Friday, 31 October 2014

பிரார்த்தனை


எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” 
“எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” 
“எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” 
“எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).




பெற்றோர்களுக்கான பிரார்த்தனை

என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக!”



எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

தூய்மையானவன் உம் இறைவன்; கண்ணியத்திற்கு உரித்தானவன்; இவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கும் அனைத்தையும் விட்டு (அவன் தூய்மையானவன்!)

மேலும், சாந்தி உண்டாகட்டும்; இறைத்தூதர்கள் அனைவர் மீதும்!

இன்னும் புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரித்தானது!


Evening Supplication

மாலை நேர பிரார்த்தனை













Thursday, 30 October 2014

இறைவனது வாக்குறுதிகள் நான்கு.



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

Do not despair of the mercy of Allah.
அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்.

We are closer to him than [his] jugular vein
அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்.
Indeed, with hardship [will be] ease.
திண்ணமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.
Call upon Me; I will respond to you.
என்னிடம் இறைஞ்சுங்கள்! நான் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வேன்.


அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை மட்டுமே வணங்கி மரணிக்ககூடிய நல்லடியார்களாக நம் அனைவரையும் ஆக்குவானாக!
ஆமீன், ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

யார் அவர்கள் ? யார் ?.....

அல்லாஹ் மறுமைநாளில் பேசமாட்டான்... தூய்மைபடுத்த மாட்டான் அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்.. அவர்களுக்கு துன்பம்தரும் வேதனை மட்டுமே உண்டு..
யார் அவர்கள் ? யார் ?.....
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...
  • விபசாரம் புரிகின்ற முதியவர், 
  • பொய் சொல்கின்ற அரசன், 
  • பெருமையடிக்கும் ஏழை ..
  • தேவைக்கு அதிகமாகத் தண்ணீரை வைத்திருந்தும், அடுத்தவர்களுக்கு வழங்காமல் அதைத் தடுப்பவர்..
  • செய்த தருமத்தைச் சொல்லிக் காட்டுபவர். அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்கமாட்டார்.
  • பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை அதிக விலைக்கு விற்பனை செய்பவர். 
  • தற்பெருமையால் தமது கீழங்கியை (கணுக் காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவர்.
  • ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் (பொய்) சத்தியம் செய்தவர்"....



Wednesday, 29 October 2014

அல்லாஹ்விற்கு பிரியமானவை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) 



சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி;



சுப்ஹானல்லாஹில் அழீம். 


பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்

Morning Supplication











Tuesday, 28 October 2014

ஜோடி !!!

ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கின்றோம்.



அல்லாஹ்வின் அருள்

ஆயினும், என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றது.


நேர்வழி

மேலும், அவன் உம்மை வழியறியாதவராய்க் கண்டான்; பிறகு, நேர்வழி காண்பித்தான்.


மிகச் சிறந்த படைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்.



Monday, 27 October 2014

பிரார்த்தனை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

(நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்." ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.


பிரார்த்தனை

(நபியே!) எது மிக உன்னத வழிமுறையாய் உள்ளதோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக! அவர்கள் (உம்மீது) புனைந்து கூறுகின்றவற்றை நாம் நன்கறிவோம்.
மேலும், இறைஞ்சுவீராக! “என் இறைவனே! நான் ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.
மேலும், என் இறைவனே! அவர்கள் என்னருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.”


ஆன்ம திருப்தி

இறைவனின் மன்னிப்புக்கேட்பதன் மூலம் ஆன்மா திருப்தி அடைகிறது

அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். 
என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது 'இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அன்றி, அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். (குர் ஆன் 8 :33)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)




இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்:

என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக.

அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை படைத்த இறைவனிடம் மன்னிப்புக் கேட்போம்.

பாவமன்னிப்பு கோரும் தலையாய துஆ


ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய, வஅஃபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த


இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.

துஆ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) 


சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி
அதத கல்கிஹி,
வ ரிளா நஃப்சிஹி,
வ ஸினத்த அர்ஷிஹி,
வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)" என்றார்கள்.






பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்

பிரார்த்தனை

"எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும்"


பெரும் சோதனை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அன்றி, உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (8 : 28)
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களை போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன்.(8 : 29)


பொறுமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
பொறுமைக்கு பின்னால் அழகிய பொக்கிஷங்கள் காத்திருக்கின்றன.
அல்லாஹ் தனது மறையில் அழகாக சொல்லுகிறான்.
பொறுமையாளராகவும் நன்றி செலுத்துபவராகவும் திகழும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சம்பவங்களில் பல சான்றுகள் இருக்கின்றன. (14:5)
பொறுமையாளராகவும், நன்றி செலுத்துபவராகவும் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் அநேக சான்றுகள் உள்ளன. (31:31)
ஒவ்வொரு பொறுமைசாலிக்கும் நன்றி உடையவர்க்கும் இதில் திண்ணமாக சான்றுகள் இருக்கின்றன. (34:19)
பொறுமையைக் கடைப்பிடிக்கக்கூடிய மேலும், நன்றி செலுத்தக் கூடிய ஒவ்வொருவருக்கும் இதில் நிறைய சான்றுகள் இருக்கின்றன.(42:33)
பொறுமையாளர்களுக்கு அல்லாஹ் கூறும் வெகுமதி என்ன!!
பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (8: 46)
நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:146)
அல்லாஹ் சகிப்பும், பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
(2:249),(8:66)
இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை கைக்கொள்வீர்களாக! சத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழ்வீர்களாக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும்! (3:200)
யா அல்லாஹ்! பொறுமையாளர்களோடு இருப்பவனோ
நீ கற்றுக்கொடுத்த வாக்கியத்தைக் கொண்டே உன்னிடம் அழகிய பொறுமையைக் கேட்கிறோம்.
எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! மேலும், இறை நிராகரிப்பாளர்களான இந்தக் கூட்டத்தினரை வென்றிட எங்களுக்கு உதவி செய்வாயாக!”
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

Better tomorrow

Verses that give you hope in a better tomorrow
Allah says:
thou knowest not if perchance Allah will bring about thereafter some new situation.
இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.
Picture Courtesy : Kamal Ben