அ மை தி யு ம்
பி ரி வி னை யு ம்
நபிகளார் தாம் பெற்றுக் கொண்ட முற்றவெளி ஒரு பள்ளிவாசலாக அமைக்கப்படவேண்டும் எனக் கட்டளைப் பிறப்பித்தார்கள். கூபாவில் போலவே அனைவரும் உடனடியாகக் கருமமாற்றத் தொடங்கினர். பெரும்பகுதி செங்கற்களால் சுற்றிக் கட்டப்பட்டது. ஜெரூஸலம் நோக்கிய வடபுறத்துச் சுவரின் நடுவில் தொழுகை நடாத்தப்படும் இடத்து வளைவின் இரு புறத்தும் கற்கள் வைக்கப்பட்டன. முற்றத்திலிருந்த ஈச்ச மரங்கள் வெட்டப்பட்டுத் தூண்களாக அமைக்கப்பட்டு, அவை ஈச்சம் ஓலைகளால் வேயப்பட்ட கூரைக்குத் தாங்கலாக நிறுவப்பட்டன. முற்றத்தின் பெரும் பகுதி வெறுமனே விடப்பட்டிருந்தது.

மதீனாவின் முஸ்லிம்கள், நபிகளாரால் உதவியாளர்கள் எனப் பொருள்படும் அன்ஸார் எனும் பட்டம் வழங்கப்பட்டிருந்தனர். குறைஷிய முஸ்லிம்களும், தம் வீடுகளை விட்டு வெளியேறி மதினாவில் வந்து குடியேறிய ஏனைய கோத்திரத்தவரும் ‘முஹாஜிராஹ்’ - வெளியேறியோர் என வழங்கினர். நபிகளார் உட்பட அனைவரும் பள்ளிவாசல் நிர்மாண வேலைகளில் பங்கெடுத்தனர். அச்சந்தர்ப்பத்துக்கென ஒருவர் இயற்றியிருந்த சில வாசகங்களைத் தாம் வேலை செய்யும் போது அவர்கள் பாடலாயினர் :
யா அல்லாஹ்! மறுமை நலன் தவிர
வேறு நலன் ஏதும் இல்லை.
அன்ஸார்க்கும் முஹாஜிர்க்கும்
உன் அருளே என்றும் துணை.
அவர்கள் பாடிய ஏனைய பாடல்களும் இதே கருவையே கொண்டிருந்தன.
இவ்விரு சாராரும் மற்றுமொரு குழுவினரால் பலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் எதிர்ப்பார்க்கப் பட்டது. நபிகளார் இப்போது தம்மை பின்பற்றுவோர்க்கும் மதினாவின் யூதர்களுக்குமிடையில் பரஸ்பர நலன் கருதிய ஒப்பந்தமொன்றனைச் செய்து கொள்ள முன்வந்தார்கள். இதன் மூலம் விசுவாசிகள் அனைவரும் ஒரே சமூகத்தவராக அமைந்து கொள்ள முடிந்தது. எனினும் அவர்களுக்கிடையே காணப்பட்ட மதானுஷ்டான ரீதியான வித்தியாசங்கள் அப்படியப்படியே இருந்து வரவும் ஏற்பாடாகியது. முஸ்லிம்களும் யூதர்களும் சம அந்தஸ்த்து உடையோராயிருப்பர். ஒரு யூதருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு நீதி பெற்றுக்கொடுக்க முஸ்லிம்களும் யூதர்களும் ஒன்றுபடுவர். இவ்வாறே ஒரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் நடக்கும். பல தெய்வ வணக்கஸ்த்தரோடு யுத்தங்களேதும் ஏற்படக் கூடுமாயின் அனைவரும் ஒருவராகவே யுத்தம் புரிவர், யூதர்களோ முஸ்லிம்களோ தனிப்பட்ட சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்ள முடியாது. சமாதானம் பிரிக்க முடியாததாக இருக்கும். அபிப்பிராயப் பேதங்கள், முரண்பாடுகள், கருத்து மோதல்கள் ஏதும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பிரச்சினை இறைவனிடம் அவனது தூதர் மூலம் சமர்ப்பிக்கப்படும். எவ்வாறாயினும் முறைப்படி முஹம்மதை ஓர் இறை தூதராக ஏற்க வேண்டிய நியதிகளேதும் யூதர்களுக்கு இடப்பட்டிராத போதும் கூட ஒப்பந்த பத்திரம் முழுவதும் அன்னார் அவ்வாறே குறிக்கப்பட்டிருந்தார்கள்.
