Saturday, 10 September 2011

எச்சரிக்கை! எச்சரிக்கை!

 அஸ்ஸலாமு அலைக்கும்

சில காலங்களாக குர் ஆன் மற்றும் ஹதீத் பற்றி விளக்கம் அளிக்கும் போது சஹாபாக்கள் தமது சுயமான  முடிவுகளை மார்க்கமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதன் விளைவு
 த த ஜ சகோதரர்கள் தவறாக விளங்கி பதில் சொல்வதை, கருத்தை தங்களுக்கு பதிவு செய்கின்றேன். 

இன்னும் நாம் இறைவனை பிரார்த்திதவர்களாக  

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) 


அப்துல் காதர் மின்னஞ்சல் 

அஸ்ஸலாமு அலைக்கு நாஷித் அவர்க்ளே! 



சஹாபாக்களுக்கு மத்தியில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தன அவர்கள் ஒவ்வரு

நிறத்தில் கொடி பிடித்து கொண்டு தௌஹீத்வாதிகளை கூறுபோட்டார்களா?   என்ற 

என்னுடய (kanyakumari99@gmail.com) மெய்லுக்கு பதிலாக நீங்கள் இப்படி ஒரு மெய்லைஅனுப்பி உள்ளீர்கள். 



கூறு போட்டார்களே..!

ஆயிஷா (ரலி) அவர்கள் தனிப்படையை அமைத்தார்கள்.
முஆவியா அவர்கள் தனிப்படையை அமைத்தார்கள். அலி (ரலி) அவர்களது ஆதரவாளர்களான சஹாபாக்கள்தனிப்படையை அமைத்தார்கள்.
அவர்கள் தங்களுக்கிடையே போர் செய்து ஒருவருக்கொருவர் கொலை செய்து கொண்டனரே!

இன்றைய தவ்ஹீத் இயக்கங்கள் எதுவும் கொலை செய்கிற அளவிற்கு செல்லவில்லையே..


அந்த பதிலை பார்த்ததும் ஆடி போய்விட்டேன். இப்படி உங்களை இவ்வளவு துணிவுடன் பதில் அனுப்புவதற்கு ஊக்கம் அளித்த பி.ஜெ அவர்களை அல்லாஹ் மன்னிக்கட்டும். சஹாபாக்களை யார் என்று நினைத்தீர்கள் .உங்கள் வீட்டு வேலைக்காரர்களா?

 நபி (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுஙள் . என் தோழர்களை ஏசாதீர்கள்.  என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹது மலை அளவுக்கு தங்கத்தை (தானமாக) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறை வழியில்) செலவிட்ட இரு கை அளவு   
அல்லது அதில் பாதி அளவை கூட எட்ட முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இன்று பி.ஜெ யும் அவருடைய கூட்டாளிகளும் தவ்ஹீத் ஜமாஅத்தை வைத்து வயிற்று பிளைப்பு நடத்தி குளிர் காய்வது போல அன்றைய  சஹாபாக்கள் இருக்கவில்லை. 
தன்னுடைய உயிருக்கும் குடும்பத்திற்கும் மேலாக அல்லாஹுவையும் அவனுடய ரஸூலையும் நினைத்தவர்கள் . அல்லாஹ்வுக்காக , அவனுடய தூதருக்காக தங்களின் உயிர்களையும் விட துணிந்தவர்கள். நபி (ஸல்) அவர்களுடன் இருப்பதை உயர்வாக கருதியவர்கள். 

