அஸ்ஸலாமு அலைக்கும்
வெத்து வெற்றி
வெத்து வெற்றி
"வெற்றி, வெற்றி, வெற்றிநமதே ! " என மின்னஞ்சலில் கூக்குரலிடும் கொள்கைச் சிங்கங்களே வெற்றியின் சுவை அறியாதவர்களாய் வெற்றியை சிலாகிக்கும் இவர்களின் நிஜம் என்னவென்பது ....
முப்பதாண்டுகாலம் முண்டியடித்தும் முட்டி மோதியும் பல ஊருக்கு எண்ணிக்கையில் பத்தும் பதினைந்தும் அதிகமாக முப்பதும் தான் வெற்றியோ?
ஆர்ப்பாட்டங்கள் அனைத்த்தும் வெற்றி என்பார் .... ஆனால் எஸ். பி. பட்டிணம் அவர்கள் வரைபடத்தில் இன்னும் கானல் நீரானது இது தான் வெற்றியோ?
இன்று வெற்றிடமாய் போன உணர்வு அலுவலகத்தை மீட்டேதீருவோம் சகோதரனே புறப்பட்டு சட்டசபை முற்றுகையிடு என்றது பொங்கியெழு சகோதரா காலமும் களமும் மாற்றப்பட்டு அறிவித்த இதுதான் வெற்றியோ??
விடவே மாட்டோம், போலிகளை ஒழிக்க போயஸ் புறப்படு என்றார்கள் அம்மையார் மீது பாசமோ பயமோ தெரியவில்லை; பனகல் பார்க்கில் பரபரப்பு காட்டி பறந்தார்கள். இதுதான் வெற்றியோ !!!!
இயக்க முன்னோடிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் எதிரிகளின் தலையை திருகிவிடுவோம் என்பார்கள். ஆனால் இயக்கச் செயலாளரை இருட்டில் (கோவையில்) கவனித்தார்களே தமிழகத்தில் எத்தனை போராட்டம்???
கோவையில் ஆர்ப்பாட்டம் என்ற சம்பிரதாயம் தான் இவர்கள் வெற்றியோ !!!!!
PJ எங்கு சென்றாலும் அவரின் கருத்து செவி சாய்ப்பர்கள் என்று வேகமாய் கடையநல்லூர் பொதுக்குழு வந்த த த ஜ தன்னிகரற்ற தலைவருக்கு தௌஹீத் கோட்டையை உடைத்தார், விளைவு சகோதரனாக இருந்தவனிடம் பிளவு ஏற்பட்டு இதுவரை இருந்த தௌஹீத் முகமும் கிளிந்ததுதான் இவர்களின் வெற்றியோ!!!!!
எந்த வகையிலோ ! எப்படியோ கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் (தற்காலிகமாய்) பெருநாள் தொழுகைக்கு இடம் பிடித்து, அடம்பிடித்து, ஆள்பிடித்து வானளாவிய பேச்சாளர் வந்தும் கடந்தகாலத்தில் பதிவு செய்யப்பட மக்தூம் தர்கா பற்றி பேசாததும் தான் இவர்களின் வெற்றியோ ????
நாங்கள் யாருக்காகவும் எவருக்காகவும் பல்லிளிக்கமாட்டோம், கொள்கையில் அட்ஜஸ்மெண்ட் செய்யமாட்டோம் என்று மேடைக்கு மேடை கொக்கரித்தவர்களின் கொள்கை மக்தூம் தர்ஹா கமிட்டி யுடன் கைகோர்த்தது போட்டி போட்டு வெற்றி என்று பறைசாற்றும் கொள்கை சகோதரனே சற்று சிந்தி !!! தர்ஹாவிற்கு எதிராக இதுவரை பதிவு செய்த அத்தனை தவிடு பொடியாக்கி கொள்கை பற்றி ஒருவார்த்தை பேசாமல் குழிதோண்டிப் புதைத்து தான் இவர்களின் வெற்றியா ???
தற்காலிகமாய் தோன்றும் வெற்றியை வெத்து வேட்டு ....
இல்லை வெத்து வெற்றிகளே !!!
இல்லை வெத்து வெற்றிகளே !!!
நன்றி : சகோ அல்கர்
No comments:
New comments are not allowed.