'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்'
Monday, 24 November 2014
அல் பகரா - பசு மாடு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
"(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி" என (நபியே! நீங்கள் யூதர்களை)க் கேளுங்கள். நிச்சயமாக அவர் இதனை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உங்களது உள்ளத்தில் இறக்கிவைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது.

அன்றி, (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக இணைவைத்து வணங்கும்) முஷ்ரிக்குகளை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! அவர்களில் ஒவ்வொருவனும் "நான் ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழ வேண்டுமே?" என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) யிருடன் இருக்க அவனை விட்டு வைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிட மாட்டாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.

"(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சுவர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கன்றி உங்களுக்கே சொந்தமென்று (கூறும்) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (உங்களுக்குச் சொந்தமான அவ்வீட்டிற்குச் செல்வதற்கு) நீங்கள் மரணத்தை விரும்புங்கள்" என (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்கு மேல் "தூர்" என்ற மலையை உயர்த்தி "உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப் பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்" என்று கூறியதற்கு (அவர்கள் "நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டுவிட்டது. "(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

(இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கின்றீர்கள்.

"அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவை(யான வேதங்)களை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்" எனக் கூறி அவைகளைத் தவிர உள்ள இ(ந்)த(க்குர்ஆ)னை நிராகரித்து விடுகின்றார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக்) கேளுங்கள்: "(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?"

(இந்த குர்ஆனை தங்கள்மீது இறக்காமல்) அல்லாஹ் தன்னுடைய அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன்னுடைய கிருபையை இறக்கி வைத்ததைப் பற்றிப் பொறாமைக் கொண்டு, அல்லாஹ் இறக்கி வைத்த இதையே நிராகரிப்பதன் மூலமாய் அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்துவிட்டார்கள். ஆதலால் அந்நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கின்றது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, அந்த நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக!

Sunday, 23 November 2014
அல் பகரா - பசு மாடு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
தவிர, (யூதர்களே!) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகப் பல தூதர்களையும் அனுப்பி வைத்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து அவரை (ஜிப்ரயீல் என்னும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டும் பலப்படுத்தி வைத்தோம். (ஆனால்) உங்கள் மனம் விரும்பாத யாதொன்றையும் (நம்முடைய) எந்தத் தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதிலும் நீங்கள் கர்வம் (கொண்டு விலகிக்) கொள்ளவில்லையா? அன்றியும் (அத்தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்யாக்கி, சிலரை கொலை செய்தும் விட்டீர்கள்!

இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகின்றீர்கள். உங்களில் பலரை அவர்கள் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகின்றீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கின்றீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிச்) கைதிகளாக உங்களிடம் (உதவி தேடி) வந்து விட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகின்றீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கை கொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்களுடைய இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.

அன்றி, நீங்கள் உங்கள் (மனிதர்களுடைய) இரத்தத்தை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மனிதர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதனை உறுதிபடுத்தியிருக்கின்றீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அல் பகரா - பசு மாடு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (அழகிய வார்த்தை சொல்லுங்கள்). தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்து (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள்" என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கின்றீர்கள்.

"ஒரு சில நாள்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என அவர்கள் கூறுகின்றார்கள். (அதற்கு நபியே! அவர்களை) நீங்கள் கேளுங்கள்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கு மாற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கின்றீர்களா?
அல் பகரா - பசு மாடு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
எவர்கள் தங்கள் கையைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக் கிரயத்தையடைவதற்காக "இது அல்லாஹ் விடமிருந்து வந்ததுதான்" என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்!

மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் ("தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி "(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறுகின்றனர்.

(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்களென நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர்.

இதற்குப் பின்னும் உங்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. (பிளந்தால்) வெடித்து அதிலிருந்து நீர் புறப்படக் கூடியவைகளும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக்கூடியவைகளும் அவற்றில் உண்டு. (ஆனால் யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.

Wednesday, 19 November 2014
அல் பகரா - பசு மாடு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதனை அறுத்து) "அதில் ஒரு பாகத்தைக்கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்" என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வாறே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வற்காக அவன் தன்னுடைய (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகின்றான்.

(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள்.

அதற்கவர்கள் அம்மாடு எங்களைச் சந்தேகத்திற் குள்ளாக்குகின்றது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்தறிவிக்கும்படி உங்களுடைய இறைவனை நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நாடினால் இனி நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்" எனக் கூறினார்கள்.

"அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அறிவிக்கும்படி உங்களது இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்" எனக் கூறி "உங்களுக்கிடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்" என்றார்.

தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார்.

மேலும் சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்கக் கூடாதென்றிருந்த கட்டளையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!" எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தேயிருக்கின்றீர்கள்.

"தூர்" என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் "நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவீர்கள்" (என்று கூறினோம்.)
அல் பகரா - பசு மாடு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

ஆனால் (அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் முளைக்கக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவைகளை வெளிப்படுத்தித் தரும்படி உங்களுடைய இறைவனை எங்களுக்காக நீங்கள் கேளுங்கள்" என அவரிடம் கேட்டார்கள். அதற்கு (மூஸா) "மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கின்றீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்" என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை அடிக்கடி) வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்ததுதான்.

Tuesday, 18 November 2014
அல் பகரா - பசு மாடு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.

ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.

இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாவச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.

இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.

மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.

Monday, 17 November 2014
Subscribe to:
Posts (Atom)