"அரசியலை சாக்கடை" என்று வர்ணித்த பி.ஜெ அவ்ர்கள் அந்த சாக்கடைகள் இருக்ககூடிய இருக்கையை அவருக்கு தந்தவுடன் அது புனிதமாகிவிட்ட தோரணையில் சிலாகித்து , சிலாகித்து நாளிதள்களிலும், உங்கள் அமைப்பை வளர்த்துவதர்க்காக பயன்படுத்திக்கொண்டிருக்கும்
  வெப்சைட்டுகளிலும் பீற்றி கொண்டிருந்த பி.ஜெ.யானிகளுக்கு அந்த சஹாபாக்களை பற்றி குறை கூற உங்களுக்கு என்ன அருகதை உள்ளது.
சஹாபாக்களைப்பற்றி கொலைக்க்காரர்கள் என்று கூற உங்களால் எப்படி முடிந்தது.   
கடந்தகாலத்தையும், நிகழ் காலத்தையும், வருங்காலத்தையும் அறிந்த இறைவன் ஒட்டகப்போரைப்பற்றியும் நன்கு அறிந்திருப்பான். அப்படி இருந்தும் நீங்கள் வரிசையாக கொலை காரர்கள் என்று கூறினீர்களே, அவர்களை நபி (ஸல்) அவர்கள் சுவனம் கொண்டு நன்மாராயம் கூறியிருக்கின்றார்கள். நீங்கள் குறிப்பிட்ட ஒட்டகப்போரைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் கலந்து கொண்டவர்களைப்பற்றி உங்களுக்குத்தெரியுமா? அவர்களில் எத்தனைப்பேர் சுவனவாசிகள் என்றுதான் உங்களுக்கு தெரியுமா?   
அவர்கள் படை திரட்டியதும் போர் செய்ததும் உங்களைப்போன்று மக்களை ஏமாற்றி அமைப்பை வளர்த்தி அதன்மூலம் உலக இலாபமும் அடைந்து காவல் துறையின் காவலுடன் உலா வருவ்தற்க்காக அல்ல. அல்லாஹ்வை மட்டும் காவலாக எண்ணியவர்கள் , 

சஹாபிகளை பின்பற்றக்கூடாது என்ற கருத்தை கூறுவதர்க்காக பி. ஜெ எடுத்து வைத்த ஆயுதம் தான், சஹாபிகளும் நம்மைப்போல்தான் அவர்களும் தவறு செய்தவர்கள் , மதுபானம் அருந்தியவர்கள், விபச்சாரம் செய்தவர்கள் கடைசியாக நீங்கள் கூறியது போன்று கொலை காரர்கள் என்பதில் சென்று நிற்கின்றது. 

இதன் மூலம் பி.ஜெ தன்னை அறிவாளி?என்றும் தான் சொல்வதையெல்லாம் கேட்பவர்களை கூமுட்டைகள் என்றும் நினைத்து ஒவ்வொரு ஃபத்வா இறக்கி கொண்டிருக்கிரார். நபி (ஸல்) என்னுடைய தோழர்களை ஏசாதீர்கள் என்று எச்சரிக்கை செய்ததை எள்ளளவும் பொருட்படுத்தாமல் தன்னுடைய வாதத்தை உண்மைப்படுத்த  சஹாபாக்களை தரம் தாழ்த்துகிறார்.அவருடன் இருந்து அவர்கூறுவதை மட்டும் கேட்டு கொண்டிருக்கும் நாமும் நம்முடைய சிந்தனையை அடகு வைத்து அவர் கூறுவது போல கூமுட்டைகளாகிவிடுகிறோம். இதன் மூலம் நாம் மறுமையில் அல்லாஹ்வின் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிடும் அல்லாஹுவை பயந்து மறுமையில் நமக்கு என்ன நிலமை என்று ஒரு கேரண்டியும் இல்லாத நம்மையும் சுவனத்திர்க்கு அல்லாஹுவால் கேரண்டி கொடுக்கப்பட்ட ஸஹாபாக்களையும் ஒப்பிடாதீர்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! 
Abdul Kader


சகோ நாஷித் அவர்களின் பதில் .......

அஸ்ஸலாமு அலைக்கும்..

வாதம் செய்யும் போது முரண்பாடு இருக்க கூடாது!

சஹாபாக்களை இன்றைய முஸ்லிம் உம்மத்துடன்  ஒப்பிடக்கூடாது என்று சொல்கிற நீங்கள் தான் முதலில் சஹாபாக்களை ஒப்பீடு செய்து வாதத்தை துவக்கினீர்கள்.

சஹாபாக்கள் கருத்து வேறுபாட்டின் காரணமாக தவ்ஹீத்வாதிகளை கூறு போட்டார்களா? நீங்கள் ஏன் கூறு போடுகிறீர்கள் என்று வாதத்தை துவக்கியது நீங்கள்!
இதன் பொருள், சஹாபாக்களை போன்று ஒற்றுமையாக நாமும் இருக்க வேண்டும் என்பது தான்.

ஆக, சஹாபாக்காளுடன் இன்றைய சமூகத்தை ஒப்பீடு செய்து வாதத்தை துவக்கி விட்டு, அந்த வாதம் எந்த அர்த்தமுமில்லாத ஒன்று என்பது எனது கேள்வியின் மூலம் நிரூபணமான பின்னர், சஹாபாக்களை ஏன் ஒப்பீடு செய்கிறீர்கள் என்று என்னை நோக்கி கேள்வி கேட்கிறீர்கள்.
இதிலேயே உங்கள் தரப்பில் உள்ள பொய்மை புலனாகி விட்டது.

சஹாபாக்களும் அவ்வாறு கூறு போடத்தான் செய்தார்கள். அதுவே உங்கள் கேள்விக்கு பதில்!
கேள்வியை வைத்த பிறகு, அந்த கேள்விக்கு பதிலை சொன்னால், ஆஹ, பார்த்தீர்களா சஹாபாக்களை திட்டுகிறார்கள் என்று கூப்பாடு போட்டால் இதன் பொருள் என்ன?
உங்களுக்கு கேள்வியை மட்டும் தான் கேட்க தெரியும், நாம் பதில் சொன்னால் அதற்கு மறுப்பு சொல்ல தெரியாது என்பது தான் இதன் பொருள்!

அடுத்து, சஹாபாக்களை நம்மோடு ஒப்பிடக்கூடாது என்றால் அதன் பொருள் என்ன??
 யாரையும் யாருடனும் ஒப்பிடக்கூடாது என்றால் யாரும்  அமல்  செய்ய  இயலாது . நமது அன்றாட செயல்பாடுகளை நாம் நபி  (ஸல்) அவர்களுடன் தான் ஒப்பீடு செய்கிறோம். அவ்வாறு ஒப்பீடு செய்வது தான் ஆகுமானதும் கூட.
நபியுடன் ஒப்பிட என்ன தகுதி இருக்கிறது? என்று யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அதிலுள்ள முட்டாள்தனம் அனைவருக்கும் புரிகிறது என்பதால் இப்படி கேள்வி கேட்பதில்லை.

சஹாபாக்களின் தியாகமும், மார்க்கத்தில் அவர்களிடம் இருந்த பிடிப்பும் நம் எவரிடமும் இல்லாத ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.
அதே சமயம், அவர்களிடம் இருக்கும் அந்த தூய செயல்பாடுகளை போல நாமும் நடந்து கொள்ள வேண்டும் என்கிற ஒப்பீட்டை செய்வதற்கு தயக்கம் காட்ட தேவையில்லை.
அவர்களிடம் இருக்கும் நல்லவற்றை நாமும் பின்பற்ற வேண்டும்! அவர்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக எதயாவது சொல்லியிருந்தால் அதை விட்டும் விலகிக்கொள்ள வேண்டும்.
 

ஆனால், சஹாபாக்களின் மீது கொண்டுள்ள அபரிமிதமான அன்பின் காரணமாக அவர்கள் செய்துள்ள தவறுகளை கூட நியாயப்படுத்தும் போக்கு நம்மிடம் மிக சாதாரணமாக காணப்படும்.
யாரென்றே அறியாத, இறந்து மண்ணோடு மண்ணாகி போனவர்களை அவ்லியா என்றும் அல்லாஹ் என்றும் கொண்டாடும் சமூகத்தில், சஹாபாக்களை அங்கீகரிப்பதற்கு அதிக நேரம் பிடிக்காது.
அத்தகைய தவறிலிருந்து இந்த மக்களை மீட்டெடுப்பதற்கு நாம் செய்யும் சில முயற்சிகள் உங்கள் பார்வையில் சஹாபாக்களின் மீது செய்யப்படும் விமர்சனமாக தெரிகிறது.

