிக்காகக் கடன் கொடுப்போர், லாவாதேவிக்காரர்கள்.
எதிரி: தர்மம்,ஸகாத்.
தொழில்: பொருட்களைச்சுரண்டுதல்.
உபதொழில்: உயிரைப்பரித்தல்,நஷ்டஈடாக கற்பை சூறையாடுதல்.
சுற்றுலாத்தலம்: பேங்க், நகைக்கடை,அடகுக்கடை.
அலர்ஜி: வட்டியில்லாக்கடன்.
விரும்புவது: உயிர்,சொத்து.
விரும்பாதது: தனக்கெதிரான பிரச்சாரம்.
எதிர்காலத்திட்டம்: கோடிக்கணக்கான பணம்சேர்ப்பது, பொருள்சேர்ப்பது.
சாதனை: உலக வங்கியில் கடன் வாங்கியதில் இந்தியாவிற்கு முதலாவது இடம்.
பரிசு: நிரந்தர நரகம்.

"நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை


நன்றி : சுவனத்தென்றல் 

அல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்


குறிப்பு : சில மாற்றங்களுடன் இந்த கட்டுரை.

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
அஸ்ஸலாமு அலைக்கும்
நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!
நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது. ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை!

Monday, 2 January 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்

1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

விடை காண்பியுங்கள்???


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.
நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.
தமிழகத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் நான் அல்லாஹ்விற்காக எந்த அமைப்பில் சேர்ந்து பணியாற்றுவது என்று இன்று வரை குழம்பி வருகிறேன். அல்லாஹ்விற்காக எனது சிந்தனைக்கு இஸ்லாமிய முறையில் விடை காண்பியுங்கள்.
இன்று வரை முஸ்லிம் அமைப்புக்கள் செய்யக்கூடிய தவறகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவைகளே என் குழப்பத்திற்கு காரணம் !!

Sunday, 1 January 2012

ரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் 


ரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


1000 ரூபாய் நோட்டு


புரசைவாக்கம் இமாம் மவ்லானா நிஜாமுத்தீன் ஹழ்ரத் வஃபாத் - இரங்கல் செய்தி


பேரன்புடையீர்! 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
 
நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும்,  பன்னூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும் தமிழகத்தின் மிகப் பெரும் தப்லீக் அறிஞரும் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் கே.ஏ. முஹம்மது நிஜாமுத்தீன் மன்பயீ ஹழ்ரத்அவர்கள், இன்று சனிக்கிழமை (31.12.2011) மாலைதாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
  
சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.
 
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் ஜாமிஆ அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி கலாசாலையை தலைமையிடமாக கொண்டு 1996 முதல் செயல்படும் 'ஹைஅத்துஷ் ஷரீய்யா' என்ற ஷரீஅத் பேரவையில் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்கள் ஹழ்ரத் அவர்கள்.
 
சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் பட்டம் (தஹ்ஸீல்) பெற்று, தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.
 
தகவல் : A.B. Khaleel Ahmed Baaqavee