ப த் ர்
படையினரை ஒழுங்கு படுத்தத் தொடங்கினர் நபிகளார். கையில் ஓர் அம்புடன் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தவும் அணியை நேர்படுத்தவுமென வந்து கொண்டிருந்தார்கள். “ வரிசையில் நில்லும் ஓ ஸவாத்! ” எனக் கூறி, வரிசையை விட்டும் முன்னால் நின்றிருந்த ஓர் அன்ஸாரியின் வயிற்றில் தன் அம்பால் சிறிதே குத்தினர் அன்னார். “ ஓ அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீங்கள் வலியுண்டாக்கிவிட்டீர்கள் ” எனக் குரலெழுப்பிய ஸவாத், “ இறைவன் உங்களை நீதியுடனும் சாந்தியுடனும் அனுப்பியிருக்கின்றான், எனவே எனக்குரிய கைம்மாற்றைத் தாருங்கள் ” என வேண்டினார். “ எடுத்துக் கொள்ளும் ” எனக் கூறிய நபிகளார், தனது மேலங்கியத் திறந்து வயிற்றைக் காட்டி, அம்பை ஸவாதின் கையில் கொடுத்தார்கள். ஸவாத் உடனே குனிந்து, தான் மீட்டுக் குத்த வேண்டிய இடத்தை முத்தமிட்டார். “ உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியதென்ன? ” என்றனர் நபிகளார். ஸவாத் கூறினார் : “ ஓ அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இப்போது நீங்கள் காண்பதனை எதிர்நோக்கியிருக்கின்றோம். இதுவே உங்களுடனான எனது இறுதி சந்திப்பாக இருக்கவும் கூடும். எனவே உங்களது உடலை என்னுடல் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும் என நான் விரும்பினேன் ” . நபிகளார் அவருக்காகப் பிரார்த்தித்து ஆசீர்வாதம் செய்தார்கள்.

குறைஷியர் முன்னேறத் தொடங்கினர். கிரமமில்லாத பாலை வெளியினூடாகப் பார்க்கும் போது மக்கத்துப்படை உண்மையில் அதன் அளவைவிடச் சிறியதாகவே தோற்றமளித்தது. ஆனாலும் நபிகளார், அவர்களது உண்மையான தொகை குறித்தும், இரு படைகளுக்குமிடையிலான அதீத சமமின்மை குறித்தும் நன்கறிந்திருந்தார்கள். இந்நிலையில் அன்னார் தமக்கென அமைக்கப் பட்டிருந்த ஒதுக்கிடத்துக்கு அபூபக்ருடன் திரும்பிச் சென்று இறைவன் அளித்திருந்த உதவி பற்றிய வாக்குறுதிக்காகப் பிரார்த்திக்கலானார்கள். சிறு கண்ணுறக்கமொன்று நபிகளாரை அணைத்தது. எழுந்ததும் அன்னார் கூறினார்கள் :
“ உற்சாகத்துடன் இரும் ஓ அபூபக்ர். உமக்கு இறைவனின் உதவி வந்து விட்டது. இதோ ஜிப்ரீல் தான் வழி நடாத்தும் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து, யுத்தத்துக்கான ஆயுதங்கள் தரித்தவராக இருக்கின்றார் ” .
புகாரி : 64:10 ; இ.இ. 444
அராபியரின் வரலாற்றில் எத்தனையோ யுத்தங்கள் இறுதி நேரத்தில், இரு படையினரும் நேருக்கு நேர் மோதலுக்காகத் தயாராய் விட்ட நிலையிலும் கூட கைவிடப்பட்டுள்ளன. ஆனால் நபிகளார் இப்போது யுத்தம் நிச்சயம் நடைபெறும் எனவும் தனக்கு வாக்களிக்கப்பட்ட இரு குழுக்களில் ஒன்று தான் தன் முன்னால் அணி வகுத்து நிற்கின்றதென்றும் தெளிந்து கொண்டார்கள். கழுகுகள் கூட ஜீவதுவம்சம் நிச்சயமாகிவிட்டதென உணர்ந்து பிணந்தின்னவெனக் காத்திருந்தன. சில மேலே வட்டமிட்டுப் பறந்து திரிந்தன. சில இரு படைகளுக்கும் பின்னாலிருந்த குன்றுகளின் பாறைகளில் அமர்ந்திருந்தன. குறைஷியரின் நடமாட்டங்களிலிருந்து அவர்கள் தாக்குதலுக்குத் தயாராய் விட்டனர் என்பது தெரிந்தது. ஏற்கெனவே அருகில் வந்து விட்ட அவர்கள், முஸ்லிம்கள் அமைத்திருந்த தொட்டியை நெருங்கினர். அதனைக் கைப்பற்றிக் கொள்வது குறைஷியரின் முதன் முயற்சியாக இருக்கும் போலத் தோற்றியது.
