Friday, 23 September 2011

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி வ பரகாதுஹு
நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்:

"ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)
ஒருவர் அழகாக உளூ செய்துகொண்டு பிறகு பள்ளிவாசல் நோக்கி வருகிறார் எனில் - தொழுகையைத் தவிர வேறதுவும் அவரை வெளிக்கிளப்பவில்லை என்றிருந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்குப் பகரமாக நிச்சயமாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான்., ஒரு குற்றத்தை அவரை விட்டும் அகற்றுகிறான். இது பள்ளிவாசலில் அவர் நுழைவது வரையிலாகும்.

பள்ளிவாசலில் நுழைந்துவிட்டாரெனில் - தொழுகை அவரை அங்கு தடுத்து வைத்திருக்கும் காலம் வரையில் அவர் தொழுகையில் ஈடுபட்டிருப்பதாகவே கருதப்படுவார். மேலும் உங்களில் ஒருவர் தான் தொழுத இடத்தில் இருந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மலக்குமார்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறார்கள்: 'யா அல்லாஹ், இவருக்கு அருள் பொழுந்திடு! இவரது பாவத்தை மன்னித்திடு. இவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றிடு' என்று!-அந்த இடத்தில் இவர் யாருக்கும் தொல்லை கொடுக்காமலும் உளூ முறியாமலும் இருக்கும் வரையிலாகும் இது’’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

Friday, 16 September 2011

என் மகள்களின் மூன்று கேள்விகள் by Lauren Booth



அல்லாஹ்வின் திருப்பெயரால் .....

  எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே

உங்கள் அனைவரின் மீதும் அந்த ஓரிறையின் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக!                          
                                               அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இக்கடிதம் தங்களை சீரிய இஸ்லாமியச் சிந்தையோடும், பரிபூரண ஆரோக்கியத்துடனும் சந்திக்கட்டுமாக!பரம்பரை முஸ்லிம்கள் என்று சொல்லிகொள்ளும் நாம் அது சமபந்தமாக எந்தவித குர் ஆன் மற்றும் நபி வழிகளின் தொடர்புகளும் இன்றி நம்முடைய நேரங்களை வீண் காரியங்களிலும்,பொழுது போக்கிலும் கழித்துக்கொண்டிருக்கும் அவலநிலைக்கு நம்மை நாமே தள்ளிகொண்டுள்ள தற்போதைய சூழலில், இச் சகோதரிகள் போல் எண்ணற்றவர்கள் தங்களின் வாழ்க்கையினைத் தங்களின் பரம்பரை மதங்களிலிருக்கும் போது தொலைத்துவிட்ட பிறகு(இறை உதவிக்கு பின்னர்) தங்களின் கடந்த கால பழக்கங்களை இறை மார்க்கதிற்க்காக துறக்கும் இந்த செயல்கள் போல் நாம்,நமது பரம்பரை குடும்பம் என்ற அந்த அறியாமை பழக்கங்களை இறைவனுக்காக எப்போது விட்டொழிக்கத் தயாராவது என்ற சிந்தனைகளை செயல்களில் காட்டி நடைபோட உங்களோடு நானும் இறைவனிடம் வேண்டுகின்றேன்.

Tuesday, 13 September 2011

பி.ஜெ அவர்களே! உங்களுக்கு ஒரு அன்பான அழைப்பு!!!


abdulkader <kanyakumari99@gmail.com>


அஸ்ஸலாமு அலைக்கும்
பி.ஜெ அவர்களே! உங்களுக்கு ஒரு அன்பான அழைப்பு!!!

ஊருக்கெல்லாம் அன்பான அழைப்பு விடுத்த உங்களை இப்படி அழைப்பு விடுக்க நேரிட்டதில் மிக்க வேதனை.
                           ஷிர்க்கிலும், பித்-அத்திலும் மூழ்கி கிடந்த எங்களை தட்டி எழுப்பி குர்-ஆனையும், ஹதீஸையும் சொல்லித்தந்து தவ்ஹீத் வாதிகளாக்கிய பெருமை அல்லாஹ்விர்க்கும் அவனுடய தூதருக்கும் பிறகு உங்களையே சாரும். அதர்க்காக உங்களுக்கு வேண்டி நாங்கள் என்றும் துஆ செய்வதுண்டு. உங்களை யாராவது எதாவது கூறினால் அது தாங்காமல் உற்றம் ,சுற்றம் என்று பார்க்காமல் சண்டையிட்டதுண்டு அப்படிப்பட்ட உங்களின் இன்றைய நடவடிக்கைகளைப்பர்ர்க்கும்போது உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது . நீங்கள் இதர்க்கு முன்னால் எத்தனையோ ஜமா-அத்துகள் தொடங்கி அதிலிருந்து மற்றுள்ளவர்களின் போக்கு பிடிக்காமல் வெளியேறி மற்றொரு ஜமா-அத் தொடங்கி இப்போது டி.என்.டி.ஜெ என்ற அமைப்பில் வந்து நிற்கிறது. அதிலிருந்து வெளியேறும்போதெல்லாம் நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளொன்றும் கொள்கை பிரச்சினைகள் அல்ல

Saturday, 10 September 2011

எச்சரிக்கை! எச்சரிக்கை!

