ச தி
ஹிஷாம், அய்யாஷ் ஆகியோரின் மதத்துறவு குறைஷியருக்கு மிகச் சிறியதொரு வெற்றியாகவே அமைந்திருந்தது. அவர்களால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாத அளவு பெருந்தொகையினர் மக்காவை விட்டும் வெளியேறிக் கொண்டிருந்தனர். மக்காவின் சில பெரிய வீடுகள் இப்போது குடியிருப்போர் இல்லாத நிலையிலிருந்தன. முன்னர் நிரம்பியிருந்தன சில இப்போது முதியர்கள் சிலரை மட்டுமே கொண்டிருந்தன. பத்தே வருடங்களின் முன்னர் செல்வமும் அமைதியும் நிரம்பப் பெற்றிருந்த நகரம் முற்றாக மாறிவிட்டிருந்தது. அனைத்துக்கும் காரணம் இந்த ஒரு மனிதர் மட்டுமே. துயருறுத்தும் சோகமயமான இவ் வெண்ணங்கள் எழுவதும் செல்வதுமாக இருந்த நிலை ஒரு புறமிருக்க, வடக்கேயிருந்த நகரத்திலிருந்து வரக்கூடிய ஆபத்து குறித்து அனைவரதும் அடிமனதில் ஒருவகை அச்சவுணர்வும் இருந்து கொண்டேயிருந்தது. எதிரிகளாயமையக் கூடியவர்கள் அங்கே பெருகி வந்தார்கள். அவர்களோ, தமது மதத்துடன் முரண்பாடுகள் எழக் கூடுமாயின், உறவுகளாலான பந்தங்களையும் பொருட்படுத்தாதோராய் இருந்தனர். நபிகளார் முன்னர், “ஒ குறைஷியரே!..... நான் உங்களுக்கு அழிவையே கொண்டு வந்துள்ளேன்” எனக் கூறியதைக் கேட்டவர்கள் ஒரு போதும் அதனை மறந்து விடவில்லை. அப்போதைய நிலையில் அஞ்சுவதற்கு போதிய காரணங்கள் இருக்கவில்லை. இப்போதோ, தாம் தீவிர கண்காணிப்பு செலுத்தி வந்த நிலையிலும் அவர் தம்மை ஏமாற்றி விடக் கூடுமாயின், அத்தோடு தானும் யத்ரிபைச் சென்றடைவாராயின், அவ்வாசகங்கள் வெறும் அச்சுறுத்தல் மட்டுமல்ல என்ற நிலை உருவாகி விடலாம்.

நபிகளாரின் பாதுகாவலர் முத்இம்மின் மரணம், குறைஷியருக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.இப்போது ஆவன செய்ய வழி நன்கமைந்து விட்டது. வழியைச் செப்பனிடும் வகையில், நபிகளாரின் பெரிய தந்தையார் அபூலஹப், குறைஷித் தலைவர்கள் கூடிப் பேசும் அவைக்குச் சமூகமளிக்காது ஒதுங்கிக் கொண்டார். பல தரப்பட்ட அபிப்பிராயங்கள் கூறப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வந்த நீண்டதொரு கலந்துரையாடலின் பின்னர், அபூ ஜஹ்ல் முன் வைத்ததொரு திட்டமே தமது பிரச்சினைகட்குத் தக்கவொரு தீர்வை அளிப்பதாக அமையும் எனப் பலரும் ஏற்றனர். சிலர் தயக்கத்துடனாயினும் அதற்குச் சார்பாயினர்.
ஒவ்வொரு கோத்திரத்தாரும் பலம் வாய்ந்த, நம்பிக்கையான, பெருங் குடும்பத் தொடர்புகள் கொண்ட ஓர் இளைஞரை நியமிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முஹம்மதைக் கடுமையாகத் தாக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் எல்லாக் கோத்திரத்தாருமே அவருடைய மரணத்துக்குப் பொறுப்பானவர்களாவர். பனீ ஹாஷிம்கள் தனித்து ஏனைய குறைஷியர் அனைவரையும் எதிர்த்து நிற்க முடியாது. பழிக்குப் பழி வாங்குவதை விடுத்து, அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய இரத்த ஈட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்வதோடு பனீ ஹாஷிம்கள் திருப்தியுற வேண்டியதுதான். இதன் மூலம், தான் வாழக் கூடிய காலம் முழுவதும், தமக்கு அமைதியின்மையையே தரக் கூடிய ஒரு மனிதனை இலகுவாகத் தீர்த்துக் கட்டி விடலாம் என நம்பினர் குறைஷியர்.
