அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்முடைய சமுதாயத்தை மேற்கோள் காட்டி தாம், தமது மக்களுக்கு நேர்வழி காட்டிய மாற்று மத நண்பர்கள்
கூட வேதனைபடும் அளவில் நமது செயல்பாடுகள் சில நேரங்களில்அமைந்து விடுகிறது.
எந்த ஊரில் இல்லை. எந்த சமுதாயத்தில் இல்லை.
தன்னடக்கம்,
ஹிஜாப் முறைகளை பேணும் ஒரு சமுதாயத்தில் ஓடிப்போகும் சம்பவம்
நடந்தால் அது பெரிய விசயமாகிவிடுகிறது.
எதற்கு இந்த அவசரம்? இந்தியாவிற்கு தங்க பதக்கம்
வாங்கவா?
விபரமில்லாமல்,
தெளிவான எதிர்கால சிந்தனை இல்லாமல் சுயமாக, ரகசியமாக
முடிவெடுப்பது நல்ல வாழ்வை தந்திருக்கிறதா?
எதிர்பார்த்து காத்திருந்த மணமகனை அவசரமாக ஏன் தொலைத்து விடுகிறீர்கள்?அங்கிங்கெனாதபடி
எங்கும் எதிரொலிக்கிறது.யாருடனாவது ஓடிப்போகும் செய்திகள்.
நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது இந்த பெருந்தீமை!
எவ்வளவு துணிச்சலாய்அரங்கேறுகிறது இக்கொடுமைகள்?
பெற்றெடுத்து,
அரும்பாடுபட்டு ஆளாக்கிய பெற்றோரை கூனி குறுக வைத்து
விட்டு,உற்றார் உறவு துறந்து,ஊர் துறந்து,உயிரினும் மேலான மார்க்கத்தை தூக்கி எறிந்து
விட்டு,நேற்று வந்த எவனோ ஒருவருடன் ஓடிப்போகும் நெஞ்சழுத்தம் எங்கிருந்து வந்தது?
கண்ணியமிக்க குடும்பத்தில் பிறந்து, பழக்க வழக்கங்களில், படிக்கும் இடங்களின் மூலம் பிற கலாச்சாரத்தை
பின்பற்றி ஓடிப்போய் சீரழிந்து நிற்பதை காதலென்றும் இல்லறமென்றும்
சொல்ல முடியுமா?
நமது சமுதாயதிற்கு என்று கண்ணியம், அழகிய வழிகாட்டுதல் இருக்கிறது.
அவசரத்தால் சில பெண்கள் மறந்து விடுகிறார்கள்.
நம் சமுதாயத்தின் கண்களாக இருக்கின்ற ஒவ்வொரு பெண்ணிற்கும் கடமை இருக்கிறது.
பின்தொடரும் உங்களுக்கு பின் வரும் சமுதாயதிற்கு நல்வழி காட்டுவதை மறந்து,
பொறுமையின்றி தவறான வாழ்வை தேர்ந்தெடுப்பது பெரும் பாவமாகும்.
இதை உணர்ந்து நடக்கும் நல்ல பெண்மணிகளாய் வாழ பேரிறைவன் நல் வழி
காட்டுவானாக!
Visva Khalid.
சகோ சாஹுல் முகநூல் குறிப்பிலிருந்து
நன்றி தங்கள் தளத்தில் பதிவிட்டதர்க்கு,
ReplyDeleteஇதன் மூலம் பல சகோதரர்களை இந்த பதிவு
சென்றடையும்.
பெண்கள் நல்ல பெண்மணிகளாய் வாழ பேரிறைவன் நல்வழி காட்டுவானாக!