து ய ர வ ரு ட த் தி ன் பி ன்
துயர வருடம் கழிய, அடுத்த வருடத்து புனித யாத்திரைக்காலம் ஜூன் மாத ஆரம்பத்தில் வந்தது. யாத்திரிகர்கள் மினாவில் மூன்று நாட்கள் தங்கியிருப்பது வழக்கம். பலியீட்டுவைபவ நாளன்று நபிகளார் மினாவுக்குச் சென்றார்கள். வெவ்வேறு குழுவினரின் கூடாரங்களுக்குச் சென்று, தனக்குச் செவி சாய்ப்போருக்குப் போதனை செய்வது பல வருடங்களாக நபிகளாரின் வழக்கமாகி வந்திருந்தது. அவ்வேளைகளிலெல்லாம் தன் மனதை உந்தும் குர்ஆன் வாசகங்களையும் ஓதிக் காட்டுவார்கள். மக்காவிலிருந்து மினாவை அண்மிய இடமாக விளங்குவது அகபா. இங்கு சமவெளியிலிருந்து பாதை நேர்குத்துப்போல புனித நகரை நோக்கிய மலைகளை நோக்கி மேலெழும்புகின்றது. இந்த வருடம்தான் அகபாவில், நபிகளார், யத்ரிபின் கஸ்ரஜ் கோத்திரத்தோரான ஆறு பேரை சந்தித்தார்கள். இவ்வறுவரில் எவரையும் நபிகளார் அறிந்திருக்கவில்லை. ஆனால், நபிகளார் குறித்தும், அன்னாரது இறைதூதுவ பாத்யதை குறித்தும் அவ்வறுவரும் கேள்விப்பட்டிருந்தனர். நபிகளார் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களது முகங்கள் ஆர்வத்தால் பிரகாசித்தன. அன்னார் கூறுவதை அறுவரும் மிகக் கவனமாகச் செவி மடுத்துக் கேட்டனர். தமது அண்டை வாசிகளான யத்ரிப் யூதர்களின் அச்சுறுத்தல் அவர்கள் ஒவ்வொருவரது மனத்துள்ளும் நன்கு பதிந்திருந்தது. -

“ ஓர் இறை தூதர் வரும் காலம் நெருங்கி விட்டது : நாம் அவரைப் பின்பற்றி உங்களைக் கொன்றொழிப்போம் - ஆத் இராம்கள் அழிக்கப்பட்டது போல ”.
நபிகளார் தம் போதனையை முடித்துக் கொண்டதும் அவர்கள் ஒருவருக்கொருவர், ‘இவரே அண்மையில் வருவார் என யூதர்கள் எமக்குக் கூறிய இறைதூதர் : அன்னாரை அடைந்து கொள்வதில் அவர்கள் எம்மை முந்தி விடாதிருக்கட்டும்’ எனக் கூறிக் கொண்டனர். தொடர்ந்த சிறு உரையாடலின் பின்னர், அறுவரும் ஒவ்வொருவராக நபிகளாரின் தூதினை உண்மையெனக் கொண்டு சாட்சி கூறி, அன்னார் முன் வைத்த இஸ்லாமிய நியதிகளை ஏற்று நடப்பதாக உறுதி செய்தனர். அவர்கள் கூறினார்கள் :
“ நாம் எமது மக்களை விட்டு வைத்துள்ளோம் ; பகைமையாலும் தீமைகளாலும் பிரிந்து வாழும் மக்கள் அவர்களைப் போல் வேறு எவரும் இலர். உங்கள் மூலமாக இறைவன் அவர்களை ஒன்றிணைக்கலாம். நாம் ஏற்றுக் கொண்டது போல, உங்களது மதத்தை ஏற்று நடக்கும்படி நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுப்போம். இறைவன், உங்களைச் சூழ வர அவர்களை ஒன்றுபடுத்தக் கூடுமாயின், உங்களை விட மாட்சிமை வாய்ந்த மனிதர் வேறு யாரும் இருக்கமாட்டார் ” - இ.இ. 287
நபிகளார், பனீ ஜுமாஹ்களிடையே வாழ்ந்து வந்த அபூபக்ரை அடிக்கடி சென்று காணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்புகள் அபூபக்ரின் இளைய மகள் ஆயிஷாவின் இளமைக்காலத்து நினைவில் சிறப்பான இடம் பெற்றிருந்தன. தனது தந்தையும் தாயும் முஸ்லிம்களல்லாதவர்களாக இருந்த காலமோ, நபிகளார் தம் வீட்டுக்கு விருந்தினராக வராதிருந்த நாட்களோ ஆயிஷாவின் நினைவிலிருக்கவில்லை.
கதீஜா நாயகியின் மரணத்தை அடுத்த அதே ஆண்டில், ஒரு மனிதர் பட்டினால் சுற்றப்பட்ட பொதியொன்றனைச் சுமந்து வருவதாக நபிகளார் கனவொன்றில் கண்டார்கள். அம்மனிதர் நபிகளாரை நோக்கி, ‘திறந்து பாரும் - உமது துணைவியாரை’ என்றார். நபிகளார் பட்டை உயர்த்திப் பார்த்தார்கள். உள்ளே காணப்பட்டவர் ஆயிஷா. ஆயிஷாவின் வயதோ ஆறு. நபிகளாரோ ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக இருந்தார்கள். அது மட்டுமல்ல, அபூபக்ர் ஏற்கெனவே முத்இம்முடன் செய்து கொண்டிருந்த ஏற்பாடு, ஆயிஷா, முத்இம்மின் மகன் ஜுபைரை மணஞ்செய்து கொள்வதாக அமைந்திருந்தது. என்றாலும் நபிகளார் தமக்குள் கூறிக் கொண்டார்கள் :
‘இது இறைவனிடமிருந்து வருவதாயின், அவனே அதை முடித்து வைப்பான்’
( புகாரி : 91 : 20 )
சில இரவுகள் கழிய, நபிகளார் தமது நித்திரையில், மீண்டும் அதே பொதியை ஒரு வானவர் தூக்கி வருவதைக் கண்டார்கள். இப்போது நபிகளாரே வானவரிடம் பேசினார்கள் :
“ எனக்குக் காட்டுவீராக! ”. வானவர் பட்டினைத் தூக்கினார். மீண்டும் ஆயிஷா. நபிகளார் கூறினார்கள் : “ இது இறைவனிடமிருந்து வருவதொன்றாயின் அவனே அதை முடித்து வைப்பான். ”.
இதுவரை தனது கனவுகளை நபிகளார் எவருக்குமே கூறவில்லை. - அபூபக்ருக்குக்கூட, இப்போது வேறொரு முறையில் மூன்றாம் உறுதியுரை வந்தது. கதீஜா நாயகியின் மரணமுதற்கொண்டு, நபிகளாரின் தேவைகளனைத்தையும் மிக்க ஈடுபாட்டுடன் கவனித்து வந்தார், உத்மான்-இப்ன்-மஸ்ஊனின் மனைவியான கவ்லா. ஒரு நாள் நபிகளாரின் வீட்டில் அவர் இருந்த போது, கவ்லா நபிகளாரிடம் இன்னொரு மனைவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். தான் யாரை மணந்து கொள்ளலாம் என நபிகளார் வினவிய போது கவ்லாவின் பதிலாயமைந்தது :
“ அபூபக்ரின் மகள் ஆயிஷா அல்லது ஸம்ஆவின் மகள் ஸவ்தா. ”
ஸுஹைலின் ஒன்று விட்ட சகோதரியும், மைத்துனியுமான ஸவ்தா, முப்பது வயது நிரம்பப் பெற்றதொரு விதவையாக இருந்தார்.அவரது முதல் கணவரும் ஸுஹைலின் சகோதரருமான ஸக்ரான், தன் மனைவியுடன் அபிஸீனியாவுக்கு வெளியேறிச் சென்றிருந்தார். மக்காவுக்கு முதன் முதல் திரும்பி வந்தோரில் அவர்களும் உள்ளடங்கியிருந்தனர். திரும்பி வந்த சிறிது காலத்துள் ஸக்ரான் மரணமானார்.