இப்போது நபிகளாரிடம் ஜிப்ரீல் வந்து, அன்னார் செய்ய வேண்டுவன சில குறித்துக் கூறினார். பகல் வேளை, பிறரைச் சென்று காண்பதற்குறிய நேரமல்ல அது. இருந்தும் நபிகளார் அபூபக்ரின் வீடு நோக்கிச் சென்றார்கள். அவ்வேளையில் நபிகளாரைக் கண்டதுமே, குறிப்பிடத்தக்க விசேடம் வாய்ந்ததொரு சந்தர்ப்பம் நிகழ்ந்துள்ளதென உணர்ந்து கொண்டார் அபூபக்ர். நபிகளார் வந்தபோது ஆயிஷாவும் அவரது மூத்த சகோதரி அஸ்மாவும் அபூபக்ருடன் இருந்தார்கள்.
“ இந்த நகரை விட்டும் வெளியேறிச் செல்ல அல்லாஹ் எனக்கு. அனுமதியளித்து விட்டான் ” என்றனர் நபிகளார்.
அபூபக்ர் “ எனக்கும் கூடவா? ” என வினவினார்.
“ உமக்கும் கூடத்தான் ” என்றனர் நபிகளார்.
அப்போ ஆயிஷா தனது ஏழாவது வயதில் இருந்தார். ஆயிஷா பின்னர் கூறினார்: “ அதனைக் கேட்டு அபூபக்ர் கண்ணீர் சிந்தியதைக் கண்ணுற்றது வரை, எவரும் மகிழ்ச்சியினால் கண்ணீர் சிந்த முடியுமென நான் அறிந்திருக்கவில்லை. ”
இருவரும் தமது திட்டங்களை முடிவு செய்த பின்னர் தம் வீடு திரும்பிய நபிகளார், தாம் யத்ரிப் செல்லவிருப்பதனைத் தெரிவித்தார்கள். அத்தோடு தமது வீட்டில் பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தையும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் வரை அலீ மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் கூறினார்கள். நபிகளார் தாம் அல்-அமீன் (நன்நம்பிக்கையாளர்) என்ற நிலையிலிருந்து ஒரு போதும் வழுவாதிருந்ததன் காரணமாக, விசுவாசிகளல்லாதோர் பலரும் கூட தமது உடமைகளை நபிகளாரின் பொறுப்பிலேயே. விட்டிருந்தனர். அன்னாரை நம்புமளவு அவர்கள் பிறரை நம்புபவர்களாக இல்லை. அலீயிடம் நபிகளார், ஜிப்ரீல் தம்மிடம் குறைஷியர் தீட்டியுள்ள சதித்திட்டம் பற்றிக் கூறியமையும் கூறினார்கள்.
நபிகளாரைக் கொன்று போடவெனத் தெரியப்பட்ட இளைஞர்கள், இரவானதும் நபிகளாரின் வீட்டு வாயிலின் அருகே சந்தித்துக் கொள்வதென ஏற்பாடு செய்து கொண்டனர். அவர்கள் வெளியே காத்திருந்த போது வீட்டினுள்ளேயிருந்து பெண்களின் குரல்கள் கேட்டன : ஸவ்தா, உம்ம்குல்தூம், பாத்திமா, உம்ம்அய்மன் ஆகியோரின் குரல்கள். தாம் சுவரேறிக் குதித்து உள்புகக் கூடுமாயின், பெண்களது தனிமையைக் குலைத்த காரணத்திற்காக காலமெல்லாம் அறாபியரிடையே தமது நாமங்கள் அவதூறாகப். பேசப்படுமெனக் கூறினார் ஒருவர். எனவே தாம் தாக்கவென வந்தவர் வெளியே வரும் வரை காத்திருப்பதென அவர்கள் முடிவு செய்தனர். முன்னதாக வெளிவராது விடின் எவ்வாறேனும் அதிகாலையிலேயே தவறாது வெளிவரும் வழக்கத்தராயிருந்தனர் நபிகளார்.
