Tuesday, 30 October 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


மூலாதார நூல்களின் அடிப்படையில்

##################

மு ஹ ம் ம த் 
- صلى الله عليه وسلم -இறைவனின் இறுதித் தூதர் அவர்களது வாழ்வு

##################
@
மார்டின் லிங்ஸ் 1 9 8 3

( ஸெய்யித் அபூபக்ர் ஸிராஜுத்தீன் )

தமிழில்: அப்த்-அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்




இறைவனின் இல்லம்

குழந்தைகள் இல்லாதவராக, குழந்தைகள் பெறும் வாய்ப்புகளுமே இல்லாதவராகவே இப்றாஹீம் நபியவர்கள் இருந்தார்கள் என ஆதியாகமம் கூறுகிறது.

ஓர் இரவு இறைவன் இப்றாஹீம் நபியவர்களை அவரது கூடாரத்தினின்றும் வெளியே அழைத்து, “வானத்தை அண்ணாந்து பாரும், அங்கிருக்கும் நட்சத்திரங்களை எண்ண உம்மாலே கூடுமாயின் எண்ணும்” என்றான். இப்றாஹீம் நட்சத்திரங்களை நோக்கியவராக இருந்த போது ஓர் அசரீரி ஒலித்தது - “உம் சந்ததியும் இவ்வண்ணமாய் இருக்கும்.”*1

.....நபி வழி மருத்துவம்.....


தேவையான பொருள்கள்...

கிளிஞ்சல் சிப்பி சுண்ணாம்பு:- 500 கிராம்...

கருஞ்சீரகம் (கல், மண் சுத்தம் செய்யப்பட்டது):- 1 கிலோ...

வெந்நீர்:- தேவையான அளவு....

தேன், ஆலிவ் ஆயில்:- தேவையான அளவு...



செய் முறை:-

மண்பானையில் கிளிஞ்சல் சிப்பி சுண்ணாம்பு 500 கிராம் அளவு போடவேண்டும். அந்த சுண்ணாம்பில் வெந்நீர் சுண்ணாம்பு மூழ்கும் அளவை விட அதிகமாக இருக்க வேண்டும். அந்த நீரில் ஒரு நாள் முழுவதும் அந்த சுண்ணாம்பு இருக்கவேண்டும்.


அடுத்தநாள் அடியில் தங்கிய அந்த சுண்ணாம்பை விட்டு விட்டு, நீரை மட்டும் தனியாக வடிகட்டி எடுக்க வேண்டும். பிறகு நீர்த்த அந்த சுண்ணாம்பு நீரில் ஒரு கிலோ சுத்தம் செய்யப்பட்ட கருஞ்சீரகத்தை 24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

Tuesday, 2 October 2012

தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு



தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது.  தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

‘நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது’ 4.103

மேல் கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வே தொழுகைக்கு நேரத்தை குறிப்பிட்டதாகக் கூறுகின்றான். ஒரு வேலைக்கு நேரம் குறிப்பிடப்படுவதென்பது அதனுடைய ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுவதாகும். இவ்வாறே ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கின்றது. ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் தொழுதுவிட வேண்டும். இஸ்லாம் அனுமதித்த காரணமின்றி ஒரு தொழுகையை அதன் நேரம் தவறி தொழுவது பெரும் குற்றமாகும். அப்படித் தொழுவதை தொழுகையாக கணக்கிடப்படமாட்டாது. ஓவ்வொரு வணக்கத்திலும் சில தியாகங்களை அல்லாஹ் கடமையாக்கியிருக்கின்றான். தொழுகையிலுள்ள முக்கிய தியாகமே உரிய நேரத்தில் ஒவ்வொரு தொழுகையையும் தொழுவதாகும். ஒரு தொழுகை (சுப்ஹு) தூங்கும் நேரத்திலும், அதனால்தான் சுப்ஹுடைய அதானில் மாத்திரம் தொழுகை தூக்கத்தை விட சிறந்தது என்ற வாசகம் கூறப்படுகின்றது. இன்னுமொரு தொழுகை (லுஹர்) வேலை செய்யும் நேரத்திலும் மற்றொரு தொழுகை (அஸர் மஃரிப்) ஓய்வெடுக்கும் நேரத்திலும் இன்னுமொரு தொழுகை (இஷா) சொந்த வேலைகள் செய்யும் நேரத்திலும் கடமையாக்கப்பட்டிருக்கின்றது. அடியான் தன் பலதரப்பட்ட தேவைகளுக்குரிய நேரங்களிலும் ஒருசில மணித்துளிகளை அல்லாஹ்விற்காக அற்பணிக்கின்றானா என்பதை, இத்தொழுகையின் நேரங்களின் மூலம் அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான். ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றுவது எவ்வாறு கடமையோ அவ்வாறே ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் நிறைவேற்றுவதும் கடமையே! என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

குழப்பங்களின் போது ஒரு முஃமின்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழப்பம் (பித்னா) நிறைந்த இக்கால கட்டத்தில் கட்டாயம் கடைபிடித்து ஒழுகுவதற்கான சில உபதேசங்கள்:




1- அல்லாஹ்வின் பக்கம் மீளுதல்: நாம் செய்த பாவங்கள், குற்றச் செயல்கள் காரணமாகவே தவிர இப்படியான குழப்ப நிலைகள் ஏற்படவில்லை. எனவே அவ்வாறான பாவமான, குற்றமான செயல்களில் இருந்து மீண்டு அவனிடம் பிழை பொறுக்கத் தேடவேண்டும்.

நயவஞ்சகம்.. .. அடையாளங்களும், விளைவுகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு


               அல்லாஹ் கூறுகின்றான் (நயவஞ்சகர்களான ஆடவருக்கும் நயவஞ்சகர்களான பெண்டிருக்கும் காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான், அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள், அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும், இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.) ((முனாஃபிக்கு
களே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது, அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும் செல்வங்களிலும் மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள், (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள், உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள், இம்மையிலும மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள் தான் நஷ்டவாளிகள்.) (சூரா அத்தவ்பா 68,69)