இருவரையுமே மணந்து கொள்வதற்கு வேண்டிய ஆயத்தங்களை செய்யும்படி நபிகளார் கவ்லாவை வேண்டினார்கள். ஸவ்தாவின் பதிலாயிருந்தது : “ ஓ அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது சேவையில் இருக்கின்றேன். ” “ உம்மை மணஞ்செய்து தரும்படி உங்களில் ஒருவரை வேண்டுவீராக ” என மீண்டும் செய்தி அனுப்பினர் நபிகளார். அபிஸீனியாவிலிருந்து இக்காலை வந்து சேர்ந்து விட்ட தனது மைத்துனர் ஹாதிப்பைத் தேர்ந்து கொண்டார் ஸவ்தா. ஹாதிப், ஸவ்தாவை நபிகளாருக்கு மணஞ்செய்வித்தார்.
இதேவேளை அபூபக்ர், முத்இம்மைச் சந்தித்து அவரது மகனுக்கு ஆயிஷாவை மணஞ்செய்விக்கும் ஏற்பாட்டை கைவிடும்படி வேண்டிக்கொண்டார். சிரமங்கள் ஏதுமின்றியே முத்இம் இதனை ஏற்றுக் கொண்டார். ஸவ்தாவை மணந்த சில மாதங்களின் பின்னர், ஆயிஷாவும் நபிகளாரின் மனைவியானார். நபிகளாரும் தந்தை அபூபக்ரும் ஒப்புக் கொண்ட ஏற்பாட்டின் மூலம் முடிவு செய்யப்பட்ட இம்மணத்தின் போது ஆயிஷாவின் பிரசன்னம் கூட இருக்கவில்லை. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஆயிஷா இது பற்றிக் கூறுகையில், ஒரு நாள் தங்களது வீட்டுக்கு வெளியே அண்டையில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தாயார் வந்து கைகளைப் பிடித்து வீட்டினுள் கொண்டு போய் விட்டு, இனிமேல் வெளியே சென்று விளையாடக் கூடாதெனவும், நண்பர்கள் இனிமேல் தேவையாயின் தன்னைத் தேடி வந்து விளையாடலாம் என்றும் கூறியபோது தான் தனது புதிய நிலைமை குறித்து அவருக்குக் குறிப்பமைந்தது என்றார். தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதெனத ் தாயார் கூறாவிடினும், ஆயிஷா காரணத்தை மதிப்பிட்டுக் கொண்டார். பாதையோரங்களில் விளையாடுவதைக் கைவிட்டு, வீட்டு வளவினுள் விளையாட்டுகளைத் தொடர வேண்டியிருந்ததேயொழிய ஆயிஷாவின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்து விடவில்லை.
இக்காலமளவில் அபூபக்ர், தன் வீட்டின் முன்னால் ஒரு சிறு பள்ளிவாசலை அமைத்துக் கொள்ள விரும்பினார். சுற்றிவர அது சுவர்களைக் கொண்டிருந்தாலும் மேலே திறந்து விடப்பட்டிருந்தது. வழியால் செல்வோரின் பார்வைக்குத் தடையாக விளங்குமளவு, சுவர்கள் உயர்ந்தனவாகவும் அமையவில்லை. அங்கேயே அபூபக்ர் தொழுவதையும் ஓதுவதையும் நிகழ்த்தி வந்தார். அவ்வழியாகச் செல்வோர், அவ்விடத்தில் நின்று அவர் ஓதுவதைக் கேட்டு நிற்பது வழக்கமாயிற்று. அவரை உள்ளூர உணர்விழக்கச் செய்த குர்ஆனின் மகத்துவத்தால் அபூபக்ர் அதற்குப் புரியும் பணிவினையும் அவர்கள் காணலாயினர். அபூபக்ரினால் மதமாற்றத்துக்கு உள்ளாகுபவர்கள் மேலும் அதிகரித்துச் செல்வர் என்ற அச்சம் உமையாவுக்கு ஏற்பட்டது. எனவே, உமையாவின் தூண்டுதல் காரணமாக, குறைஷித் தலைவர்கள் இப்ன்-துகன்னாவை சந்திக்கவென ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைத்தனர். துகன்னாவின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் போது கூறப்பட்டவை நினைவுறுத்தப்பட்டன. அபூபக்ரின் பள்ளிவாசல் சுவர்கள், அதனை அவரது வீட்டின் ஓர் அங்கம் எனக் கொள்ளுமளவு உயரமானவையல்ல என்பதனைத் தூதுக்குழுவினர் சுட்டிக் காட்டினர்.