நபிகளாரும் அலீயும் வெளியே காத்து நிற்போர் குறித்துத். தெரிந்தவர்களாயினர். நபிகளார் தாம் உறங்கும் போது உபயோகிக்கும் ஒரு போர்வையை அலீயிடம் கொடுத்து “ நீர் எனது படுக்கையில் உறங்குவீராக! உம்மை இந்தப் பச்சை நிற ஹத்ரமீ போர்வையினால் போர்த்திக் கொண்டு உறங்கும். அவர்களிடமிருந்து உமக்கு எந்தவோர் ஆபத்தும் ஏற்படாது ” என்றார்கள். பின்னர் அன்னார், தன் முதல் இரு எழுத்துக்களையுமே தன் நாமமாகவும் கொண்ட ஸூறாவை ஓதத் தொடங்கினார்கள்: யாஸீன்.
அவர்களுக்கு முன்புறம் ஒரு தடுப்பும், பின்புறம் ஒரு தடுப்பும் ஆக ஏற்படுத்தி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால் அவர்கள் (எதனையும்) பார்க்க முடியாது
குர்ஆன் : 36:9
- என்ற வாசகங்களை ஓதியதும் வீட்டை விட்டு வெளியேறினார்கள் நபிகளார். இறைவன் அவர்களது பார்வையை எடுத்து விட்டான். அதனால் அவர்கள் அன்னாரைக் காணவில்லை. தம்மைக் கொலை செய்யக் கூடியிருந்த இளைஞர்களூடாகவே நபிகளார் தம் வழி சென்றார்கள்.
எதிர்ப்புறத்திருந்து ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார். அவர் நபிகளாரை அடையாளம் கண்டு கொண்டார். சிறிது நேரத்தில் அம்மனிதரின் வழி நபிகளாரின் வீட்டை அண்மியதாகச் சென்றது. வாசலருகில் சிலர் கூட்டமாக நிற்பதனைக் கண்டு, அவர்கள் முஹம்மதைக் காணத்தான் அங்கு நிற்கின்றார்களோ என வினவிய அவர், ஏற்கெனவே அன்னார் வெளியே சென்று விட்டமையைக் கூறி வைத்தார். அது எவ்வாறு நிகழலாம் எனச் சிந்திக்கலானார்கள் காத்திருந்தோர். அவர்களிலொருவர் இவ்வீட்டை மிகக் கவனமாக அவதானித்து வந்திருந்தார். நபிகளார் வீட்டினுள் சென்றமையை அவர் கண்டார். பின்னர் வீட்டிலிருந்து எவருமே வெளிச்செல்லவில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
வழிப்போக்கர் கூறியதைக் கேட்ட பின்னர் இவர்களிடையே அமைதியின்மை தொடங்கியது. நபிகளார் வழக்கமாக உறங்கும் இடத்தை அறிந்திருந்த ஒருவர், சிறிது முன் சென்று ஜன்னலொன்றன் ஊடாக எட்டிப் பார்த்தார். அங்கே ஒருவர் தன்னைப் போர்த்திக் கொண்டவராகப் படுத்திருந்தார். தமக்குத் தேவையான மனிதர் எங்கும் சென்று விட வில்லை என அவர்கள் திருப்தி காண இது உதவியது. விடியற் காலையில் அதே போர்வையுடன் வீட்டின் கதவருகில் வந்தார் அலீ. அவரைக் கண்டதும், தாம் எப்படியோ ஏமாற்றப்பட்டு விட்டோம் என எண்ணலாயினர். என்றாலும் மேலும் சிறிது நேரம் அவர்கள் காத்திருந்தார்கள்.
மறைந்து செல்லும் ஸபர் மாதப் பிறையின் மெல்லிய கீற்று, கீழே மலைகளின் மேல் எழுந்திருந்தது. கதிரவன் ஒளி மிகுந்து அதுவும் மறையலாயிற்று. இன்னமும் நபிகளார் குறித்து எவ்வித அரவமும் இல்லை. திடீரென அனைவரும் அங்கிருந்து சென்று விட முடிவு செய்தனர். ஒவ்வொருவரும் தத்தம் மோத்திரத் தலைவரிடம் விரைந்து செல்லலாயினர்…
- அபாய அறிவிப்புச் செய்வதற்காக
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,

No comments:
Post a Comment