அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
(நபியே!) உங்களுடைய முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீங்கள் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உங்களை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே, நீங்கள் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்தபோதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்த)வர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) "இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்" என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வாறே அவர்களுடைய வேதத்தில் இருக்கின்றது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.

No comments:
Post a Comment