abdulkader <kanyakumari99@gmail.com>
அஸ்ஸலாமு
அலைக்கும்
பி.ஜெ அவர்களே!
உங்களுக்கு ஒரு அன்பான அழைப்பு!!!
“ஊருக்கெல்லாம் அன்பான அழைப்பு விடுத்த உங்களை இப்படி அழைப்பு விடுக்க
நேரிட்டதில் மிக்க வேதனை.”
ஷிர்க்கிலும், பித்-அத்திலும் மூழ்கி
கிடந்த எங்களை தட்டி எழுப்பி குர்-ஆனையும், ஹதீஸையும்
சொல்லித்தந்து தவ்ஹீத் வாதிகளாக்கிய பெருமை அல்லாஹ்விர்க்கும் அவனுடய தூதருக்கும்
பிறகு உங்களையே சாரும். அதர்க்காக உங்களுக்கு வேண்டி நாங்கள் என்றும் துஆ
செய்வதுண்டு. உங்களை யாராவது எதாவது கூறினால் அது தாங்காமல் உற்றம் ,சுற்றம் என்று பார்க்காமல் சண்டையிட்டதுண்டு அப்படிப்பட்ட
உங்களின் இன்றைய நடவடிக்கைகளைப்பர்ர்க்கும்போது உங்களை நீங்கள்
சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது
என்று தோன்றுகிறது . நீங்கள் இதர்க்கு முன்னால் எத்தனையோ ஜமா-அத்துகள் தொடங்கி
அதிலிருந்து மற்றுள்ளவர்களின் போக்கு பிடிக்காமல் வெளியேறி மற்றொரு ஜமா-அத்
தொடங்கி இப்போது டி.என்.டி.ஜெ என்ற அமைப்பில் வந்து நிற்கிறது. அதிலிருந்து வெளியேறும்போதெல்லாம் நீங்கள்
கூறிய குற்றச்சாட்டுகளொன்றும் கொள்கை பிரச்சினைகள் அல்ல
மாறாக
நிர்வாகிகள் சரியில்லை, செயல்பாடுகள் சரியில்லை, தவறானவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு பதவி உயர்வு
கொடுக்கின்றார்கள் என்பதுதான். அப்படி என்றால் நீங்கள்
தலைவராக இருக்கக்கூடிய இந்த தவ்ஹீத் ஜமா-அத்தை அடைத்து பூட்டவேண்டிய காலம்
வந்துவிட்டதே! நீங்களும் அதைத்தானே செய்து கொண்டிருக்கின்றீர்கள். இளந்தலை முறைகளுக்கு
வாய்ப்பு கொடுக்கின்றோம் என்ற பேரில் பக்குவம் இல்லாத விளையாட்டு பிள்ளைகளுக்கு பதவியைக்கொடுக்கின்றீர்கள் .
அணுகுமுறை சரி இல்லை , செயல்பாடு சரி இல்லை
என்று ஒரு மாவட்டத்திலுள்ள தவ்ஹீத் மக்கள் கூறும்போது அதைப்பற்றி அணு அளவும்
கவலைப்படாமல் உங்களுக்கு மாறு செய்யாமல் இருக்கிறார் என்ற ஒரே காரணித்திற்க்காக அன்று நீங்கள் ஜாக் அமைப்பை என்ன குறை கூறி வெளியேறினீற்களோ (குற்ற்ச்சாட்டை சொன்னால் பதவி உயர்வு கொடுக்கிறார்கள்) அதே போன்று மாநில செயலாளர் என்ற பதவியிலிருந்து மேலாண்மை
குழு உறுப்பினராக பதவி உயர்வு கொடுத்துள்ளீர்கள் , மாநில
தாயீகளுக்கு மக்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பதைக்கூட சொல்லிகொடுக்காமல்
தவறுகளை சுட்டிக்காட்டும்போது பொறுமையில்லாமல் சாடுபவர்களாக உள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் பொறுமை ஈமானில் பாதி என்று கூறிய நபி(ஸல்)
அவர்களுடைய ஹதீஸுகளைப்பற்றி வாய் கிளியப்பேச என்ன அருகதை இருக்கிறது. உங்களுடன்
இருக்கும் போது அவர் தவறு செய்கிறார் என்று தவ்ஹீத் மக்கள் எவ்வளவுதான் கூறினாலும்
செவியேற்க்காமல் அவர்களுக்காக வக்காலத்து வாங்கி கொண்டு
பாக்கரைப்போல தட்டிகொடுத்து உங்களுக்கு பிடிக்காம்ல் ஆகும்போது அவர்களை தூக்கி எறிந்து
அவர்கள் உங்களைப்பற்றி எதுவும் கூறுவதர்க்கு முன்னால் முந்திக்கொண்டு
அவ்ர்களைப்பற்றி அவர்களுடைய அந்தரங்கங்களைப்பற்றி போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக
வெப்ஸைட்டுகளில் போட்டு நாறடிக்கின்றீர்கள். அவர்களுடைய
ரகசியங்களை நீங்கள் மறைத்தால் உங்கள் ரகசியங்களை அல்லாஹ் மறைப்பானே! இதெல்லாம் உங்களுடைய அமைப்பை
பலப்படுத்துவத்ர்க்காகத்தானே! ஸைஃபுல்லாஹ் ஹாஜா உங்களுடன் இருப்பது வரை அவர் தவறு
செய்வதாக கூறவில்லையே! அவரை உங்கள் இடங்கையாகத்தானே வைத்திருந்தீர்கள்.அவரை
வெளியேற்றியபிறகு அவரைப்பற்றி முன்னால் உள்ளகுற்றச்சாட்டுகளெயெல்லாம்
கூறுகின்றீர்களே! எல்லாவற்றிர்க்கும் குர்-ஆன் , நபிவழியில் ஆதாரம் கூறக்கூடிய நீங்கள் மற்றவற்களுடைய குறைகளை
சுட்டிகாட்டுவதற்கு நபிவழியில் ஆதாரம் இல்லையா? பாக்கரின் பரபரப்பு பேட்டி
என்று செய்தி கொடுத்துவிட்டு நித்யானந்தாவின் பேட்டியை கொடுக்கின்றீகளே! இவர்களெல்லாம் மாநில பொதுச்செயலாளராக இருந்தால் உங்கள்
அமைப்பின் நிலைதான் என்ன/ குர்-ஆன் மற்றும் ஹதீஸை
மக்களுக்கு எடுத்து சொல்வதர்க்காக துவங்கப்பட்ட வெப்ஸைட்டுகளில் மற்றவர்களுடய
இரகசியங்களை அம்பலப்படுத்தி நடு நிலையாக சிந்திக்ககூடிய மக்களை தவ்ஹீதின் பக்கம்
வரவிடாமல் பயந்தோடகூடிய அளவில் ஆக்கி விட்டீர்கள். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு
ஓடோடி வந்த மக்களைப்பார்த்து நாம் எப்படி , எப்போது அழைத்தாலும் ஓடோடி வருவார்கள் என்ற தலைக்கனம் உண்மையான தவ்ஹீது
வாதிகள் உங்களை விட்டு கொழிந்து செல்வதைக்கூட உங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. உங்களை உயிருக்கு உயிராக நேசித்தவர்களெல்லாம் உங்களை விட்டும்
மனம் நொந்து வேறு வழி இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார்கள் . அவர்களைப்பற்றி உங்களிடம்
கூறப்படும் போது அவர்களை அமைதியாக விட்டு விடுங்கள் . பிறகு பார்த்து கொள்ளலாம். என்று கூறுகிறீர்கள். எதற்கு இந்த இடைவெளி அவர்கள் குஃப்ரில் போய் நின்ற பிறகு அவர்களுடைய குற்றங்களைத்திரட்டி நம்மிடம் தான் வெப்ஸைட் உள்ள்தே! நாறடித்துவிடலாம்
என்பதற்காகவா? ஒன்றை மட்டும்
புரிந்து கொள்ளுங்கள் எத்தனை பி.ஜெ வந்தாலும் அல்லாஹ் ஒருவன் நாடாமல் ஒருவனை
நேர்வழியில் ஆக்கவோ, குஃப்ரில் தள்ளிவிடவோ முடியாது.
உங்கள் மூலமாக அல்லாஹ் பலபேர்களுக்கு நேர்வழி தந்திருக்கிறான் அந்த உங்களைக்கூட
உங்கள் மரணம் வரை நேர்வழியில் செலுத்த
அந்த இறைவன் நாட வேண்டும். அதனால் எதிலும் தலைக்கனம் வேண்டாம். உங்களால் இறைவன்
நாட்டம் இன்றி எதுவும் செய்துவிட முடியாது . அல்லாஹுவை பயந்துகொள்ளுங்கள். ஆனால்
ஒன்று உங்களால் பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் இறைவனுக்குமிடையில்
திரையில்லாத ஒரு நாள் வரும் அந்நாளில் குற்றவாளியாக அல்லாஹ்விடம் நீங்கள் நிற்பதை
நாங்கள் அஞ்சுகிறோம். உங்களால் வேதனைப்பட்டவர்களை உங்களுக்கு தெரியும் என்றால்
மன்னிப்பு கேளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்.
இதற்கு நீங்கள்
பதில் தர வேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. அறிவு எவரிடமிருந்து கிடைத்தாலும் அதை
ஏற்று கொள்ளலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நான் எழுதிய இந்த செய்தியில் பலன்
உள்ள எதாவது இருந்தால் ஏற்று கொள்ளுங்க்ள். அல்லாஹ் நம்மை முஸ்லிமாக மரணிக்க செய்ய
பிரார்த்தனை செய்வோமாக. வஸ்ஸலாம் .