மக்ஸூமின் அஸ்வத், ஏனையோரை முந்தியவராக தண்ணீர் குடிக்கும் நோக்கத்துடன் வந்தார். ஹம்ஸா அவரைச் சந்திக்கவென முன் சென்று தாக்கியபோது முழங்காலின் கீழாக அஸ்வத்தின் கால் துண்டிக்கப்பட்டது. அடுத்த அடியோடு அவர் மரணமானார். உடனே அபூஜஹ்லின் இகழ்ந்துரைகளினால் கொதித்துக் கொண்டிருந்த உத்பா, சேனையிலிருந்து முன் வந்து தனியார் மோதலுக்கெனச் சவால் விட்டார். குடும்ப கெளரவத்தை மேலும் உறுதிப்படுத்தவென சகோதரர் ஷைபாவும், மகன் வலீதும் அவரது இரு புறத்தும் வந்து நின்றனர். கஸ்ரஜ்களின் நஜ்ஜார் கோத்திரத்து அவ்ப் இச்சவாலை ஏற்று முஸ்லிம் அணியினின்றும் முன்னால் வந்து நின்றார். நபிகளாருக்கு வாக்குறுதியளித்த யத்ரிபின் முதல் அறுவரில் ஒருவர் இவர். அவ்புடன் அவரது சகோதரர் முஅவ்விதும் முன் வந்தார். இவர்களது குடியிருப்புப் பகுதியையே கஸ்வா, ஹிஜ்றாவின் இறுதித் தரிப்பிடமாகத் தெரிந்திருந்தது. சவாலை ஏற்று முன் வந்து மூன்றாமவர் அப்த்-அல்லாஹ்-இப்ன்- ரவாஹா. இவர் தனது தலைவர் இப்ன் உபைக்கே எதிராக நபிகளாரை வரவேற்று ஆறுதல் வார்த்தை கூறியவர்.
“ நீங்கள் யார்? ” என்றனர் சவால் விடுத்தோர். பதில் கொடுக்கப்பட்டதும் உத்பா கூறினார் : “ நீங்கள் மேன்மையானவர்கள்; எமக்கிணையானவர்கள். எனினும் உங்களோடு எமக்கு எதுவித பிரச்சிணையும் இல்லை. எமது சவால் எமது குலத்தவர் தவிர்ந்த வேறு எவருடனுமல்ல ” . உடனே குறைஷியர் சிலர், “ ஓ முஹம்மதே! எமது குலத்தவரும் எமக்கு இணையாருமானோரை எமக்கெதிராக அனுப்பும் ” எனக் குரலெழுப்பினர். நபிகளாரின் எண்ணமும் அவ்வாறே இருந்தது. எனினும் அன்ஸாரிகளின் ஆர்வம் அன்னாரையும் முந்திவிட்டது. நபிகளார் தமது சொந்தக் குடும்பத்தாரை நோக்கித் திரும்னார்கள். ஏனைய அனைவரிலும் பார்க்க அவர்களே யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டிய கடப்பாடுடையராயிருந்தனர். சவால் விட்டவர்களில் இருவர் முதிர்ந்த வயதினர்; ஒருவர் இளைஞர். “ எழும்பும் ஓ உபைதா! எழும்பும் ஓ ஹம்ஸா! எழும்பும் ஓ அலீ! ” என்றனர் நபிகளார். உபைதாதான் படையினரில் ஆக மூத்தவராகவும் கூடிய அனுபவம் பெற்றவராகவும் விளங்கினார். அவர் உத்பாவையும், ஹம்ஸா, ஷைபாவையும், அலீ வலீதையும் எதிர்த்து