Thursday, 2 February 2012

Senthozan sha

Senthozan sha

கடையநல்லூரில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி எழுதிய கட்டுரையால் பரபரப்பு

Posted: 29 Jan 2012 06:28 AM PST

கடையநல்லூர் மெயின் பஜாரில் கோழிக்கடை நடத்தி வருபவர் மக்கட்டி துராப்ஷா.இவர் இஸ்லாத்திற்கு எதிரானா கருத்துக்களை கொண்டவர்.சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு எதிராக தனது இணையதளமான http://iraiyillaislam.blogspot.com/ -ல் ” லூத் என்றால் லூசு” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு அதில் நபிமார்கள் பற்றி அவதூறான செய்திகள் வெளியிட்டது இஸ்லாமியர்களின் மிகுந்த கோபத்திற்கு ஆளானார்.
இது பற்றி கேள்விப்பட்ட மஸ்ஜித் முபாரக் அமைப்பு அவரை எச்சரிக்கை செய்த்ததுடன் வெள்ளி கிழமை நடந்த ஜும்மாவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது இறைவன் பெயரால் அருக்கபடாத எந்த ஒரு மாமிச உணவையும் உட்கொள்ள கூடாது என்று அதன்படி இனிமேல் யாரும் இவருடைய கடையில் கோழி கறி வாங்ககூடாது என்று கேட்டு கொண்டது.
இது சம்பந்தமாக நாம் மஸ்ஜித் முபாரக் அமைப்பு தலைவர் சகோதரர் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது….
இஸ்லாத்திற்கு எதிரான கருத்து கொண்ட மக்கட்டி துராப்ஷா தனது இணையத்தில் வெளியிட்ட கட்டுரை சம்பந்தமாக தனது ஆதங்கத்தை வெளிட்டார்.
லூத் என்றொரு ”லூஸ்” என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரையில் இஸ்லாத்தை பற்றி தவறான புரிதலுடன் இஸ்லாத்தையும் மற்றும் இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் படி எழுதி உள்ளார்.
மஸ்ஜித் முபாரக் சார்பில் அவருக்கு எச்சரிக்கை செய்ததுடன், சில நாட்களுக்கு முன்பு செத்துப்போன ஆடிரைச்சி விற்பனையை தடை செய்தது போல். அல்லாஹ்வின் பெயரால் அருக்கபடாத மாமிச உணவான இவருடைய கடையில் விற்கப்படும் கோழி கறியை வாங்க கூடாது என்று அறிவுறுத்தபட்டது.
இஸ்லாத்தை பற்றி அவதூறாக எழுதும் சல்மான் ருஷ்டிக்கும் இவனுக்கும் என்ன வித்யாசம் என்ற அவருடைய வார்த்தையில் நியமான கோபம் தெரிந்தது.
இவருடைய இந்த அவதூறான கட்டுரை மற்றும் அதற்க்கு ஏற்பட்டஎதிர்ப்பை கேள்விப்பட்ட மக்கள் துராப்ஷாவின் கடையை முற்றுகையிட்டனர்.
இதனையொட்டி பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காககடையநல்லூர் காவல் நிலையத்தில் மஸ்ஜித் முபாரக் சார்பில் புகார் தெரிவிக்க பட்டு இன்று போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அதுமட்டுமல்லாமல் காவல்துறை சார்பிலும்,மஸ்ஜித் முபாரக் சார்பிலும் இனிமேல் இது போன்று இஸ்லாம் மத்தத்தை புண்படுத்துமாறு கருத்து வெளியிட கூடாது மற்றும் வியாழக்கிழமை வரை கடையை திறக்க கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பபட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பஜாரில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
நன்றி : kadayanallur.org

No comments:

Post a Comment