 அஸ்ஸலாமு அலைக்கும்

சில காலங்களாக குர் ஆன் மற்றும் ஹதீத் பற்றி விளக்கம் அளிக்கும் போது சஹாபாக்கள் தமது சுயமான  முடிவுகளை மார்க்கமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதன் விளைவு
 த த ஜ சகோதரர்கள் தவறாக விளங்கி பதில் சொல்வதை, கருத்தை தங்களுக்கு பதிவு செய்கின்றேன். 

இன்னும் நாம் இறைவனை பிரார்த்திதவர்களாக  

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) 


அப்துல் காதர் மின்னஞ்சல் 

அஸ்ஸலாமு அலைக்கு நாஷித் அவர்க்ளே! 



சஹாபாக்களுக்கு மத்தியில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தன அவர்கள் ஒவ்வரு

Wednesday, 7 September 2011

சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்


இன்றைய சமுதாயத்தில் நாம் அன்றாடம் நம் செவிக்கு வரும் செய்தியினால் மிகுந்த அச்சமும் வேதனையும் தான் மிஞ்சுகிறது. இதோ நம் சகோதரிகளின், மகளின், தனது  குடும்ப வாழ்க்கை நன்றாக அமையவேண்டும் என்று அதற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்து வெளிநாடு செல்லும் ஆண்களுக்கு மத்தியில் சமீபமாக கடையநல்லூரில் இருந்து கிடைக்கும் செய்தி நாம் வார்த்தைகளால் பதிவு செய்ய வேண்டியதில்லை.


ஒரு பெண் வழிகாட்டும் ஒளி விளக்காக இருங்கள் ஒரு குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த வேண்டுமெனில், அவள் முதலில் தன்னை சிறந்த தாரமாகவும், மதி நுட்பம் நிறைந்த தாயாகவும், அறிவூட்டும் நல் ஆசானாகவும், திட்டமிடும் ஒரு நல் அதிகாரியாகவும், பணிவுள்ள, இறைவிசுவாசமுள்ள ஒரு முன்மாதிரிப் பெண்ணாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இறப்பு பற்றிய இறைவசனங்கள்





இவ்வுலகில் மனிதனால் தீர்மானிக்க முடியாத இரண்டு விஷயங்கள்
1.இறப்பு
2.பிறப்பு


ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்(03:185)


எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை.(03:145)

ரோஷம் இழந்த ஆண்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும்


இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

"என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்'' என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, "ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான்அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின்

 காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி),
நூல்: புகாரி 6846, 7416

Sunday, 4 September 2011

வெத்து வெற்றி


அஸ்ஸலாமு அலைக்கும் 


வெத்து வெற்றி 

"வெற்றி, வெற்றி, வெற்றிநமதே ! " என மின்னஞ்சலில் கூக்குரலிடும் கொள்கைச் சிங்கங்களே வெற்றியின் சுவை அறியாதவர்களாய் வெற்றியை சிலாகிக்கும் இவர்களின் நிஜம் என்னவென்பது .... 
முப்பதாண்டுகாலம் முண்டியடித்தும் முட்டி மோதியும் பல ஊருக்கு எண்ணிக்கையில் பத்தும் பதினைந்தும் அதிகமாக முப்பதும் தான் வெற்றியோ? 

ஆர்ப்பாட்டங்கள் அனைத்த்தும் வெற்றி என்பார் .... ஆனால் எஸ். பி. பட்டிணம் அவர்கள் வரைபடத்தில் இன்னும் கானல் நீரானது இது  தான் வெற்றியோ?
இன்று வெற்றிடமாய் போன உணர்வு அலுவலகத்தை மீட்டேதீருவோம் சகோதரனே புறப்பட்டு சட்டசபை முற்றுகையிடு என்றது பொங்கியெழு சகோதரா காலமும் களமும் மாற்றப்பட்டு அறிவித்த இதுதான் வெற்றியோ??

Saturday, 3 September 2011

பிரார்த்தனை

அஸ்ஸலாமு அலைக்கும்

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ 

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ


'my;`k;J ypy;yh`py;yjP m`;ahdh gmj kh mkhj;jdh t ,iy`pe; E\_H.

nghUs;: vy;yhg; GfOk; my;yh`;Tf;Nf. mtd; vq;fis ,wf;fr; nra;j gpd;dH vq;fSf;F cap&l;bdhd;. NkYk;> (kz;ziwapypUe;J ntspNawp) mtdplNk nry;yNtz;bAs;sJ
vd;W gLf;ifia tpl;L vOk; NghJ $w Ntz;Lk; vd;W egp (]y;) mth;fs; $wpdhh;fs;.

(mwptpg;gth;: `{ij/gh (uyp) Mjhuk; Gfhhp  6312)