Thursday, 11 June 2015

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்



ஆகவே (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட அவர்களுக்குத் (திருப்தியளிப்பதற்காக) அத்தாட்சிகள் அனைத்தையும் நீங்கள் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உங்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீங்களும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. அன்றி (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உங்களுக்கு வஹ்யி(யின் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னும் அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்களும் அநியாயக்கரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்கள்).

No comments:

Post a Comment