அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
அலிஃப்; லாம்; மீம்.
இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறை அச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்.
அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
No comments:
Post a Comment