அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்பான சகோதர சகோதரிகளே..
இப்ராஹிம் (அலை) நபியவர்கள் அல்லாஹ்வைப் பற்றி விவரிக்கும் போது
அவன் எத்தகையவன் எனில் ...?
அன்பான சகோதர சகோதரிகளே..
இப்ராஹிம் (அலை) நபியவர்கள் அல்லாஹ்வைப் பற்றி விவரிக்கும் போது
அவன் எத்தகையவன் எனில் ...?
“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
“அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
“மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். ( ஸூரத்துஷ்ஷுஃரா : 78 - 82)
எல்லாவற்றிர்க்கும் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருந்தார்கள்; இதில் நோயுற்றால் ..?? என்ற வினாவிற்கு அல்லாஹ் தான் குணமளிப்பவன் என்ற உறுதியான பதிலை தருகிறார்கள்.
ஒருவருக்கு நோய் வந்துவிட்டால் அவர் தனது இறைவனிடத்தில் கேட்கட்டும். எந்த ஒரு நிலையிலும் எங்கிருந்தாலும் முற்றிலும் இறைவனைச் சார்ந்திருப்பவராக இருந்தால் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் பிரர்த்தனை போல அல்லாஹ்வை மட்டுமே வேண்டுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருக்கும் ஒரு மனிதர் தன் இறைவனிடத்தில் கேட்க வேண்டிய பிரார்த்தனையை கற்றுத்தந்தார்கள்
அல்லஹூம்ம ரப்பன்னாஸி அத்ஹிபல் பஃஸி இஷ்ஃபிஹி அன்தஷ்ஷாஃபீ லாஷாஃபீய இல்லா அன்த ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா.
எங்கள் இறைவனே ! மனிதர்களின் எஜமானனே, துன்பத்தை நீக்குபவனே
நீயே குணப்படுத்து, நீயே குணப்படுத்துபவன். உன்னைத்தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. அறவே மீதம் வைக்காமல் முழுமையாக குணப்படுத்து.
'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்'
மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை ( புஹாரி 5675) அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி)
ஒரு நபித்தோழர் நோயுற்றிருந்ததை அறிந்த நபி(ஸல்) அவர்கள் அவரைக் காணச் சென்றார்கள். அவர் மிகவும் நோயுற்றிருந்தார். ஒரு பறவை நோயுற்றிருந்தால் எவ்வாறு துவண்டிருக்குமோ அவ்வாறிருந்தார். அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள் நலன் விசரித்துவிட்டு நோயாளியின் துஆ அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுமே! நீங்கள் அல்லாஹ்விடத்தில் எதை கேட்டீர்கள் ; அதற்கு நபித்தோழர் கூறினார் ” என் பாவங்களுக்குரிய தண்டனை இருக்குமாயின் இந்த உலகிலேயே தந்துவிடு மறுமையில் எந்த தண்டனையும் இருக்க வேண்டாம் எனக் கேட்டதாக கூறினார். அவ்வாறு கேட்கக் கூடாது என்றார்கள். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் 2 : 200
فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ
மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
இறைவன் தன் திருமறையில் தொடர்கிறான் ..2 :201,202 இந்த துஆவை நபி(ஸல்) அவர்கள் கேட்கச் சொன்னார்கள்;
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
أُولَٰئِكَ لَهُمْ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا ۚ وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ
இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
அண்ணல் நபியர்களின் அதிகமான பிரார்த்தனையாக இது இருந்து என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறைவனை மட்டுமே வணங்கி வழிபடக்கூடிய ,இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திதவனாக..
விஸ்வா ஹாலித்.
No comments:
Post a Comment