Saturday, 20 August 2011

ஹதீஸ் விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்

தொழுகையை நாம் நிற்கும் போது நாம் இறைவனை பார்க்கவில்லை என்பதைவிட இறைவன் நம்மை பார்ப்பதுடன், நமது பிரார்த்தனைக்கு பதில் தருகின்றான் என்று மனதை ஒரு நிலையில் இறைவனை தொழவேண்டும் என்பது கீழுள்ள நபி மொழியில் நாம் விளங்கலாம்.


முஸ்லிம்  ஹதீஸ் எண் : 281

யார் ஒரு தொழுகையைத் தொழுவது அதில் உம்முல்குர்ஆனை ஓதவில்லையோ அவரது தொழுகை குறைக்கப்பட்ட(நிறைவற்ற)தாகும் என மும்முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

நாங்கள் இமாமுக்குப்பின்னால் இருக்கிறேம். (அப்போது ஓத வேண்டுமா?) என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது. உன் மனதிற்குள் அதை நீ ஓதிக்கொள் என கூறினார்கள். அடுத்து தொழுகையை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் நேர்பாதியாக பங்கு வைத்துவிட்டேன். எனது அடிணான் எதைக்கேட்டானோ அது அவனுக்கு உண்டு.

அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்” எனக் கூறுவானேயானால், எனது அடியான் என்னை புகழ்ந்து விட்டான் என்பதாக உயர்வான அல்லாஹ் கூறுகிறான். “அர்ரஹ்மானிர்ரஹிம்” என அவன் கூறினால், என் மீது எனது அடியான் புகழ்ச்சியைக் கூறிவிட்டான் என அல்லாஹ் கூறுகிறான். “மாலிகி யவ்மித்தீன்” என அவன் கூறினால் எனது அடியான் என்னை உயர்த்தி கௌரவித்து விட்டான் என அல்லாஹ் கூறுகிறான்.

அடுத்து ஒரு முறை என்பால் எனது அடியான் தன்னை ஒப்படைத்து விட்டான் எனக்கூறுகிறான். அவன் “இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தஈன்” என கூறுவானேயானால் இது எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் உள்ளதாகும். எனது அடியான் எதைக் கேட்டானோ அது அவனுக்கு உண்டு. “இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம் ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம் கைரில் மக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன்” என அவன் கூறினால் இது என் அடியானுக்குரியது. என் அடியான் எதைக் கேட்டானோ அது அவனுக்கு உண்டு என உயர்வான அல்லாஹ் கூறிவிட்டான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நிச்சயமாக நான் கேட்டிருக்கிறேன் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 


நாம் இறைவனிடம் பிரர்த்திகின்றோம் என்ற மனநிலையில் நாம் தொழுகையில் ஒவ்வொரு அத்தியாயம் பொருளுணர்ந்து ஓதினால் இன்ஷா அல்லாஹ் இறைவன் மற்றும் நபி மொழி அடிப்படையில் நமது பிரர்த்தனயை இறைவன் மறுமொழி சொல்கின்றான் என்பது எளிதாக விளங்கலாம்.



சொற்பொழிவு: முஹிபுல்லாஹ் உமரி 








No comments:

Post a Comment