மூன்று கேள்விகள் ( தொடர்… )
இரண்டாம் கேள்வியைப் பொறுத்தளவில், ‘துல்கர்னைன்’ - இரண்டு கொம்புகளை உடையவர் - என வழங்கப்பட்ட அப்பெரும் பிரயாணி, தூரகிழக்கு, தூரமேற்கு நோக்கிய பிரதேசங்களுக்கான பிரயாணங்கள் மேற்கொண்டமையை இறை வசனங்கள் விவரிக்கலாயின. பின்னர், கேட்கப்பட்ட கேள்விக்கும் மேலாக, அவர் மேற்கொண்ட மூன்றாவதொரு பிரயாணம் குறித்தும் அவை பேசின.

இரண்டு மலைகளுக்கிடையிலான ஒரு பிரதேசத்துக்கு அவர் சென்றபோது, அங்கிருந்த மக்கள் தமது நிலங்களை நாசம் செய்து வந்த யாஜுஜ், மாஜுஜ்ஜுடன் மற்றுமொரு ஜின்னிடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு தடையை ஏற்படுத்தும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். அத்தீய சக்திகளை ஓர் இடத்தில் கட்டுப்படுத்தி இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதொரு நாள் வரைக்கும் அதிலிருந்து அவர்கள் வெளியேறா வண்ணம் அடக்கி வைக்க இறைவன் அவருக்குச் சக்தியைக் கொடுத்தான்.
18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;
18:94. அவர்கள் “ துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
18:95. அதற்கவர்: “ என் இறைவன் எனக்கு எதில் ( வசதிகள் ) அளித்திருக்கிறானோ அது ( நீங்கள் கொடுக்க இருப்பதைவிட ) மேலானது; ஆகவே, ( உங்கள் உடல் ) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன் ” என்றுகூறினார்.
18:96. “ நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள் ” ( என்றார் ). பிறகு அவை இரு மலைகளின் ( இடையே நிரம்பி ) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் ( பின்னர் “ உருக்கிய ) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன் ” (என்றார்).
18:97. எனவே, ( யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் ) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
18:98. “ இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி ( முற்றிலும் ) உண்மையானதே ” என்று கூறினார்.
18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் ( கடல் ) அலைகள் ( மோதுவதைப் போல் ) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் ( எக்காளம் ) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.
குர்ஆன் : 18 அஸ்ஹாபுல் கஹ்ஃபு - குகை வாசிகள் : 18 : 93-99
நபிகளாரின் வாக்கின்படி விடுவிக்கப்படும் அந்நாளில் அவர்கள் உலகின் மீது பெருங்கொடுமைகள் இழைப்பர். இறுதி நேரத்தின் சிறிது முன்னரே அவர்கள் முறியடிக்கப்படுவர். இறுதி நாள் நெருங்கிவிட்டதென்பதற்கு அது ஓர் அடையாளமாகவுமிருக்கும்.
மூன்றாவது கேள்வியைப் பொறுத்தமட்டில், ஆன்மாவின் நிலைமை, மனிதனது சிந்தையையும் விஞ்சியதாக அமைந்துள்ளமையை இறைவசனங்கள் உறுதிப்படுத்தின. மனித சிந்தனை அதனை விளங்கிக்கொள்ளும் சக்தி படைத்ததல்ல :
( நபியே! ) ரூஹுவைப் பற்றி ( யூதர்களாகிய ) அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். அதற்கு நீர், ‘அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. ( அதைப்பற்றி ) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை ( ஆதலால் அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது ) ' என்று கூறுவீராக.
குர்ஆன் : 17 : 85
தமது கேள்விகளுக்கு முஹம்மத் என்ன பதில் கொடுத்துள்ளார் என அறிந்து கொள்வதில் யூதர்கள் தீவிர ஆர்வம் கொண்டிருந்தனர். அறிவு அல்லது ஞானம் சம்பந்தப்பட்ட இறைவசனங்கள் தம்மைக் குறித்ததா? அல்லது நபிகளாரின் மக்களைக் குறித்ததா? எனத் தமக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே நபிகளாரை வினவினர் யூதர்கள். “ இரு சாராருக்குமே ” என்றனர் நபிகளார். இதனை ஏற்க அவர்கள் மறுத்தனர். எல்லா விடயங்களையும் பற்றிய அறிவும் ஞானமும் படைத்தவர்கள் தாம் என்றும், ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது எனக் குர்ஆனே சாட்சி பகரும்
- ( நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது; அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).
குர்ஆன் : 6 : 154 ) - தெளறாத் வேதத்தைத் தாம் கற்றவர்கள் என்றும் அவர்கள் கூறி நின்றனர். நபிகளார் கூறினார்கள் :
“ இறைவனது ஞானத்தின் முன் அவை அனைத்தும் மிகச் சிறியவையே. எனினும் அவற்றையாவது சரிவரப் பின்பற்றி ஒழுகுவீர்களாயின் உங்களுக்குத் தேவையான அனைத்தும் அதிலேயே இருக்கும் ”. - இ.இ. 198
இதைத் தொடர்ந்து, இறைவனது ஞானத்தின் சின்னஞ்சிறியதோர் அங்கத்தையே குறிப்பதாக அமைந்த இறைவாசகங்கள் பற்றிய இறைவசனங்கள் அருளப்பட்டன :
“ பூமியிலுள்ள மரங்கள் ( செடிகள் ) யாவும் எழுதுகோல்களாகவும் சமுத்திர( ஜலம் மையாகவு )ம் இருந்து ( அது தீர்ந்து ) பின்னும் ஏழு சமுத்திரங்கள் ( மையாக ) இருந்து ( எழுத ) உதவியபோதிலும், அல்லாஹ்வுடைய வசனங்கள் நிச்சயமாக ( எழுதி ) முடிவு
பெறா. ” - குர்ஆன் : 31 : 27
ரப்பிகளின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவசியமேதும் குறைஷித் தலைவர்களுக்கு இருக்கவில்லை. தமது வினாக்களுக்குத் தாம் எதிர்பார்த்ததை விடக் கூடிய விளக்கங்கள் கிட்டியும் கூட நபிகளாரை ஏற்றுக் கொள்ள ரப்பிகளும் தயாராக இல்லை. எனினும் இப்பதில்கள் மேலும் பலரை இஸ்லாத்தின் பாலாக்க உதவின.
விசுவாசிகளின் தொகை பெருகப் பெருக அவிசுவாசிகள், தமது சமுகமும் வாழ்க்கை முறையும் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளதெனக் கொண்டனர். எனவே புதிதாக மதம் மாறியோரைத் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக ஒழுங்கு படுத்தப்பட்டன. பாதுகாப்பளிக்கப்படாத விசுவாசிகள் கடுந் துயரங்களுக்காளாயினர். ஒவ்வொரு கோத்திரமும் தனது சொந்த முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது.
முஸ்லிம்கள் சிறையிலடைக்கப்பட்டனர் ; தாக்கப்பட்டனர் ; பசியாலும் தாகத்தாலும் இளைக்கச் செய்யப்பட்டனர் ; வெய்யிலின் காரணமாக நன்கு சூடேறிய மக்கத்து மணற்றரையில் உச்சி வெய்யிலின் போது படுக்கச் செய்யப்பட்டு, இஸ்லாத்தைக் கைவிடும்படி வற்புறுத்தப்பட்டனர்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,

No comments:
Post a Comment