Wednesday, 30 November 2011

என் இறைவா! நீயே நோயை குணப்படுத்துபவன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்பான சகோதர சகோதரிகளே..

இப்ராஹிம் (அலை) நபியவர்கள் அல்லாஹ்வைப் பற்றி விவரிக்கும் போது
அவன் எத்தகையவன் எனில் ...?

“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
“அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
“மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.  ( ஸூரத்துஷ்ஷுஃரா : 78 - 82)

Tuesday, 29 November 2011

தாயின் உபதேசம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

Almowilath Islamiclibrary முக நூலில் கிடைத்த நல்ல கட்டுரையை இங்கு பதிவு செய்கின்றேன். 

மணமுடிக்க இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த உபதேசங்கள், பொருத்தமான வாழ்க்கை வழிகாட்டிகளாக இருக்கின்றன.

அவ்ஃப் இப்னு முஹல்லிம் ஷைபானி என்ற பிரசித்தி பெற்ற ஓர் அரபுத் தலைவர் தமது மகள் உம்மு இயாஸ் என்பவரை ஹாரிஸ் இப்னு அம்ர் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். உம்மு இயாஸ் அலங்கரிக்கப்பட்டு கணவன் வீட்டிற்கு அவர் வழியனுப்பப்படும்போது, அந்தப் பெண்ணின் தாய் உமாமா பின்த் ஹாரிஸ்வந்தார்.
இலக்கிய நயத்துடன் பேசுகிற அறிவும், சீரிய சிந்தனையும் கொண்ட அவர், தம் மகளுக்கு அப்போது உபதேசித்தவை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை.

Sunday, 27 November 2011

தாயின் கருவறையில் கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன்.


அஸ்ஸலாமு அலைக்கும் ..
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அவ்விரத்தக்கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம். பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழுமனிதனாக) உருவாக்கினோம்.ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும் பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன். (அல்-குர்ஆன்23:12-14)

நல்ல பெண்மணிகளாய் வாழ ...



அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்முடைய சமுதாயத்தை மேற்கோள் காட்டி தாம், தமது மக்களுக்கு நேர்வழி காட்டிய மாற்று மத நண்பர்கள் கூட வேதனைபடும் அளவில் நமது செயல்பாடுகள் சில நேரங்களில்அமைந்து விடுகிறது.
எந்த ஊரில் இல்லை. எந்த சமுதாயத்தில் இல்லை.
தன்னடக்கம், ஹிஜாப் முறைகளை பேணும் ஒரு சமுதாயத்தில் ஓடிப்போகும் சம்பவம் நடந்தால் அது பெரிய விசயமாகிவிடுகிறது.
எதற்கு இந்த அவசரம்? இந்தியாவிற்கு தங்க பதக்கம் வாங்கவா?
விபரமில்லாமல், தெளிவான எதிர்கால சிந்தனை இல்லாமல் சுயமாக, ரகசியமாக முடிவெடுப்பது நல்ல வாழ்வை தந்திருக்கிறதா?
எதிர்பார்த்து காத்திருந்த மணமகனை அவசரமாக ஏன் தொலைத்து விடுகிறீர்கள்?அங்கிங்கெனாதபடி எங்கும் எதிரொலிக்கிறது.யாருடனாவது ஓடிப்போகும் செய்திகள்.
நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது இந்த பெருந்தீமை!
எவ்வளவு துணிச்சலாய்அரங்கேறுகிறது இக்கொடுமைகள்?
பெற்றெடுத்து, அரும்பாடுபட்டு ஆளாக்கிய பெற்றோரை கூனி குறுக வைத்து விட்டு,உற்றார் உறவு துறந்து,ஊர் துறந்து,உயிரினும் மேலான மார்க்கத்தை தூக்கி எறிந்து விட்டு,நேற்று வந்த எவனோ ஒருவருடன் ஓடிப்போகும் நெஞ்சழுத்தம் எங்கிருந்து வந்தது
கண்ணியமிக்க குடும்பத்தில் பிறந்து, பழக்க வழக்கங்களில், படிக்கும் இடங்களின் மூலம் பிற கலாச்சாரத்தை பின்பற்றி ஓடிப்போய் சீரழிந்து நிற்பதை காதலென்றும் இல்லறமென்றும் சொல்ல முடியுமா
நமது சமுதாயதிற்கு என்று கண்ணியம்அழகிய வழிகாட்டுதல் இருக்கிறது.
அவசரத்தால் சில பெண்கள் மறந்து விடுகிறார்கள்.
நம் சமுதாயத்தின் கண்களாக இருக்கின்ற ஒவ்வொரு பெண்ணிற்கும் கடமை இருக்கிறது.
பின்தொடரும் உங்களுக்கு பின் வரும் சமுதாயதிற்கு நல்வழி காட்டுவதை மறந்து,
பொறுமையின்றி தவறான வாழ்வை தேர்ந்தெடுப்பது பெரும் பாவமாகும். 
இதை உணர்ந்து நடக்கும் நல்ல பெண்மணிகளாய் வாழ பேரிறைவன் நல் வழி 
காட்டுவானாக!
Visva Khalid.


சகோ சாஹுல் முகநூல் குறிப்பிலிருந்து

கடையநல்லூர் வெள்ளப்பெருக்கு புகைப்படம்

 அஸ்ஸலாமு அலைக்கும் 
இறைவனின் மாபெரும் கிருபையாக கடந்த இரண்டு தினங்களாக கடையநல்லூரில் மழை வெள்ளமாக காட்சியளிக்கிறது. ஆனால் உபரி நீர் தேக்கம் மற்றும் கழிவு நீர் தேக்கம் மூலமாக தோற்று நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை துரிதமாக எடுக்கும்படி வேண்டுகின்றோம்.

குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


   أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا
'மும்மதே! (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், ஏட்டுக்குரியோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ? குர்ஆன் 18 : 9
   இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகை மற்றும் ஏட்டுக்குரியவர்கள், சுவடிக்கு உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

Saturday, 26 November 2011

ஆஷுரா நாள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
 நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர் அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும் என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நான் தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)-புகாரி 3145 ,முஸ்லிம்) 


நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்த போது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளை யிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர்கள் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பியவர்கள் விட்டு விடலாம் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா(ரழி)- புகாரி,முஸ்லிம்)

அந்நாளிலே.... குர் ஆன் வசனம்


(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும்அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்தன் கைசேதத்தையும் வெளிப்படுத்தும். 10:54

Wednesday, 23 November 2011

TNTJ மண்டை உடைப்பு.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3 வது தெருவில் மர்யம் பள்ளிவாசல்  உள்ளது.  இதன் தரை JAQH பெயரில் வாங்கப்பட்ட காரணத்தால் கடந்த 2006 ம் ஆண்டில் JAQH  அமைப்பினரால் பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டது. அதன் வழக்கு இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

எலக்டிரிக் ஈல் (Electric Eel) மின்சார மீன்கள்


அஸ்ஸலாமு அலைக்கும்

நாம் பார்க்க இருப்பது மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீனைப் பற்றியதாகும்.
தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் மீன்தன் எதிரியின் உடலில் பட்ட மாத்திரத்தில் உயிரிழக்கச் செய்யும் அபரிதமான மின் ஆற்றலின் உற்பத்திக் கேந்திரமாக விளங்கிவருகின்றது.


