Thursday, 27 October 2011

தொழுகையின் சிறப்பு

ஐவேளை கடமையான தொழுகைகளையும்,
உபரியான சுன்னத் தொழுகைகளையும் நிறைவேற்ற வேண்டும்

1. ஐவேளைத்தொழுகை

ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். அதன் கடமைகளை எளிதாகக் கருதி அதில் எதனையும் வீணாக்கி விடாமல் முறையாக நிறைவேற்றுபவரை சொர்க்கத்தில் நுழைவிக்கும் ஒப்பந்தம் அல்லாஹ்விடம் உள்ளது. அத்தொழுகைகளை யார் நிறைவேற்றவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒப்பந்தமுமில்லை. அவன் நாடினால் அவருக்கு தண்டனை வழங்குவான், அவன் நாடினால் அவரை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் - ரலி, நூற்கள் : முஅத்தா, அஹ்மத், அபூதாவூத், நஸாயீ 457, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்)

Thursday, 20 October 2011

மண்ணறை

மண்ணறை

·நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். 
நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு 
இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;.
அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ)

குர்ஆன் ஓதுவதின் சிறப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்....






"எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை
அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள்
நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும்
குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக  ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது
மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

அபுபக்கர் (ரலி)



நபி(ஸல்) அவர்களால் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபர்களில் முதல் நபர் அபூபக்கர் (ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொல்லிக்கொண்டிருந்த ஆரம்ப கால கட்டத்தில் பலரும் தயங்கும்போது தைரியமாக இஸ்லாத்தை ஏற்று தன்னுடைய செல்வங்களையெல்லாம் அதை செலவழித்தவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். இதை இந்த ஹதீஸின் மூலம் நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களை அல்லாஹ்வின் நேசராக்கி வைக்கிறார்கள்.

Thursday, 6 October 2011

தாய் தந்தையரின் முக்கியத்துவம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)

தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக இருப்பதே!

தாழ்ந்த குரலில் இறைவனை அழைத்தல்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புள்ள சகோதரர்களே , 

நாம் வசித்ததை இங்கு உங்களுக்காக பதிவு செய்கின்றோம்.

நன்றி : Almowilath Islamiclibrary

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்” என்று கூறினார்கள். அப்போது, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு, இருந்து கொண்டு, ‘லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ் – அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது” என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!” என்று அழைத்தார்கள். ‘கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!” என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்” என்று கூறினார்கள். நான், ‘சரி (கட்டாயம் கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன். (அந்த வார்த்தை,) ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” – அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது” என்று கூறினார்கள்.

புஹாரி : 4202 அபூமூஸா அல் அஷ்அரி (ரலி).

Islamic banking coming to India! But people need a crash course in how it works!!


Islamic banking has been very common in the Gulf for decades now. With its interest free banking approach and a way for people to share the profits and losses, it has proved to be a benefit for masses there in a big way. The fact that it operates on the principles of sharia which over and above the points mentioned here prevents people from investing in businesses that are haraam for them like liquor and tobacco manufacturing makes it more Islamic as the name suggests.

Wednesday, 5 October 2011

வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ ரஸ்மின் PJ ஐந்தாவது இமாமாக முயற்சி என srilankamoors .com   அதிகார செய்தி தொடர்பாளர் Faheem Thalib இந்த வேண்டுகோளை வைக்கின்றார். இதற்காக அவர் எந்த ஆதாரமும் வைக்கவில்லை. 

யார் மீதும் நீங்கள் (Faheem Thalib) குற்றம் சுமத்தினால் ஆதாரத்துடன் சொல்லவும். செய்தியை படிக்கும் எங்களுக்கு சகோ ரஸ்மினின் கருத்தை அறியவில்லை. எந்த கருத்தில் அவர் சகோ PJ ஐந்தாவது இமாமாக சொன்னார் அல்லது பதிந்தார் என சொல்லவும் .

சகோ ஜைனுல் ஆப்தீன் அறிந்திருந்தால் அதனை வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றோம்.

செய்தி : Faheem Thalib



Tuesday, 4 October 2011

தஸ்பீஹ் மணி



அஸ்ஸலாமு அலைக்கும் .........


தஸ்பீஹ் மணி இதனை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, எல்லாம் வீடுகளிலும் இது இருக்கும். ஹஜ்ஜிற்கு செல்பவர்கள் ஜம் ஜம் தண்ணீருடன் தஸ்பீஹ் மணியையும் வாங்கி வந்து தங்கள் உறவினர் அன்பர்களுக்கு கொடுத்து மகிழ்வர். நம்மில் சிலர் தஸ்பீஹ் மணியை ஓதி எண்ணி முடித்தவுடன் கண்ணில் ஒற்றி முத்தமிடவும் செய்கிறார்கள். ஒரு சிலர் இதனை பேசிக்கொண்டே உருட்டிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் தஸ்பீஹ் மணிக்கு பதிலாக டிக் டிக்கென்று மிஷினை அழுத்தி கொண்டிருப்பார்கள். மேலும் ஒளு இல்லாமல் தஸ்பீஹ் மணியைத் தொடக்கூடாது என்ற பழக்கமும் உள்ளது. இந்துக்களின் உத்திராட்ச மாலை, கிறிஸ்தவர்களின் ஜபமாலை இருப்பது போன்று முஸ்லிம்களிடம் இந்த தஸ்பீஸ் மணி மிக கண்னியப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம்களும் இதை இஸ்லாமிய நடைமுறைதான் என்று எண்ணியிருக்கிறார்கள். இது நம் நடைமுறைதானா? நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த பழக்கமா என்பதை நம்மில் பலர் சிந்திப்பதில்லை.