“ அவர் தனது கடவுளை வீட்டினுள் வழிபடுவதாயின் அவ்வாறே செய்து கொள்ளட்டும். அல்லாமல் பகிரங்கமாகவே வழிபட முற்படுவாராயின், உமது பாதுகாப்பிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்ளும்படி அவரை வேண்டுவீராக ” என்றனர் குறைஷிகள். என்றாலும் அபூபக்ர் தனது பள்ளிவாசலைக் கைவிடத் தயாராக இல்லை. முறைப்படி அவர் இப்ன்-துகன்னாவுடன் பாதுகாப்பு ஏற்பாட்டினை ரத்துச் செய்து கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் அபூபக்ர் கூறினார் :
“ நான் இறைவனின் பாதுகாப்பில் திருப்தியுறுகிறேன். ”
இதே தினத்தில் தான் நபிகளார், அபூபக்ருக்கும் ஏனைய தோழர்களுக்கும் அறிவிப்பொன்றனை செய்தார்கள் :
“ நீங்கள் வெளியேறிச் செல்வதற்கான இடம் காட்டப்பட்டவனாக இருக்கின்றேன். நன்கு நீர் பாய்ச்சப்பட்டதொரு நிலத்தை, பேரீச்ச மரங்கள் நிறைந்து, இரு கருங்குன்றுகளுக்கிடைப்பட்ட ஒரு பிரதேசமாக நான் கண்டேன் ”
புகாரி : 37 : 7
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
துயர வருடம் கழிய, அடுத்த வருடத்து புனித யாத்திரைக்காலம் ஜூன் மாத ஆரம்பத்தில் வந்தது. யாத்திரிகர்கள் மினாவில் மூன்று நாட்கள் தங்கியிருப்பது வழக்கம். பலியீட்டுவைபவ நாளன்று நபிகளார் மினாவுக்குச் சென்றார்கள். வெவ்வேறு குழுவினரின் கூடாரங்களுக்குச் சென்று, தனக்குச் செவி சாய்ப்போருக்குப் போதனை செய்வது பல வருடங்களாக நபிகளாரின் வழக்கமாகி வந்திருந்தது. அவ்வேளைகளிலெல்லாம் தன் மனதை உந்தும் குர்ஆன் வாசகங்களையும் ஓதிக் காட்டுவார்கள். மக்காவிலிருந்து மினாவை அண்மிய இடமாக விளங்குவது அகபா. இங்கு சமவெளியிலிருந்து பாதை நேர்குத்துப்போல புனித நகரை நோக்கிய மலைகளை நோக்கி மேலெழும்புகின்றது. இந்த வருடம்தான் அகபாவில், நபிகளார், யத்ரிபின் கஸ்ரஜ் கோத்திரத்தோரான ஆறு பேரை சந்தித்தார்கள். இவ்வறுவரில் எவரையும் நபிகளார் அறிந்திருக்கவில்லை. ஆனால், நபிகளார் குறித்தும், அன்னாரது இறைதூதுவ பாத்யதை குறித்தும் அவ்வறுவரும் கேள்விப்பட்டிருந்தனர். நபிகளார் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களது முகங்கள் ஆர்வத்தால் பிரகாசித்தன. அன்னார் கூறுவதை அறுவரும் மிகக் கவனமாகச் செவி மடுத்துக் கேட்டனர். தமது அண்டை வாசிகளான யத்ரிப் யூதர்களின் அச்சுறுத்தல் அவர்கள் ஒவ்வொருவரது மனத்துள்ளும் நன்கு பதிந்திருந்தது. -

“ ஓர் இறை தூதர் வரும் காலம் நெருங்கி விட்டது : நாம் அவரைப் பின்பற்றி உங்களைக் கொன்றொழிப்போம் - ஆத் இராம்கள் அழிக்கப்பட்டது போல ”.
நபிகளார் தம் போதனையை முடித்துக் கொண்டதும் அவர்கள் ஒருவருக்கொருவர், ‘இவரே அண்மையில் வருவார் என யூதர்கள் எமக்குக் கூறிய இறைதூதர் : அன்னாரை அடைந்து கொள்வதில் அவர்கள் எம்மை முந்தி விடாதிருக்கட்டும்’ எனக் கூறிக் கொண்டனர். தொடர்ந்த சிறு உரையாடலின் பின்னர், அறுவரும் ஒவ்வொருவராக நபிகளாரின் தூதினை உண்மையெனக் கொண்டு சாட்சி கூறி, அன்னார் முன் வைத்த இஸ்லாமிய நியதிகளை ஏற்று நடப்பதாக உறுதி செய்தனர். அவர்கள் கூறினார்கள் :
“ நாம் எமது மக்களை விட்டு வைத்துள்ளோம் ; பகைமையாலும் தீமைகளாலும் பிரிந்து வாழும் மக்கள் அவர்களைப் போல் வேறு எவரும் இலர். உங்கள் மூலமாக இறைவன் அவர்களை ஒன்றிணைக்கலாம். நாம் ஏற்றுக் கொண்டது போல, உங்களது மதத்தை ஏற்று நடக்கும்படி நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுப்போம். இறைவன், உங்களைச் சூழ வர அவர்களை ஒன்றுபடுத்தக் கூடுமாயின், உங்களை விட மாட்சிமை வாய்ந்த மனிதர் வேறு யாரும் இருக்கமாட்டார் ” - இ.இ. 287
நபிகளார், பனீ ஜுமாஹ்களிடையே வாழ்ந்து வந்த அபூபக்ரை அடிக்கடி சென்று காணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்புகள் அபூபக்ரின் இளைய மகள் ஆயிஷாவின் இளமைக்காலத்து நினைவில் சிறப்பான இடம் பெற்றிருந்தன. தனது தந்தையும் தாயும் முஸ்லிம்களல்லாதவர்களாக இருந்த காலமோ, நபிகளார் தம் வீட்டுக்கு விருந்தினராக வராதிருந்த நாட்களோ ஆயிஷாவின் நினைவிலிருக்கவில்லை.
கதீஜா நாயகியின் மரணத்தை அடுத்த அதே ஆண்டில், ஒரு மனிதர் பட்டினால் சுற்றப்பட்ட பொதியொன்றனைச் சுமந்து வருவதாக நபிகளார் கனவொன்றில் கண்டார்கள். அம்மனிதர் நபிகளாரை நோக்கி, ‘திறந்து பாரும் - உமது துணைவியாரை’ என்றார். நபிகளார் பட்டை உயர்த்திப் பார்த்தார்கள். உள்ளே காணப்பட்டவர் ஆயிஷா. ஆயிஷாவின் வயதோ ஆறு. நபிகளாரோ ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக இருந்தார்கள். அது மட்டுமல்ல, அபூபக்ர் ஏற்கெனவே முத்இம்முடன் செய்து கொண்டிருந்த ஏற்பாடு, ஆயிஷா, முத்இம்மின் மகன் ஜுபைரை மணஞ்செய்து கொள்வதாக அமைந்திருந்தது. என்றாலும் நபிகளார் தமக்குள் கூறிக் கொண்டார்கள் :
‘இது இறைவனிடமிருந்து வருவதாயின், அவனே அதை முடித்து வைப்பான்’
( புகாரி : 91 : 20 )
சில இரவுகள் கழிய, நபிகளார் தமது நித்திரையில், மீண்டும் அதே பொதியை ஒரு வானவர் தூக்கி வருவதைக் கண்டார்கள். இப்போது நபிகளாரே வானவரிடம் பேசினார்கள் :
“ எனக்குக் காட்டுவீராக! ”. வானவர் பட்டினைத் தூக்கினார். மீண்டும் ஆயிஷா. நபிகளார் கூறினார்கள் : “ இது இறைவனிடமிருந்து வருவதொன்றாயின் அவனே அதை முடித்து வைப்பான். ”.