யூதர்கள் இவ்வொப்பந்தத்தை அரசியல் காரணங்களுக்காக ஏற்றனர். முஹம்மத் ஏற்கெனவே மதினாவில் மிகப் பலம் வாய்ந்தவராக விளங்கினார். அவரது அதிகாரம் மேலும் வளர்ந்து செல்வதற்குறிய அத்தனை அறிகுறிகளும் தெளிவாகக் காணக்கிடந்தன. இதனை ஏற்பதை விட மாற்று வழி அவர்களுக்கில்லை. எனினும் அவர்களுள்ளும் மிகச் சிலரே யூதரல்லாத ஒருவரை இறைவன் தனது தூதராக அனுப்பக் கூடும் என்பதை நம்பக்கூடியவர்களாயிருந்தனர ். எல்லா மக்களிலும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டு, ஒப்பீடு செய்யவே முடியாதளவு உயர்வானதொரு ஸ்தானத்தில் வைக்கப்பட்டதோர் உன்னதமான சமூகத்தினர் தாம் என்ற பேருணர்வுகள் யூதர்களுள்ளத்தில் ஆழப்பதிந்திருந்த நிலையிலும் வெளியரங்கில் சுமுகமான முறையிலேயே நடந்து வந்தார்கள். புதிய மதம் பற்றிய அவர்களது ஐய உணர்வுகள் மறைக்கப்பட்டனவாயிருந்தாலும ், இறைவசனங்களின் தெய்வீக மூலம் குறித்து ஐயங்கள் கொண்டிருந்த அறாபியருடன் உரையாடுகையில் தமது உண்மையுணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் தவறவில்லை.
அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தவர்களிடையே இஸ்லாம் வெகுவேகமாகப் பரவலாயது. யூதர்களுடனான ஒப்பந்தத்தை மனதில் கொண்டு, மதீனப் பிரதேசம் முழுவதும் ஒருமைப்பட்ட ஒரே பிரதேசமாய் அமையக் கூடிய நன்னாள் பற்றிய நம்பிக்கை சில விசுவாசிகளிடையே இருந்து வந்தது. என்றாலும் இறை வசனங்கள் இப்போது பிளவுகளை ஏற்படுத்தும் மறைவான சக்திகள் குறித்த எச்சரிக்கைகளை விடுக்கலாயின. இக்கால அளவிலேயே குர்ஆனின் மிக நீளமான ஸுறாவும் அருளப்படத் தொடங்கியது. அல்-பகறா (ரிஷபம்) என்ற நாமத்துடன், தொகுப்பில், திறவுகோல் ஆக ஏழு வசனங்கள் கொண்டமைந்த ஸூரத்துல் பாத்திஹாவை அடுத்ததாகக் குர்ஆனின் ஆரம்பத்திலேயே வைக்கப்பட்டுள்ளது இது. அது நேர் வழியில் செலுத்தப்பட்டோரின் இலட்சணங்களை விவரித்தது :
அலிப் ; லாம் ; மீம். இது வேத நூல். இதில் சந்தேகமே இல்லை. பயபக்தியுடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும். (பயபக்தியுடைய) அவர்கள், மறைவானவற்றை (உண்டென்று) விசுவாசங் கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடித்தொழுகுவார்கள். நாம் அவர்களுக்கு அளித்த (பொருள் முதலிய)வற்றிலிருந்து (தானமாகச்) செலவும் செய்வார்கள். அன்றி (நபியே!) அவர்கள் உமக்கு அருளப்பெற்ற(இவ்வேதத்)தையும ், உமக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) அருளப் பெற்றவற்றையும் விசுவாசங் கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) மறுமையையும் (உண்மை என்று) அவர்கள் உறுதியாக நம்புவார்கள். இத்தகையோர்தாம் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தாம் நிச்சயமாகச் சித்தியடைந்தவர்கள்.
