Thursday, 11 June 2015

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்




(நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: "அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம்."

No comments:

Post a Comment