நின்றனர். போராட்டம் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஷைபாவும் வலீதும் சிறிது நேரத்தில் உயிரிழந்து வீழ, அலீயும் ஹம்ஸாவும் காயங்களேதுமின்றி நின்றிருந்தனர். உத்பாவை உபைதா கீழே வீழ்த்தியபோது, உத்பாவின் வாள் வீச்சினால் உபைதாவின் கால் துண்டானது. இது ஒரு மும்முனைப் போராட்டம். மூவருக்கெதிராக மூவர். எனவே ஹம்ஸாவும் அலீயும் தம் வாள்களை உத்பாவை நோக்கித் திருப்பினர். ஹம்ஸாவின் தாக்குதல் மரணத்தையே விளைத்தது. பின் காயமுற்ற தமது ஒன்று விட்ட சகோதரரை இருவரும் பாசறைக்குத் தூக்கிச் சென்றனர். அவர் பெருமளவு இரத்தத்தை இழந்திருந்தார். வெட்டுப்பட்ட காலிலிருந்து எலும்பினுள்ளிருக்கும் சாரம் வெளியே நுரைத்துக் கொண்டிருந்தது. அவரது மனத்தின் கண் இருந்தது ஒரேயோர் எண்ணமே.
“ நான் வீர மரணம் எய்தியவனாவேனா ஓ அல்லாஹ்வின் தூதரே! ” என நபிகளார் தன்னருகில் வந்தபோது கேட்டார் உபைதா. நபிகளார் கூறினார்கள்: “ நிச்சயமாக ”.
மிகவும் நெருக்கடியான அரவங்களேதுமற்ற இந்நிலை குறைஷியரிடமிருந்து வந்த ஓர் அம்பினால் குலைந்தது. உமரால் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவர் படுகாயமுற்றுக் கீழே விழுந்தார். மற்றுமோர் அம்பு, தொட்டியில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த கஸ்ரஜின் வாலிபர் ஹாரிதாவின் கழுத்தை ஊடுருவிச் சென்றது. நபிகளார் இப்போது தன் மக்களை நோக்கி, “ முஹம்மதின் ஆன்மா யாருடைய கையில் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக, தனது பரிசை உறுதியாக எதிர்பார்த்து, அவர்களை எதிர்த்துப் பின்வாங்காது முன் சென்று மரணமுறுபவர்களை இறைவன் நிச்சயமாக சுவர்க்கத்துக்கு அனுப்பி வைப்பான் ” எனக் கூறினார்கள். - ( இ. இ. 445 ) இவ்வாசகம், நேரடியாகக் கேட்டோர் மூலம், நேரடியாகக் கேட்க முடியாதிருந்தோர் அனைவரையும் சென்றடைந்தது. கஸ்ரஜின் ஸலீமா கோத்திரத்து உமைர், தன் கையில் சில பேரீச்சங்கனிகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். “ அற்புதங்களிலெல்லாம் அற்புதம்! இந்த மனிதர்கள் என்னைக் கொன்று போடுவதைத் தவிர்த்து எனக்கும் சுவர்க்கத்துக்கும் இடையில் வேறு எதுவுமே இல்லையா? ” எனக் கூறிப் பேரீச்சங்கனிகளை வீசியெறிந்து, கட்டளைகளை எதிர்நோக்கியவராக வாளைக் கையிலேந்தி நின்றார் உமைர்.