அல் குர்ஆன் : 2 : 2 - 5
பின்னர் சத்திய வசனங்களுக்குக் குருடராயும் செவிடராயும் உள்ள அவிசுவாசிகள் பற்றிக் கூறிவிட்டு, மூன்றாம் வகையினரானோர் விவரிக்கப்படுகின்றனர் :
‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டிருக்கிறோம்’ எனக் கூறுவோரும் மனிதரில் சிலர் உண்டு. ஆனால் (உண்மையில்) அவர்கள் விசுவாசங் கொண்டவர்களல்ல……தவிர, அவர்கள் விசுவாசிகளைச் சந்தித்தால் ‘நாங்களும் (உங்களைப் போல்) விசுவாசங் கொள்கிறோம்’ எனவுங் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (விசுவாசிகளை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ, ‘நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தாம் இருக்கின்றோம். (ஆனால்) நாங்கள் (விசுவாசிகளிடம் அவ்வாறு கூறிப்) பரிகாசம் செய்கிறோம்’ எனக் கூறுகின்றனர்.
அல் குர்ஆன் : 2 : 8,14
இவர்களே ஊசலாடும் உள்ளத்தினர் ; ஐயங்கொள்வோர் ; வஞ்சகர்கள். அவ்ஸ் - கஸ்ரஜ் கோத்திரத்தவர்களிடையே நேர்மையீனத்தின் பல்வேறு தரத்தினர்களாக இவர்கள் இருந்தனர். அவர்களது ஷைத்தான்கள், அதாவது தீமைகளின் பால் தூண்டுவோராயிருந்தோர் சந்தேக வித்துக்களை ஊன்றி வந்த அவிசுவாசிகள். இவர்கள் ஆடவர்கள் மட்டுமல்ல, தாம் மக்காவிலிருந்தபோது எதிர்நோக்கியிராத ஒரு வகை ஆபத்து குறித்து இங்கு நபிகளார் எச்சரிக்கை விடுக்கப்பட்டனர். மக்காவில் இஸ்லாத்தைப் பின்பற்றியோரின் குணநேர்மை எவ்வித சந்தேகத்துக்கும் உட்படவில்லை. அங்கு மத மாற்றத்துக்கு அடிப்படையாயிருந்தது ஆன்மீக நோக்கு மட்டுமே. உலகியல் அம்சங்களைப் பொறுத்தமட்டில் விசுவாசிகளுக்கு எவ்வித லாபமும் கிட்டுவதாக இருக்கவில்லை. பெரும்பாலான விசுவாசிகள் பாரிய நட்டங்களுக்கே உள்ளாயினர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிய மதத்தில் நுழைந்து கொள்ள ஏராளமான உலகியற்காரணங்கள் இருந்தன. அவையும் துரிதமாக அதிகரித்து வந்தன. முஸ்லிம்களிடையே வஞ்சகர்கள் கிஞ்சிற்றேனும் இல்லாதிருந்த காலம் முற்றாகவே இல்லாது போனது.
குறிக்கப்பட்ட சில ஷைத்தான்கள் யூதர்களுடையவர்களாயிருந்தனர ். அதே இறைவசனம் தொடர்ந்து கூறியது :
வேதத்தை*யுடையோரில் பெரும்பாலோர் உங்கள் விசுவாசத்தின் பிறகு உங்களை நிராகரிப்போராக மாற்றி விட மாட்டோமா என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் அவர்களுக்கு(உங்கள் மீது)ள்ள பொறாமையின் காரணமாகவே (இவ்வாறு அவர்கள் விரும்புகிறார்கள்) அல் குர்ஆன் : 2 : 100
வாக்களிக்கப்பட்ட நபிகளாரின் வருகையை மிக்க ஆவலுடன் யூதர்கள். எதிர்ப்பார்த்திருந்தனர். அதற்குக் காரணம் அதன் மூலம் கிட்டக்கூடிய ஆன்மீக மேன்மையல்ல ; யத்ரிபில் தமது பண்டைய உன்னத நிலையை மீண்டும் நிலை பெறச்செய்வதாகும். ஆனாலும் இப்போது இறைதூதராக வந்திருப்பவர் இஸ்ஹாக்கின் வழி வந்தவராகவன்றி, இஸ்மாயீலின் வழி வந்தவராயிருந்தமை அவர்களைக் கலக்கமுறச் செய்தது. ஏக இறைக் கொள்கையைப் பறை சாற்றி வந்த அவருக்குக் கிடைத்து வந்த வெற்றிகள், நிச்சயமாக அவருக்குத் தெய்வீக ஆதரவு இருந்தமையையும் காட்டி நின்றன. உண்மையாகவே வாக்களிக்கப்பட்ட இறைதூதர் இவர்தானோ என அவர்கள் அஞ்சலானார்கள். இதன் காரணமாக அவர், யாருக்குக் கொடுக்கப்பட்டாரோ அவர்கள் மீது யூதர்களின் பொறாமை வளர்ந்து சென்றது. அவர் அந்த இறைதூதராக இருந்து விடக் கூடாது என்றும் அவர்கள் அவாவுற்றனர். எனவே, அவர் ஒரு தெய்வீக இறைதூதருக்கு இருக்கவேண்டிய தகைமைகள் அற்றவர் எனக் கூறிக் கொள்வதன் மூலம் ஒரு வகை சுயதிருப்தி காண முனைந்ததோடு, பிறரையும் அவ்வாறே நம்ப வைக்கவும் முயற்சித்து வரலாயினர்.
“ அவருக்கு வானலோகத்திலிருந்து செய்திகள் வருவதாக முஹம்மத் கூறிக் கொள்கின்றார். எனினும் அவரது ஒட்டகம் இருக்கும் இடம் அவருக்குத் தெரியவில்லை ” - இது நபிகளாரின் ஒட்டகம் ஒன்று காணாமற் போனபோது ஒரு யூதர் கூறியது.
நபிகளார் கூறினார்கள் : “ இறைவன் எனக்கு அறிவிப்பன தவிர வேறு எதையும் நான் அறியேன் ”
- பின்னர் தொடர்ந்து
“ இதனை அல்லாஹ் எனக்குக் காட்டியுள்ளான். நான் கூறக் கூடிய பள்ளத்தாக்கில் கடிவாளம் ஒரு மரத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் அது இருக்கின்றது ” என்றார்கள். இ.இ. 361
சில அன்ஸாரிகள் நபிகளார் விவரித்துக் கூறிய இடத்துக்குச் சென்று அங்கு அன்னார் கூறியவாறே ஒட்டகம் இருந்ததைக் கண்டனர்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
*பைபிள்
பி ரி வி னை யு ம்
நபிகளார் தாம் பெற்றுக் கொண்ட முற்றவெளி ஒரு பள்ளிவாசலாக அமைக்கப்படவேண்டும் எனக் கட்டளைப் பிறப்பித்தார்கள். கூபாவில் போலவே அனைவரும் உடனடியாகக் கருமமாற்றத் தொடங்கினர். பெரும்பகுதி செங்கற்களால் சுற்றிக் கட்டப்பட்டது. ஜெரூஸலம் நோக்கிய வடபுறத்துச் சுவரின் நடுவில் தொழுகை நடாத்தப்படும் இடத்து வளைவின் இரு புறத்தும் கற்கள் வைக்கப்பட்டன. முற்றத்திலிருந்த ஈச்ச மரங்கள் வெட்டப்பட்டுத் தூண்களாக அமைக்கப்பட்டு, அவை ஈச்சம் ஓலைகளால் வேயப்பட்ட கூரைக்குத் தாங்கலாக நிறுவப்பட்டன. முற்றத்தின் பெரும் பகுதி வெறுமனே விடப்பட்டிருந்தது.

மதீனாவின் முஸ்லிம்கள், நபிகளாரால் உதவியாளர்கள் எனப் பொருள்படும் அன்ஸார் எனும் பட்டம் வழங்கப்பட்டிருந்தனர். குறைஷிய முஸ்லிம்களும், தம் வீடுகளை விட்டு வெளியேறி மதினாவில் வந்து குடியேறிய ஏனைய கோத்திரத்தவரும் ‘முஹாஜிராஹ்’ - வெளியேறியோர் என வழங்கினர். நபிகளார் உட்பட அனைவரும் பள்ளிவாசல் நிர்மாண வேலைகளில் பங்கெடுத்தனர். அச்சந்தர்ப்பத்துக்கென ஒருவர் இயற்றியிருந்த சில வாசகங்களைத் தாம் வேலை செய்யும் போது அவர்கள் பாடலாயினர் :
யா அல்லாஹ்! மறுமை நலன் தவிர
வேறு நலன் ஏதும் இல்லை.
அன்ஸார்க்கும் முஹாஜிர்க்கும்
உன் அருளே என்றும் துணை.
அவர்கள் பாடிய ஏனைய பாடல்களும் இதே கருவையே கொண்டிருந்தன.
இவ்விரு சாராரும் மற்றுமொரு குழுவினரால் பலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் எதிர்ப்பார்க்கப் பட்டது. நபிகளார் இப்போது தம்மை பின்பற்றுவோர்க்கும் மதினாவின் யூதர்களுக்குமிடையில் பரஸ்பர நலன் கருதிய ஒப்பந்தமொன்றனைச் செய்து கொள்ள முன்வந்தார்கள். இதன் மூலம் விசுவாசிகள் அனைவரும் ஒரே சமூகத்தவராக அமைந்து கொள்ள முடிந்தது. எனினும் அவர்களுக்கிடையே காணப்பட்ட மதானுஷ்டான ரீதியான வித்தியாசங்கள் அப்படியப்படியே இருந்து வரவும் ஏற்பாடாகியது. முஸ்லிம்களும் யூதர்களும் சம அந்தஸ்த்து உடையோராயிருப்பர். ஒரு யூதருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு நீதி பெற்றுக்கொடுக்க முஸ்லிம்களும் யூதர்களும் ஒன்றுபடுவர். இவ்வாறே ஒரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் நடக்கும். பல தெய்வ வணக்கஸ்த்தரோடு யுத்தங்களேதும் ஏற்படக் கூடுமாயின் அனைவரும் ஒருவராகவே யுத்தம் புரிவர், யூதர்களோ முஸ்லிம்களோ தனிப்பட்ட சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்ள முடியாது. சமாதானம் பிரிக்க முடியாததாக இருக்கும். அபிப்பிராயப் பேதங்கள், முரண்பாடுகள், கருத்து மோதல்கள் ஏதும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பிரச்சினை இறைவனிடம் அவனது தூதர் மூலம் சமர்ப்பிக்கப்படும். எவ்வாறாயினும் முறைப்படி முஹம்மதை ஓர் இறை தூதராக ஏற்க வேண்டிய நியதிகளேதும் யூதர்களுக்கு இடப்பட்டிராத போதும் கூட ஒப்பந்த பத்திரம் முழுவதும் அன்னார் அவ்வாறே குறிக்கப்பட்டிருந்தார்கள்.
யூதர்கள் இவ்வொப்பந்தத்தை அரசியல் காரணங்களுக்காக ஏற்றனர். முஹம்மத் ஏற்கெனவே மதினாவில் மிகப் பலம் வாய்ந்தவராக விளங்கினார். அவரது அதிகாரம் மேலும் வளர்ந்து செல்வதற்குறிய அத்தனை அறிகுறிகளும் தெளிவாகக் காணக்கிடந்தன. இதனை ஏற்பதை விட மாற்று வழி அவர்களுக்கில்லை. எனினும் அவர்களுள்ளும் மிகச் சிலரே யூதரல்லாத ஒருவரை இறைவன் தனது தூதராக அனுப்பக் கூடும் என்பதை நம்பக்கூடியவர்களாயிருந்தனர
அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தவர்களிடையே இஸ்லாம் வெகுவேகமாகப் பரவலாயது. யூதர்களுடனான ஒப்பந்தத்தை மனதில் கொண்டு, மதீனப் பிரதேசம் முழுவதும் ஒருமைப்பட்ட ஒரே பிரதேசமாய் அமையக் கூடிய நன்னாள் பற்றிய நம்பிக்கை சில விசுவாசிகளிடையே இருந்து வந்தது. என்றாலும் இறை வசனங்கள் இப்போது பிளவுகளை ஏற்படுத்தும் மறைவான சக்திகள் குறித்த எச்சரிக்கைகளை விடுக்கலாயின. இக்கால அளவிலேயே குர்ஆனின் மிக நீளமான ஸுறாவும் அருளப்படத் தொடங்கியது. அல்-பகறா (ரிஷபம்) என்ற நாமத்துடன், தொகுப்பில், திறவுகோல் ஆக ஏழு வசனங்கள் கொண்டமைந்த ஸூரத்துல் பாத்திஹாவை அடுத்ததாகக் குர்ஆனின் ஆரம்பத்திலேயே வைக்கப்பட்டுள்ளது இது. அது நேர் வழியில் செலுத்தப்பட்டோரின் இலட்சணங்களை விவரித்தது :
அலிப் ; லாம் ; மீம். இது வேத நூல். இதில் சந்தேகமே இல்லை. பயபக்தியுடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும். (பயபக்தியுடைய) அவர்கள், மறைவானவற்றை (உண்டென்று) விசுவாசங் கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடித்தொழுகுவார்கள். நாம் அவர்களுக்கு அளித்த (பொருள் முதலிய)வற்றிலிருந்து (தானமாகச்) செலவும் செய்வார்கள். அன்றி (நபியே!) அவர்கள் உமக்கு அருளப்பெற்ற(இவ்வேதத்)தையும
அல் குர்ஆன் : 2 : 2 - 5
பின்னர் சத்திய வசனங்களுக்குக் குருடராயும் செவிடராயும் உள்ள அவிசுவாசிகள் பற்றிக் கூறிவிட்டு, மூன்றாம் வகையினரானோர் விவரிக்கப்படுகின்றனர் :
‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டிருக்கிறோம்’ எனக் கூறுவோரும் மனிதரில் சிலர் உண்டு. ஆனால் (உண்மையில்) அவர்கள் விசுவாசங் கொண்டவர்களல்ல……தவிர, அவர்கள் விசுவாசிகளைச் சந்தித்தால் ‘நாங்களும் (உங்களைப் போல்) விசுவாசங் கொள்கிறோம்’ எனவுங் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (விசுவாசிகளை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ, ‘நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தாம் இருக்கின்றோம். (ஆனால்) நாங்கள் (விசுவாசிகளிடம் அவ்வாறு கூறிப்) பரிகாசம் செய்கிறோம்’ எனக் கூறுகின்றனர்.
அல் குர்ஆன் : 2 : 8,14
இவர்களே ஊசலாடும் உள்ளத்தினர் ; ஐயங்கொள்வோர் ; வஞ்சகர்கள். அவ்ஸ் - கஸ்ரஜ் கோத்திரத்தவர்களிடையே நேர்மையீனத்தின் பல்வேறு தரத்தினர்களாக இவர்கள் இருந்தனர். அவர்களது ஷைத்தான்கள், அதாவது தீமைகளின் பால் தூண்டுவோராயிருந்தோர் சந்தேக வித்துக்களை ஊன்றி வந்த அவிசுவாசிகள். இவர்கள் ஆடவர்கள் மட்டுமல்ல, தாம் மக்காவிலிருந்தபோது எதிர்நோக்கியிராத ஒரு வகை ஆபத்து குறித்து இங்கு நபிகளார் எச்சரிக்கை விடுக்கப்பட்டனர். மக்காவில் இஸ்லாத்தைப் பின்பற்றியோரின் குணநேர்மை எவ்வித சந்தேகத்துக்கும் உட்படவில்லை. அங்கு மத மாற்றத்துக்கு அடிப்படையாயிருந்தது ஆன்மீக நோக்கு மட்டுமே. உலகியல் அம்சங்களைப் பொறுத்தமட்டில் விசுவாசிகளுக்கு எவ்வித லாபமும் கிட்டுவதாக இருக்கவில்லை. பெரும்பாலான விசுவாசிகள் பாரிய நட்டங்களுக்கே உள்ளாயினர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிய மதத்தில் நுழைந்து கொள்ள ஏராளமான உலகியற்காரணங்கள் இருந்தன. அவையும் துரிதமாக அதிகரித்து வந்தன. முஸ்லிம்களிடையே வஞ்சகர்கள் கிஞ்சிற்றேனும் இல்லாதிருந்த காலம் முற்றாகவே இல்லாது போனது.
