Saturday, 20 August 2011

மீண்டும் ஒரு 19-ல் நீக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்

மீண்டும் ஒரு 19 பிளவு  - திருச்சி பாலக்கரை மற்றும் பீமநகர் கிளைகள்   TNTJ யில் இருந்து நீக்கம்.

திருச்சியில் பயான் செய்து வரும் M.I. சுலைமான் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் எந்த சாதகமான முடிவையும் எட்டாத நிலையில் திருச்சி பாலக்கரை மற்றும் பீமநகர் கிளைகள்   TNTJ யில் இருந்து நீக்கம் உறுதியானது.  கடந்த சில வாரங்களாக ஜும்மா பயானிற்கு அழைப்பாளர்கள் வராத நிலையில் பாலக்கரை கிளையினர் மஸ்ஜித் முபரக்கினை அணுகி ஜும்மாவிற்கு அழைப்பாளர்களை அனுப்புமாறு வேண்டினர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு குத்பாக்களை மஸ்ஜித் முபரகிலுள்ள இமாம்கள் சென்று திருச்சி பாலக்கரை பள்ளியில் ஜும்மா பயானிற்கு சென்றனர்.  இது TNTJ தலைமையின் கீழ் பள்ளி நிர்வாகம் கொடுக்காததால் ஏற்பட்ட பிளவு என்று அறிகின்றோம். அல்லாஹ் அவனது இல்லங்களை பாதுகாக்கப் போதுமானவன். குர்-ஆன் மற்றும் சுன்னாவை எடுத்துச் சொல்ல பள்ளிகள் வேண்டுமே தவிர அதன் நிர்வாகம் நமக்கு வேண்டியதில்லை.

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகம் பற்றி முஹம்மத் அலி எனும் சகோதரர் இவ்வாறே குறிப்பிட்டுள்ளார்.

//சகோதரர் ஜலீல் மதனி பார்த்தது இயக்கம் அல்ல குர் ஆன் ஹதீஸ் இருக்கிறதா என்று தான் ஏன்என்றால் அவர் அந்த பள்ளியை ஏகத்துவத்தை நிலை நிறுத்துவதற்க்காத்தான் கட்டினார்  இன்னும் அவர் பிறர் மீது எவ்வளவு பிறியமாக இருந்தாலும் கொள்கைக்கு எதிரி என்றால் அவனை ஏறெடுத்து கூட பார்க்கமாட்டார் அதை நான் என் வாழ்நாளில் உணந்து இருக்கிறேன் அதாவது நான் சிறு வயதிலே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டேன் அவர் பட்டரையில் இருக்கும் போதே நான் அங்கு செல்வேன் இதனால் என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்  எனக்கு நெறுங்கிய உறவும் கூட 1997 ல் நான் ரியாத்தில் இருந்தபோது மஜ்ஜிதுல் முபாரக்கிற்க்காக வசூல் செய்ய வேண்டி தனியாக லட்டரும் பில் கட்டையும் எனக்கு அனுப்பினார் அப்படி இருந்தவர் நான் வேற்று கொள்கையில் இருக்கிறேன் என்று தெரிந்தபோது என்னை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை சொந்த பந்தம் அத்தனையும் மறந்தார் பின்பு மறனிப்பதற்க்கு முன்பு நான் அந்த கொள்கையில் இல்லை என்பதை தெரிந்து துபாயில் இருக்கும் போது போனில் பேசினார் நல்ல முறையில் பணி செய் என்று அறிவுறுத்தினார்.//

இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு கொள்கை மட்டுமே நாம் எடுத்துச் சொன்னால், மக்கள் தாமாகவே இறைவனின் கூற்று மற்றும் நபி வழியை முன்மாதிரியாக எடுத்து பின்பற்றுவார்கள் என்பது திண்ணம். 

6:159நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.

6:160எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

6:161(நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.

6:162நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

3:8“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)




1 comment:

  1. வ அலைக்கும் ஸலாம்

    வாசகரின் சரியான பதிலை நாம் இங்கு பதிவு செய்கின்றோம்.


    தௌஹீது ஜமாத்தின் குமுறலை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது ஏதோ கொள்கைக்காகவே எல்லாம் செய்வது போலவும் பணம் ஒரு பொருட்டு அல்ல என்பது போலவும் ஷைத்தான் வேதம் ஓதிய கதையாக உள்ளது ஏன் என்றால் சைபுல்லாஹ் காஜாவை மாற்றியதிலும் பாலக்கரை தௌஹீது ஜமாத்தின் மேல் நடவடிக்கை எடுத்ததிலும் பணம் ,சொத்து, பகைமையும் தான் முதல் காரணமாக உள்ளது . இல்லை என்றால் கொள்கை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க ரமலான் முடியட்டும் என்று காத்திருந்த பீ ஜே க்கு ஒரு தௌஹீது வாதியான சைபுல்லா காஜாவின் ஏற்பாட்டில் ஜும்மா நடந்ததை பொறுக்க முடியவில்லை தௌஹீதை வைத்து இந்த பிழைப்பு தேவைதானா பீ . ஜே அவர்களே ! இனி யாரை இலக்கு வைத்திருக்கிறீகள். பீ. ஜே க்கு கும்பிடு போடும் தௌஹீது ஜமாஅத் நிர்வாகிகளே ! உஷார் ! உஷார் ! அடுத்தது நீங்களாக கூட இருக்கலாம் .

    தனக்கு பிடிக்காதவர்களை வளர விடமாட்டார் அவர் கொள்கை வாதியாக இருந்தாலும் கூட .

    ReplyDelete