அவ்ப் நபிகளாரின் அருகிலேயே இருந்தார். அனைவரையும் முந்தியவராகத் தான் ஏற்றுக் கொண்ட சவாலைக் கொண்டு நடாத்தும் கெளாரவத்தை இழந்து விட்ட ஏமாற்றம் அவரிடம் காணப்பட்டது. “ ஓ அல்லாஹ்வின் தூதரே! இறைவன் தன் அடிமையோடு மகிழ்ச்சியுடன் சிரிப்பதற்குக் காரணமாக அமையக் கூடியதென்ன? ” என வினவினார் அவ்ப். “ எதிரிகளின் நடுவே கவசங்களின்றிப் பாய்ந்து செல்வது ” என்றனர் நபிகளார். தான் அணிந்திருந்த கவசத்தைக் கழற்றத் தொடங்கினார் அவ்ப். நபிகளார் சிறு கூழாங்கற்கள் சிலவற்றைக் கையிலெடுத்து “ அந்த முகங்களெல்லாம் முகமிழந்தவனாய் விடட்டும் ” எனக் கூறியவாறு குறைஷியரை நோக்கி வீசியெறிந்தார்கள். அழிவையே தாம் எறிவதாக அன்னார் நன்குணர்ந்திருந்தனர். பின்னர் தாக்குதலைத் தொடங்கும்படி பணித்தார்கள். யுத்த கோஷமாக அன்னார் வகுத்துக் கொடுத்திருந்தது “ யா மன்ஸூர் அமித்! ” - ( ஓ இறைவனால் வெற்றியளிக்கப்பட்டவரே! கொல்லும். ) இக்கோஷம் அனைவரது குரல்வளையிலிருந்தும் எழுந்த வேகத்துடனேயே எல்லோரும் முன் செல்லலாயினர். கவசமேதுமில்லாத அவ்பும், உமைரும் எதிரிகளைச் சந்தித்த முதல்வர்களுள் இருந்தனர். மரணமுறும் வரை இருவரும் போராடினர். இவர்களிருவரதும், உபைதாவினதும், அம்புகளினால் கொல்லப்பட்ட இருவரதும் மரணங்கள் சேர்ந்து வீர மரணம் எய்தியோரின் தொகை ஐந்தாக இருந்தது.
அன்றைய தினம் முஸ்லிம்களிலிருந்து மேலும் ஒன்பது பேர் மரணத்துக்குள்ளாவோராயிருந்த னர். அவர்களுள் ஒருவர் மற்றுமோர் உமைர் - ஸஅத்தின் இளம் சகோதரர் ; திரும்பி வீடு சென்றுவிடும்படி நபிகளாரால் கூறப்பட்டவர்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
படையினரை ஒழுங்கு படுத்தத் தொடங்கினர் நபிகளார். கையில் ஓர் அம்புடன் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தவும் அணியை நேர்படுத்தவுமென வந்து கொண்டிருந்தார்கள். “ வரிசையில் நில்லும் ஓ ஸவாத்! ” எனக் கூறி, வரிசையை விட்டும் முன்னால் நின்றிருந்த ஓர் அன்ஸாரியின் வயிற்றில் தன் அம்பால் சிறிதே குத்தினர் அன்னார். “ ஓ அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீங்கள் வலியுண்டாக்கிவிட்டீர்கள் ” எனக் குரலெழுப்பிய ஸவாத், “ இறைவன் உங்களை நீதியுடனும் சாந்தியுடனும் அனுப்பியிருக்கின்றான், எனவே எனக்குரிய கைம்மாற்றைத் தாருங்கள் ” என வேண்டினார். “ எடுத்துக் கொள்ளும் ” எனக் கூறிய நபிகளார், தனது மேலங்கியத் திறந்து வயிற்றைக் காட்டி, அம்பை ஸவாதின் கையில் கொடுத்தார்கள். ஸவாத் உடனே குனிந்து, தான் மீட்டுக் குத்த வேண்டிய இடத்தை முத்தமிட்டார். “ உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியதென்ன? ” என்றனர் நபிகளார். ஸவாத் கூறினார் : “ ஓ அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இப்போது நீங்கள் காண்பதனை எதிர்நோக்கியிருக்கின்றோம்.