N
நம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V  மின்சாரம் என்று எழுதப்பட்டு மண்டை ஓட்டிற்கு கீழே இரண்டு  எலம்புகளினால் பெருக்கல் குறிஅமைப்பில் வரையப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதைக் கண்டிருப்போம். 440V மின்சாரம் என்பதே மனிதார்களைப் பொருத்த வரை அபாயம் என்ற நிலை இருக்கும் போது 650V மின்சாரம் எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Tuesday, 22 November 2011

இஸ்லாமிய கொள்கை விளக்கம்


கேள்வி : அல்லாஹ்வை நாம் எவ்விதம் வணங்க வேண்டும்?
பதில் : அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நமக்குக் கற்றுக் கொடுத்திருப்பது போன்றே அவனை நாம் வணங்க வேண்டும்!
(ஏகத்துவ) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; மேலும்( அவனது) தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். வேறு வழிகளை நீங்கள் கையாண்டு உங்கள் செயல்களை நீங்கள் பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 47 : 33) என்று “முஹம்மது” எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் நமக்குப் கட்டளையிட்டிருக்கிறான். 
“நமது உத்தரவின்றி எவன் ஒரு செயலைச் செய்கிறார்களோ அது தள்ளப்படக்கூடியதே!” (அதாவது ஏற்கப்படக் கூடியதன்று) என்று பெருமானாரும் எச்சரித்திருக்கின்றார்கள்.

அவ்விலியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா?


அவ்விலியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா?
இந்தப் பிரச்சனையில் சிலர், வலிமார்கள் மரணத்திற்குப் பிறகும் உயிருடன் உள்ளனர் என்றும், வேறு சிலர் இறந்து விட்டனர் என்றும் இரு வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். இதில் எனது சரியானுது என்பதைத் தெளிவாக ஆதாய்ந்தாலே இதன் உண்மையை விளங்க முடியும்.
முதலில் (மரணித்த பின்னும்) “உயிருடன் இருக்கிறார்கள்” என்ற கருத்துக் கொண்டாரின் வாதங்களைப் பார்ப்போம்.
“அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டோரை இறந்தவர்களென்று எண்ண வேண்டாம், அவர்கள் உயிருடன் உள்ளனர். இறைவனிடமிருந்து உணவும் அளிக்கப்படுகிறாரக்ள். அல்லாஹ் அவர்களுக்கு அளித்த பேருபகாரங்களை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தவர்களாக உள்ளனர்.” (அல்குர்ஆன் 3:169,170)
அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களென கூறாதீர்கள்! அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் இதனை நீங்கள் உணர இயலாது” (அல்குர்ஆன் 2:154)

Sunday, 20 November 2011

சகோ.சையத் அலி உஷார்! உஷார் !! உஷார்!!!

மின்னஞ்ஞல் கிடைத்த செய்தி. உண்மை இறைவன் நன்கு அறிந்தவன்.

குறிப்பு: சகோ.அப்துல் ரஹ்மான் 98657 84876. சகோ.சையத் அலி 97881 28285 

சகோ குறிப்பிட்ட இரண்டு எண்களிலும் பேசி உண்மை என்ன என்று அறிய முற்பட்டேன். இருவரும் நமது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. இறைவன் உண்மையை நன்கு அறிந்தவன்.

அஸ்ஸலாமு அலைக்கும்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசிக்கு (குற்றாலம்) போகும் வழியில் உள்ள புளியங்குடி என்ற ஊரில் பள்ளிவாசல் ஒன்று கட்டும் பணி கோஷ்டி சண்டையாலும், தான் என்ற அகம்பாவத்தினாலும் பாதியிலேயே நிறுத்தப் பட்டு இன்று கோர்ட் கேஸில் உள்ளது. 10 பேர் சேர்ந்து பள்ளி கட்ட ஆரம்பித்து பில்லர்கள் எழுப்பப் பட்டு, ஆள் உயரத்திற்கு சுவரும் எழுப்பப் பட்டு இடையில் ஏற்பட்ட கோஷ்டி பூசலினால் நிறுத்தப் பட்டு, இன்று ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளது.   இந்த ஊருக்கு சமாதானம் பேச நானே சென்ற வாரம் சென்று, சமரசம் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து அழுது கொண்டே திரும்பினேன்.   அல்லாஹ் போதுமானவன்.    நான் ஏன் இதற்கு சென்றேன்??    என்னுடைய மாமனார்  சவுதி அரேபியாவில் இருந்து அவருடைய சவுதி பார்ட்னரிடம் இருந்து 9லட்ச ரூபாய் நன்கொடையாக பெற்று, அதில் 3 லட்ச ரூபாய் இந்த ஊர் தவ்ஹீத் டிரஸ்ட்டுக்கு கொடுக்கப்   பட்டது.   இன்னும் 6 லட்ச ரூபாய் அமானிதமாக வைத்துக் கொண்டு பள்ளிவாசல் கட்டும் பணி ஆர்.டி.ஒ விசாரணை, கோர்ட் கேஸ் என்று அந்தரத்தில் நிறுத்தப் பட்டது.

இஸ்லாம் – இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அஸ்ஸலாமு அலைக்கும்


இவ்வுலகில் இருக்கக்கூடிய ஜீவராசிகளிலே மிக உண்ணதமான ஜீவராசியாகிய மனிதனின் தோற்றம் குறித்து,  மனிதன் என்பவன் தானாகத் தோன்றியவன் என்றும், குரங்கிலிருந்து தோன்றினான் என்றும் இவ்வுலகில் இருக்கின்ற பற்பல மதங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் அவர்களின் கற்பனைக் கெட்டியவாறு பலவாறு கூறிக் கொண்டிருக்கின்றது. அதுபோலவே மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை நோக்கத்தைப் பற்றியும் பலவாறாகக் கூறுகின்றது.


இன்னும் சில மதங்கள் மனிதன் என்பவன் கடவுளின் தலை, முகம், உடல் மற்றும் கால் போன்ற உறுப்புகளிலிருந்து தோன்றினான் என்று கூறி, கடவுளின் தலையிலிருந்து பிறந்தவன் உயர்ந்தவன் என்றும் காலிலிருந்து பிறந்தவன் தாழ்ந்தவன் என்று மனிதர்களிலே ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து வருகிறது.

Friday, 18 November 2011

தடுமாறும் த த ஜ கடையநல்லூர்

அன்புடன் சகோ சாஹுல் அவர்களே,


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  1. ஒரு கருத்திற்கு நீங்கள் கூறும் rdo கூறினாலும் அதனைமருப்பதுதான் சரியானது ஏன் என்றால் ஒரவேளை அது தர்கவதிக்கும் போகும் , உண்மையாளர்கள் என்றால் அந்த இடத்தில் அவர்களும் எதிர்த்து இருக்க வேண்டும் அதனை எதிர்க்காமல் இருந்த ம மு ஜ நோக்கம் என்ன ? அதனை மறுக்காமல் தான் செத்தாலும் பரவாவில்லை மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற எண்ணம்மா ? 



காயிதே மில்லத் திடல் தொழுகை நடத்துவது என்று பலர் விண்ணப்பித்த போது யாரைத் தேர்வு செய்வது என்பது போன்ற பிரச்சனைகளுக்கே சீட்டுக் குலுக்கிப் பார்க்கலாம் என RDO கேட்டார். ஒரு கருத்துக்கு என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். இன்னும் சாதிக் மொழியில் தான் செத்தாலும் ....... 
TNTJ தவிர வேறு யாரும் தொழுகை நடத்த கூடாது என்பதற்காக இஸ்லாத்தில் சீட்டுக்குலுக்கல் இல்லை என்று மறுத்தார்கள் என்பது உண்மை.நடந்த ஒரு செயலை மறுப்பது அல்லது மறைப்பது என்பது இவர்களிடம் நாம் அதிகமாக காண்கிறோம். இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் இறைவனது வழிமுறையை பின்பற்றுவதா?? மனோஇச்சையை பின்பற்றுவதா??
மேலுள்ள வரிகளை நன்கு படியுங்கள், தர்ஹாவதிக்கு போகும் என்ற மறைவான ஞானம் இவர்களுக்கு தெரியுமா?? அல்லது நேஷனல் சாஹுலுக்கு இறைவன் வஹி அறிவித்தானா?? இஸ்லாம் ஒன்றை தீர்வாக கூறும் போது அதனை நாம் ஏற்று நடக்க வேண்டுமா அல்லது மாறு செய்ய வேண்டுமா?  

