Wednesday, 6 February 2019

பிரார்த்தனை

இறைவா ,
ஏழு வானங்களின் இறைவனும்
வல்லமையுள்ள அர்ஷின் இறைவனும்,
எங்கள் இறைவனும்,
எல்லாவற்றிற்கும் தவ்ராத்தையும், இன்ஜீலையும், மகத்துவமான குர்ஆனையும் அருளிய இறைவன்.

நீதான் முதன்மையானவன், உனக்கு முன் ஒன்றும் இல்லை;
நீ கடைசியாக இருக்கிறாய், உனக்குப்பின் ஒன்றும் இல்லை.
நீயே உயர்ந்தவன் உன்னதமானவன், உம்மைத் தவிர வேறொன்றும்  உயர்ந்தது இல்லை, நீயே மிகஅருகில் இருக்கின்றாய், உன்னைவிட  நெருக்கமாக ஒன்றும் இல்லை. எங்கள் கடன் சுமைகளிலிருந்து அபயமளிப்பாயாக மேலும் பிறரிடம் யாசிப்பதைவிட்டு விலக்கிடு.

اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ


இப்னு மாஜா 

Friday, 1 February 2019

இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே


இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே

وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ


சுப்ஹானல்லாஹ்!

இறைவனிடம் உதவி தேடு என்று நம்மை படைத்த நாள் முதல் சொல்கிறான், நாம் தான் விளங்காமல் அப்படி செய்திருக்கலாம்  இப்படிச் செய்திருக்கலாம் என்கிறோம்.  அந்த வார்த்தை தவறானது  என்பதைச் சொல்லுவதற்கு முன்னால் இறைவன் இப்படிச் சொல்லச் சொல்லி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மூலம் நமக்குச் சொல்லுகிறான். 

மேலும் குர் ஆனில் இந்த வார்த்தைக்கு மிகுந்த பொருளுடன் நம்மை நோக்கி இறைவன் வேண்டச் சொல்வதில் சிலதைக் காண்போம்.

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

 وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ‌ؕ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ‏ 

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

 اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ

பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.


اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا‌

“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்;




இப்படிச் செய்திருந்தால்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்பதைச் சுட்டும்) "லவ்" எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.


فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது.
உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!" என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.
மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்" என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்பதைச் சுட்டும்) "லவ்" எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ رَبِيعَةَ بْنِ عُثْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ وَإِنْ أَصَابَكَ شَىْءٌ فَلاَ تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا ‏.‏ وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ ‏"‏ ‏.‏