குறைஷியர் முன்னேறத் தொடங்கினர். கிரமமில்லாத பாலை வெளியினூடாகப் பார்க்கும் போது மக்கத்துப்படை உண்மையில் அதன் அளவைவிடச் சிறியதாகவே தோற்றமளித்தது. ஆனாலும் நபிகளார், அவர்களது உண்மையான தொகை குறித்தும், இரு படைகளுக்குமிடையிலான அதீத சமமின்மை குறித்தும் நன்கறிந்திருந்தார்கள். இந்நிலையில் அன்னார் தமக்கென அமைக்கப் பட்டிருந்த ஒதுக்கிடத்துக்கு அபூபக்ருடன் திரும்பிச் சென்று இறைவன் அளித்திருந்த உதவி பற்றிய வாக்குறுதிக்காகப் பிரார்த்திக்கலானார்கள். சிறு கண்ணுறக்கமொன்று நபிகளாரை அணைத்தது. எழுந்ததும் அன்னார் கூறினார்கள் :
“ உற்சாகத்துடன் இரும் ஓ அபூபக்ர். உமக்கு இறைவனின் உதவி வந்து விட்டது. இதோ ஜிப்ரீல் தான் வழி நடாத்தும் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து, யுத்தத்துக்கான ஆயுதங்கள் தரித்தவராக இருக்கின்றார் ” .
புகாரி : 64:10 ; இ.இ. 444
அராபியரின் வரலாற்றில் எத்தனையோ யுத்தங்கள் இறுதி நேரத்தில், இரு படையினரும் நேருக்கு நேர் மோதலுக்காகத் தயாராய் விட்ட நிலையிலும் கூட கைவிடப்பட்டுள்ளன. ஆனால் நபிகளார் இப்போது யுத்தம் நிச்சயம் நடைபெறும் எனவும் தனக்கு வாக்களிக்கப்பட்ட இரு குழுக்களில் ஒன்று தான் தன் முன்னால் அணி வகுத்து நிற்கின்றதென்றும் தெளிந்து கொண்டார்கள். கழுகுகள் கூட ஜீவதுவம்சம் நிச்சயமாகிவிட்டதென உணர்ந்து பிணந்தின்னவெனக் காத்திருந்தன. சில மேலே வட்டமிட்டுப் பறந்து திரிந்தன. சில இரு படைகளுக்கும் பின்னாலிருந்த குன்றுகளின் பாறைகளில் அமர்ந்திருந்தன. குறைஷியரின் நடமாட்டங்களிலிருந்து அவர்கள் தாக்குதலுக்குத் தயாராய் விட்டனர் என்பது தெரிந்தது. ஏற்கெனவே அருகில் வந்து விட்ட அவர்கள், முஸ்லிம்கள் அமைத்திருந்த தொட்டியை நெருங்கினர். அதனைக் கைப்பற்றிக் கொள்வது குறைஷியரின் முதன் முயற்சியாக இருக்கும் போலத் தோற்றியது.
மக்ஸூமின் அஸ்வத், ஏனையோரை முந்தியவராக தண்ணீர் குடிக்கும் நோக்கத்துடன் வந்தார். ஹம்ஸா அவரைச் சந்திக்கவென முன் சென்று தாக்கியபோது முழங்காலின் கீழாக அஸ்வத்தின் கால் துண்டிக்கப்பட்டது. அடுத்த அடியோடு அவர் மரணமானார். உடனே அபூஜஹ்லின் இகழ்ந்துரைகளினால் கொதித்துக் கொண்டிருந்த உத்பா, சேனையிலிருந்து முன் வந்து தனியார் மோதலுக்கெனச் சவால் விட்டார். குடும்ப கெளரவத்தை மேலும் உறுதிப்படுத்தவென சகோதரர் ஷைபாவும், மகன் வலீதும் அவரது இரு புறத்தும் வந்து நின்றனர். கஸ்ரஜ்களின் நஜ்ஜார் கோத்திரத்து அவ்ப் இச்சவாலை ஏற்று முஸ்லிம் அணியினின்றும் முன்னால் வந்து நின்றார். நபிகளாருக்கு வாக்குறுதியளித்த யத்ரிபின் முதல் அறுவரில் ஒருவர் இவர். அவ்புடன் அவரது சகோதரர் முஅவ்விதும் முன் வந்தார். இவர்களது குடியிருப்புப் பகுதியையே கஸ்வா, ஹிஜ்றாவின் இறுதித் தரிப்பிடமாகத் தெரிந்திருந்தது. சவாலை ஏற்று முன் வந்து மூன்றாமவர் அப்த்-அல்லாஹ்-இப்ன்- ரவாஹா. இவர் தனது தலைவர் இப்ன் உபைக்கே எதிராக நபிகளாரை வரவேற்று ஆறுதல் வார்த்தை கூறியவர்.
“ நீங்கள் யார்? ” என்றனர் சவால் விடுத்தோர். பதில் கொடுக்கப்பட்டதும் உத்பா கூறினார் : “ நீங்கள் மேன்மையானவர்கள்; எமக்கிணையானவர்கள். எனினும் உங்களோடு எமக்கு எதுவித பிரச்சிணையும் இல்லை. எமது சவால் எமது குலத்தவர் தவிர்ந்த வேறு எவருடனுமல்ல ” . உடனே குறைஷியர் சிலர், “ ஓ முஹம்மதே! எமது குலத்தவரும் எமக்கு இணையாருமானோரை எமக்கெதிராக அனுப்பும் ” எனக் குரலெழுப்பினர். நபிகளாரின் எண்ணமும் அவ்வாறே இருந்தது. எனினும் அன்ஸாரிகளின் ஆர்வம் அன்னாரையும் முந்திவிட்டது. நபிகளார் தமது சொந்தக் குடும்பத்தாரை நோக்கித் திரும்னார்கள். ஏனைய அனைவரிலும் பார்க்க அவர்களே யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டிய கடப்பாடுடையராயிருந்தனர். சவால் விட்டவர்களில் இருவர் முதிர்ந்த வயதினர்; ஒருவர் இளைஞர். “ எழும்பும் ஓ உபைதா! எழும்பும் ஓ ஹம்ஸா! எழும்பும் ஓ அலீ! ” என்றனர் நபிகளார். உபைதாதான் படையினரில் ஆக மூத்தவராகவும் கூடிய அனுபவம் பெற்றவராகவும் விளங்கினார். அவர் உத்பாவையும், ஹம்ஸா, ஷைபாவையும், அலீ வலீதையும் எதிர்த்து நின்றனர். போராட்டம் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஷைபாவும் வலீதும் சிறிது நேரத்தில் உயிரிழந்து வீழ, அலீயும் ஹம்ஸாவும் காயங்களேதுமின்றி நின்றிருந்தனர். உத்பாவை உபைதா கீழே வீழ்த்தியபோது, உத்பாவின் வாள் வீச்சினால் உபைதாவின் கால் துண்டானது. இது ஒரு மும்முனைப் போராட்டம். மூவருக்கெதிராக மூவர். எனவே ஹம்ஸாவும் அலீயும் தம் வாள்களை உத்பாவை நோக்கித் திருப்பினர். ஹம்ஸாவின் தாக்குதல் மரணத்தையே விளைத்தது. பின் காயமுற்ற தமது ஒன்று விட்ட சகோதரரை இருவரும் பாசறைக்குத் தூக்கிச் சென்றனர். அவர் பெருமளவு இரத்தத்தை இழந்திருந்தார். வெட்டுப்பட்ட காலிலிருந்து எலும்பினுள்ளிருக்கும் சாரம் வெளியே நுரைத்துக் கொண்டிருந்தது. அவரது மனத்தின் கண் இருந்தது ஒரேயோர் எண்ணமே.
“ நான் வீர மரணம் எய்தியவனாவேனா ஓ அல்லாஹ்வின் தூதரே! ” என நபிகளார் தன்னருகில் வந்தபோது கேட்டார் உபைதா. நபிகளார் கூறினார்கள்: “ நிச்சயமாக ”.