Tuesday, 15 November 2011

பசி தீர்ப்போம் பயனடைவோம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதைப் போன்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மறுமை நாளின் விசாரணை பற்றிக் குறிப்பிடும் போது இந்தக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(
மறுமை நாளில்) அல்லாஹ், ''ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்பான். அதற்கு மனிதன், ''என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியான் இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால் அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அதை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்:முஸ்லிம்(5021)

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.
அவ்வாறு தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்குவதால் நம் பொருளாதாரம் ஒருப்போதும் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக திருமறை வசனத்தில் 2:261 கூறுகின்றான்.

Monday, 14 November 2011

TNTJ யின் கிளி சீட்டு (மங்காத்தா) விளையாட்டு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்புள்ள சகோதரர்களே ....

கடந்த வார உணர்வு வார இதழ் வெளியிட்ட செய்தியில் 31.08.2011 அன்று மஸ்ஜித் முபாரக் நடத்திய திடல் தொழுகையில் நூறு பேர்கள் கலந்து கொண்டதாக கிட்டத்தட்ட எழுபது நாட்கள் கழிந்த பின்பு செய்தி வெளியிட்டது. ஆனால் தொழுகை நடைபெற்ற காலத்தில் ஊடகசெய்தி
என்ன வந்தது என்பதை யாரும் புரட்டிப் பார்க்காமல் உணர்வற்று போனது “ உணர்வு ”


மஸ்ஜித் முபாரக் முன்பாக நடைபெற்ற திடல் தொழுகை பத்திரிக்கை செய்தி இணத்துள்ளேன்.
http://kdnlid.blogspot.com/2011/09/blog-post_02.html

மஸ்ஜித் முபாரக் முன்பாக நடைபெற்ற திடல் தொழுகை புகைப்படங்கள் இணைப்பில்

http://kdnlid.blogspot.com/2011/08/mmj_31.html

மஸ்ஜித் முபாரக் முன்பாக நடைபெற்ற நோன்பு பெருநாள் உரை வீடியோ இணைப்பில்

http://knid.in/index.php?option=com_content&view=article&id=131:-31082011&catid=46:2011-08-18-19-41-10&Itemid=92
  1. பெருநாள் திடல் தொழுகை நபி (ஸல்) அவ்ர்கள் காட்டியபடி இறைவனுக்கு தொழவேண்டுமா?? அல்லது கூட்டம் சேர்க்கவேண்டுமா??
  2. ரமழான் பெருநாள் உரை சகோ பி ஜெ வீடியோ இருந்தால் ஊடகம் பற்றிய விமர்சனம் சொன்னது உணர்வுக்கு பொருந்தும் அல்லது உணர்வு ஊடகமென்பதால் முஸ்லிம்களை அடகு வைக்க தயாராகிவிட்டதா???
  3. உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். குர் ஆன் 49:12  இந்த வசனங்கள் பற்றி இனியும் நீங்கள் சிந்திக்கவில்லை எனும் போது இறைவனிடம் நாம் இவர்களுக்கு நேர்வழி காட்ட பிரர்த்திப்போம்.
அடுத்தது கிளி சீட்டு (மங்காத்தா)


நடந்தது- நமது கேள்வியும் இந்த இடுக்கையில் பார்த்துக் கொள்ளவும்.




இஸ்லாமும் சீட்டுக்குலுக்கலும் 

615. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 





2674. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். 



யார் பெருநாள் தொழுகை நடத்துவது என்று நன்மையின்பால் கடையநல்லூரில் போட்டி நிலவியபோது அதில்   விவாதங்கள் நடைபெற்ற பின்பு RDO தனது விருப்பமாக சீட்டுக்குலுக்கி முடிவு செய்யலாம் என்றார்.சீட்டுக் குலுக்கல் ஸைபுல்லாஹ் சொல்லாதபோது அவர் மீது இட்டுக்கட்டியதுடன் இஸ்லாத்திற்கு முரணான காரியயம் போல் சித்தரிப்பதும் மடமை என்பது தெளிவு.


 وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَٰذَا حَلَالٌ وَهَٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوا عَلَى اللَّهِ الْكَذِبَ ۚ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.

இனிமேலாவது மங்காத்தா ஆட்டம் இல்லாமல் நன்மையின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் சிறந்து செயல்பட இறைவனை என்றும் பிரார்த்தித்தவனாய்....


எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285





ஹிதாயத்.





அல்ஹம்துலில்லாஹ் தவறை இனியாவது திருத்துமா உணர்வு, அல்லது மற்ற ஊடகம் போலவே மழுப்புமா???

எண்ணிக்கையை துல்லியமாக குறைத்து கூறுவதை தவிர்க்கலாம். இவர்கள் செய்தி எப்போதும் தெளிவில்லாமல் தான் வெளிடப்படுகிறதா???

இயக்கத்திற்கு முட்டுக் கொடுக்கும் சகோ சாதிக் சிந்திப்பாரா????

நவம்பர் 25 ம் தேதி உணர்வின் வாசகர் பகுதி 

Saturday, 12 November 2011

உங்களுக்கு முகமன் கூறப்பட்டால்

அஸ்ஸலாமு அலைக்கும் 

மாற்று மதத்தவர்கள் நமக்கு ஸலாம் கூறினால் பதில் ஸலாம் கூற பலர் தயங்குகின்றனர். ஏன் அவர்கள் தயங்குகின்றனர், பதில் ஸலாம் கூறுவதற்கு குர்ஆன், ஹதீஸில் ஏதும் தடை இருக்கிறதா என இனி பார்ப்போம்.




 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ 

خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ 


ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). (24:27)

சுவர்க்கத்தை நோக்கி.....

அஸ்ஸலாமு அலைக்கும்
இவ்வுலகில் வாழ்கின்ற நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.


  وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ


இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. 3:133

Thursday, 10 November 2011

இன்ஷா அல்லாஹ்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு..........


وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَٰلِكَ غَدًا

நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்!

  إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَىٰ أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَٰذَا رَشَدًا
அல்லாஹ் நாடினால் தவிர, (முஹம்மதே!) நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைவு கூறுவீராக! எனது இறைவன் இதை விட குறைவான நேரத்தில் இதற்கு வழி காட்டிவிடக் கூடும் என்று கூறுவீராக!’ (அல்குர்ஆன் 18:23,24)

குகை வாசிகளின் வரலாற்றுக்கிடையே மேற்கண்ட கட்டளையையும் இறைவன் பிறப்பிக்கிறான்.

நாளை செய்யப் போவதாகக் கூறும் எந்தக் காரியமானாலும் அல்லாஹ் நாடினால்என்பதையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று இவ்விரு வசனங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றன.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உள்ளன.

Saturday, 5 November 2011

பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?


அஸ்ஸலாமு அலைக்கும் 
 
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

அதற்கு முன் கீழே உள்ள தக...வல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

தடம் புரழும் டிஎன்டிஜே


அஸ்ஸலாமு அலைக்கும் 

04.11.2011 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி கோட்டாட்சித் தலைவர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுத் தரப்பில் தென்காசி வட்டாட்சியர், கூடுதல் வட்டாட்சியர் மற்றும் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டனர்.  மக்தூம் ஞானியார் தர்கா நிர்வாகி, டிஎன்டிஜே மாவட்ட பொருளாளர் நேசனல் சாகுல், செயலாளர் கல்பட்டான் செய்யது , கடையநல்லூர் டவுண் கிளை தலைவர் கலந்தரி அய்யூப்கான் மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்தினர்  பங்கெடுத்தனர். 
      07.11.2011 அன்று காலை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை கடையநல்லூர் காயிதே மில்லத் திட­ல் நடத்துவதற்கு மேற்சொன்ன மூன்று அமைப்பினரும் அனுமதி கோரினர். தத்தமது வாதங்களை காரசாரமாக எடுத்து வைத்தனர்.