ம தீ னா வி னு ள் நு ழை த ல்
நபிகளார் பாலைச் சோலையை கி.பி. 622 செப்டம்பர் மாதம் 27 - ந் திகதி திங்கட்கிழமை சென்றடைந்தார்கள். கிட்டிய பல செய்திகள், மதீனாவாசிகள் நபிகளாரின் வருகையை எதிர்ப்பார்த்துப் பொறுமையிழந்தவர்களாக இருந்து வந்தமையைச் சுட்டி நின்றன. எனவே நபிகளார் மூன்று முழு நாட்களே கூபாவில் தங்கியிருந்தார்கள். பள்ளிவாசலொன்றனுக்கான அத்திவாரத்தையும் அமைத்தார்கள். இதுவே இஸ்லாத்தில் முதன் முதல் கட்டப்பட்ட பள்ளிவாசல். வெள்ளிக்கிழமை காலை கூபாவிலிருந்து புறப்பட்ட நபிகளாரும் தோழர்களும் பகல் வேளையில் தொழுவதற்கென ரானூனா வெளியில் தங்கினர். கஸ்ரஜ் கோத்திரத்தரான பனீஸாலிம் மக்கள் அன்னாரை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுடன் தொழுகை நடாத்தப்பட்டது. இதுவே நபிகளார் இனிமேல் தமது நிரந்தர வசிப்பிடமாக விளங்கவிருக்கும் ஊரில் நடாத்திய முதலாவது வெள்ளிக்கிழமைத் தொழுகையாகும். பனீ-அந்-நஜ்ஜாரிலிருந்து நபிகளாரது உறவினர் சிலர் அன்னாரைக் காணவென வந்திருந்தனர் ; பனீ அம்ரின் சில அங்கத்தவர்கள் கூபாவிலிருந்து வழித்துணையாக வந்திருந்தனர். அனைவரும் ஒன்று சேர கூட்டுத் தொழுகையில் சுமார் நூறு பேரளவு கலந்து கொண்டனர். தொழுகையின் பின்னர் நபிகளார் கஸ்வாவின் மீதும், அபூபக்ரும் ஏனையோரும் தத்தமது ஒட்டகங்களின் மீதுமாக நகரத்தை நோக்கி அனைவரும் செல்லலாயினர். இவர்களது வலப்புறமும் இடப்புறமுமாக அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தவர்கள் ஆயுத பாணியராக, வாள்களைக் கையிலேந்தி வந்து கொண்டிருந்தனர். இது மரியாதை அணிவகுப்பொன்றாக அமைந்திருந்தது. எவ்வித பாதுகாப்பும் தேவையற்றிருந்த அப்போதைய நிலையில், தாம் முன்னர் அண்ணலாரைப் பாதுகாப்பதாகக் கொடுத்த வாக்குறுதி வெறும் வார்த்தையளவினதானதல்ல என்பதை உணர்த்துவதாகவே இது பெரிதும் அமைந்தது. அதைப் போன்றதொரு மகிழ்ச்சிகரமான நாள் இல்லவே இல்லை.

“ அல்லாஹ்வின் தூதர் வந்துவிட்டார்! அல்லாஹ்வின் தூதர் வந்து விட்டார்! ”
- என்ற மகிழ்ச்சி ஆரவாரம் வழி நெடுக நின்றிருந்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரது குரல்களையும் ஈர்த்துப் பெரும் முழக்கத்தை ஏற்படுத்தி நின்றது. மதினாவின் தென் புறத்துத் தோட்டங்கள், பேரீச்ச மரத் தோப்புகள் ஊடாகச் செல்லும் போது கஸ்வா மெதுவாகவும் கம்பீரமாகவும் நடந்து சென்றது. வீடுகள் சிலவாகவும், பெரும் இடைவெளிகளோடு அமைந்தனவாகவும் இருந்தன. படிப்படியாக அவர்கள் ஜனநெருக்கம் மிஞ்சிய பகுதிகளை அடைந்தனர். பலரும் நபிகளாரை அன்புடன் அழைக்கலாயினர்.
“ அல்லாஹ்வின் தூதரே! இங்கே இறங்குங்கள். உங்களையும் அதிகமானோரையும் பாதுகாக்க வேண்டிய பலம் எங்களிடம் இருக்கின்றது ” என்றார்கள்.
பல இடங்களில் ஒருவர் அல்லது ஒரு குழுவினர் கஸ்வாவின் கடிவாளத்தைப் பிடித்து நிறுத்தினர். ஒவ்வொரு முறையும் நபிகளார் அவர்களை ஆசீர்வாதம் செய்து கூறினார்கள் :
“ அது தன் வழியில் செல்லட்டும் ; இறைவனின் கட்டளையின் கீழ் இருக்கின்றது அது. ”
கஸ்வா, நபிகளாரின் மிக நெருங்கிய உறவினர்களாயிருந்த, கஸ்ரஜீய நஜ்ஜார்களின் அதீ கிளையினர் தங்கியிருந்த வீடுகளின் பக்கல் செல்வது போலிருந்தது. அவர்களில் அதிகமானோர் தங்கியிருந்த நகரின் கிழக்குப் புறமாக அது சென்றது. அனைவரும் நபிகளார் தம்முடனேயே தங்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டு நின்றனர். எனினும் நபிகளார் சிறு வயதில் தம் தாயாருடன் தங்கியிருந்த வீடு, ஏனைய நெருங்கிய உறவினர் தம் இல்லங்கள் அனைத்தையும் கடந்து மெதுவாக மேலும் நடந்து சென்றது கஸ்வா. நபிகளார் முன்னர் ஏனையோருக்குக் கூறிய பதிலையே இங்கிருந்தோர்க்கும் கூறினார்கள். பின்னர் நஜ்ஜாரின் பனீ-மாலிக் கிளையினரின் வீடுகள் வந்தன. இக்கிளைக் கோத்திரத்தாருள், முதல் அகபாவின் முன்னைய வருடம் நபிகளாருக்கு விசுவாச வாக்குறுதியளித்த அறுவரில் இருவர் இருந்தனர். அவர்கள் அஸ்அத், அவ்ப் ஆகியோர். இங்கு கஸ்வா பாதையிலிருந்தும் விலகி, மதிற்சுவர்களினுள்ளிருந்த ஒரு பெரிய முற்ற வெளியினுள் புகுந்தது. அம்முற்றவெளியில் சில பேரிச்ச மரங்களும் கட்டட இடிபாடுகளும் காணப்பட்டன. அதன் ஒரு முனை சில சந்தர்ப்பங்களில் மரண அடக்கஸ்த்தலமாகவும் பயன்பட்டு வந்திருந்தது. ஒரு பகுதி பேரீச்சம் பழங்கள் காயவிடப் பயன்பட்டது. அதிலேயே அஸ்அத், தான் தொழுவதற்குறிய தளமாக அமைத்திருந்த தற்காலிக மறைவிடத்தை நோக்கிச் சென்ற கஸ்வா அதன் வாயிலில் முழந்தாளிட்டது. நபிகளார் கடிவாளத்தைக் கைவிட்டார்கள் ; இறங்கவில்லை. சிறிது பின்னர் அது மீண்டும் எழுந்து நின்று மெதுவாக நடக்கத் தொடங்கியது. எனினும் அதிக தூரம் செல்லு முன்னர் அது நின்று, திரும்பி, தான் வந்த வழியே மீளவும் சென்று, முன்னர் முழந்தாளிட்ட இடத்தை அடைந்தது. மீண்டும் முழந்தாளிட்டது. இம்முறை தன் உடம்பையும் நிலத்தில் சாய்த்து நன்கு அமர்ந்து கொண்டது கஸ்வா. நபிகளார் ஒட்டகத்தினின்றும் இறங்கிக் கூறினார்கள் :
“ அல்லாஹ் நாடக் கூடுமாயின் இதுவே எம் உறைவிடமாகும். ” - புகாரி.63
அம்முற்றத்தின் உறவினர் யார் என நபிகளார் வினவினார்கள். அவ்பின் சகோதரர் முஆத், அது அனாதைச் சிறுவர்களிருவருக்குச் சொந்தமானது என்றார். அஸ்அத்தின் பாதுகாவலில் இருந்த அவர்கள் ஸஹ்ல், ஸுஹைல் ஆகியோராவர். அவர்களைத் தம்மிடம் அழைத்து வரப் பணித்தனர் நபிகளார். சூழ வர இருந்தோருள்ளேயே இருந்த அவ்விருவரும் முன்னால் வந்து நின்றனர். அம்முற்றத்தை அவர்கள் தமக்கு விற்பார்களா என்றும், அவ்வாறாயின் அதன் விலையென்ன என்றும் வினவினர் நபிகளார்.
அவர்கள் கூறினார்கள் :
“ இல்லை அல்லாஹ்வின் தூதரே! நாம் உங்களுக்கு அதனைத் தந்து விட்டோம். ”
அதனை அன்பளிப்பாக ஏற்க நபிகளார் இணங்காது போகவே அஸ்அத்தின் உதவியுடன் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டது. இதே வேளை அண்டையில் வாழ்ந்து வந்த அபூ ஐயூப் காலித் என்பார் கஸ்வாவிலிருந்தும் நபிகளாரின் பொதியை அவிழ்த்துத் தனது வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டார். மேலும் பலர் வந்து தம் இல்லத்தில் தங்கும்படி நபிகளாரைக் கெஞ்சிக் கேட்டு நின்றனர். நபிகளார் கூறினார்கள் :
“ எந்தவொரு மனிதனும் தன் பொதியுடனேயே இருக்க வேண்டும் ”.
இரண்டாம் அகபாவின் போது விசுவாச வக்குறுதி அளித்த கோத்திர முதல்வர் அபூஐயூப். அவரும் மனைவியும் தம் வீட்டின் மாடிப் பகுதிக்குச் சென்று விட்டனர். கீழ்ப்பகுதி நபிகளாருக்கு அளிக்கப்பட்டது. அஸ்அத், கஸ்வாவை அருகிலிருந்த தனது வீட்டுக்கு இட்டுச் சென்றார்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,

No comments:
Post a Comment