பெ ய ர் வு கள் ப ல
நபிகளார் தம்மைப் பின்பற்றியவர்களை மக்காவிலிருந்தும் யத்ரிபுக்குப் புலம் பெயர்ந்து செல்ல ஊக்குவித்தார்கள். ஏற்கெனவே ஒருவர் அவ்வாறு சென்றிருந்தார். அபூதாலிபின் மரணத்தினால் அவரது மருமகன் அபூஸலாமாவுக்குப் பாதுகாப்பில்லாது போயிற்று. தனது சொந்தக் கோத்திரத்தாரை விட்டும் நீங்கி அடைக்கலம் தேட வேண்டிய நிலைக்குள்ளானார் அவர். மகன் ஸலாமாமைக் கையிலேந்தியவராகத் தன் மனைவி அமர்ந்திருந்த ஒட்டகத்தைத் தானே வழி நடாத்தி வடக்கு நோக்கிப் பயணமானார் அபூஸலாமா. மக்ஸூமின் அடுத்த கிளையினரான பனீ-அல்-முகீராவைச் சார்ந்தவராகவும், அபூஜஹ்லின் ஒன்றுவிட்ட சகோதரியாகவும் விளங்கினார் உம்ம்-ஸலாமா. அவரது குடும்ப அங்கத்தவர்கள் சிலர் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று அபூஸலாமாவின் கையிலிருந்த ஒட்டகக் கயிற்றைப் பறித்துக் கொண்டனர். தொகையில் மிகைத்திருந்த அவர்களை எதிர்த்து நிற்பது பயனளிக்காது என்பதை உணர்ந்த அபூஸலாமா, தம் மனைவியை அவர்களோடு திரும்பிச் செல்லுமாறு பணித்ததோடு வெகு விரைவிலேயே உம்ம் ஸலாமா தன்னுடன் சேர்ந்து கொள்ள ஆவன செய்வதாகக் கூறினார். என்றாலும் மக்ஸும் கோத்திரத்தாருள் அபூஸலாமாவின் கிளையினர் இதனைக் கேள்வியுற்றதும் சினங் கொண்டவர்களாக பனீ-அல்-முகீராக்களிடம் சென்று, குழந்தையைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டு பிரச்சினையைப் பெரிதாக்கி விட்டனர். இதனால் மிகவும் கொடூரமான முறையில் தந்தையும் தாயும் சேயும் பிரிந்து வாழ வேண்டியேற்படவே முழுக் கோத்திரத்தாரும் இவர்கள் மீது அனுதாபங் கொண்டு, மகனோடு சென்று கணரோடு வாழ உம்ம்-ஸலாமாவை அனுமதித்தனர். ஸலாமாவை எடுத்துக் கொண்டு வேறு எவரது துணையுமின்றி தாயார் ஒர் ஒட்டகத்திலேறிப் பயணமானுர். ஆறு மைல்களளவு சென்றதும் அப்த்-அத்தார் கோத்திரத்தைச் சேர்ந்த உத்மான்-இப்ன்-தல்ஹா என்பாரைச் சந்தித்தார் அவர். இஸ்லாத்தைத் தழுவியிருந்தவரல்ல உத்மான். உம்ம்-ஸலாமாவின் பிரயாண முடிவு வரை தான் வழிகாட்டி உதவுவதாகக் கூறி அதில் பிடிவாதமாகவும் நின்றார் அவர். அபூ ஸலாமா கூபாவில் இருப்பதாக அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். யத்ரிபின் தென் புறக் கோடியிலிருந்ததொரு கிராமம் அது. அவர்கள் கூபாவின் ஈச்சமரத் தோட்டமொன்றன் அருகில் வந்ததும், உத்மான், “ உமது கணவர் இந்தக் கிராமத்தில்தான் இருக்கின்றார்; இறைவனது ஆசீர்வாதத்துடன் இதில் நுழையும்” எனக் கூறி மக்கா நோக்கித் திரும்பிச் சென்று விட்டார். உத்மானின் கருணையையும் அன்பையும் ஒரு போதும் மறக்காத உம்ம் ஸலாமா எப்போதும் அவரது மேன்மையை வியந்தவராயிருந்தார்.

இரண்டாவது அகபா உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம்கள் பெருந்தொகையினராகப் புலம் பெயர்ந்து செல்லத் தொடங்கினர். முதலில் செல்லத் தொடங்கியோர் நபிகளாரின் ஏனைய ஒன்று விட்ட சகோதரர் சிலராவர். ஜஹ்ஷ்-உமைமா தம்பதியரின் குடும்பத்தில் நால்வர் சென்றனர். அவர்களது புதல்வர் அப்த்-அல்லாஹ் ; அவரது அந்தகச் சோதரர் அபூ அஹ்மத் ; இருவரதும் சகோதரியான ஸைனப், ஹம்னா ஆகியோர். நீண்ட காலமாக அப்த்-ஷம்ஸின் கூட்டுறவில் இருந்த பனீ-அஸத்களில் பலரும் உடன் சென்றனர். ஹம்ஸாவும் ஸைதும் அப்போதைக்குத் தம் மனைவியரை மக்காவில் விட்டுச் சென்றனர். உத்மான் ருகையாவைக் கூட்டிச் சென்றார். உமர் தனது மனைவி ஸைனப், மகள் ஹப்ஸா, இளம் மகன் அப்த்-அல்லாஹ் ஆகியோருடன் புறப்பட்டார். ஹப்ஸாவின் கணவர், ஸஹ்ம் கோத்திரத்தவரான குனைஸும் அவர்களோடிருந்தார். அபூ ஸலாமாவின் அரைச் சோதரர் அபூ ஸப்ரா, தனது மனைவியும் ஸுஹைலின் மகளுமான உம்ம்-குல்தூமைக் கூட்டிச் சென்றார். இம்முறை புலம் பெயர்ந்து சென்ற நபிகளாரின் ஏனைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஸுபைர், துலைப் ஆகியோராவர்.
அபூ பக்ர், அலீ ஆகியோரைத் தவிர நபிகளாருக்கு மிக நெருங்கியவர்களாயிருந்தோர் அனைவரும் மக்காவை விட்டும் அகன்று விட்டனர். தானும் புலம் பெயர்ந்து செல்ல நபிகளாரின் அனுமதியை வேண்டி நின்றார் அபூ பக்ர். நபிகளார் கூறினார்கள் : “ அவசரப் படாதீர் ; அல்லாஹ் உமக்கு வழித்துணையாக யாரையாவது தரக்கூடும் ”. தான் நபிகளாருக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்ட அபூ பக்ர், தனது ஒட்டகங்கள் இரண்டைக் கள்ளிமர உணவு கொடுத்து யத்ரிப் யாத்திரைக்காகத் தயார் செய்ய உத்தரவிட்டார்.
இப்பெயர்வுகளைத் தடுக்கத் தம்மாலான அனைத்தையும் குறைஷியர் செய்து வந்தனர். முன்னர் அபிஸீனியாவுக்குச் சென்றது போல இம்முறையும் ஸுஹைலின் அடுத்த மகள், தனது கணவர் அபூ-ஹுதைபாவுடன் சென்று விட்டார். என்றாலும் தனது மகன் அப்த்-அல்லாஹ் வெளியேறிவிட முயற்சிப்பதை எப்படியும் தடுத்து விட வேண்டும் என ஸுஹைல் திடசங்கற்பம் கொண்டிருந்தார். அதனால் அப்த்-அல்லாஹ் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதே நிலைக்குள்ளான மற்றொருவர், ஸஹ்மிய தலைவர் ஆஸ்ஸின் மகனான ஹிஷாம். அப்த்-அல்லாஹ்வைப் போலவே இவரும் அபிஸீனியா சென்றவர்களில் ஒருவர். முஸ்லிம் அகதிகளுக்கெதிராக நஜ்ஜாஷியின் அரசவைக்குத் தூது செல்லக் குறைஷியரால் தெரியப்பட்ட அம்ர், இந்த ஹிஷாமின் அரைச் சோதரர். ஹிஷாம், அம்ர் கண்ட தோல்வியையும், பட்ட அவமானத்தையும் நேரடியாகவே கண்டிருந்தார். ஹிஷாமின் ஒன்று விட்ட சகோதரரான உமர் ( இருவரது தாயாரும் சகோதரியர் ) ஹிஷாமுடன் ஓர் ஏற்பாடு செய்திருந்தார். மக்காவை விட்டும் தனித்தனியாக வெளியேறி சுமார் பத்து மைல்களுக்கப்பால் உள்ள அதாத் எனும் முள்மரங்கள் அடர்ந்த இடத்தில் சந்தித்து யத்ரிபுக்குச் செல்வதென்பதே ஏற்பாடு. மக்ஸுமின் அய்யாஷும் இவர்களோடு பிரயாணம் செய்யவிருந்தார். குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் ஹிஷாம் வந்து சேரவில்லை. ஒருவருக்கொருவர் காத்திருப்பதில்லை எனவும் அவர்கள் முடிவு செய்திருந்ததால் உமர், தன் குடும்பத்தாருடனும் அய்யாஷுடனும் பிரயாணமானார். ஹிஷாமின் தந்தையும், சகோதரரும் அவரது திட்டத்தை அறிந்தவர்களாகி, பலவந்தமாக அவரைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். அவர் மீது இவர்கள் பிரயோகித்த பலாத்காரமும் வற்புறுத்தல்களும் காரணமாக ஹிஷாம் இஸ்லாத்தைத் துறந்து விடவும் நேர்ந்தது.
உமருடன் சென்று அய்யாஷ் யத்ரிபை அடைந்தார். எனினும் அவரது அரைச் சோதரரான அபூஜஹ்லும் ஹாரிதும் அவரைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். மூவரதும் தாயார், அய்யாஷ்ன் மீது தன் கண்களைப் பதிக்கும் வரை தலை மயிர் வாருவதில்லை யெனவும், சூரிய வெப்பத்தினின்றும் ஒதுங்குவதில்லையெனவும் சூளுரைத்துள்ளார் என அவ்விருவரும் கூறினர். தாயின் சூளுரையினால் கலக்கமுற்றார் அய்யாஷ்.
அப்போது உமர் கூறினார்:
“உமது மதத்திலிருந்து உம்மைக் கெடுத்து விடுவதன்றி வேறெதனையும் நாடி வந்தவர்களல்ல இவர்கள். இறைவன் பெயரால், பேன்கள் உமது தாயாரைத் தொல்லைப்படுத்தும்போது அவர் சீப்பைப் பயன்படுத்துவார்; மக்காவின் உஷ்ணம் அவரைத் தாக்கும் போது அதினின்றும் ஒதுங்கி விடுவார்”.
ஆனால் அய்யாஷ் இவற்றிற்குச் செவி மடுப்பதாக இல்லை. சூளுரையினின்றும் தாயாரைக் காக்கவென அவர் மக்கா செல்லத் தீர்மானித்தார். தான் விட்டு வந்த ஒரு தொகைப் பணத்தைக் கொண்டு வரும் எண்ணமும் அவரிடமிருந்தது. மக்கா திரும்பும் வழியில் அபூ ஜஹ்லும் ஹாரிதும், அய்யாஷைப் பிடித்துக் கைகளையும் கால்களையும் கட்டி, அவரை ஒரு கைதியாகவே வீட்டுக்குக் கொண்டு சென்றனர். நகரத்தினுள் நுழையும் போது,
“ஓ மக்காவின் மக்களே! எமது இந்த மடையர்களுக்கு நாம் செய்தது போல, உங்களது மடையர்களுக்கு நீங்களும் செய்யுங்கள்” எனக் கோஷமிட்டனர் இருவரும்.
ஹிஷாமைப் போலவே அய்யாஷும் இஸ்லாத்தைத் துறந்து விட வற்புறுத்தப்பட்டார். எனினும் இருவரையும் பொறுத்தமட்டில் இஸ்லாத்தைத் துறக்க நேர்ந்தமை முடிந்த முடிபாக அமைந்து விடவில்லை. பிறரின் வற்புறுத்தலின் காரணமாகவாவது இஸ்லாத்தைத் துறந்ததன் மூலம் தாம் இழைத்துக் கொண்ட பெரும்பாவத்துக்கு எந்த விதமானதொரு மன்னிப்பும் கிடைக்கவே முடியாதென்றெண்ணுமளவு அவர்கள் மனக்கிலேசத்துக்குள்ளாகியிர ுந்தனர். உமரின் அபிப்பிராயமும் அவ்வாறே அமைந்தது. அவ்வேளை அருளப்பட்ட இறைவசனங்கள் கூறின :
எனது அடியார்களே! ( உங்களில் ) எவரும் வரம்பு மீறித் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும் அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிகையிழந்து விட வேண்டாம். ( நீங்கள் பாபத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால் ) நிச்சயமாக அல்லாஹ் ( உங்களுடைய ) பாபங்கள் யாவையும் மன்னித்து விடுவான். ஏனென்றால் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். ஆகவே ( மனிதர்களே! ) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடவுங்கள். ( வேதனை வந்து விட்டாலோ ) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
குர்ஆன் : 39 : 53,54
உமர் இவ்விறைவசனங்களின் பிரதியொன்றினை ஹிஷாமுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஹிஷாம் பின்னர் கூறினார் :
“ அது என்னை வந்தடைந்ததும் அதனை எனது கண்ணுக்கருகில் கொண்டு சென்றேன் ; பின் அதிலிருந்தும் தூர எடுத்தேன். என்னால் அதனை விளங்கிக் கொள்ள இயலவில்லை. பின்னர் நான் கூறினேன் :
‘ஓ இறைவா! என்னை அதனை விளங்கிக் கொள்ளச் செய்’.
அப்போது இறைவன் என் மனத்தினுள்ளே, எங்களுக்காகவே, நாம் எம்மைப் பற்றிக் கூறிக் கொண்டன ; எம்மைப் பற்றிப் பிறர் கூறியன என்பவற்றுக்காகவே இது அருளப்பட்டதென்பதனைப் புகுத்தினான். ”
ஹிஷாம் இதனை அய்யாஷுக்குக் காட்டினார்.
அவர்கள் மீண்டும் தமது இஸ்லாத்தைப் புதுப்பித்துக் கொண்டு தப்பிச் செல்வதற்கான தருணம் ஒன்றனை எதிர்ப்பார்த்திருந்தனர்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,

ஹிஷாமைப் போலவே அய்யாஷும் இஸ்லாத்தைத் துறந்து விட வற்புறுத்தப்பட்டார். எனினும் இருவரையும் பொறுத்தமட்டில் இஸ்லாத்தைத் துறக்க நேர்ந்தமை முடிந்த முடிபாக அமைந்து விடவில்லை. பிறரின் வற்புறுத்தலின் காரணமாகவாவது இஸ்லாத்தைத் துறந்ததன் மூலம் தாம் இழைத்துக் கொண்ட பெரும்பாவத்துக்கு எந்த விதமானதொரு மன்னிப்பும் கிடைக்கவே முடியாதென்றெண்ணுமளவு அவர்கள் மனக்கிலேசத்துக்குள்ளாகியிர
எனது அடியார்களே! ( உங்களில் ) எவரும் வரம்பு மீறித் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும் அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிகையிழந்து விட வேண்டாம். ( நீங்கள் பாபத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால் ) நிச்சயமாக அல்லாஹ் ( உங்களுடைய ) பாபங்கள் யாவையும் மன்னித்து விடுவான். ஏனென்றால் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். ஆகவே ( மனிதர்களே! ) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடவுங்கள். ( வேதனை வந்து விட்டாலோ ) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
குர்ஆன் : 39 : 53,54
உமர் இவ்விறைவசனங்களின் பிரதியொன்றினை ஹிஷாமுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஹிஷாம் பின்னர் கூறினார் :
“ அது என்னை வந்தடைந்ததும் அதனை எனது கண்ணுக்கருகில் கொண்டு சென்றேன் ; பின் அதிலிருந்தும் தூர எடுத்தேன். என்னால் அதனை விளங்கிக் கொள்ள இயலவில்லை. பின்னர் நான் கூறினேன் :
‘ஓ இறைவா! என்னை அதனை விளங்கிக் கொள்ளச் செய்’.
அப்போது இறைவன் என் மனத்தினுள்ளே, எங்களுக்காகவே, நாம் எம்மைப் பற்றிக் கூறிக் கொண்டன ; எம்மைப் பற்றிப் பிறர் கூறியன என்பவற்றுக்காகவே இது அருளப்பட்டதென்பதனைப் புகுத்தினான். ”
ஹிஷாம் இதனை அய்யாஷுக்குக் காட்டினார்.
அவர்கள் மீண்டும் தமது இஸ்லாத்தைப் புதுப்பித்துக் கொண்டு தப்பிச் செல்வதற்கான தருணம் ஒன்றனை எதிர்ப்பார்த்திருந்தனர்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment