Thursday, 25 August 2011

தமிழ்நாடு தௌஹீது ஜமாத்தின் குமுறல்

அஸ்ஸலாமு அலைக்கும்

இது தமிழ்நாடு தௌஹீது ஜமாத் வெளியிட்ட பாலக்கரை பதிவிற்கு வாசகரின் சரியான பதிலை நாம் இங்கு பதிவு செய்கின்றோம்.

தமிழ்நாடு தௌஹீது ஜமாத்தின் குமுறலை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது ஏதோ கொள்கைக்காகவே எல்லாம் செய்வது போலவும் பணம் ஒரு பொருட்டு அல்ல என்பது போலவும் ஷைத்தான் வேதம் ஓதிய கதையாக உள்ளது ஏன் என்றால் சைபுல்லாஹ் காஜாவை மாற்றியதிலும் பாலக்கரை தமிழ்நாடு தௌஹீது டிரஸ்டின் மேல் நடவடிக்கை எடுத்ததிலும் பணம் ,சொத்து, பகைமையும் தான் முதல் காரணமாக உள்ளது . இல்லை என்றால் கொள்கை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க ரமலான் முடியட்டும் என்று காத்திருந்த பீ ஜே க்கு ஒரு தௌஹீது வாதியான சைபுல்லா காஜாவின் ஏற்பாட்டில் ஜும்மா நடந்ததை பொறுக்க முடியவில்லை தௌஹீதை வைத்து இந்த பிழைப்பு தேவைதானா பீ . ஜே அவர்களே ! இனி யாரை இலக்கு வைத்திருக்கிறீகள். பீ. ஜே க்கு கும்பிடு போடும் தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் நிர்வாகிகளே ! உஷார் ! உஷார் ! அடுத்தது நீங்களாக கூட இருக்கலாம்

தனக்கு பிடிக்காதவர்களை வளர விடமாட்டார் அவர் கொள்கை வாதியாக இருந்தாலும் கூட

Sunday, 21 August 2011

சந்தர்ப்பவாதTNTJ

அஸ்ஸலாமு அலைக்கும்


தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத்தின் சந்தர்ப்பவாதத்தை பற்றி சில கேள்விகள் ?
  •    ஜாக்குடைய பள்ளியில் ஜூம்மா தொழுகை கூட தொழக்கூடாது என்று சொல்லக்கூடிய இந்த அமைப்பு ஜின்னு , சிஹ்ரு விஷயத்தில் தவறான நம்பிக்கை உடைய உமராபாத் மாணவர்களை வைத்து தராவிஹ் தொழுகை நடத்துவது சரிதானா? 
  • ஜூம்மா மிம்பரில் கூட்டு துஆ ஓதக்கூடிய , விரல் அசைப்பது கூடாது என்று சொல்லகூடிய , பெருநாள் தக்பீர் பித்-அத்தஹா கூறக்கூடிய முஜாஹித்களை வைத்து தராவிஹ் தொழுகை நடத்துவது சரிதானா?
  • தனிப்பள்ளி தேவையில்லை என்று இதுவரையும் கூறிவந்தீர்கள். இப்போது முன்னாள்  ஜாக்கின் பள்ளிகளை பார்த்தவுடன் (கடையநல்லூர் போன்ற) உங்களுக்கு சம்மந்தமில்லாத பள்ளிகளை எடுக்க நினைப்பது ஏன் ?
  • மற்றவர்களும்  தௌஹீது அடிப்படையில் தானே தொழுகை, பிரச்சாரங்கள்  நடத்துகிறார்கள். ஆனால் பிஜே யின் தலைமையில் நடந்தால் தான் அது தௌஹீது பள்ளியாகும் என்ற தனிமனித வழிபாட்டை உருவாக்க முயற்சிப்பது ஏன்?
  • உங்கள் உண்மையான நிலை தான் என்ன? தௌஹீது பள்ளிகள் தேவையா? அல்லது உங்கள்இயக்கப்  பள்ளிகள் தேவையா?
மக்களின் பார்வைக்காக வாசகரின் கேள்வி 

இஃதிகாஃப்


இஃதிகாஃப்
2025. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
"நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!" 

ரமளான் கடைசிப் பத்தில் செய்ய வேண்டிய துஆ

ரமளான் கடைசிப் பத்தில் செய்ய வேண்டிய துஆ 



اللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.

இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. ஆதாரம் : திர்மிதி 

நன்றி : முஹிபுல்லாஹ் உமரி.

Saturday, 20 August 2011

புஹாரி ஹதீஸ் : லைலதுல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ரின் சிறப்பு
2014. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!" 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஹதீஸ் விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்

தொழுகையை நாம் நிற்கும் போது நாம் இறைவனை பார்க்கவில்லை என்பதைவிட இறைவன் நம்மை பார்ப்பதுடன், நமது பிரார்த்தனைக்கு பதில் தருகின்றான் என்று மனதை ஒரு நிலையில் இறைவனை தொழவேண்டும் என்பது கீழுள்ள நபி மொழியில் நாம் விளங்கலாம்.

மீண்டும் ஒரு 19-ல் நீக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்

மீண்டும் ஒரு 19 பிளவு  - திருச்சி பாலக்கரை மற்றும் பீமநகர் கிளைகள்   TNTJ யில் இருந்து நீக்கம்.

திருச்சியில் பயான் செய்து வரும் M.I. சுலைமான் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் எந்த சாதகமான முடிவையும் எட்டாத நிலையில் திருச்சி பாலக்கரை மற்றும் பீமநகர் கிளைகள்   TNTJ யில் இருந்து நீக்கம் உறுதியானது.  கடந்த சில வாரங்களாக ஜும்மா பயானிற்கு அழைப்பாளர்கள் வராத நிலையில் பாலக்கரை கிளையினர் மஸ்ஜித் முபரக்கினை அணுகி ஜும்மாவிற்கு அழைப்பாளர்களை அனுப்புமாறு வேண்டினர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு குத்பாக்களை மஸ்ஜித் முபரகிலுள்ள இமாம்கள் சென்று திருச்சி பாலக்கரை பள்ளியில் ஜும்மா பயானிற்கு சென்றனர்.  இது TNTJ தலைமையின் கீழ் பள்ளி நிர்வாகம் கொடுக்காததால் ஏற்பட்ட பிளவு என்று அறிகின்றோம். அல்லாஹ் அவனது இல்லங்களை பாதுகாக்கப் போதுமானவன். குர்-ஆன் மற்றும் சுன்னாவை எடுத்துச் சொல்ல பள்ளிகள் வேண்டுமே தவிர அதன் நிர்வாகம் நமக்கு வேண்டியதில்லை.

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகம் பற்றி முஹம்மத் அலி எனும் சகோதரர் இவ்வாறே குறிப்பிட்டுள்ளார்.

//சகோதரர் ஜலீல் மதனி பார்த்தது இயக்கம் அல்ல குர் ஆன் ஹதீஸ் இருக்கிறதா என்று தான் ஏன்என்றால் அவர் அந்த பள்ளியை ஏகத்துவத்தை நிலை நிறுத்துவதற்க்காத்தான் கட்டினார்  இன்னும் அவர் பிறர் மீது எவ்வளவு பிறியமாக இருந்தாலும் கொள்கைக்கு எதிரி என்றால் அவனை ஏறெடுத்து கூட பார்க்கமாட்டார் அதை நான் என் வாழ்நாளில் உணந்து இருக்கிறேன் அதாவது நான் சிறு வயதிலே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டேன் அவர் பட்டரையில் இருக்கும் போதே நான் அங்கு செல்வேன் இதனால் என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்  எனக்கு நெறுங்கிய உறவும் கூட 1997 ல் நான் ரியாத்தில் இருந்தபோது மஜ்ஜிதுல் முபாரக்கிற்க்காக வசூல் செய்ய வேண்டி தனியாக லட்டரும் பில் கட்டையும் எனக்கு அனுப்பினார் அப்படி இருந்தவர் நான் வேற்று கொள்கையில் இருக்கிறேன் என்று தெரிந்தபோது என்னை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை சொந்த பந்தம் அத்தனையும் மறந்தார் பின்பு மறனிப்பதற்க்கு முன்பு நான் அந்த கொள்கையில் இல்லை என்பதை தெரிந்து துபாயில் இருக்கும் போது போனில் பேசினார் நல்ல முறையில் பணி செய் என்று அறிவுறுத்தினார்.//

இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு கொள்கை மட்டுமே நாம் எடுத்துச் சொன்னால், மக்கள் தாமாகவே இறைவனின் கூற்று மற்றும் நபி வழியை முன்மாதிரியாக எடுத்து பின்பற்றுவார்கள் என்பது திண்ணம். 

6:159நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.

6:160எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

6:161(நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.

6:162நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

3:8“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)




Tuesday, 16 August 2011

இரவுத் தொழுகை பற்றி - முஸ்லிம் ஹதீஸ்

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் ‘தொழுகை‘ அவர்களது ‘துஆ‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 379

எனது சிறிய தாயார் மைமுனா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் அவர்களது வீட்டில் (அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய இபாதத்துகள் வணக்கங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டி) ஓரிரவு தங்கியிருந்தேன். இரவில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து தங்கள் தேவைக்கு (மலம்இ சிறுநீர் கழிக்க) வந்து விட்டு அதன்பின் தங்களது முகத்தையும் கைகளையும் கழுவிய பின் உறங்கிவிட்டார்கள். அதன்பிறகு எழுந்து (கட்டி வைக்கப்பட்டிருந்த) தண்ணீர் பையின் பால் வந்து அதன் வாய்க்கட்டை அவிழ்த்து (அதிலிருந்து) இரு ஒளுவிற்கு இடைப்பட்ட (அதாவது தண்ணீரை அதிகமாகவுமின்றி குறைவாகவுமின்றி அளவோடு உபயோகித்து) ஒரு ஒளுவை நேர்த்தியாக செய்தனர். அதன்பிறகு (தொழுகைக்காக) நின்று தொழ ஆரம்பித்தனர். அப்போது நான் எழுந்துஇ நிச்சயமாக நான் உஷாராகி அவர்களைக் கண்காணிக்கின்றேன் என்பதை அவர்கள் பார்த்து விடுவதை வெறுத்ததன் நிமித்தம் சோம்பல் முறித்துக் கொண்டேன். அதன்பின் ஒளுவும் செய்து கொண்டு (வந்தேன் அப்போது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்)அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

எனவே நான் அவர்களின் இடது பக்கத்தில் (சென்று) நின்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கையைப்பிடித்து சுற்றவைத்து (தங்களது) வலது பக்கம் ஆக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் இரவுத் தொழுகையானது பதிமூன்று (13) ரக்அத்துகளாக நிறைவு பெற்றன. அதன்பின் படுத்து கொரட்டை விட்டு உறங்கினார்கள். அவர்கள் உறங்கும் போது கொரட்டை விடுவார்கள். அதன்பின் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து அவர்களிடம் தொழுகையைப் பற்றி அறிவித்த போது (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம); அவர்கள் எழுந்து (அப்படியே) ஒளுச் செய்யாது தொழுதனர். அவர்களது துஅவில்

யாஅல்லாஹ்! எனது இதயத்தில் ஒளியை ஆக்குவாயாக!
எனது பார்வையில் ஒளியை ஆக்குவாயாக!
எனது செவியில் ஒளியை ஆக்குவாயாக!
எனது வலப்புறம் ஒளியை ஆக்குவாயாக!
எனது இடப்புறம் ஒளியை ஆக்குவாயாக!
எனது மேலிருந்து ஒளியை ஆக்குவாயாக!
எனக்கு கீழ் ஒளியை ஆக்குவாயாக!
எனக்கு முன்னால் ஒளியை ஆக்குவாயாக!
எனக்கு பின்னால் ஒளியை ஆக்குவாயாக!
ஒளியை மகத்தானதாக எனக்கு ஆக்கி (அருள்) வாயாக! எனக்கூறிக் கொண்டிருந்தனர் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

என் மனதில் ஏழு வார்த்தைகளை நான் வைக்கிறேன். ஆயினும் அதை நான் மறந்து விட்டேன். அப்பாஸின் மக்களில் சிலரை நான் சந்தித்தேன். அவைகளை எனக்கு கூற ஆரம்பித்து அஸபீஇ வலஹ்மீஇ வத(ம்)மீஇ வஷஃரீ ஆகிய (ஜந்து வார்த்தைகளையும் அதன்பிறகு) இரண்டையும் கூறினார் என குரைப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்.

குறிப்பு : 1 மேற்கூறிய ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்கி விழித்தவாறு சென்று தொழுத நிகழ்ச்சி பிறிதொரு ஹதீஸில் விளக்கப்பட்டுள்ளபடிஇ இது நபிமார்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதை முஸ்லீம்கள் நினைவில் கொள்ளவும்.

2 குரைப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஏழு வார்த்தைகளைப் பற்றிய ஹதீஸில் உள்ளவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ‘துஆ‘ வில் உள்ள வார்த்தையாகும். 

இரவுத் தொழுகை பற்றி - புஹாரி ஹதீஸ்

1120. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் 'இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை' என்று கூறிவார்கள்.
Volume :1 Book :19

Sunday, 7 August 2011

"சுவன அழைப்பு"

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.............

1-அல்லாஹுத்தஆலாவை நெருங்கி இருக்க வேண்டுமா?

ஓர் அடியான், எஜமானன் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி இருப்பது அவன் சுஜுதில் இருக்கும்பொழுதே! ஆகவே அதில் அதிகம் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).


2-புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய நன்மையைப் பெறவேண்டுமா?

ரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும், அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் (புகாரி, முஸ்லிம்).

Saturday, 6 August 2011

காயிதே மில்லத் ஈத்கா திடல்


                                             அல்ஹம்துலில்லாஹ் மஸ்ஜித் முபாரக் நிர்வாகம் எப்போதும் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று பதிவு செய்ததற்கு; எனவே பெருநாள் திடல் தொழுகை எப்போதும் போலவே இவ்வருடமும் மஸ்ஜித் முபாரக் நிர்வாகம் முயற்சி செய்து பொதுமக்கள் காயிதே மில்லத் ஈத்கா திடல் தொழுகை நடத்திட இறைவனிடம் இறைஞ்சுவோம். மேலும் எந்த காலத்திலும் தொழுகை நடக்கும் இடத்தில் இயக்கத்திற்கு முக்கியத்துவம் அவசியம் இல்லை. இதனை முதல் திடல் தொழுகை நடத்தும் போது சொன்னது இன்னும் எங்களது நினைவில் உள்ளது.

தொழுகை இறைவனுக்கு இயக்கங்களுக்கு அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்வோம்.