அல்லாஹ்வின் வேதமும், அவனது தூதரும் மட்டும் தான் மார்க்கம் என்கிற உறுதி நமக்கு இல்லாததால் தான் சில புல்லுருவி இயக்கங்கள் நாங்களும் தவ்ஹீத் தான் பேசுகிறோம் என்கிற பெயரில் சமுதாயத்தில் இந்த நச்சுக்கருத்தை விதைத்து வருகிறது.
இந்த போலி தவ்ஹீத் பேசும் நயவஞ்சக இயக்கத்தினர் செய்கிற குழப்பங்களை கண்டுகொள்ள இயலாமல் இருக்கிற நீங்கள் மற்றவர்களை விமர்சிக்கிறீர்களா?
குர் ஆனும் ஹதீசும் தான் மார்க்கம் என்பதை தாண்டி, சஹாபாக்கள் சொன்னாலும் மார்க்கம் என்கிற புது மதத்தை உருவாக்கினார்களே, அதை என்றைக்காவது நீங்கள் கண்டித்ததுண்டா?

இன்னும் ஒரு படி மேலே சென்று, நான் என்ன சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்று அதன் அமீர் அறிவித்து, அக்பரின் தீனே இலாஹியை மிஞ்சுகிற அளவிற்கு மார்க்கத்தை கேலிக்கூதாக்கினாரே, அதை எதிர்த்து என்றைக்காவது பேசியதுண்டா நீங்கள்?

கும்பகோணம் மாநாடு அறிவிக்கப்பட்ட சமயத்தில், இந்த போலி இயக்கத்தின் அமீர் தமது ஜும்மா உரையில் ஜனநாயகம் என்பது ஹராம் என்றும், காபிர்களிடம் உதவி தேடுவது பாவம் என்று பேசினார்.
அதை கண்டிக்க உங்களை போன்றோருக்கு துணிவிருந்ததா?

பேசி முடித்த அடுத்த அரை மணி  நேரத்தில், தமுமுக நடத்தும் சிறைக்கைதிகளை மீட்கும் போராட்டத்திற்கு நதியுதவி அளியுங்கள் என்று அந்த போலி இயக்கத்தின் துணைத்தலைவர் பேசி, நாங்கள் எந்த கொள்கையும் அற்றவர்கள், எங்களுக்கு நாங்களே முரண்பட்டு உளறிக்கொண்டே இருப்போம் என்பதை பகிரங்கமாக அனைவருக்கும் அறிவித்து கொடுத்தாரே, அதை கண்டிக்க உங்களுக்கு துப்பு இருந்ததா? 

ஜனநாயகமே ஹராம் என்று முழக்கமிட்டு விட்டு, பாளையங்கோட்டையில் காதர் மைதீனுக்கு ஓட்டு பிச்சை கேட்டு தெரு தெருவாக அலைந்தார்களே , அதை விமர்சிக்க உங்களுக்கு நா எழுத்தா?


மார்க்கத்தின் அடிப்படையே தகர்க்கிற இத்தகைய செயலை செய்பவர்களை கண்டிக்க வக்கற்று நிற்கும் உங்களை போன்றோருக்கு , இந்த சமூகத்தை தூய மார்க்கத்தின் பால் அழைக்கிற பணியை செய்கிறவர்கள் மீது விமர்சனங்களை கொட்டுவதற்கு மட்டும் எந்த தயக்கமும் இல்லை என்றால் ,உங்கள் கொள்கையின் லட்சணத்தை நீங்களே எடை போட்டுக்கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம். 



சகோதரர் நாஷித் அவர்களுக்கு மீள்பதிவு சகோதரர் அப்துல் காதர் ..... 

நாஷித் அவர்களே! பி. ஜெ விடம் பாடம் படித்தவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்







எனவே நாம் எந்த அமைப்பில் இருக்கிறோம் என்பதை விட எந்த்க்கொள்கையில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம் . 

