கேள்வி : அல்லாஹ்வை நாம் எவ்விதம் வணங்க வேண்டும்?
பதில் : அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நமக்குக் கற்றுக் கொடுத்திருப்பது போன்றே அவனை நாம் வணங்க வேண்டும்!
(ஏகத்துவ) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; மேலும்( அவனது) தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். வேறு வழிகளை நீங்கள் கையாண்டு உங்கள் செயல்களை நீங்கள் பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 47 : 33) என்று “முஹம்மது” எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் நமக்குப் கட்டளையிட்டிருக்கிறான்.
“நமது உத்தரவின்றி எவன் ஒரு செயலைச் செய்கிறார்களோ அது தள்ளப்படக்கூடியதே!” (அதாவது ஏற்கப்படக் கூடியதன்று) என்று பெருமானாரும் எச்சரித்திருக்கின்றார்கள்.
கேள்வி : அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சியும், அவனது சன்மானத்தை எதிர்பார்த்தும் அல்லாஹ்வை நாம் வணங்கலாமா?
பதில் : ஆம்! அப்படித்தான் அவனை நாம் வணங்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தம் இறைவனை (தண்டையின்) அஞ்சியும், உள் அச்சத்துடன் (சன்மானங்களின்) எதிர்பார்ப்புடனும் பிரார்த்திப்பார்கள். (அல்குர்ஆன் 32:16)
என்று ஏகத்துவ நம்பிக்கையாளர்களைத் தனது திருமறையில் “ஸஜ்தா” (சிரம் பணிதல்) என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் வர்ணிக்கிறான்.
“நான் அல்லாஹ்விடம் சுவனத்தை வேண்டுகிறேன். நரகத்தை விட்டும் அவனிடம் காவல் தேடுகிறேன். (நூல் : அபூதாவூது) என்று நபி(ஸல்) அவர்களும் பிரார்த்தித்திருக்கின்றார்கள்.
கேள்வி : வணக்கத்தில் சிறந்த முறை எது?
பதில் : வணக்கத்தில் சிறந்த முறை, அவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் வணங்குவதாகும்.
(அவனைத் தனித்து வணங்க) நீர் நிற்கும்போது சிரம் பணிவோருடன் நீர் இயங்கும் போது உம்மை அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.” (குர்ஆன் 26 : 21)
என்று “அஷ்ஷுஅரா” (கவிஞர்கள்) என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“(வணக்கத்தில்) சிறந்த முறை அல்லாஹ்வை நீர் பார்க்கவில்லை என்றாலும் நிச்சயம் அவன் உம்மைப் பாாத்துக் கொண்டிருக்கிறான் (என்ற எண்ணத்திலாவது அவனை நீர் வணங்க வேண்டும்) என அண்ணலாரம் விளக்கமளித்திருக்கிறார்கள்.
நன்றி : மவ்லவி P.S. அலாவூதீன்
No comments:
Post a Comment