த டை யு ம்
த டை நீ க் க மு ம்
குறைஷியர் தம் கடவுளரைப் பகிரங்கமாகக் கஃபாவில் வழிபாடு செய்து வர, முஸ்லிம்கள் இறைவனை இரகசியமாகத் தொழுது வரவேண்டியிருந்தமையை உமரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே உமர் தானே கஃபாவின் முன் தொழுது வந்ததோடு ஏனைய முஸ்லிம்களையும் தன்னோடு சேர்ந்து தொழும்படி கூறி வந்தார்.

சில சந்தர்ப்பங்களில் ஹம்ஸாவும் உமரும் விசுவாசிகள் பலரை அழைத்துக் கொண்டு கூட்டுத் தொழுகைகள் நடாத்தவெனக் கஃபாவுக்குச் செல்வார்கள். அவ்வாறான நிலைமைகளில் குறைஷித் தலைவர்கள் அவர்களுக்கு இடமளித்து ஒதுங்கிக் கொள்வர். இந்த நடவடிக்கைகள் தம் கண் முன்னால் நிகழ்வதைக் காண்பது கெளரவக் குறைச்சலாயிருந்தது ஒரு புறமிருக்க, அவற்றை தடை செய்ய முனைந்தால் அதன் விளைவான உமரின் எதிர் நடவடிக்கைகள் மிகக் கொடூரமானவையாக இருக்கும் என்பதனையும் அவர்கள் தெரிந்திருந்தனர். எவ்வாறாயினும் இந்த இளைஞர், தம்மை தோற்கடித்து விட்டதாகக் கருதிவிடக் கூடாது என்பதனை அவருக்கு உணர்த்த, குறைஷியர் புதியதொரு திட்டமொன்றனைத் தீட்டலாயினர்.
அபூஜஹ்லின் தீவிரமான வற்புறுத்தலின் பேரில், முழு ஹாஷிம் கோத்திரத்தார் மீதும் தடையொன்றனை ஏற்படுத்தி விடுவது எனத் தீர்மானம் செய்யப்பட்டது. நபிகளாரை ஓர் இறைதூதர் என தாம் ஏற்றாலும், ஏற்காதுவிடினும் தம் உறவினரான அன்னாருக்குப் பாதுகாப்பு வழங்க ஹாஷிம் கோத்திரத்தார் அனைவருமே முன் வந்திருந்தனர். இதில் பின்வாங்கியவர் அபூலஹப் மாத்திரமே.
குறைஷித் தலைவர்கள் ஒரு பத்திரத்தைத் தயாரித்தனர். அதன்படி ஹாஷிம்களின் பெண்களெவரையும் எவரும் மணஞ்செய்ய மாட்டார்கள் ; தமது பெண்களில் எவரையும் ஹாஷிம்களுக்குக் கொடுக்கமாட்டார்கள். அவர்களுக்கு எதனையும் விற்கவும் முடியாது ; அவர்களிடமிருந்து வாங்கவும் கூடாது. இது ஹாஷிம்கள் முஹம்மதை வெளியேற்றி விடும் வரை. அல்லது முஹம்மத் தன் இறைதூதுவப் பிரகடனத்தைக் கைவிடும் வரை தொடரும்.
நாற்பது பேருக்கும் குறையாத குறைஷித் தலைவர்கள் இத்தீர்மானத்துக்குத் தமது முத்திரையை இட்டனர். அனைவருமே இதற்குச் சமமான உடந்தை காட்டியவர்களல்ல ; சிலர் வற்புறுத்தல்களின் காரணமாக இணக்கம் காட்டி இருந்தனர். மறுப்புத் தெரிவித்ததொரு கோத்திரத்தாரும் இருந்தனர். தமது ஹாஷிமிய சகோதரர்களை கைவிட மறுத்து நின்ற அவர்கள் முத்தலிப் கோத்திரத்தார். எனவே அவர்களும் இத்தடைக்கு உள்ளாக்கப்பட்டனர். மிக்க கெளரவத்துடன் பத்திரம் கஃபாவினுள் வைக்கப்பட்டது.
அபூதாலிபும் பனீஹாஷிம்களில் பெரும்பாலோரும் மக்காவின் குழிவுப் பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்தனர். எனவே ஏனைய பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்த ஹாஷிமிகள், பரஸ்பர பாதுகாப்பினைக் கருதி அபூதாலிபின் இல்லத்தைச் சூழவுள்ள இடங்களில் குடியேறிக் கொண்டனர். நபிகளாரும் கதீஜாவும் தம் குடும்ப அங்கத்தவர்களுடன் இவர்களைச் சேர்ந்து கொண்டனர். அபூதாலிபின் இல்லத்துக்கு அருகாமையில் வாழ்ந்து வந்த அபூலஹபும் அவர் மனைவியும் வேறொரு பிரதேசத்தில் தமக்குச் சொந்தமாயிருந்த ஒரு வீட்டுக்குச்
சுயமாகவே இடம் மாறிச் சென்றனர். இதன் மூலம் முழுக் குறைஷிக் குலத்தவருடனுமான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என அவர்கள் கருதினர்.
தடையுத்தரவு எப்போதுமே தீவிரமாக அமுல் நடத்தப்பட வில்லை. அத்தோடு அதில் காணப்பட்ட சில குறைபாடுகளை அடைத்து விடவும் முடியவில்லை. வேறொரு கோத்திரத்துள் திருமணம் செய்திருந்தாலும் ஒரு பெண் தன் முன்னைய குடும்பத்தின் ஓர் அங்கத்தவராகவே தொடர்ந்தும் இருந்து வந்தார். தடையுத்தரவு அமுல் நடத்தப்படுவதை அபூஜஹ்ல் தீவிரமாகக் கண்காணிப்புச் செய்து வந்தாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவரது கருத்துக்களைப் பிறர் மீது திணித்துக்கொள்ள இயலவில்லை.
ஒரு நாள் கதீஜாவின் மருமகன் ஹகீம், ஓர் அடிமையுடனும், மா ஒரு மூடையுடனும் பனீ ஹாஷிம்களின் தற்போதைய குடியிருப்புப் பிரதேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அபூ ஜஹ்ல் எதிர்ப்பட்டார். எதிரிகளுக்கு உணவுப்பொருள் எடுத்துச் செல்வதாகக் குற்றஞ்சாட்டி, குறைஷியரிடம் ஹகீம் குறித்து முறையிடுவதாக அச்சுறுத்தினார் அபூ ஜஹ்ல். இருவரும் வாதாடிக் கொண்டிருக்கும் போது அபுல்-பக்தரீ என்பார் அவ்விடம் வந்தார். அஸத் கோத்திரத்தவரான அவர், பிரச்சினை குறித்து விசாரித்தபின் அபூ ஜஹ்லை நோக்கி, “ இது இவருடைய மாமியாரின் மா. அவரே இதனை அனுப்பும்படி வேண்டியிருக்கின்றார். இவர் தனது வழியில் செல்ல விட்டு விடும் ” எனக் கூறினார். ஹகீமோ, அபுல்-பக்தரீயோ இஸ்லாத்தை தழுவியவர்களல்லர். எனினும் இம்மாமூடை அஸத் கோத்திரத்தின் ஓர் அங்கத்தவரிடமிருந்து மற்றோர் அங்கத்தவருக்கு அனுப்பப்படுவது குறித்து அக்கோத்திரத்தின் அங்கத்தவரல்லாதோர் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. மக்ஸுமியான அபூ ஜஹ்லின் தலையீடு உரிமைகளுக்கு அப்பாற்பட்டதாகவும், பொறுத்துக்கொள்ள முடியாததாகவும், எரிச்சலூட்டுவதாகவும் அமைந்தது.
அபூ ஜஹ்ல் தொடர்ந்தும் தன் கட்சியை வற்புறுத்தி நிற்கவே, அபுல்-பக்தரீ ஒட்டகத்தாடை எலும்பொன்றனை எடுத்துத் தன் பலம் கொண்ட மட்டும் வேகமாக அபூ ஜஹ்லின் தலையில் அடித்தார். திடுக்கமுற்ற அபூ ஜஹ்ல் கீழே விழுந்தார். ஹகீமும் அபுல்-பக்தரீயும் தம் கால்களால் மிதித்து வீழ்ந்தவரை வதை செய்தனர். அவ்வழியாக அப்போது சென்று கொண்டிருந்த ஹம்ஸாவுக்கு இக்காட்சி மனநிறைவை அளித்தது.
ஹகீம் தனது உரிமைகளின் எல்லைக்குள்ளேயே இருந்தார். மற்றும் பலர் பாதிக்கப்பட்டோர் மீதான கருணையினால் தடைகளை மீறி செயல்பட முனைந்தனர். ஆமிர் கோத்திரத்தின் ஹிஷாம்-இப்ன்-அம்ர், ஹாஷிமிய இரத்த பந்தம் உடையவரல்லர். எனினும் அவரது குடும்பத்தார், ஹாஷிமிகளின் நெருங்கிய திருமண உறவுகள் கொண்டிருந்தனர்.
இரவு வேளைகளில் ஹிஷாம் உணவுப் பண்டங்கள் நிரம்பியதொரு ஒட்டகத்தை அபூதாலிபின் குடியிருப்புப் பிரதேசத்துக்குக் கொண்டு வந்து கடிவாளத்தை எடுத்து விட்டு அதனை அடித்து விரட்டுவார். ஒட்டகம் பனீஹாஷிம்களின் வீடுகளுக்கு முன்னால் செல்லும். சில இரவுகளில், உடுதுணிகளாலும் வேறும் அன்பளிப்புகளாலும் ஒட்டகம் நிரம்பி இருக்கும்.
இஸ்லாத்தைத் தழுவாதோரின் உதவிகள் இவ்வாறிருக்க, வேறு கோத்திரங்களைச் சார்ந்திருந்த முஸ்லிம்கள், சிறப்பாக அபூபக்ர், உமர் ஆகியோர் இத்தடையைத் தகர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தனர். இரண்டு வருடங்கள் இவ்வாறு கழிந்து விட்டன. அபூபக்ர் தன் முந்தைய செல்வ நிலையையும் இழந்தவராகிவிட்டார். பலதரப்பட்ட உதவிகளின் மத்தியிலும் தடைக்குள்ளான இரண்டு கோத்திரத்தாரிடையே எப்போதும் உணவுத்தட்டுப்பாடு நிலவி வந்தது. சிலவேளைகளில் இத்தட்டுப்பாடு பஞ்ச நிலையையும் அண்மியது.
புனிதஸ்தலப் பகுதிகளில் சுதந்திரமாக உலவுவதற்குப் புனித மாதங்களின் போது சந்தர்ப்பம் கிட்டியது. அப்போதெல்லாம் நபிகளார் பெரிதும் புனிதத்தளத்திலேயே காணப்படுவார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைஷித் தலைவர்கள் அன்னாரை இகழ்ந்து கூறவும், கேலி பண்ணவும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். முன்னைய சமூகத்தவர்களுக்கு நடந்த விஷயங்கள் குறித்த இறைவசனங்களை ஓதி நபிகளார் குறைஷியரை எச்சரிக்கை செய்த வேளைகளில் அப்த்-அத்-தாரைச் சேர்ந்த நத்ர் என்பார் கூறுவார் :
“ இறைவன் பெயரால் நிச்சயமாக, முஹம்மத் என்னை விட சிறந்ததொரு பேச்சாளரல்லர் ; அவரது பேச்சுகள் எல்லாம் பண்டைக்கால மனிதர்களது கதைகளே! எனது கதைகள் எனக்காக எழுதப்பட்டுள்ளது போல, அவருக்காக அவை எழுதப்பட்டுள்ளன. ”
பின்னர் அவர், ருஸ்தம், இஸ்பந்தியார், பாரசிக அரசர்கள் பற்றிய கதைகளைக் கூறுவார்.
தெய்வீக உண்மைகளை அறிந்து கொள்வதற்குறிய தக்க சாதனம் இதயமே என்பதனைச் சுட்டும் பல்வேறு இறைவசனங்களில் ஒன்று இது குறித்து அருளப்பட்டது. வீழ்ந்து கிடக்கும் மனிதரைப் பொறுத்தளவில் இதயத்தின் கண் மூடப்பட்டிருந்தாலும் ஒளியின் மங்கிய தன்மையை ஈர்க்கக்கூடியதாக அது இருக்கும். அதுவே நம்பிக்கை. என்றாலும் தீய நடத்தை நிரம்பிய வாழ்வோ இதயத்தின் மீது கறை படியச் செய்கின்றது. அதனால் இறைவனது வசனங்களின் தெய்வீக மூலத்தை அவ்விதயத்தால் அறிந்து கொள்ளமுடிவதில்லை.
“அவனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைதான் என்று அவன் கூறுகின்றான். நிச்சயமாக அவ்வாறன்று. அவர்கள் செய்து கொண்டிருந்த ( தீ ) வினையே அவர்களின் இருதயங்களின் மீது துருவாகப் படிந்துவிட்டது ” - குர்ஆன் : 83 : 13-14 .
இதற்கு முற்றும் மாறான நிலையில், தெளிந்த அறிவைப் பெறும் உன்னதமான நிலைமை குறித்து நபிகளார் பல சந்தர்ப்பங்களில் உறக்கத்தின் போதும் தமது இதயத்தின் கண் திறந்திருக்கின்றமையை உறுதி செய்து கூறியுள்ளார்கள்.
“ என் கன்கள் உறங்குகின்றன ; ஆனால் என் இதயம் விழித்துள்ளது ”
- இ.இ, 375 , புகாரி : 19:16
நபிகளாரின் சமகாலத்தவர்களைப் பெயர் சுட்டிக் குறிப்பிட்ட இறைவசனங்கள் ஒரு சிலவே. அவற்றில் ஒன்று இப்போது அருளப்பட்டது. ‘அபூலஹபும் அவர் மனைவியும் நரகத்துக்காளாவர் ’ என அது உறுதி செய்தது. - ( குர்ஆன் : 91 ) அபூலஹபின் மனைவி உம்ம் ஜமீல் இதனைக் கேள்வியுற்று, கற்குழவி ஒன்றைக் கையில் ஏந்தியவராக, நபிகளாரைத் தேடிப் பள்ளிவாசலுக்குச் சென்றார். அவ்வேளை நபிகளார் அபூபக்ர்ருடன் அமர்ந்திருந்தார்கள். அபூபக்ரிடம் சென்ற உம்ம் ஜமீல் “ உமது தோழர் எங்கே? ” என வினவினார். தன் கண் முன்னாலேயே இருந்த நபியவர்களைத்தான் உம்ம் ஜமீல் குறிக்கின்றார் என உணர்ந்த அபூபக்ர் வார்த்தைகள் ஏதும் வராமல் திகைத்து நின்றார்.
“ என்னை அவர் அவதூறு செய்ததாகக் கேள்விப்பட்டேன். இறைவன் பெயரால் நிச்சயமாக, நான் அவரைக் கண்டிருந்தால் அவருடைய வாயை இந்தக் குழவியினால் சிதைத்திருப்பேன் ” என்றார் உம்ம் ஜமீல். பின்னர்,
“ நிச்சயமாக நானும் கவிதை இயற்றுபவள்தான்
சபிக்கப்பட்டவரை நாம் அடிபணியோம் ;
அவமதிப்போம் அவரிடும் ஆணைகளை,
வெறுத்திடுவோம் அவரது மதத்தை ”
எனக் கூறி அவ்விடத்தை விட்டகன்றார்.
அவர் தங்களைக் காணவில்லையா? என நபிகளாரை வினவினார் அபூபக்ர்.
“ அவர் என்னைக் காணவில்லை ; அல்லாஹ் என்னைவிட்டும் அவரது பார்வையை எடுத்து விட்டான் ” என்றனர் நபிகளார்.
அறபியில் சபிக்கப்பட்டவர் எனப் பொருள்படும் ‘முதம்மம்’, புகழப்பட்டவர் அல்லது போற்றப்பட்டவர் எனப் பொருள் தரும் ‘முஹம்மத்’ எனும் சொல்லுக்கு நேர் எதிராகப் பயன்பட்டது. குறைஷியர் சிலர் அன்னாரை இழிவு படுத்தும் முறையில் முதம்மம் என்றே அழைத்து வரலாயினர்.
நபிகளார் தம் தோழர்களிடம் கூறுவார்கள் :
“ குறைஷியரின் தாக்குதல்களை என் மீதிருந்தும் அல்லாஹ் திருப்பி விடுவது ஆச்சரியமானதாக இல்லையா? அவர்களால் இழிந்துரைக்கப்படுபவர் முதம்மம். நானோ முஹம்மத் ”. - இ.இ. 234
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,

No comments:
Post a Comment