Tuesday, 16 October 2018

அறிஞர்களின்தேவை -காலத்தின்கட்டாயம் (02)

Abdurrahman Umari

அறிஞர்கள் தேவை என நாம் சொல்லிக் கொண்டுள்ளோம்
அறிஞர்கள் தமது முழுப்பொருளின் பொறுப்புணர்ந்து
செயல்படுகின்றார்களா?
தமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கின்றார்களா?
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளனரா?
.
என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவேண்டும்
அவற்றில் சில கோணங்களைப் பற்றி பேசவே
இக்கட்டுரை
.
ஆலிம்கள் என்னும் பெயரில் உள்ளோர் எப்படியெல்லாம்
வருமானம் ஈட்டலாம்? என்பதற்கு பலருமின்று கருத்துகளை பகிர்கிறார்கள்
.
வருமானம் ஈட்டுவதே குறிக்கோளென்றால் ஆலிம் பயில்வானேன்?
அறிவைக் கற்று அதன்வழி சமூகத்தை நடத்திச்செல்வதே அறிஞர்தம்
பணி, அவராற்றும் சமூகக்கடமை
.
மளிகைக்கடை வைத்தோ பார்ட் டைம் ஜாப் பார்த்தோ வருமானம் ஈட்ட
அவர் ஏன் அறிவைக் கற்கவேண்டும்
.
அதற்குரிய தொழிற்திறன் பயிற்சிகளைப் பெற்றால் போதாதா?
.
இன்று ஆலிம்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள், எதிர்கொள்ள இயலாமல் தத்தளிக்கின்ற சிக்கல்களுக்காக காரணங்களும் தீர்வுகளும் வேறு
.
உண்மையில் அவற்றைப் பற்றி பேச இன்று யாரும் தயாராக இல்லை
அறிந்தோர் அவற்றை அடைய முயன்றால் எட்டிவிடுவோர் போன்றோர்
ஏனோ இவைகுறித்து பேசாமல் மௌனம் காக்கின்றார்கள்
.
இல்ம் என்பது இமாமத் பணியை நிறைவேற்ற
.
இமாமத் என்பது ஒரு வேலை, பணி அல்ல. அது பொறுப்பு
.
சமூகத்தின் இமாமாக இருந்தாலும் சரி, மொஹல்லாவின் இமாமாக இருந்தாலும் சரி, அது முதுகை அழுத்தும் பாரம். முடியாச்சுமை
.
அது முடியாமல் தவிப்போர் உண்மையிலேயே பாராட்டிற்கும் போற்றுதலுக்கும் உரியோர். ஆற்றலும் வல்லமையும் மிக்க இறைவன் அவர்களுக்காக வானுலகிலிருந்து உதவியாளர்களை அனுப்பும் அளவு தகைமை உடையோர்
.
இன்று நிலைமை இதுவன்று. இதற்கு நேர் எதிர்
.
பள்ளி நிர்வாகிகளிடம் மதிப்பில்லை, மொஹல்லா மக்களிடம் மரியாதையில்லை,
வாழ்க்கைக்கு தேவையான போதிய வருமானம் ஈட்ட வழியில்லை
அவ்வளவு ஏன், மக்தப் மதரஸா மாணவர்களிடம் கூட எடுபடுவதில்லை
.
இதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய ஆளுமைத்திறனில் இருக்கின்றது
அவ்வாளுமைத்திறனை உருவாக்கும் பாடசாலைகளில் இருக்கின்றது
.
ஏட்டுக்கல்வியை (கற்றோரை அல்ல) மனனமிட்டோரையை பாடசாலைகள் உருவாக்குகின்றன.
உம்மத்திற்கு தலைமையேற்க வல்ல, ஒரு மொஹல்லாவை திறம்பட நடத்திச்செல்ல வல்ல, இமாம்களை அதாவது தலைவர்களை மதரஸாக்கள் உருவாக்குவதே கிடையாது
.
இஸ்லாமிய பாடசாலைகளின் குறியிலக்காக இது இல்லவே இல்லை

No comments:

Post a Comment