முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்) அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளமிருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர் களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கின்றது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகின்றது. பின்னர், அது தடித்துக் கனமாகின்றது. பின்னர், விவசாயிக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன்னுடைய தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டு வருகின்றான். எனினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான். (48:29)

No comments:
Post a Comment