Friday, 10 May 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

த டை யு ம்
த டை நீ க் க மு ம்

குறைஷியர் தம் கடவுளரைப் பகிரங்கமாகக் கஃபாவில் வழிபாடு செய்து வர, முஸ்லிம்கள் இறைவனை இரகசியமாகத் தொழுது வரவேண்டியிருந்தமையை உமரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே உமர் தானே கஃபாவின் முன் தொழுது வந்ததோடு ஏனைய முஸ்லிம்களையும் தன்னோடு சேர்ந்து தொழும்படி கூறி வந்தார்.

சில சந்தர்ப்பங்களில் ஹம்ஸாவும் உமரும் விசுவாசிகள் பலரை அழைத்துக் கொண்டு கூட்டுத் தொழுகைகள் நடாத்தவெனக் கஃபாவுக்குச் செல்வார்கள். அவ்வாறான நிலைமைகளில் குறைஷித் தலைவர்கள் அவர்களுக்கு இடமளித்து ஒதுங்கிக் கொள்வர். இந்த நடவடிக்கைகள் தம் கண் முன்னால் நிகழ்வதைக் காண்பது கெளரவக் குறைச்சலாயிருந்தது ஒரு புறமிருக்க, அவற்றை தடை செய்ய முனைந்தால் அதன் விளைவான உமரின் எதிர் நடவடிக்கைகள் மிகக் கொடூரமானவையாக இருக்கும் என்பதனையும் அவர்கள் தெரிந்திருந்தனர். எவ்வாறாயினும் இந்த இளைஞர், தம்மை தோற்கடித்து விட்டதாகக் கருதிவிடக் கூடாது என்பதனை அவருக்கு உணர்த்த, குறைஷியர் புதியதொரு திட்டமொன்றனைத் தீட்டலாயினர்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

உ ம ர்

தமது முயற்சியில் தோல்வியடைந்தவர்களாகத் திரும்பி வந்த தூதுவர்கள் நஜ்ஜாஷியின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக முஸ்லிம்கள் அபிஸீனியாவில் நிலைப்பெற்றிருப்பதனைக் கூறியதும், குறைஷியர் சினமும் கலக்கமுமுற்றனர். இது, விசுவாசிகளை அடக்கியொடுக்குவதிலும் துயருறுத்துவதிலும் அவர்களைத் தீவிரமாக இயங்க மேலும் தூண்டுதலளிப்பதாயது. இவை பெரிதும் அபூஜஹ்லின் மேற்பார்வையிலேயே அமுல் நடாத்தப்பட்டன. அபூஜஹ்லின் ஆணைகளைச் சரிவர நிறைவேற்றி வைப்பதில் அவரது மருமகன் உமர் சிறப்பிடம் பெற்றிருந்தார்.

அப்போது சுமார் இருபத்தாறு வயது நிரம்பிய இளைஞராக இருந்த உமர், தலைக்கனம் மிக்க, இலகுவில் விட்டுக்கொடுக்காத பிடிவாத குணமும், நடவடிக்கைகளில் வன்மையும் கொண்டவராக விளங்கினார். ஆனாலும் தன் மாமனாரைப் போலன்றி, அவர் பக்தியுணர்வு மிக்கவராகவும் காணப்பட்டார். இதில்தான் புதிய மதத்துக்கு அவர் காட்டி வந்த எதிர்ப்பின் அடிப்படையே தங்கியிருந்தது. கஃபாவை அதனோடு பிரிக்க முடியாத வகையில் இணைந்திருந்த ஆண் பெண் கடவுளரையும் வணங்குவதற்கு கத்தாப், தன் மகன் உமரைச் சிறு வயதிலிருந்தே பயிற்றிருந்தார். உமரைப் பொறுத்தமட்டில் இவையனைத்தும் புனிதமானதோர் ஒருமைப் பாட்டைக் கொண்டவனாயிருந்தன. எனவே இவை குறித்துக் கேள்விகள் எழுப்புவதோ அவற்றில் தலையீடு செய்வதோ புனிதத்துவத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் களங்கம் கற்பிப்பதாய் முடியும். இதுவரைக் காலமும் குறைஷியர் அனைவரும் தனியொரு குலத்தவராகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போதோ - மக்கா இரு மதங்களின் நகரமாக, இரு சமுகத்தவரின் நகரமாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதற்கு மூலமாயமைந்த மனிதனை அகற்றி விட்டால் அனைத்தும் பழைய நிலைமைக்குத் திரும்பி விடும். வேறு எந்தவிதமான மாற்றும் இதற்கில்லை. என்றாலும் அதற்கும் ஒரு வேளை வரவேண்டும்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


அ பி ஸீ னி யா ( தொடர்… )

அரசவை மொழி பெயர்ப்பாளார்கள் அனைத்தையும் மொழி பெயர்த்தனர். அவர்களது நபிகளார் இறைவனிடமிருந்து கொண்டு வந்த செய்திகள் ஏதும் உளவா என வினவினார் நஜ்ஜாஷி. ஜஅபர் ஆம் என, “ எனக்கு அவற்றைக் கூறுவீராக ” என்றார் மன்னர். அப்போது, தாம் மக்காவிலிருந்தும் வெளியேறி வருவதற்குச் சிறிது முன்னர் அருளப்பட்ட ஸூரா மர்யமிலிருந்து சில வசனங்களை ஓதலானார் ஜஅபர்: 




இவ்வேதத்தில் ( ஈஸா நபியின் தாயாராகிய ) மர்யமைப் பற்றியும் ( சிறிது ) கூறும். அவர் தன் குடும்மத்தினரை விட்டு விலகி, கிழக்குத் திசையிலுள்ள ( தன் ) அறைக்குச் சென்று ( குளிப்பதற்காகத் ) தன் ஜனங்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் ( ஜிப்ரீல் எனும்) நம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் சரியான ஒரு மனிதருடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார். ( மர்யம் அவரைக் கண்டதும் ) “ நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளுமாறு ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் நன்னடத்தையுடையவராக இருந்தால்… ( இங்கிருந்து அப்புறப்பட்டு விடும் ) ” என்றார். அதற்கவர், “ பரிசுத்தமான ஒரு மகனை உமக்களி (க்கப் படும் என்பதை உமக்கு அறிவி ) ப்பதற்காக நான் உம் இறைவனால் அனுப்பப்பெற்ற ( மலக்காகிய ) ஒரு தூதன்தான்” என்றார். அதற்கவர், “ எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே! நான் கெட்ட நடத்தையுள்ளவளுமல்லவே! ” என்று கூறினார். அதற்கவர், ‘அவ்வாறே ( நடைபெறும் ) - அது எனக்கு எளிது ; அவரை மனிதர்களுக்கு ஒரு திருஷ்டாந்தமாகவும் நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம். இது முடிவாகக் கற்பனை செய்யப்பட்டு விட்ட ஒரு விஷயம் ’ என்று உமதிறைவனே கூறுகின்றான்” என்றார்.அல் குர்ஆன் : 19:16-21

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

அபிஸீனியா

புலம் பெயர்ந்து சென்றோர் அபிஸீனியாவில் நன்கு வரவேற்கப்பட்டனர். பூரண வழிபாட்டுச் சுதந்திரம் அவர்களுக்குக் கிட்டியது. குழந்தைகளைத் தவிர்த்து அவர்கள் சுமார் எண்பது பேர் வரை இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் சென்றவர்களல்லர். மிக இரகசியமாகத் தமது பிரயாணத்தைத் திட்டமிட்டுப் பிறரறியாத வகையில் சிறுசிறு குழுவினராக அவர்கள் சென்றிருந்தனர். அவர்களது குடும்பத்தினர் இது குறித்து அறிந்திருந்தால் அவர்களைத் தடை செய்திருக்கலாம். என்றாலும் இப்புலப்பெயர்வு முற்றிலும் எதிர்பாராத வகையிலேயே நிகழ்ந்தது.


சென்றடைய வேண்டிய இடத்தை விசுவாசிகள் சேர்ந்து கொள்ளும் வரை என்ன நடந்தது என்பதை எவரும் அறிந்திலர். தமது கட்டுப்பாடுகட்கு அப்பால் விசுவாசிகள் பிறிதோரிடத்தில் சென்று குடியேறுவதையும் அங்கு அமைதியான முறையில் வாழ்வதனையும் எவ்வாறேனும் தடுத்து நிறுத்த வேண்டுமென குறைஷித் தலைவர்கள் கங்கணம் கட்டினர். மேலும் விசுவாசிகள் அபிஸீனியாவை சென்றடைந்து, சிறிது காலத்திலேயே அவர்கள் பன்மடங்காகப் பெருகித் தமக்குப் பெரியதோர் அச்சுறுத்தலாக அமைந்து விடலாம் எனவும் அவர்கள் அஞ்சினர். தாமதமேதுமின்றிச் சில திட்டங்கள் தீட்டப்பட்டன. அபிஸீனியர்கள் பெறுமதி வாய்ந்தன எனக்கருதி வந்த பொருட்கள் பல சேகரிக்கப்பட்டன. தோல் பொருட்கள் இவற்றுள் அதிகமாயிருந்தன. நஜ்ஜாஷி மன்னனது பிரதானிகள் அனைவரையும் கவர்ந்து தம் வசமாக்கிக் கொள்ளுமளவு பொருட்கள் சேகரமாயின. இவை தவிர நஜ்ஜாஷி மன்னனுக்கெனத் தனியான அன்பளிப்புகளும் தயாரிக்கப்பட்டன. பின்னர் தீவிரமான ஆலோசனைகளின் பின்னர் மிகக் கவனமாகக் குறைஷியர் இரண்டு தூதுவர்களைத் தெரிந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் ஸஹ்ம் கோத்திரத்தைச் சேர்ந்த அம்ர்-இப்ன்-அல்ஆஸ். அவர்கள் செய்ய வேண்டுவன என்ன என்பதை நன்கு விளக்கினர் குறைஷித் தலைவர்கள். நஜ்ஜாஷின் பிரதானிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து அன்பளிப்புகளைக் கொடுக்க வேண்டும். பின்னர்,

Wednesday, 8 May 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

மூன்று கேள்விகள் ( தொடர்… )

ஜுமாஹ் கோத்திரத் தலைவர் உமையாவிடம் பிலால் என்ற பெயருடைய ஓர் ஆபிரிக்க அடிமை இருந்தார். ஆழ்ந்த இறை விசுவாசம் கொண்டவர் அவர். உமையா அவரை உச்சி வெயிலின் போது வெளியே கொண்டு வந்து, நிலத்தில் படுக்க வைத்து, அவர் அசைய முடியாதவாறு மார்பில் பெரியதொரு பாறாங்கல்லை வைத்து விடுவார். ஒன்றில் பிலால் அவ்வாறே இறந்து போக வேண்டும். அல்லது முஹம்மதைப் பின்பற்றுவதைக் கைவிட்டு, அல்-லாத்தையும் அல்-உஸ்ஸாவையும் வணங்க வேண்டும். 


கொடூரமான இத்தகு துயரத்தின் போதும் கூட பிலால், ‘ஒருவன், ஒருவன்’ என்றே கூறி வந்தார். அவரது பரிதாபகரமான நிலையை அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த முதியவரான வரகாஹ் அவதானித்து, 

Monday, 6 May 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

மூன்று கேள்விகள் ( தொடர்… )


இரண்டாம் கேள்வியைப் பொறுத்தளவில், ‘துல்கர்னைன்’ - இரண்டு கொம்புகளை உடையவர் - என வழங்கப்பட்ட அப்பெரும் பிரயாணி, தூரகிழக்கு, தூரமேற்கு நோக்கிய பிரதேசங்களுக்கான பிரயாணங்கள் மேற்கொண்டமையை இறை வசனங்கள் விவரிக்கலாயின. பின்னர், கேட்கப்பட்ட கேள்விக்கும் மேலாக, அவர் மேற்கொண்ட மூன்றாவதொரு பிரயாணம் குறித்தும் அவை பேசின.


இரண்டு மலைகளுக்கிடையிலான ஒரு பிரதேசத்துக்கு அவர் சென்றபோது, அங்கிருந்த மக்கள் தமது நிலங்களை நாசம் செய்து வந்த யாஜுஜ், மாஜுஜ்ஜுடன் மற்றுமொரு ஜின்னிடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு தடையை ஏற்படுத்தும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். அத்தீய சக்திகளை ஓர் இடத்தில் கட்டுப்படுத்தி இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதொரு நாள் வரைக்கும் அதிலிருந்து அவர்கள் வெளியேறா வண்ணம் அடக்கி வைக்க இறைவன் அவருக்குச் சக்தியைக் கொடுத்தான்.

Thursday, 2 May 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

மூன்று கேள்விகள்


குறைஷியர் தங்களது ஒவ்வொரு கூட்டத்தின்போதும், தம்மைச் சூழ்ந்து கொண்டுள்ள பெரும் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தத் தவறவில்லை. யூத ரப்பிகளைக் கலந்தாலோசிக்கவென யத்ரிபுக்கு ஒரு தூதுக் குழுவினை அனுப்பி வைப்பதென முடிவாயிற்று. தூதுவர் இருவரிடமும் குறைஷித் தலைவர்கள் கூறினார்கள் :

“ முஹம்மத் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறுங்கள். அவர் கூறுவனவற்றையும் கூறுங்கள். அவர்கள் முன்னைய வேத நூல்களையும் இறைதூதர்கள் பற்றிய ஞானத்தையும் கொண்டவர்கள் : அந்த அறிவு நம்மிடம் இல்லை ”. 

ரப்பிகள் தமது ஆலோசனைகளை அனுப்பி வைத்தனர் :

“ நாம் கூறும் மூன்று விடயங்கள் குறித்து அவரை வினவுங்கள். அவர் பதிலளிப்பாராயின் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதராவார். பதிலளிக்காதுவிடின் பொய்களை சிருஷ்டித்து கூறுபவராயிருப்பார். பழங்காலத்தில் தமது மக்களை விட்டும் பிரிந்து சென்ற இளைஞர்கள் பற்றியும், அவர்களது அப்போதைய நிலைமை பற்றியும் வினவுங்கள் ; அவர்களது சரிதை அற்புதமானதொன்றாகும். உலகின் கிழக்கு மேற்கு திசைகளை எட்டிய தூரதேச பிரயாணியின் நன்மாராயங்கள் பற்றிக் கேளுங்கள். அத்தோடு அவரிடம் ஆன்மா பற்றிக் கேளுங்கள். இவற்றுக்கு அவர் பதிலளிப்பாராயின் அவரைப் பின்பற்றுங்கள் ; அவர் ஓர் இறைதூதராவார். ”