குறிக்கப்பட்ட சில ஷைத்தான்கள் யூதர்களுடையவர்களாயிருந்தனர
வேதத்தை*யுடையோரில் பெரும்பாலோர் உங்கள் விசுவாசத்தின் பிறகு உங்களை நிராகரிப்போராக மாற்றி விட மாட்டோமா என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் அவர்களுக்கு(உங்கள் மீது)ள்ள பொறாமையின் காரணமாகவே (இவ்வாறு அவர்கள் விரும்புகிறார்கள்) அல் குர்ஆன் : 2 : 100
வாக்களிக்கப்பட்ட நபிகளாரின் வருகையை மிக்க ஆவலுடன் யூதர்கள். எதிர்ப்பார்த்திருந்தனர். அதற்குக் காரணம் அதன் மூலம் கிட்டக்கூடிய ஆன்மீக மேன்மையல்ல ; யத்ரிபில் தமது பண்டைய உன்னத நிலையை மீண்டும் நிலை பெறச்செய்வதாகும். ஆனாலும் இப்போது இறைதூதராக வந்திருப்பவர் இஸ்ஹாக்கின் வழி வந்தவராகவன்றி, இஸ்மாயீலின் வழி வந்தவராயிருந்தமை அவர்களைக் கலக்கமுறச் செய்தது. ஏக இறைக் கொள்கையைப் பறை சாற்றி வந்த அவருக்குக் கிடைத்து வந்த வெற்றிகள், நிச்சயமாக அவருக்குத் தெய்வீக ஆதரவு இருந்தமையையும் காட்டி நின்றன. உண்மையாகவே வாக்களிக்கப்பட்ட இறைதூதர் இவர்தானோ என அவர்கள் அஞ்சலானார்கள். இதன் காரணமாக அவர், யாருக்குக் கொடுக்கப்பட்டாரோ அவர்கள் மீது யூதர்களின் பொறாமை வளர்ந்து சென்றது. அவர் அந்த இறைதூதராக இருந்து விடக் கூடாது என்றும் அவர்கள் அவாவுற்றனர். எனவே, அவர் ஒரு தெய்வீக இறைதூதருக்கு இருக்கவேண்டிய தகைமைகள் அற்றவர் எனக் கூறிக் கொள்வதன் மூலம் ஒரு வகை சுயதிருப்தி காண முனைந்ததோடு, பிறரையும் அவ்வாறே நம்ப வைக்கவும் முயற்சித்து வரலாயினர்.
“ அவருக்கு வானலோகத்திலிருந்து செய்திகள் வருவதாக முஹம்மத் கூறிக் கொள்கின்றார். எனினும் அவரது ஒட்டகம் இருக்கும் இடம் அவருக்குத் தெரியவில்லை ” - இது நபிகளாரின் ஒட்டகம் ஒன்று காணாமற் போனபோது ஒரு யூதர் கூறியது.
நபிகளார் கூறினார்கள் : “ இறைவன் எனக்கு அறிவிப்பன தவிர வேறு எதையும் நான் அறியேன் ”
- பின்னர் தொடர்ந்து
“ இதனை அல்லாஹ் எனக்குக் காட்டியுள்ளான். நான் கூறக் கூடிய பள்ளத்தாக்கில் கடிவாளம் ஒரு மரத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் அது இருக்கின்றது ” என்றார்கள். இ.இ. 361
சில அன்ஸாரிகள் நபிகளார் விவரித்துக் கூறிய இடத்துக்குச் சென்று அங்கு அன்னார் கூறியவாறே ஒட்டகம் இருந்ததைக் கண்டனர்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
*பைபிள்
No comments:
Post a Comment