இன்றைய தஸ்பீஹ் மணியுடைய இடத்தில் கற்களைக் குவித்து, ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு அன்றைய சில நபித்தோழர்கள் தஸ்பீஸ் செய்ததாக இரு ஹதீஸ்கள் உள்ளன. அவை மிக மிக பலஹீனமானவையாகும். ஆதாரப்பூர்வமான நபிமொழிப்படி இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அநாச்சார (பித்அத்) செயலாகும். அதன் விளக்கத்தை பார்ப்போம்.

நற்குணம்

அஸ்ஸலாமு அலைக்கும்  



உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு. நபி அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள். நபி அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)

கடைய நல்லூர் பித்ரா குளறுபடி! இரண்டில் எது உண்மை?

அமல்கள் நஷ்டமடையுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும், பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கிறேன்.

ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:30


நாம் செய்த அமல்கள் எல்லாம் எந்த தரத்தில் உள்ளன. நம் அமல்கள் நம் மோசமான செயல்களினால் நஷ்டமடையுமா? தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளினால் நல் அமல்கள் எல்லாம் பாதிக்கப்படுமா? ஏனென்றால் நம் தவறான செயல்களினால் அல்லஹ்வின் முன் நிற்கும்போது, கைசேதப்பட்டு விடக்கூடாதே; அல்லாஹ் நம்மை இழிவுபடுத்தி விடக்கூடாதே; தோல்வியைத் தழுவிடக்கூடாதே என்பதற்காகத்தான்.

நாவடக்கம் (குர் ஆனின் நற்போதனைகள்)

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

மழை ஆய்வு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....


நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.


சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.

يَتَفَكَّرُو - சிந்திக்க வேண்டாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் 


 يَتَفَكَّرُو 

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள்
சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? 2:44

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 2:269

உலகம் தன் முடிவை நோக்கி!

அஸ்ஸலாமு அலைக்கும்

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا



பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது

وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا 



இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا 



”அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-

வேடதாரி

அஸ்ஸலாமு அலைக்கும்  


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 657 ஸஹீஹுல் புகாரி



நமக்கும் அவர்களுக்குமிடையே (நிராகரிப்பவர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும்.யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காபிராகிவிட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, அஹ்மது .

பெண்மணியே உன் வழி என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்கள் ஓரளவு விழிப்புணர்வுடன் குர்ஆன், ஹதீது வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் சகோதரிகளே உங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் நிலையை சற்று சிந்தித்துப்பார். இஸ்லாம் இயம்பும் முறைப்படி உன் வாழ்க்கை அமைந்துள்ளதா? அன்னை பாத்திமா(ரலி) வாழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றாயா? நபி(ஸல்) அவர்களின் வழியை பின்பற்றுகின்றாயா? மறுமையை நினைத்து நரகத்தை நினைத்து வருந்தினாயா? ஏதோ! இஸ்லாத்தில் பிறந்து விட்டோம் என்ற இருமாப்பில் இன்பம் கண்டுக் கொண்டு இருக்கிறாய்.

உன் வாழ்க்கையை சற்றே குர்ஆன், ஹதீதுடன் ஒப்பிடு. மார்க்கத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டு. மார்க்கக் கல்வி கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது கடமை என்று அல்லாஹ்வும் ரசூலும்(ஸல்) கூறியுள்ளதைப் பார். குர்ஆன், ஹதீதை அறிந்துகொண்டால் அனாச்சாரங்களை அழிக்க நீயே முன்வருவாய்.

அச்சமும் துக்கமும் இல்லாதவர்கள் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் 

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 10-62

எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 46-13

யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." 2-38

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் 

செயலுக்கேற்ப கூலித் தரப்படும்:

* (நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (4:77)

* அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (8:60)

* அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:272)

Sunday, 2 October 2011

மஸ்ஜித் முபாரக் பள்ளிக்கு தான் தந்தார்கள் !அறைகூவல் விடுக்கிறோம்!!



அல்லாஹ்வின் திருபெயரால்......

                                                அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு ஒரு காலத்தில் மார்க்கம் மற்றும் அமைப்பு,நிர்வாகம்  சம்பந்தமாக எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு ஆதாரத்தின் அடிப்படையில் பதிலளித்த இந்த ஜமாஅத் மற்றும் இதன் நிர்வாகிகள் தற்போது விளையாட்டுப் பிள்ளைகளை நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு விளையாட்டுதனமாக பதில் தருவது வேதனைகுரியதாகவும்,வினோதமகவும் இருக்கிறது.தனிப்பட்ட ஒருவருடைய கருத்துக்கு ஒத்துவரவில்லை என்பதற்காக பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கிக்கொண்டு அவர்களின் மீது இவ்வாறு வீண் பழிகளைச்சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.சொல்லபடும் நபர் யார்? என்பதை விட சொல்லப்படும் கருத்துசரியா? என்பதுதான் அறிவுடையவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை.இதுதான் வாடிக்கை.நீங்கள் இப்போது சொல்வதுதான் வேடிக்கை.உங்களுக்கு உங்கள் வலைத்தளத்திலிருந்தே உதாரணம் தருகிறேன்