இதுவரை தனது கனவுகளை நபிகளார் எவருக்குமே கூறவில்லை. - அபூபக்ருக்குக்கூட, இப்போது வேறொரு முறையில் மூன்றாம் உறுதியுரை வந்தது. கதீஜா நாயகியின் மரணமுதற்கொண்டு, நபிகளாரின் தேவைகளனைத்தையும் மிக்க ஈடுபாட்டுடன் கவனித்து வந்தார், உத்மான்-இப்ன்-மஸ்ஊனின் மனைவியான கவ்லா. ஒரு நாள் நபிகளாரின் வீட்டில் அவர் இருந்த போது, கவ்லா நபிகளாரிடம் இன்னொரு மனைவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். தான் யாரை மணந்து கொள்ளலாம் என நபிகளார் வினவிய போது கவ்லாவின் பதிலாயமைந்தது :
“ அபூபக்ரின் மகள் ஆயிஷா அல்லது ஸம்ஆவின் மகள் ஸவ்தா. ”
ஸுஹைலின் ஒன்று விட்ட சகோதரியும், மைத்துனியுமான ஸவ்தா, முப்பது வயது நிரம்பப் பெற்றதொரு விதவையாக இருந்தார்.அவரது முதல் கணவரும் ஸுஹைலின் சகோதரருமான ஸக்ரான், தன் மனைவியுடன் அபிஸீனியாவுக்கு வெளியேறிச் சென்றிருந்தார். மக்காவுக்கு முதன் முதல் திரும்பி வந்தோரில் அவர்களும் உள்ளடங்கியிருந்தனர். திரும்பி வந்த சிறிது காலத்துள் ஸக்ரான் மரணமானார்.
இருவரையுமே மணந்து கொள்வதற்கு வேண்டிய ஆயத்தங்களை செய்யும்படி நபிகளார் கவ்லாவை வேண்டினார்கள். ஸவ்தாவின் பதிலாயிருந்தது : “ ஓ அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது சேவையில் இருக்கின்றேன். ” “ உம்மை மணஞ்செய்து தரும்படி உங்களில் ஒருவரை வேண்டுவீராக ” என மீண்டும் செய்தி அனுப்பினர் நபிகளார். அபிஸீனியாவிலிருந்து இக்காலை வந்து சேர்ந்து விட்ட தனது மைத்துனர் ஹாதிப்பைத் தேர்ந்து கொண்டார் ஸவ்தா. ஹாதிப், ஸவ்தாவை நபிகளாருக்கு மணஞ்செய்வித்தார்.
