Tuesday, 30 October 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


மூலாதார நூல்களின் அடிப்படையில்

##################

மு ஹ ம் ம த் 
- صلى الله عليه وسلم -இறைவனின் இறுதித் தூதர் அவர்களது வாழ்வு

##################
@
மார்டின் லிங்ஸ் 1 9 8 3

( ஸெய்யித் அபூபக்ர் ஸிராஜுத்தீன் )

தமிழில்: அப்த்-அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்




இறைவனின் இல்லம்

குழந்தைகள் இல்லாதவராக, குழந்தைகள் பெறும் வாய்ப்புகளுமே இல்லாதவராகவே இப்றாஹீம் நபியவர்கள் இருந்தார்கள் என ஆதியாகமம் கூறுகிறது.

ஓர் இரவு இறைவன் இப்றாஹீம் நபியவர்களை அவரது கூடாரத்தினின்றும் வெளியே அழைத்து, “வானத்தை அண்ணாந்து பாரும், அங்கிருக்கும் நட்சத்திரங்களை எண்ண உம்மாலே கூடுமாயின் எண்ணும்” என்றான். இப்றாஹீம் நட்சத்திரங்களை நோக்கியவராக இருந்த போது ஓர் அசரீரி ஒலித்தது - “உம் சந்ததியும் இவ்வண்ணமாய் இருக்கும்.”*1


இப்றாஹீமின் மனைவி ஸாராவுக்கு அப்போது வயது எழுபத் தாறு. அவருக்கோ எண்பத்தைந்து. தனது பணிப்பெண்ணாக இருந்த எகிப்திய ஹாஜராவை இரண்டாவது மனைவியாகக் கொள்ளவென இப்றாஹீமுக்கு அளித்தார் ஸாரா. 
எஜமானிக்கும் பணிப்பெண்ணுக்குமிடையில் மனக்கசப்புகள் வளரவே, ஸாராவின் கோபத்தினின்றும் விலகிச்சென்ற ஹாஜரா தனது துயரங்களை இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தன் செய்தியோடு வானவர் ஒருவரை ஹாஜராவிடம் அனுப்பி “உன் சந்ததியை மிகவும் பெருகப் பண்ணுவேன்; அது பெருகி எண்ண முடியாததாயிருக்கும்” என்றுரைக்கச் செய்தான்.

மேலும் அந்த வானவர் கூறினார்: “ நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய். இறைவன் உனது முறையீட்டைக் கேட்டபடியினால் உன் குமாரனுக்கு இஸ்மாயீல் எனப் பெயரிடுவாயாக!*2. திரும்பி வந்த ஹாஜரா வானவ தூதர் தன்னிடம் உரைத்தவற்றை இப்றாஹீமிடமும் ஸாராவிடமும் கூறினார். 

குழந்தை பிறந்ததும் இப்றாஹீம் நபியவர்கள் தனது மகனுக்கு இட்ட பெயர் ‘இஸ்மாயீல்’ - இறைவன் செவியுற்றான்.



-இன்னும் வரும்…

No comments:

Post a Comment