மிகவும் நெருக்கடியான அரவங்களேதுமற்ற இந்நிலை குறைஷியரிடமிருந்து வந்த ஓர் அம்பினால் குலைந்தது. உமரால் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவர் படுகாயமுற்றுக் கீழே விழுந்தார். மற்றுமோர் அம்பு, தொட்டியில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த கஸ்ரஜின் வாலிபர் ஹாரிதாவின் கழுத்தை ஊடுருவிச் சென்றது. நபிகளார் இப்போது தன் மக்களை நோக்கி, “ முஹம்மதின் ஆன்மா யாருடைய கையில் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக, தனது பரிசை உறுதியாக எதிர்பார்த்து, அவர்களை எதிர்த்துப் பின்வாங்காது முன் சென்று மரணமுறுபவர்களை இறைவன் நிச்சயமாக சுவர்க்கத்துக்கு அனுப்பி வைப்பான் ” எனக் கூறினார்கள். - ( இ. இ. 445 ) இவ்வாசகம், நேரடியாகக் கேட்டோர் மூலம், நேரடியாகக் கேட்க முடியாதிருந்தோர் அனைவரையும் சென்றடைந்தது. கஸ்ரஜின் ஸலீமா கோத்திரத்து உமைர், தன் கையில் சில பேரீச்சங்கனிகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். “ அற்புதங்களிலெல்லாம் அற்புதம்! இந்த மனிதர்கள் என்னைக் கொன்று போடுவதைத் தவிர்த்து எனக்கும் சுவர்க்கத்துக்கும் இடையில் வேறு எதுவுமே இல்லையா? ” எனக் கூறிப் பேரீச்சங்கனிகளை வீசியெறிந்து, கட்டளைகளை எதிர்நோக்கியவராக வாளைக் கையிலேந்தி நின்றார் உமைர்.
அவ்ப் நபிகளாரின் அருகிலேயே இருந்தார். அனைவரையும் முந்தியவராகத் தான் ஏற்றுக் கொண்ட சவாலைக் கொண்டு நடாத்தும் கெளாரவத்தை இழந்து விட்ட ஏமாற்றம் அவரிடம் காணப்பட்டது. “ ஓ அல்லாஹ்வின் தூதரே! இறைவன் தன் அடிமையோடு மகிழ்ச்சியுடன் சிரிப்பதற்குக் காரணமாக அமையக் கூடியதென்ன? ” என வினவினார் அவ்ப். “ எதிரிகளின் நடுவே கவசங்களின்றிப் பாய்ந்து செல்வது ” என்றனர் நபிகளார். தான் அணிந்திருந்த கவசத்தைக் கழற்றத் தொடங்கினார் அவ்ப். நபிகளார் சிறு கூழாங்கற்கள் சிலவற்றைக் கையிலெடுத்து “ அந்த முகங்களெல்லாம் முகமிழந்தவனாய் விடட்டும் ” எனக் கூறியவாறு குறைஷியரை நோக்கி வீசியெறிந்தார்கள். அழிவையே தாம் எறிவதாக அன்னார் நன்குணர்ந்திருந்தனர். பின்னர் தாக்குதலைத் தொடங்கும்படி பணித்தார்கள். யுத்த கோஷமாக அன்னார் வகுத்துக் கொடுத்திருந்தது “ யா மன்ஸூர் அமித்! ” - ( ஓ இறைவனால் வெற்றியளிக்கப்பட்டவரே! கொல்லும். ) இக்கோஷம் அனைவரது குரல்வளையிலிருந்தும் எழுந்த வேகத்துடனேயே எல்லோரும் முன் செல்லலாயினர். கவசமேதுமில்லாத அவ்பும், உமைரும் எதிரிகளைச் சந்தித்த முதல்வர்களுள் இருந்தனர். மரணமுறும் வரை இருவரும் போராடினர். இவர்களிருவரதும், உபைதாவினதும், அம்புகளினால் கொல்லப்பட்ட இருவரதும் மரணங்கள் சேர்ந்து வீர மரணம் எய்தியோரின் தொகை ஐந்தாக இருந்தது.
அன்றைய தினம் முஸ்லிம்களிலிருந்து மேலும் ஒன்பது பேர் மரணத்துக்குள்ளாவோராயிருந்த
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment