அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி வ பரகாதுஹு
நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்:
"ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)
ஒருவர் அழகாக உளூ செய்துகொண்டு பிறகு பள்ளிவாசல் நோக்கி வருகிறார் எனில் - தொழுகையைத் தவிர வேறதுவும் அவரை வெளிக்கிளப்பவில்லை என்றிருந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்குப் பகரமாக நிச்சயமாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான்., ஒரு குற்றத்தை அவரை விட்டும் அகற்றுகிறான். இது பள்ளிவாசலில் அவர் நுழைவது வரையிலாகும்.
பள்ளிவாசலில் நுழைந்துவிட்டாரெனில் - தொழுகை அவரை அங்கு தடுத்து வைத்திருக்கும் காலம் வரையில் அவர் தொழுகையில் ஈடுபட்டிருப்பதாகவே கருதப்படுவார். மேலும் உங்களில் ஒருவர் தான் தொழுத இடத்தில் இருந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மலக்குமார்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறார்கள்: 'யா அல்லாஹ், இவருக்கு அருள் பொழுந்திடு! இவரது பாவத்தை மன்னித்திடு. இவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றிடு' என்று!-அந்த இடத்தில் இவர் யாருக்கும் தொல்லை கொடுக்காமலும் உளூ முறியாமலும் இருக்கும் வரையிலாகும் இது’’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள். ஏனெனில், தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் விரும்புகிறான். ஆதார நூல்: திர்மிதி.
கருளையாளனாகிய அல்லாஹ் அவனிடம் பிரார்த்திப்போரின் பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறான், தீர்ப்பும் கூறுகிறான், அந்த தீர்ப்பு நிறைவேறும் காலத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு விடுவான்.
பிறருக்கும், தனக்கும் தீங்கு விளைவிக்காத நியாயமான எந்தக் கோரிக்கையையும் இறைவன் மறுப்பதில்லை. பாவமான காரியங்களுக்காகவும், இரத்தபந்த உறவுகளை துண்டிப்பதற்காகவும் கேட்கப்படும் பிரார்த்தனைகளைத் தவிர மற்றவை ஏற்றுக் கொள்ளப்படும்’ என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதார நூல்: புஹாரி.
அன்றும் நடக்கும், நின்றும் நடக்கும்.
பிராரத்திப்போரின் பிரார்த்தனைகளில் சிலவற்றை அன்றே நிறைவேற்றியும் கொடுப்பான், சிலவற்றை நின்றும் (காலம் தாழ்த்தி) நிறைவேற்றிக் கொடுப்பான்.எத்தனையோ முறை அழுதுகேட்டும் காரியம் நடப்பதாக தெரியவில்லையே என்று பிராரத்திப்போருக்கு அல்லாஹ்வின் ஆற்றலின் மீது நம்பிக்கையற்ற சிந்தனை எழலாம். ( ஷைத்தான் இவ்வாறு சிந்திக்கத் தூண்டுவான்) எனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையே, என்றுக்கூறி அவசரப்படாத வரையில் உங்களது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் வனாந்தரத்தில் தனது ஒட்டகத்தை தவறவிட்ட பிறகு திடீரென அது கிடைக்கப்பெற்ற நிலையில் அவர் அடைகின்ற மகிழ்ச்சியை விட அதிகமாக அல்லாஹ், தனது அடியான் பாவமன்னிப்புத் தேடும் போது மகிழ்ச்சி அடைகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
33:73. எனவே, (இவ்வமானிதத்தை மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
40:3. பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை; அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
42:25. அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேளுங்கள். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்படுத்துபவர் எவருமில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்... 2 : 225
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் குறிப்பிட்ட நேரத்தில் அதிகமதிகம் துஆக் கேட்கக் கூடியவர்களாக இருப்பார்கள், அதாவது, ஸுஜூது செய்யும் பொழுது, இரண்டு ஸுஜுதுக்கும் மத்தியில், மற்றும் தஸஹ்ஹுத் (இருப்பில் அத்தஹிய்யாத் ஓதி அதனைத் தொடர்ந்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதி முடித்ததன்) பின் உள்ள நேரத்தில்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுஜூது நிலையில் இருக்கும் பொழுது வழக்கமாக இந்தத் துஆவை ஓதி வரக் கூடியவர்களாக இருந்தார்கள்:
''அல்லாஹும்மஃ ஃபிர்லீ தன்பி திக்கஹுவ ஜில்லஹுவ அவ்வலஹு வ அகீரஹு வ அலானிய்யதஹு வ ஸிர்ரஹு''
(யா அல்லாஹ், என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக, சிறிய மற்றும், பெரிய, முதலும், இறுதியுமாகவும், இன்னும் வெளிப்படையாகவும் மறைவாகவும் (செய்த பாவங்களை மன்னிப்பாயாக..!) (முஸ்லிம், கிதாப் அல் ஸலாஹ், பாப் மா யுகாலு ஃபில் ருகூஉ வல் ஸுஜூத், 216)
இன்னும் அவர்கள்,
"அல்லாஹும்மஃ ஃபிர்லி மா அஸ்ரர்து வ மா அஃலன்து"
(யா அல்லாஹ், என்னை மன்னிப்பாயாக, நான் மறைவாகச் செய்தவைகளையும் இன்னும் வெளிப்படையாகச் செய்தவைகளையும்) (அந் நஸஈ, அல் முஜ்தபா 2-569, ஸஹீஹ் அல் ஜாமிஇ 1067).
இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்க்கண்ட துஆவையும் அடிக்கடி ஓதி வரக் கூடியவர்களாக இருந்தார்கள்:
''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்து வ மின் ஷர்ரி மாலம் அமல்"
''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்து வ மின் ஷர்ரி மாலம் அமல்"
(யா அல்லாஹ், தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன், இன்னும் நான் செய்தவற்றையும் இன்னும் நான் செய்யாதிருக்கின்ற தீமைகளிலிருந்தும் (பாதுகாப்புத் தேடிக் கொள்கின்றேன்)
''அல்லாஹும்ம ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா''
''(யா அல்லாஹ், என்னுடைய (மறுமைக்) கணக்குகளை எளிதாக்கி வைப்பாயாக)'
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். 66:8
No comments:
Post a Comment