த டை யு ம்
த டை நீ க் க மு ம் ( தொடர்… )
ஹாஷிம், முத்தலிப் கோத்திரத்தார்கள் மீதான தடையுத்தரவு இரண்டு வருட காலமளவு நீடித்தும் கூட, குறைஷிகள் எதிர்பார்த்த முடிவுகள் ஏதும் ஏற்படுவதாக இல்லை. மாறாக, எவரும் எதிர்பார்த்திராத, நினைத்துக் கூடப் பார்க்காத சில விளைவுகளை அது ஏற்படுத்தி வைத்தது. நபிகளார் மீது மேலும் மேலும் கவனம் ஈர்க்கப்பட்டது. முழு அறேபியாவிலும் இத்தடையுத்தரவு குறித்தும், நபிகளார் குறித்தும் அனைவரும் பேசலாயினர். குறைஷிகளினுள்ளேயே தனிப்பட்ட முறையில் தடையுத்தரவு குறித்த பல்வேறு அபிப்பிராயங்களும் எழலாயின.

பாதிப்புக்குள்ளானவர்களுள் நெருங்கிய உறவினர்களைக் கொண்டிருந்தோர் இதில் தீவிரமாக இருந்தனர். மனமாற்றம் ஏற்படவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் ஆரம்ப நடவடிக்கை எடுத்தவர் ஹாஷிமிகளுக்கு உணவும் உடையும் ஏற்றிய ஒட்டகங்களை அனுப்பி வந்த ஹிஷாம் என்பவராகும். தான் தனிப்பட்ட எதையும் சாதித்து விட முடியாதென்பதை உணர்ந்த அவர், முதலில் மக்ஸுமியான ஸுஹைரிடம் சென்றார். நபிகளாரின் மாமியாரான ஆதிகாவின் இரு புதல்வர்களுள் ஒருவர் ஸுஹைர்.
“ உமது தாயாரின் உறவினர்கள் இருக்கும் நிலையை அறிந்தும் நீர் உண்டு, உடுத்து, மணஞ்செய்து களித்துக் கொண்டிருக்கலாமா? அவர்களால் வாங்கவோ விற்கவோ முடியவில்லை ; மணஞ்செய்து கொள்ளவோ, மணமுடித்துக் கொடுக்கவோ இயலாது. இறைவன் மீது ஆணையாக, அவர்கள் அபுல்-ஹகமின் ( அதுதான் அபூஜஹ்ல் ) தாயாரது சகோதரராயிருந்து, அவர் நீர் செய்ய வேண்டுமெனக் கூறியவற்றை, நீர் அவர் செய்ய வேண்டுமெனக் கூறியுமிருந்தால் நிச்சயமாக அவர் இணங்கியிருக்கமாட்டார். ” என்றார் ஹிஷாம்.
“ அத்தோடு நிறுத்தும் ஹிஷாம்! நான் என்ன செய்யலாம்? நானோ தனியொரு மனிதன். என்னுடன் இன்னுமொருவர் இருந்தால் இதனை ரத்து செய்யும் வரை நான் ஓயமாட்டேன் ” எனப் பதிலிறுத்தார் ஸுஹைர். “ நான் ஒருவரைக் கண்டு பிடித்துள்ளேன் ” , “ யார் அவர்? ” “நான் தான்” என்றார் ஹிஷாம். “ மூன்றாமவரைத் தேடும் ” என்றார் ஸுஹைர். எனவே ஹிஷாம், முத்இம்-பின்-அதீயிடம் சென்றார். நவ்பல் கோத்திரத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அவர், ஹாஷிம்- முத்தலிப் ஆகியோரின் சகோதரனான நவ்பலின் பேரன். ஹிஷாம் கூறினார் :
“ குறைஷியர் கூறுவதை நீர் அங்கீகரித்து நிற்க, அப்த்-மனாபின் இரு புதல்வர்கள் அழிந்து போவதைக் காணவேண்டியிருப்பது உமது விதியாக இருக்கின்றது. இறைவன் பெயரால், நீர் இவ்வாறான நடவடிக்கைகளை அங்கீகரித்தால், இதே நடவடிக்கை சீக்கிரமே உமக்கெதிராகவும் எடுக்கப்படலாம். ” முத்இம் நான்காமவர் ஒருவரை வேண்டினார். ஆக, ஹிஷாம், அஸத் கோத்திரத்து அபுல்-பக்தரீயிடம் சென்றார். இவர்தான் கதீஜாவின் மாமூடை காரணமாக அபூ ஜஹ்லை தாக்கியவர். அவர் ஐந்தாமவரை வேண்டி நிற்க, மற்றுமோர் அஸதியரான ஸம்ஆ-இப்ன்-அல்அஸ்வத்திடம் சென்றார். ஆறாமவர் ஒருவரை வேண்டாது தான் ஐந்தாமவராக நிற்க ஒப்புக் கொண்டார்.
ஐவரும் மக்காவின் மேலாக ஹஜுன் சுற்றுப் பகுதியில் அன்றிரவு சந்தித்து தமது செயல் திட்டத்தை முடிவு செய்து, இத்தடையுத்தரவை ரத்துச் செய்யும் வரையில் பத்திரம் சம்பந்தமான விடயத்தைக் கைவிடுவதில்லை என உறுதி செய்து கொண்டனர். ஸுஹைர் கூறினார் :
“ நானோ இதில் நெருங்கிய அக்கறைக் கொண்டுள்ளவன் ; எனவே நானே முதலில் பேசுபவனாக இருப்பேன் ”
அடுத்த நாள் காலையிலேயே பள்ளிவாசலில் சேர்ந்திருந்த மக்களுடன் இவ்வைவரும் இணைந்து கொண்டனர். ஸுஹைர் நீண்ட மேலங்கியொன்றனை அணிந்தவராகக் கஃபாவை ஏழுமுறை வலம் வந்தார். பின்னர் அங்கு கூடியிருந்தோரை நோக்கியவராக,
“ மக்கத்து மக்களே! ஹாஷிமின் மக்கள் வாங்கவும் விற்கவும் முடியாத நிலையில் அழிந்து போக, நாம் உணவுகள் உண்டும், உடைகள் உடுத்தும் வரலாமா? இறைவன் பெயரால், இந்த அநீதியான தடையுத்தரவு கிழித்தெறியப்படும் வரை நான் ஓய மாட்டேன் ” என்றார்.
“ நீர் பொய் சொல்கின்றீர் ; அது கிழித்தெறியப்படமாட்டாது ” என்றார் அபூஜஹ்ல்.
“ நீர் தான் பெரும் பொய்யர் ; அது எழுதப்பட்டபோது எழுதப்படுவற்குச் சார்பாக நாம் இருக்கவில்லை ” என்றார் ஸம்ஆ.
“ ஸம்ஆ கூறியது முற்றிலும் சரி. அதில் எழுதப்பட்டிருப்பனவற்றுக்கு நாம் ஆதரவாளர்களல்ல. அதை நாம் ஏற்கவும் தயாராக இல்லை ” என்றார் அபுல்-பக்தரீ. முத்இம் கூறினார் :
“ நீங்கள் இருவரும் கூறியது சரி. இல்லையெனக் கூறுபவரே பொய்யர். இது பற்றிய எமது அறியாமைக்கும், அதில் எழுதப்பட்டவற்றிற்கும் சாட்சியாக நாம் இறைவனை அழைக்கின்றோம். ” ஹிஷாமும் இதுபோலவே பேசினார். முந்திய இரவு இவர்கள் கூடித்தீட்டிய சதி இது என அபூஜஹ்ல் குற்றஞ்சாட்டினார். எனினும் முத்இம் அவரை இடைநிறுத்திப் பத்திரத்தைக் கொண்டுவரவெனக் கஃபாவினுள் நுழைந்தார்.
வெற்றிப் பெருமிதத்துடன் ஒரு சிறிய தோல் துண்டைக் கையில் கொண்டவராக வெளிவந்தார் முத்இம். தடையுத்தரவைக் கரையான்கள் தின்று விட்டிருந்தன. எஞ்சியிருந்தது ஆரம்ப வசனம் மட்டுமே : ‘ ஓ இறைவா! உனது பெயரால் ’.
ஏற்கெனவே குறைஷியருள் பெரும்பாலோர் வெற்றி கொள்ளப்பட்டிருந்தனர். சந்தேகிக்க முடியாததொன்றாக அமைந்த பத்திரம் பற்றிய சகுனம் இறுதியானதும் உறுதியானதுமான ஒரு வாதமாக அமைந்து கொண்டது. அபூ-ஜஹ்லும் அவரதே சிந்தனையுடைய இன்னும் சிலரும் புதிய நிலைமையை எதிர்த்து நிற்பது பயனளியாதென்பதை உணர்ந்து கொண்டனர். தடையுத்தரவு முறைப்படி ரத்துச் செய்யப்பட்டது. பனீ ஹாஷிம், பனீ அல் முத்தலிப் கோத்திரத்தார்களுக்கு இந் நற்செய்தியை அறிவிக்கவெனக் குறைஷியரின் ஒரு குழுவினர் விரைந்து சென்றனர்.
தடையுத்தரவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்காவில் பெரும் நிம்மதி நிலவியது. முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் - தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டன. அமைதியான இந்நிலைமை குறித்து பெரிதுபடுத்தப்பட்ட அறிக்கைகள் அபிஸீனியாவைச் சென்றடைந்தன. அகதிகளில் பலர் உடனடியாகவே மக்காவை வந்தடைய வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினர். ஜஅபர் உட்படச் சிலர் தாம் இருக்கும் இடத்திலேயே தொடர்ந்தும் சில காலத்தைக் கழிக்க முடிவு செய்தனர்.
இதே வேளைகளில் குறைஷிகளின் தலைவர்கள், நபிகளாரை ஒரு சமுக உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடலாயினர். இது கால வரைக்கும் இதுவே நபிகளாரை ஓரளவேனும் நெருங்கிய முறையில் அவர்கள் அணுகியதாகும். வலீதும் ஏனைய தலைவர்களும் இரு மதங்களையும் எல்லாருமே பின்பற்ற வேண்டும் என்ற ஓர் ஆலோசனையை சமர்ப்பித்தனர். இதனை ஏற்றுக்கொள்ள நபிகளாரால் முடியாது. தனது ஏற்காமையை வெளிப்படுத்த வேண்டிய சங்கடமானதொரு நிலையை அன்னார் எதிர் நோக்க வேண்டியதாயிற்று. அன்னாரின் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், பதிலாக, இறைவசனங்களே ஒரு ஸுறாவாக அருள் செய்யப்பட்டன :
“ நீர் கூறும் : நிராகரிப்போரே! நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவனன்று. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்களல்லர். உங்களுடைய (வினைக்குரிய) கூலி உங்களுக்கும், என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் கிடைக்கும் ”
அல் குர்ஆன் : 109 : 1-6
இதனால், தற்காலிகமாக ஏற்பட்டிருந்த நல்லுறவு அபிஸீனியாவிலிருந்து திரும்பி வந்த அகதிகள் புண்ணிய பூமியின் அருகில் வந்து சேரும்போது மிகவும் அருகிச் சென்றிருந்தது.
ஜஅபரையும் உபைத்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷைய ும் தவிர்த்து, நபிகளாரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அனைவரும் திரும்பி வந்திருந்தனர். உத்மானும் ருகையாவும் கூட வந்தார்கள். உத்மானுடன் திரும்பிய மற்றுமொரு ஷம்ஸியர் அபூ-ஹுதைபா. அவரது தந்தை உத்பா பாதுகாப்பளிப்பாரென்ற நம்பிக்கை அவரிடமிருந்தது. ஆனால், அபூஸலாமாவும் உம்ம்ஸலாமாவும் தமது கோத்திரத்தாரிடமிருந்து துயரத்தையே. தவிர வேறெதனையும் எதிர்பார்க்க முடியாதோராயிருந்தனர். எனவே மக்காவினுள் நுழையுமுன்னர் அபூஸலாமா தனது ஹாஷிமிய மாமனார் அபூதாலிபுக்குச் செய்தியனுப்பிப் பாதுகாப்புக் கோரினார். மக்ஸுமிகளின் பலத்த அதிருப்தியின் மத்தியில் அபூதாலிப் பாதுகாப்பளிக்க ஒப்புக்கொண்டார்.
“ உமது சகோதரன் மகன் முஹம்மதை நீர் எம்மிடமிருந்து பாதுகாத்துக் கோண்டீர். ஆனால் எமது சொந்த கோத்திரத்தாருக்கு நீர் ஏன் பாதுகாப்பளிக்க வேண்டும்? ” என்றனர் மக்ஸுமிகள்.
“ அவர் எனது சகோதரியின் மகன். எனது சகோதரி மகனுக்குப் பாதுகாப்பளிக்க முடியாவிடின், சகோதரன் மகனுக்கும் பாதுகாப்பளிக்க முடியாது ” என்றார் அபூதாலிப்.
அவரது தலைமைத்துவ அதிகார உரிமைகளை மக்ஸுமிகள் மறுத்துரைக்க முடியவில்லை. அத்தோடு இச்சந்தர்ப்பத்தில் அபூலஹப்பும் தன்சகோதரர் அபூதாலிபை ஆதரிக்கலானார். நபிகளாரை எதிர்த்து நிற்பதில் தமக்கெப்போதும் சார்பாக இருப்பவர் என்ற காரணத்தால், மக்ஸுமிகள் அபூலஹப்பை எதிர்த்து உரையாட விரும்பவில்லை. தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் தனது சகோதரன் மகன் முஹம்மத் மீதான தனது வெறுப்பைப் பகிரங்கமாகவும் தெளிவாகவும் வெளிக்காட்டிக் கொள்ள நேர்ந்தமையை நினைத்து வருந்தினார் அபூலஹப். அதற்குக் காரணம் அவரது வெறுப்புணர்வு குறைந்து விட்டது என்பதல்ல. தனது சகோதரனின் பின்னர் கோத்திரத்தலைவனாக வரக்கூடிய சாதகங்கள் தனக்கு இருக்கும் நிலையில் தன் குடும்பத்தவர்களுடன் நல்லுறவு பாராட்டி வருவதே சிறந்ததென அவர் கருதலானார். அபூதாலிப் நீண்ட காலம் வாழப்போவதில்லையென்பதற்குறி ய அறிகுறிகளை அபூலஹப் கண்டிருக்கலாம்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்
த டை நீ க் க மு ம் ( தொடர்… )
ஹாஷிம், முத்தலிப் கோத்திரத்தார்கள் மீதான தடையுத்தரவு இரண்டு வருட காலமளவு நீடித்தும் கூட, குறைஷிகள் எதிர்பார்த்த முடிவுகள் ஏதும் ஏற்படுவதாக இல்லை. மாறாக, எவரும் எதிர்பார்த்திராத, நினைத்துக் கூடப் பார்க்காத சில விளைவுகளை அது ஏற்படுத்தி வைத்தது. நபிகளார் மீது மேலும் மேலும் கவனம் ஈர்க்கப்பட்டது. முழு அறேபியாவிலும் இத்தடையுத்தரவு குறித்தும், நபிகளார் குறித்தும் அனைவரும் பேசலாயினர். குறைஷிகளினுள்ளேயே தனிப்பட்ட முறையில் தடையுத்தரவு குறித்த பல்வேறு அபிப்பிராயங்களும் எழலாயின.

பாதிப்புக்குள்ளானவர்களுள் நெருங்கிய உறவினர்களைக் கொண்டிருந்தோர் இதில் தீவிரமாக இருந்தனர். மனமாற்றம் ஏற்படவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் ஆரம்ப நடவடிக்கை எடுத்தவர் ஹாஷிமிகளுக்கு உணவும் உடையும் ஏற்றிய ஒட்டகங்களை அனுப்பி வந்த ஹிஷாம் என்பவராகும். தான் தனிப்பட்ட எதையும் சாதித்து விட முடியாதென்பதை உணர்ந்த அவர், முதலில் மக்ஸுமியான ஸுஹைரிடம் சென்றார். நபிகளாரின் மாமியாரான ஆதிகாவின் இரு புதல்வர்களுள் ஒருவர் ஸுஹைர்.
“ உமது தாயாரின் உறவினர்கள் இருக்கும் நிலையை அறிந்தும் நீர் உண்டு, உடுத்து, மணஞ்செய்து களித்துக் கொண்டிருக்கலாமா? அவர்களால் வாங்கவோ விற்கவோ முடியவில்லை ; மணஞ்செய்து கொள்ளவோ, மணமுடித்துக் கொடுக்கவோ இயலாது. இறைவன் மீது ஆணையாக, அவர்கள் அபுல்-ஹகமின் ( அதுதான் அபூஜஹ்ல் ) தாயாரது சகோதரராயிருந்து, அவர் நீர் செய்ய வேண்டுமெனக் கூறியவற்றை, நீர் அவர் செய்ய வேண்டுமெனக் கூறியுமிருந்தால் நிச்சயமாக அவர் இணங்கியிருக்கமாட்டார். ” என்றார் ஹிஷாம்.
“ அத்தோடு நிறுத்தும் ஹிஷாம்! நான் என்ன செய்யலாம்? நானோ தனியொரு மனிதன். என்னுடன் இன்னுமொருவர் இருந்தால் இதனை ரத்து செய்யும் வரை நான் ஓயமாட்டேன் ” எனப் பதிலிறுத்தார் ஸுஹைர். “ நான் ஒருவரைக் கண்டு பிடித்துள்ளேன் ” , “ யார் அவர்? ” “நான் தான்” என்றார் ஹிஷாம். “ மூன்றாமவரைத் தேடும் ” என்றார் ஸுஹைர். எனவே ஹிஷாம், முத்இம்-பின்-அதீயிடம் சென்றார். நவ்பல் கோத்திரத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அவர், ஹாஷிம்- முத்தலிப் ஆகியோரின் சகோதரனான நவ்பலின் பேரன். ஹிஷாம் கூறினார் :
“ குறைஷியர் கூறுவதை நீர் அங்கீகரித்து நிற்க, அப்த்-மனாபின் இரு புதல்வர்கள் அழிந்து போவதைக் காணவேண்டியிருப்பது உமது விதியாக இருக்கின்றது. இறைவன் பெயரால், நீர் இவ்வாறான நடவடிக்கைகளை அங்கீகரித்தால், இதே நடவடிக்கை சீக்கிரமே உமக்கெதிராகவும் எடுக்கப்படலாம். ” முத்இம் நான்காமவர் ஒருவரை வேண்டினார். ஆக, ஹிஷாம், அஸத் கோத்திரத்து அபுல்-பக்தரீயிடம் சென்றார். இவர்தான் கதீஜாவின் மாமூடை காரணமாக அபூ ஜஹ்லை தாக்கியவர். அவர் ஐந்தாமவரை வேண்டி நிற்க, மற்றுமோர் அஸதியரான ஸம்ஆ-இப்ன்-அல்அஸ்வத்திடம் சென்றார். ஆறாமவர் ஒருவரை வேண்டாது தான் ஐந்தாமவராக நிற்க ஒப்புக் கொண்டார்.
ஐவரும் மக்காவின் மேலாக ஹஜுன் சுற்றுப் பகுதியில் அன்றிரவு சந்தித்து தமது செயல் திட்டத்தை முடிவு செய்து, இத்தடையுத்தரவை ரத்துச் செய்யும் வரையில் பத்திரம் சம்பந்தமான விடயத்தைக் கைவிடுவதில்லை என உறுதி செய்து கொண்டனர். ஸுஹைர் கூறினார் :
“ நானோ இதில் நெருங்கிய அக்கறைக் கொண்டுள்ளவன் ; எனவே நானே முதலில் பேசுபவனாக இருப்பேன் ”
அடுத்த நாள் காலையிலேயே பள்ளிவாசலில் சேர்ந்திருந்த மக்களுடன் இவ்வைவரும் இணைந்து கொண்டனர். ஸுஹைர் நீண்ட மேலங்கியொன்றனை அணிந்தவராகக் கஃபாவை ஏழுமுறை வலம் வந்தார். பின்னர் அங்கு கூடியிருந்தோரை நோக்கியவராக,
“ மக்கத்து மக்களே! ஹாஷிமின் மக்கள் வாங்கவும் விற்கவும் முடியாத நிலையில் அழிந்து போக, நாம் உணவுகள் உண்டும், உடைகள் உடுத்தும் வரலாமா? இறைவன் பெயரால், இந்த அநீதியான தடையுத்தரவு கிழித்தெறியப்படும் வரை நான் ஓய மாட்டேன் ” என்றார்.
“ நீர் பொய் சொல்கின்றீர் ; அது கிழித்தெறியப்படமாட்டாது ” என்றார் அபூஜஹ்ல்.
“ நீர் தான் பெரும் பொய்யர் ; அது எழுதப்பட்டபோது எழுதப்படுவற்குச் சார்பாக நாம் இருக்கவில்லை ” என்றார் ஸம்ஆ.
“ ஸம்ஆ கூறியது முற்றிலும் சரி. அதில் எழுதப்பட்டிருப்பனவற்றுக்கு
“ நீங்கள் இருவரும் கூறியது சரி. இல்லையெனக் கூறுபவரே பொய்யர். இது பற்றிய எமது அறியாமைக்கும், அதில் எழுதப்பட்டவற்றிற்கும் சாட்சியாக நாம் இறைவனை அழைக்கின்றோம். ” ஹிஷாமும் இதுபோலவே பேசினார். முந்திய இரவு இவர்கள் கூடித்தீட்டிய சதி இது என அபூஜஹ்ல் குற்றஞ்சாட்டினார். எனினும் முத்இம் அவரை இடைநிறுத்திப் பத்திரத்தைக் கொண்டுவரவெனக் கஃபாவினுள் நுழைந்தார்.
வெற்றிப் பெருமிதத்துடன் ஒரு சிறிய தோல் துண்டைக் கையில் கொண்டவராக வெளிவந்தார் முத்இம். தடையுத்தரவைக் கரையான்கள் தின்று விட்டிருந்தன. எஞ்சியிருந்தது ஆரம்ப வசனம் மட்டுமே : ‘ ஓ இறைவா! உனது பெயரால் ’.
ஏற்கெனவே குறைஷியருள் பெரும்பாலோர் வெற்றி கொள்ளப்பட்டிருந்தனர். சந்தேகிக்க முடியாததொன்றாக அமைந்த பத்திரம் பற்றிய சகுனம் இறுதியானதும் உறுதியானதுமான ஒரு வாதமாக அமைந்து கொண்டது. அபூ-ஜஹ்லும் அவரதே சிந்தனையுடைய இன்னும் சிலரும் புதிய நிலைமையை எதிர்த்து நிற்பது பயனளியாதென்பதை உணர்ந்து கொண்டனர். தடையுத்தரவு முறைப்படி ரத்துச் செய்யப்பட்டது. பனீ ஹாஷிம், பனீ அல் முத்தலிப் கோத்திரத்தார்களுக்கு இந் நற்செய்தியை அறிவிக்கவெனக் குறைஷியரின் ஒரு குழுவினர் விரைந்து சென்றனர்.
தடையுத்தரவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்காவில் பெரும் நிம்மதி நிலவியது. முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் - தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டன. அமைதியான இந்நிலைமை குறித்து பெரிதுபடுத்தப்பட்ட அறிக்கைகள் அபிஸீனியாவைச் சென்றடைந்தன. அகதிகளில் பலர் உடனடியாகவே மக்காவை வந்தடைய வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினர். ஜஅபர் உட்படச் சிலர் தாம் இருக்கும் இடத்திலேயே தொடர்ந்தும் சில காலத்தைக் கழிக்க முடிவு செய்தனர்.
இதே வேளைகளில் குறைஷிகளின் தலைவர்கள், நபிகளாரை ஒரு சமுக உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடலாயினர். இது கால வரைக்கும் இதுவே நபிகளாரை ஓரளவேனும் நெருங்கிய முறையில் அவர்கள் அணுகியதாகும். வலீதும் ஏனைய தலைவர்களும் இரு மதங்களையும் எல்லாருமே பின்பற்ற வேண்டும் என்ற ஓர் ஆலோசனையை சமர்ப்பித்தனர். இதனை ஏற்றுக்கொள்ள நபிகளாரால் முடியாது. தனது ஏற்காமையை வெளிப்படுத்த வேண்டிய சங்கடமானதொரு நிலையை அன்னார் எதிர் நோக்க வேண்டியதாயிற்று. அன்னாரின் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், பதிலாக, இறைவசனங்களே ஒரு ஸுறாவாக அருள் செய்யப்பட்டன :
“ நீர் கூறும் : நிராகரிப்போரே! நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவனன்று. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்களல்லர். உங்களுடைய (வினைக்குரிய) கூலி உங்களுக்கும், என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் கிடைக்கும் ”
அல் குர்ஆன் : 109 : 1-6
இதனால், தற்காலிகமாக ஏற்பட்டிருந்த நல்லுறவு அபிஸீனியாவிலிருந்து திரும்பி வந்த அகதிகள் புண்ணிய பூமியின் அருகில் வந்து சேரும்போது மிகவும் அருகிச் சென்றிருந்தது.
ஜஅபரையும் உபைத்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷைய
“ உமது சகோதரன் மகன் முஹம்மதை நீர் எம்மிடமிருந்து பாதுகாத்துக் கோண்டீர். ஆனால் எமது சொந்த கோத்திரத்தாருக்கு நீர் ஏன் பாதுகாப்பளிக்க வேண்டும்? ” என்றனர் மக்ஸுமிகள்.
“ அவர் எனது சகோதரியின் மகன். எனது சகோதரி மகனுக்குப் பாதுகாப்பளிக்க முடியாவிடின், சகோதரன் மகனுக்கும் பாதுகாப்பளிக்க முடியாது ” என்றார் அபூதாலிப்.
அவரது தலைமைத்துவ அதிகார உரிமைகளை மக்ஸுமிகள் மறுத்துரைக்க முடியவில்லை. அத்தோடு இச்சந்தர்ப்பத்தில் அபூலஹப்பும் தன்சகோதரர் அபூதாலிபை ஆதரிக்கலானார். நபிகளாரை எதிர்த்து நிற்பதில் தமக்கெப்போதும் சார்பாக இருப்பவர் என்ற காரணத்தால், மக்ஸுமிகள் அபூலஹப்பை எதிர்த்து உரையாட விரும்பவில்லை. தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் தனது சகோதரன் மகன் முஹம்மத் மீதான தனது வெறுப்பைப் பகிரங்கமாகவும் தெளிவாகவும் வெளிக்காட்டிக் கொள்ள நேர்ந்தமையை நினைத்து வருந்தினார் அபூலஹப். அதற்குக் காரணம் அவரது வெறுப்புணர்வு குறைந்து விட்டது என்பதல்ல. தனது சகோதரனின் பின்னர் கோத்திரத்தலைவனாக வரக்கூடிய சாதகங்கள் தனக்கு இருக்கும் நிலையில் தன் குடும்பத்தவர்களுடன் நல்லுறவு பாராட்டி வருவதே சிறந்ததென அவர் கருதலானார். அபூதாலிப் நீண்ட காலம் வாழப்போவதில்லையென்பதற்குறி
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்
No comments:
Post a Comment