அஸ்ஸலாமு அலைக்கும் , நாஷித் அவர்களே!
கடைசியாக பி. ஜெ விடம் பாடம் படித்தவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் . காரணம் அரும் ப்படித்தான் எதாவது கேள்வி கேட்டால் கேட்பவனை குழப்பித்தான் பதில் சொல்வார். ஆனால் அவர் ஸப்ஜெக்டில் வந்து விடுவார் நீங்களோ! அதையும் கோட்டைவிட்டு விட்டீர்கள். நான் முதலில் அனுப்பிய கேள்வியை ஒரு தடவை கூட படியுங்கள்.
                     சஹாபாக்களுக்கு மத்தியில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தன அவர்கள் ஒவ்வரு
நிறத்தில் கொடி பிடித்து கொண்டு தௌஹீத்வாதிகளை கூறுபோட்டார்களா?   
இந்த கேள்வியில் நான் தவ்ஹீத் ஜமா-அத்தையும் ஜாக்கையும் த.மு.மு.க வையும் ஐ.என்.டி.ஜெ யையும் சேர்த்து வைப்பதர்க்காக உங்களிடம் கேட்கவில்லை. ஜாக்குடைய சஹாபாக்களுடைய கொள்கையும், அமீரை பின்பற்றும் கொள்கையும், மற்று நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளும் பிடிக்காமல் இன்றளவும் எதிர்ப்பதோடு  இன்றும் அந்த கொள்கையில் உறுதியாக இருப்பவன். நான் கேட்டது இப்போது தவ்ஹீத் ஜமா-அத்தில் அரங்கேறும் பிரச்சினைகளைப்பற்றி மட்டுமே?           
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது என்று நினைக்கிறேன் . ஜாக்கிலிரிந்து பி.ஜெ. மாறும்போது நீங்கள் இப்போது பட்டியலிட்ட ஒரு கொள்கைப்பிரச்சினையும் இருக்கவில்லை. செயல்பாடுகள் சரியில்லை, நிர்வாகம் சரியில்லை, தவறு செய்பவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு கொடுக்கின்றார்கள் என்பதர்க்காகத்தான். வெளியில்  எந்த ஒரு கொள்கை பிரச்சினையும் இல்லாமல் குர்-ஆனும் , ஹதீஸும் வழியில் முழுமையாக செயல் பட்டு வந்த முபாரக் மஸ்ஜிதை டி.என்,டி,ஜெ யின் பெயரில் எழுதவில்லை என்பதர்க்காக ஸைஃபுல்லாஹ் ஹாஜாவை வெளியேற்றியது மட்டுமல்லாமல் அவர் பணக்கரர்களுக்குப்பின்னால் பல்லிளித்து கொண்டு நடப்பவர் என்று இளிவாக வெப்ஸைட்டுகளில் போட்டு நாறடிக்கிறார்கள். பல்லிளித்து கொண்டு நடப்பவர் என்றும் பணத்துக்காக அலைபவர் என்றும் தெரிந்து வைத்து கொண்டே தனது பக்கத்திலே வைத்திருந்தாரே பி.ஜெ .அப்போதெல்லாம் வெளியேற்றாத அவரை பி.ஜெ தலைவராக இருக்ககூடிய இந்த அமைப்பின் பேரில் அந்த சொத்தை (முபாரக் மஸ்ஜித் ) எழுதவில்லை என்பதர்க்காகத்தானே அவரை தூக்கி எறிந்தார். மட்டுமல்லாமல் அவரை எப்படியெல்லாம் தாறடிக்க முடியுமோ அப்படியெல்லாம் தன்னுடய நிர்வாகிகளையும் வைத்து மோசமாக பேச வைக்கிறார். அதன் விளைவு என்ன பார்த்தீர்களா? ஒரே கொள்கையில் செயல்படக்கூடிய இரண்டு எதிர் எதிர் அமைப்புகள். இது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா? ஜாக்குடைய குற்றங்களை பட்டியலிடத்தெரிந்த உங்களுக்கு நீங்கள் இருக்கும் அமைப்பில் உள்ள ஓட்டைகளை ஏன் மறைக்க நினைக்கிறீர்கள் .    தவறு யார் செய்தாலும் தட்டிக்கேட்க அச்சமில்லாத சஹாபிகளைப்பற்றிக்கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நான் முதலில் கேட்ட கேள்விக்கு நீங்கள் தந்த பதில் சஹாபிகள் கொலைகூட செய்தனரே! இப்போது த்வ்ஹீது அமைப்புகள் கொலை செய்யவில்லையே! அப்படியென்றால் சஹாபிகளை விட இப்போதுள்ள தவ்ஹீத் வாதிகள் பரவாயில்லை என்பதை தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது .  நான் அத்ர்க்கு தான் பதில் எழுதி இருந்தேன் . சஹாபிகளை நீங்கள் கொலை காரர்கள் என்று  கூறியதர்க்கு நான் தந்த மறுப்பை நீங்கள் கவனித்ததாகவே தெரியவில்லை. அதர்க்கான பதிலைத்தராமல் களம் விட்டு இறங்கி சென்று ஜாக்கை இழுத்திருக்கிறீர்கள் (பி.ஜெ. சொல்வது போன்று பட்டுக்கோட்டைக்கு வழியை கேட்டால் கொட்டைப்பாக்கிர்க்கு விலையை சொல்கிறீர்கள்)   
நான் கூறுவது என்னவென்றால் சஹாபாக்கள் சுயமாக கூறியக்கருத்துக்களை பின்பற்றக்கூடாது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து  இல்லை.ஆனால் அதற்க்காக அவர்களை கொச்சை படுத்தவோ.அவர்கள் செய்த  தவறுகளை பட்டியலிடுவதும்  கூடாது.நான் கேட்ட கேள்விக்கு நல்லவிதமாக நீங்கள்     பதில் கூறி இருக்கலாம்.அப்படி நீங்கள் பதில் கூறாததற்க்கு காரணம் ஸஹாபாக்களயும்  அவர்க்ளுடைய ஈமானையும் அவர்களுடைய தியாகத்தையும் சாதாரணமாக எண்ணியதால் தான். இல்லை என்றால் உங்களால் பயமில்லாமல் அல்லாஹுவுடைய தூதரின் எச்சரிக்கையான
என் தோழர்களை ஏசாதீர்கள்.  என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹது மலை அளவுக்கு தங்கத்தை (தானமாக) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறை வழியில்) செலவிட்ட இரு கை அளவு   
அல்லது அதில் பாதி அளவை கூட எட்ட முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
என்ற ஹதீஸின் கௌரவத்தை புரிந்து கொள்ளாததால் தான் . அல்லது சஹாபாக்களை பின்ப்பற்றக்கூடாது என்பதை நன்றாக சொல்லித்தந்த   பி.ஜெ. சஹாபாக்கள் யார் என்பதை நனறாக புரிய வைக்காததுதான்.
நபித்தோழர்களை மதிப்பதும் அவர்களின் சேவைகளைப்போற்றுவதும் நமது கடமையாகும் . இந்நிலையில் அவர்களை தரக்குறைவாக பேசுவதோ ஏர்க்கமுடியாததாகும் மாறாக தடை செய்யப்பட்டதும் ஆகும். நபித்தோளர்களுக்கிடையே நடந்த உட் பூசல்கள், சண்டை களெல்லாம் அவரவர் கணிப்பையும் மதிப்பீட்டையும் பொறுத்து நடந்தவை எனவே அதை காரணம் காட்டி நபித்தோழர்களில் எவரையும் தாக்கிப்பேச அனுமதி கிடையாது. என்பதைத்தான் நான் மேலே குறிப்பிட்ட நபி மொழி விளக்குகிறது.
அமைப்புகள் என்பது கொள்கையை உலகிர்க்கு சொல்வத்ர்க்காக்த்தான் அமைப்பை விட கொள்கை தான் முக்கியம் ஆனால் கடந்த சில நாட்களாக டி.என்.டி.ஜெ தலைவர் முதல் உறுப்பிநர் வரை எல்லாவரும் கொள்கையை விட அமைப்பிர்க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதர்க்கு எடுத்துக்காட்டுதான் இபோது நடந்து கொண்டிருப்பவை கொள்கை ச்ரியாக இருந்தாலும் ,அல்லாஹுவயும் அவனுடய தூதரயும் பின்பற்றினாலும்  போதாது எங்கள் பைலாவையும் பின்பற்றவேண்டும், நான் கூறுவதை கேட்டால் தான் ஜமா-அத்தில் இருக்க முடியும் என்று பி.ஜெ முடிவெடுப்பதை பார்க்கும்போது இது கொள்கை ஜமாஅத்தா? இல்லை கட்டப்பஞ்சாயத்தா? என்று கேட்கத்தோன்றுகிறது .
எனவே நாம் எந்த அமைப்பில் இருக்கிறோம் என்பதை விட எந்த்க்கொள்கையில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம் . 
நான் குறிப்பிட்டதில் நன்மையாக தெரிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் . உங்களையும் நம் அனைவரையும்  அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவானாக.
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)

No comments:

Post a Comment