இதேவேளை அபூபக்ர், முத்இம்மைச் சந்தித்து அவரது மகனுக்கு ஆயிஷாவை மணஞ்செய்விக்கும் ஏற்பாட்டை கைவிடும்படி வேண்டிக்கொண்டார். சிரமங்கள் ஏதுமின்றியே முத்இம் இதனை ஏற்றுக் கொண்டார். ஸவ்தாவை மணந்த சில மாதங்களின் பின்னர், ஆயிஷாவும் நபிகளாரின் மனைவியானார். நபிகளாரும் தந்தை அபூபக்ரும் ஒப்புக் கொண்ட ஏற்பாட்டின் மூலம் முடிவு செய்யப்பட்ட இம்மணத்தின் போது ஆயிஷாவின் பிரசன்னம் கூட இருக்கவில்லை. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஆயிஷா இது பற்றிக் கூறுகையில், ஒரு நாள் தங்களது வீட்டுக்கு வெளியே அண்டையில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தாயார் வந்து கைகளைப் பிடித்து வீட்டினுள் கொண்டு போய் விட்டு, இனிமேல் வெளியே சென்று விளையாடக் கூடாதெனவும், நண்பர்கள் இனிமேல் தேவையாயின் தன்னைத் தேடி வந்து விளையாடலாம் என்றும் கூறியபோது தான் தனது புதிய நிலைமை குறித்து அவருக்குக் குறிப்பமைந்தது என்றார். தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதெனத
இக்காலமளவில் அபூபக்ர், தன் வீட்டின் முன்னால் ஒரு சிறு பள்ளிவாசலை அமைத்துக் கொள்ள விரும்பினார். சுற்றிவர அது சுவர்களைக் கொண்டிருந்தாலும் மேலே திறந்து விடப்பட்டிருந்தது. வழியால் செல்வோரின் பார்வைக்குத் தடையாக விளங்குமளவு, சுவர்கள் உயர்ந்தனவாகவும் அமையவில்லை. அங்கேயே அபூபக்ர் தொழுவதையும் ஓதுவதையும் நிகழ்த்தி வந்தார். அவ்வழியாகச் செல்வோர், அவ்விடத்தில் நின்று அவர் ஓதுவதைக் கேட்டு நிற்பது வழக்கமாயிற்று. அவரை உள்ளூர உணர்விழக்கச் செய்த குர்ஆனின் மகத்துவத்தால் அபூபக்ர் அதற்குப் புரியும் பணிவினையும் அவர்கள் காணலாயினர். அபூபக்ரினால் மதமாற்றத்துக்கு உள்ளாகுபவர்கள் மேலும் அதிகரித்துச் செல்வர் என்ற அச்சம் உமையாவுக்கு ஏற்பட்டது. எனவே, உமையாவின் தூண்டுதல் காரணமாக, குறைஷித் தலைவர்கள் இப்ன்-துகன்னாவை சந்திக்கவென ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைத்தனர். துகன்னாவின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் போது கூறப்பட்டவை நினைவுறுத்தப்பட்டன. அபூபக்ரின் பள்ளிவாசல் சுவர்கள், அதனை அவரது வீட்டின் ஓர் அங்கம் எனக் கொள்ளுமளவு உயரமானவையல்ல என்பதனைத் தூதுக்குழுவினர் சுட்டிக் காட்டினர்.
“ அவர் தனது கடவுளை வீட்டினுள் வழிபடுவதாயின் அவ்வாறே செய்து கொள்ளட்டும். அல்லாமல் பகிரங்கமாகவே வழிபட முற்படுவாராயின், உமது பாதுகாப்பிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்ளும்படி அவரை வேண்டுவீராக ” என்றனர் குறைஷிகள். என்றாலும் அபூபக்ர் தனது பள்ளிவாசலைக் கைவிடத் தயாராக இல்லை. முறைப்படி அவர் இப்ன்-துகன்னாவுடன் பாதுகாப்பு ஏற்பாட்டினை ரத்துச் செய்து கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் அபூபக்ர் கூறினார் :
“ நான் இறைவனின் பாதுகாப்பில் திருப்தியுறுகிறேன். ”
இதே தினத்தில் தான் நபிகளார், அபூபக்ருக்கும் ஏனைய தோழர்களுக்கும் அறிவிப்பொன்றனை செய்தார்கள் :
“ நீங்கள் வெளியேறிச் செல்வதற்கான இடம் காட்டப்பட்டவனாக இருக்கின்றேன். நன்கு நீர் பாய்ச்சப்பட்டதொரு நிலத்தை, பேரீச்ச மரங்கள் நிறைந்து, இரு கருங்குன்றுகளுக்கிடைப்பட்ட
புகாரி : 37 : 7
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment