து ய ர வ ரு ட ம்
கி.பி 619-ம் ஆண்டு, தடையுத்தரவு நீக்கப்பட்டுச் சில காழங் கழிய, நபிகளார், தமது மனைவி கதீஜாவின் மறைவினால் பெருந்துயருற்றார்கள். மரணத்தின் போது கதீஜா பிராட்டியாருக்கு வயது அறுபத்தைந்து. நபிகளார் தமது ஐம்பதாவது வயதை எட்டிக் கொண்டிருந்தார்கள். இருவரும் மிக்க மகிழ்ச்சிகரமானதொரு குடும்ப வாழ்க்கையை இருபத்தைந்து வருடங்களாக நடாத்தி வந்திருந்தனர். நல்லதொரு மனைவியாக மட்டுமன்றி, நெருங்கிய நண்பராக, முதிர்ந்த ஆலோசகராக, அலீ - ஸைத் உட்பட குடும்பத்தின் அனைவருக்கும் அருமைத் தாயாக விளங்கியவர் கதீஜா பிராட்டியார். அவரது புதல்வியர் நால்வரும் அளவிறந்த கவலைக்குள்ளாயினர். அவர்களுக்குப் பலவாறு தேறுதல் மொழிகள் கூறினர் நபிகளார். முன்னர் ஒரு முறை ஜிப்ரீல், இறைவனிடமிருந்து கதீஜாவுக்குச் சாந்தியும் சோபனமும் கொண்டு வந்தமையையும், சுவர்க்கத்தில் அவருக்குத் தனியிடம் அமைக்கப்பட்டுள்ளமையையும் கூறி ஆறுதலளித்தார்கள்.

சிறிது காலம் கழிய மற்றுமோர் இழப்பு ஏற்பட்டது. முந்திய இழப்பின் அளவு பாரதூரமானதோ பாரியதோ அல்லாவிடினும், ஈடுசெய்ய முடியாததாகவும், வெளிவிளைவுகளில் பெருந்தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்தது. அபூதாலிப் சுகவீனமுற்றார் ; அவரது மரணம் சமீபித்து விட்டமை உடனடியாகவே தெளிவாகியது. அவரது மரணத் தருவாயின் போது குறைஷியரின் தலைவர்கள் சிலர் ஒரு குழுவினராக அவரைக் காணச் சென்றனர். அப்த்-ஷம்ஸ் கோத்திரத்தின் உத்பா, ஷைபா, அபூஸுப்யான், ஜுமாஹ்வின் உமையா ; மக்ஸுமின் அபூஜஹ்ல் உட்பட மேலும் பலர் அவர்களுள் அடங்கியிருந்தனர். குழுவினர் கூறினர் :
“ ஓ அபூதாலிப்! உமக்கு நாம் அளித்திருக்கும் கெளரவம் நீர் அறியாததொன்றல்ல. உமக்கேற்பட்டிருக்கக் கூடிய இப்போதைய நிலையையும் நீர் காண்கிறீர். உமது இந்நிலைமைக் குறித்து நாம் அஞ்சுகின்றோம். எமக்கும் உமது சகோதரர் மகனுக்கும் இடையிலான விவகாரங்கள் குறித்தும் நீர் அறிவீர். அவரை உம்மிடம் அழையும். எம்மிடமிருந்து அவருக்கென ஓர் அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டு, அவரிடமிருந்து எமக்கென ஓர் அன்பளிப்பைப் பெற்றுத் தாரும். அவர் நமது விவகாரங்களில் தலையிடக் கூடாது ; நாம் அவருடைய விவகாரங்களில் தலையிட மாட்டோம். அவர் எம்மையும் எமது மதத்தையும் அமைதியாக இருக்க விடட்டும் ”
அபூதாலிப் நபிகளாரை வரவழைத்தார். “ எனது சகோதரன் மகனே! உமது மக்களில் மிக்க மேன்மையான இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி உமக்காக வந்திருக்கின்றார்கள் - கொடுக்கவும் எடுக்கவும் ” என்றார் அபூதாலிப்.
“ அவ்வாறே ஆகட்டும். நீங்கள் எனக்கு ஒரேயொரு வாக்குறுதி தாருங்கள் ; அவ்வாக்குறுதி மூலம் நீங்கள் அறாபியர்களனைவர் மீதும் மேலாதிக்கம் செலுத்தலாம் ; அத்தோடு பாரசிகர்களும் உங்கள் குடிமக்களாவர் ” என்றனர் நபிகளார்.
“ அவ்வாறே நிகழுமாயின் உமது தந்தை மீது ஆணையாக, நிச்சயம் நாம் வாக்குறுதி தருவோம் ; ஒன்றல்ல பத்து வாக்குறுதிகளையும் அளிப்போம் ” என்றார் அபூ ஜஹ்ல்.
“ வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லையென உறுதி கூறி, அவனைத்தவிர நீங்கள் வணங்கி வரும் அத்தனையையும் கைவிட்டு விட வேண்டும். ” என்றார்கள் நபிகளார். அவர்கள் தமது கைகளைத் தட்டியவர்களாக எழுந்து
“ ஓ முஹம்மதே! எல்லாக் கடவுளரையும் ஒரே கடவுளாக்கிவிட உம்மால் முடிந்ததா? உமது கட்டளை நிச்சயமாக புதுமையாக இருக்கின்றது ” என்றார்கள். பின்னர் அவர்கள் தம்மிடையே ஒருவர்க்கொருவர், “ நீங்கள் கேட்பது எதனையும் இந்த மனிதர் தரமாட்டார். எனவே நீங்கள் உங்கள் வழிகளிலேயே சென்று, உங்களது தந்தையரின் மார்க்கத்தையே பின்பற்றி வாருங்கள் - உங்களுக்கும் அவருக்கும் இடையில் இறைவனே ஒரு தீர்ப்பு அளிக்கும் வரை ” எனக் கூறியவர்களாகப் பிரிந்து சென்றார்கள்.
அவர்கள் சென்ற பின்னர், அபூதாலிப் நபிகளாரிடம் கூறினார் ;
“ என் சகோதரன் மகனே! நான் பார்த்த அளவில் அவர்களால் செய்ய முடியாதது எதனையும் நீர் அவர்களிடம் கேட்டு நிற்கவில்லை ”. அவரது இக்கூற்றின் காரணமாக அவர் எப்படியும் இஸ்லாத்தின் பாலாகி விட வேண்டும் என நபிகளார் அவாவினார்கள்.
“ பெரிய தந்தையாரே! அவ்வாக்குறுதியை நீங்கள் கூறுவீர்களாக! அதன் மூலம் மீளவுயிர்ப்பிக்கும் மறுமை நாளில் உங்களுக்காகப் பரிந்து பேச எனக்குக் கூடுமாயிருக்கும் ” என்றனர் நபிகளார்.
“ என் சகோதரன் மகனே! மரணத்துக்கு அஞ்சியவனாகத்தான் நான் இந்த வாசகங்களை ஏற்றுக் கொண்டேன் எனக் குறைஷியர் நினைக்காமலிருப்பார்களாயின் நிச்சயம் அவற்றை நான் கூறுவேன். அவ்வாறு நான் கூறினும் அது உம்மைத் திருப்தி செய்வதற்காகவே இருக்கும் ” என்றார் அபூதாலிப்.
பின்னர் அவரை மரணம் மிகவும் நெருங்கிய வேளை உதடுகள் அசையலாயின. உடனிருந்த அப்பாஸ், அபூதாலிபின் உதடுகளை நெருக்கித் தனது செவியொன்றை வைத்தவராக நபிகளாரை நோக்கி
“ நீர் கூறச் சொன்னவற்றை எனது சகோதரர் உரைக்க நான் கேட்டேன் ” என்றார்.
ஆனாலும் நபிகளார் கூறினார்கள் :
“ அவை என் செவிகளை எட்டவில்லை ” .
அதிகாரபூர்வமான பாதுகாப்புப் பெற்றிராத விசுவாசிகள் மக்காவில் சுதந்திரமாக வாழ்வது பிரச்சினைக்குறிய ஒரு விஷயமாக அமைந்தது. நபிகளாரை சேர்ந்து கொள்ளுமுன்னர் அபூபக்ர் குறிப்பிடத்தக்க செல்வாக்குடைய ஒருவராக விளங்கி வந்தார். ஆனால் உமர், ஹம்ஸா ஆகியோரைப் போல அவர் பிறரை அச்சுறுத்தக் கூடிய ஒருவராக இல்லை. ஆன்மீக மேன்மைக்காக அவர் கெளரவிக்கப்பட்டு வந்தாரேயொழிய, அவரைக் கண்டு எவரும் அஞ்சுவதாக இல்லை. இஸ்லாத்தை தழுவியதன் காரணமாக அவருக்கும் குறைஷித் தலைவர்களுக்குமிடையே பெரியதொரு தடை ஏற்பட்டு விட்ட நிலையில் அவர்களிடையான அபூபக்ரின் செல்வாக்கு முற்றிலும் இழக்கப்பட்டதொன்றாயது. மறுபுறம், புதிய மதத்தைப் பின்பற்றி வந்த சமுகத்தவரிடை மட்டுமே அவரது மதிப்பு உயர்ந்து செல்லலாயது. மேலும் பலரது மதமாற்றத்துக்குக் காரண கர்த்தாவாக இருந்தவர் அவர் என்ற காரணத்தால் மக்கத்துச் சூழலில் அபூபக்ரின் நிலைமை மிக்க பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியது. அபூபக்ரும் தல்ஹாவும் ஒரு நாள் தாக்குதலுக்குள்ளானார்கள். இத்தாக்குதலை ஒழுங்கு படுத்தியவர் கதீஜாவின் அரைச் சோதரரான நவ்பல். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருவரும் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டவர்களாகப் பொதுப்பாதை நடுவே இடப்பட்டிருந்தனர். நவ்பலின் மகன் அஸ்வத்தை இவர்களிருவரும் இஸ்லாத்தினுள் இணையச் செய்தமையே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இச்சம்பவத்தின் போது அஸத் கோத்திரத்து நவ்பலுக்கெதிராக தையிம் கோத்திரத்தார் எவரும் முன்வரவில்லை. இது, தமது கோத்திரத்தின் இருபெரும் அங்கத்தவர்களான அபூபக்ரையும் தல்ஹாவையும் அவர்கள் கைவிட்டு விட்டமையையே குறிப்பதாக அமைந்தது.
வேறு பல சம்பவங்களும் நிகழ்ந்திருக்கலாம். பிலாலின் முன்னைய எஜமானர் உமையாவுடனான தொடர்புகள் அபூபக்ருக்கு வரவரத் தீங்குகளையே அதிகரித்து வந்தன. உமையா ஜுமாஹ் கோத்திரத்துத் தலைவராக இருந்து வந்தார். அபூபக்ரும் ஜுமாஹ்களின் குடியிருப்புப் பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்தார். புலம் பெயர்ந்து செல்வதைத் தவிர தனக்கு வேறு மார்க்கமேதும் இல்லையெனக் கருத வேண்டியிருந்த நிலைக்கு அபூபக்ர் தள்ளப்பட்டார். நபிகளாரின் அனுமதியைப் பெற்ற அவர், அபிஸீனியாவில் தங்கியிருந்தவர்களைச் சென்றடைய முடிவு செய்தார். எனினும் அவர் செங்கடலை அடையுமுன்னமேயே, மக்காவிலிருந்தும் அதிக தூரத்திலில்லாத சில குழுக்களை ஒன்றிணைத்த ஓர் ஒன்றிய அமைப்பின் தலைவராயிருந்த இப்ன்-அத்-துகன்னாவைச் சந்தித்தார். இவ்வொன்றிய அமைப்பைச் சார்ந்தோர் குறைஷியருடன் பரஸ்பர ஒப்பந்தங்கள் பல செய்திருந்தனர்.
இந்த நாடோடித் தலைவர் துகன்னா, செல்வந்தராகவும் செல்வாக்குடையவராகவும் அபூபக்ர் வாழ்ந்து வந்த காலங்களில் அவரை நன்கறிந்திருந்தார். அதே அபூபக்ர், நாடோடியாயலைந்து திரியும் சாதுவைப் போன்றதொரு தோற்றத்துடன் காணப்பட்டமை அவரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது . நடந்ததென்னவென்று அவர் அபூபக்ரை வினவினார்.
“ எனது மக்கள் என்னைத் துன்புறுத்திப் பிரஷ்டம் செய்து விட்டார்கள். இறைவனது தியானத்தில் மூழ்கியவனாக உலகத்தின் மீது பிரயாணம் செய்து கொண்டிருப்பது மட்டுமே நான் இப்போது வேண்டுவது. ” என்றார் அபூபக்ர்.
“ ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள்? நீர் உமது கோத்திரத்துக்கு ஓர் அணிகலனாக இருப்பவர் ; துரதிஷ்டம் வரும்போது கைகொடுத்து உதவுபவர் ; நன்மையே செய்பவர் ; எப்போதும் பிறர் தேவைகளைப் பூர்த்தி செய்பவர். திரும்பிச் செல்லும் - நீர் எனது பாதுகாப்பில் இருக்கின்றீர் ” என்றார் துகன்னா.
அபூபக்ரை மக்காவுக்குத் திருப்பியழைத்துச் சென்ற அவர், அங்கிருந்தவர்களிடம் கூறினார் :
“ குறைஷி மக்களே! நான் அபூ குஹாபாவின் மகனுக்குப் பாதுகாப்பளிக்கின்றேன். நலமாகவே அவரை நடத்துவீர்களாக! "
இப்பாதுகாப்பு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய குறைஷியர் அபூபக்ர் எவ்விதத்திலும் துயரிழைக்கப்பட மாட்டார் என வாக்குறுதியளித்தனர். எனினும் பனீஜுமாஹ்களின் தூண்டுதலினால் அவர்கள்,
“ தனது கதவுகளின் உள்ளேயே அவரது கடவுளை வணங்கச் சொல்லும், ஓதுதல் அனைத்தையும் உள்ளேயே வைத்துக் கொள்ளும்படி கூறும். அவை வெளியே தெரிவதோ கேட்பதோ எமக்குத் தொல்லை தருவதாக முடியும். ஏனெனில் அவரது தோற்றம் பலம் வாய்ந்தது. தனக்கெனத் தனி வழிகளைக் கொண்டவராக இருக்கின்றார் அவர். எமது மக்களையும் பெண்களையும் அவர் கெடுத்து விடுவாரோ என நாம் அஞ்சுகின்றோம் ” என துகன்னாவிடம் கூறினார்கள்.
துகன்னா அவற்றை அபூபக்ருக்குக் கூறி வைத்தார்.
அபூபக்ர் தன் வீட்டினுள்ளேயே தொழுது, குர்ஆன் ஓதி வரலானார்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
கி.பி 619-ம் ஆண்டு, தடையுத்தரவு நீக்கப்பட்டுச் சில காழங் கழிய, நபிகளார், தமது மனைவி கதீஜாவின் மறைவினால் பெருந்துயருற்றார்கள். மரணத்தின் போது கதீஜா பிராட்டியாருக்கு வயது அறுபத்தைந்து. நபிகளார் தமது ஐம்பதாவது வயதை எட்டிக் கொண்டிருந்தார்கள். இருவரும் மிக்க மகிழ்ச்சிகரமானதொரு குடும்ப வாழ்க்கையை இருபத்தைந்து வருடங்களாக நடாத்தி வந்திருந்தனர். நல்லதொரு மனைவியாக மட்டுமன்றி, நெருங்கிய நண்பராக, முதிர்ந்த ஆலோசகராக, அலீ - ஸைத் உட்பட குடும்பத்தின் அனைவருக்கும் அருமைத் தாயாக விளங்கியவர் கதீஜா பிராட்டியார். அவரது புதல்வியர் நால்வரும் அளவிறந்த கவலைக்குள்ளாயினர். அவர்களுக்குப் பலவாறு தேறுதல் மொழிகள் கூறினர் நபிகளார். முன்னர் ஒரு முறை ஜிப்ரீல், இறைவனிடமிருந்து கதீஜாவுக்குச் சாந்தியும் சோபனமும் கொண்டு வந்தமையையும், சுவர்க்கத்தில் அவருக்குத் தனியிடம் அமைக்கப்பட்டுள்ளமையையும் கூறி ஆறுதலளித்தார்கள்.

சிறிது காலம் கழிய மற்றுமோர் இழப்பு ஏற்பட்டது. முந்திய இழப்பின் அளவு பாரதூரமானதோ பாரியதோ அல்லாவிடினும், ஈடுசெய்ய முடியாததாகவும், வெளிவிளைவுகளில் பெருந்தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்தது. அபூதாலிப் சுகவீனமுற்றார் ; அவரது மரணம் சமீபித்து விட்டமை உடனடியாகவே தெளிவாகியது. அவரது மரணத் தருவாயின் போது குறைஷியரின் தலைவர்கள் சிலர் ஒரு குழுவினராக அவரைக் காணச் சென்றனர். அப்த்-ஷம்ஸ் கோத்திரத்தின் உத்பா, ஷைபா, அபூஸுப்யான், ஜுமாஹ்வின் உமையா ; மக்ஸுமின் அபூஜஹ்ல் உட்பட மேலும் பலர் அவர்களுள் அடங்கியிருந்தனர். குழுவினர் கூறினர் :
“ ஓ அபூதாலிப்! உமக்கு நாம் அளித்திருக்கும் கெளரவம் நீர் அறியாததொன்றல்ல. உமக்கேற்பட்டிருக்கக் கூடிய இப்போதைய நிலையையும் நீர் காண்கிறீர். உமது இந்நிலைமைக் குறித்து நாம் அஞ்சுகின்றோம். எமக்கும் உமது சகோதரர் மகனுக்கும் இடையிலான விவகாரங்கள் குறித்தும் நீர் அறிவீர். அவரை உம்மிடம் அழையும். எம்மிடமிருந்து அவருக்கென ஓர் அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டு, அவரிடமிருந்து எமக்கென ஓர் அன்பளிப்பைப் பெற்றுத் தாரும். அவர் நமது விவகாரங்களில் தலையிடக் கூடாது ; நாம் அவருடைய விவகாரங்களில் தலையிட மாட்டோம். அவர் எம்மையும் எமது மதத்தையும் அமைதியாக இருக்க விடட்டும் ”
அபூதாலிப் நபிகளாரை வரவழைத்தார். “ எனது சகோதரன் மகனே! உமது மக்களில் மிக்க மேன்மையான இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி உமக்காக வந்திருக்கின்றார்கள் - கொடுக்கவும் எடுக்கவும் ” என்றார் அபூதாலிப்.
“ அவ்வாறே ஆகட்டும். நீங்கள் எனக்கு ஒரேயொரு வாக்குறுதி தாருங்கள் ; அவ்வாக்குறுதி மூலம் நீங்கள் அறாபியர்களனைவர் மீதும் மேலாதிக்கம் செலுத்தலாம் ; அத்தோடு பாரசிகர்களும் உங்கள் குடிமக்களாவர் ” என்றனர் நபிகளார்.
“ அவ்வாறே நிகழுமாயின் உமது தந்தை மீது ஆணையாக, நிச்சயம் நாம் வாக்குறுதி தருவோம் ; ஒன்றல்ல பத்து வாக்குறுதிகளையும் அளிப்போம் ” என்றார் அபூ ஜஹ்ல்.
“ வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லையென உறுதி கூறி, அவனைத்தவிர நீங்கள் வணங்கி வரும் அத்தனையையும் கைவிட்டு விட வேண்டும். ” என்றார்கள் நபிகளார். அவர்கள் தமது கைகளைத் தட்டியவர்களாக எழுந்து
“ ஓ முஹம்மதே! எல்லாக் கடவுளரையும் ஒரே கடவுளாக்கிவிட உம்மால் முடிந்ததா? உமது கட்டளை நிச்சயமாக புதுமையாக இருக்கின்றது ” என்றார்கள். பின்னர் அவர்கள் தம்மிடையே ஒருவர்க்கொருவர், “ நீங்கள் கேட்பது எதனையும் இந்த மனிதர் தரமாட்டார். எனவே நீங்கள் உங்கள் வழிகளிலேயே சென்று, உங்களது தந்தையரின் மார்க்கத்தையே பின்பற்றி வாருங்கள் - உங்களுக்கும் அவருக்கும் இடையில் இறைவனே ஒரு தீர்ப்பு அளிக்கும் வரை ” எனக் கூறியவர்களாகப் பிரிந்து சென்றார்கள்.
அவர்கள் சென்ற பின்னர், அபூதாலிப் நபிகளாரிடம் கூறினார் ;
“ என் சகோதரன் மகனே! நான் பார்த்த அளவில் அவர்களால் செய்ய முடியாதது எதனையும் நீர் அவர்களிடம் கேட்டு நிற்கவில்லை ”. அவரது இக்கூற்றின் காரணமாக அவர் எப்படியும் இஸ்லாத்தின் பாலாகி விட வேண்டும் என நபிகளார் அவாவினார்கள்.
“ பெரிய தந்தையாரே! அவ்வாக்குறுதியை நீங்கள் கூறுவீர்களாக! அதன் மூலம் மீளவுயிர்ப்பிக்கும் மறுமை நாளில் உங்களுக்காகப் பரிந்து பேச எனக்குக் கூடுமாயிருக்கும் ” என்றனர் நபிகளார்.
“ என் சகோதரன் மகனே! மரணத்துக்கு அஞ்சியவனாகத்தான் நான் இந்த வாசகங்களை ஏற்றுக் கொண்டேன் எனக் குறைஷியர் நினைக்காமலிருப்பார்களாயின்
பின்னர் அவரை மரணம் மிகவும் நெருங்கிய வேளை உதடுகள் அசையலாயின. உடனிருந்த அப்பாஸ், அபூதாலிபின் உதடுகளை நெருக்கித் தனது செவியொன்றை வைத்தவராக நபிகளாரை நோக்கி
“ நீர் கூறச் சொன்னவற்றை எனது சகோதரர் உரைக்க நான் கேட்டேன் ” என்றார்.
ஆனாலும் நபிகளார் கூறினார்கள் :
“ அவை என் செவிகளை எட்டவில்லை ” .
அதிகாரபூர்வமான பாதுகாப்புப் பெற்றிராத விசுவாசிகள் மக்காவில் சுதந்திரமாக வாழ்வது பிரச்சினைக்குறிய ஒரு விஷயமாக அமைந்தது. நபிகளாரை சேர்ந்து கொள்ளுமுன்னர் அபூபக்ர் குறிப்பிடத்தக்க செல்வாக்குடைய ஒருவராக விளங்கி வந்தார். ஆனால் உமர், ஹம்ஸா ஆகியோரைப் போல அவர் பிறரை அச்சுறுத்தக் கூடிய ஒருவராக இல்லை. ஆன்மீக மேன்மைக்காக அவர் கெளரவிக்கப்பட்டு வந்தாரேயொழிய, அவரைக் கண்டு எவரும் அஞ்சுவதாக இல்லை. இஸ்லாத்தை தழுவியதன் காரணமாக அவருக்கும் குறைஷித் தலைவர்களுக்குமிடையே பெரியதொரு தடை ஏற்பட்டு விட்ட நிலையில் அவர்களிடையான அபூபக்ரின் செல்வாக்கு முற்றிலும் இழக்கப்பட்டதொன்றாயது. மறுபுறம், புதிய மதத்தைப் பின்பற்றி வந்த சமுகத்தவரிடை மட்டுமே அவரது மதிப்பு உயர்ந்து செல்லலாயது. மேலும் பலரது மதமாற்றத்துக்குக் காரண கர்த்தாவாக இருந்தவர் அவர் என்ற காரணத்தால் மக்கத்துச் சூழலில் அபூபக்ரின் நிலைமை மிக்க பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியது. அபூபக்ரும் தல்ஹாவும் ஒரு நாள் தாக்குதலுக்குள்ளானார்கள். இத்தாக்குதலை ஒழுங்கு படுத்தியவர் கதீஜாவின் அரைச் சோதரரான நவ்பல். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருவரும் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டவர்களாகப் பொதுப்பாதை நடுவே இடப்பட்டிருந்தனர். நவ்பலின் மகன் அஸ்வத்தை இவர்களிருவரும் இஸ்லாத்தினுள் இணையச் செய்தமையே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இச்சம்பவத்தின் போது அஸத் கோத்திரத்து நவ்பலுக்கெதிராக தையிம் கோத்திரத்தார் எவரும் முன்வரவில்லை. இது, தமது கோத்திரத்தின் இருபெரும் அங்கத்தவர்களான அபூபக்ரையும் தல்ஹாவையும் அவர்கள் கைவிட்டு விட்டமையையே குறிப்பதாக அமைந்தது.
வேறு பல சம்பவங்களும் நிகழ்ந்திருக்கலாம். பிலாலின் முன்னைய எஜமானர் உமையாவுடனான தொடர்புகள் அபூபக்ருக்கு வரவரத் தீங்குகளையே அதிகரித்து வந்தன. உமையா ஜுமாஹ் கோத்திரத்துத் தலைவராக இருந்து வந்தார். அபூபக்ரும் ஜுமாஹ்களின் குடியிருப்புப் பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்தார். புலம் பெயர்ந்து செல்வதைத் தவிர தனக்கு வேறு மார்க்கமேதும் இல்லையெனக் கருத வேண்டியிருந்த நிலைக்கு அபூபக்ர் தள்ளப்பட்டார். நபிகளாரின் அனுமதியைப் பெற்ற அவர், அபிஸீனியாவில் தங்கியிருந்தவர்களைச் சென்றடைய முடிவு செய்தார். எனினும் அவர் செங்கடலை அடையுமுன்னமேயே, மக்காவிலிருந்தும் அதிக தூரத்திலில்லாத சில குழுக்களை ஒன்றிணைத்த ஓர் ஒன்றிய அமைப்பின் தலைவராயிருந்த இப்ன்-அத்-துகன்னாவைச் சந்தித்தார். இவ்வொன்றிய அமைப்பைச் சார்ந்தோர் குறைஷியருடன் பரஸ்பர ஒப்பந்தங்கள் பல செய்திருந்தனர்.
இந்த நாடோடித் தலைவர் துகன்னா, செல்வந்தராகவும் செல்வாக்குடையவராகவும் அபூபக்ர் வாழ்ந்து வந்த காலங்களில் அவரை நன்கறிந்திருந்தார். அதே அபூபக்ர், நாடோடியாயலைந்து திரியும் சாதுவைப் போன்றதொரு தோற்றத்துடன் காணப்பட்டமை அவரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது
“ எனது மக்கள் என்னைத் துன்புறுத்திப் பிரஷ்டம் செய்து விட்டார்கள். இறைவனது தியானத்தில் மூழ்கியவனாக உலகத்தின் மீது பிரயாணம் செய்து கொண்டிருப்பது மட்டுமே நான் இப்போது வேண்டுவது. ” என்றார் அபூபக்ர்.
“ ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள்? நீர் உமது கோத்திரத்துக்கு ஓர் அணிகலனாக இருப்பவர் ; துரதிஷ்டம் வரும்போது கைகொடுத்து உதவுபவர் ; நன்மையே செய்பவர் ; எப்போதும் பிறர் தேவைகளைப் பூர்த்தி செய்பவர். திரும்பிச் செல்லும் - நீர் எனது பாதுகாப்பில் இருக்கின்றீர் ” என்றார் துகன்னா.
அபூபக்ரை மக்காவுக்குத் திருப்பியழைத்துச் சென்ற அவர், அங்கிருந்தவர்களிடம் கூறினார் :
“ குறைஷி மக்களே! நான் அபூ குஹாபாவின் மகனுக்குப் பாதுகாப்பளிக்கின்றேன். நலமாகவே அவரை நடத்துவீர்களாக! "
இப்பாதுகாப்பு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய குறைஷியர் அபூபக்ர் எவ்விதத்திலும் துயரிழைக்கப்பட மாட்டார் என வாக்குறுதியளித்தனர். எனினும் பனீஜுமாஹ்களின் தூண்டுதலினால் அவர்கள்,
“ தனது கதவுகளின் உள்ளேயே அவரது கடவுளை வணங்கச் சொல்லும், ஓதுதல் அனைத்தையும் உள்ளேயே வைத்துக் கொள்ளும்படி கூறும். அவை வெளியே தெரிவதோ கேட்பதோ எமக்குத் தொல்லை தருவதாக முடியும். ஏனெனில் அவரது தோற்றம் பலம் வாய்ந்தது. தனக்கெனத் தனி வழிகளைக் கொண்டவராக இருக்கின்றார் அவர். எமது மக்களையும் பெண்களையும் அவர் கெடுத்து விடுவாரோ என நாம் அஞ்சுகின்றோம் ” என துகன்னாவிடம் கூறினார்கள்.
துகன்னா அவற்றை அபூபக்ருக்குக் கூறி வைத்தார்.
அபூபக்ர் தன் வீட்டினுள்ளேயே தொழுது, குர்ஆன் ஓதி வரலானார்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment